Friday, April 10, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த (பெசல் பதிப்பு)

முதல்வர் கருணாநிதி, ‘’இலங்கை பிரச்சனையில் நான் பதவி விலகவேண்டும் என்று பேசிவருகிறார்கள். ஏன் பதவி விலகவில்லை என்று கேட்கிறார்கள். அப்படி கேட்கிறவர்களுக்காகத்தான் நான் பதவி விலகாமல் இருக்கிறேன். நான் பதவி விலகியிருந்தால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதற்காகவும், சோனியாகாந்தி அம்மையாரை இழித்தும், பழித்தும் பேசுவதற்காக எத்தனை ஆண்டுகாலம் சிறைக்கு சென்றிருப்பார்களோ தெரியாது. அவர்கள் சிறைக்கு செல்லக்கூடாது என்பதற்காகத்தான் நான் பதவி விலகாமல் இருக்கிறேன்’’

சீஈஈஈஈஈஈனு
‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------------------------------------------------------
முதல்வர் கருணாநிதி, ’’ ஈழப்பிரச்சனை தொடர்பாக நான் இலங்கைக்கு செல்வதற்கு பலமுறை முயற்சி செய்தேன். அதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை. அதனாலென்ன..உணர்வால், உள்ளத்தால், ஈழத்தமிழர்களை காண்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு காவலர்களாக, தூதுவர்களாக இருப்பவர்களுக்கு நான் தோழராக இருக்கிறேன்”

சொக்கு? தொங்கு? ஆப்பு? சவசங்கரன்? யாரு அது? ( ஆமான்னு சொன்னா மக்கள் கிட்ட ஆப்பு, இவங்க இல்லன்னா சொக்குக்கு போடணும் சோப்பு. ஐய்யா. ஜாலி)
--------------------------------------------------------------------------------
மேலும், சோனியாகாந்தி, பிரணாப்முகர்ஜி, கலைஞர் ஆகியோரை கடுமையாக விமர்சித்தும் பேசினார். வைகோவின் இத்தகைய பேச்சு இந்திய ஒற்றுமைப்பாட்டுக்கு எதிரான பேச்சு என்று சென்னை போலீசார் அவர் மீது இன்று இரவு வழக்கு பதிந்துள்ளனர்.

ஆ. வாங்கோ வாங்கோ வாங்கோ. அதிமுக கூட்டணில நாலு சீட் வேகன்ட் வாங்கோ. போனா வராது பொழுது போனா சிக்காது. வாங்கோ.
--------------------------------------------------------------------------------
வைகோவை கைது செய்ய வேண்டும்:சு.சாமி(ரிப்பீட்டோய்)

வைகோ மீது துரும்பு பட்டாலும் இங்கு முட்டை ஆறு ஓடுமாம். ரெடியா சாமி.
--------------------------------------------------------------------------------
நம்பி வந்தவர்கள் மீது நச்சுக்குண்டுகள் வீசுகிறார்கள்:திருமா

அவன் போடுவான்னு தெரியுமுங்ணா. அவன யாரும் நம்பவுமில்ல. உங்கள தான் நம்பினாங்க(னோம்). அவன் போட்டதில நிம்மதியா போய்ட்டாங்க. நீங்க போட்டதில உள்ளுக்குள்ள எரியுரோம். நாளைக்கு எங்கயாவது ஒரு வெள்ளக்காரன் அவங்கள ஈழத் தமிழன், நம்மள ஈனத் தமிழன்னு சொல்லதான் போறான்.
--------------------------------------------------------------------------------
காலில் விழுந்து கேட்கிறேன் ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்:கலைஞருக்கு திருமா வேண்டுகோள்

இதான் பார்திபன் சொன்னா மாதிரி போட்டு வாங்குறதா. அவரு என்னால்லாமோ பண்ணிட்டேங்குறாரு?
--------------------------------------------------------------------------------
ஈழத்திற்கும், ஈழமக்களுக்கும் எதிரானவர் ஜெ.:திருமா கடும் தாக்கு

அய்யோ. சிறுத்தன்னு நம்பினமே. இது டால்மேஷனா போச்சேடா சாமி.
--------------------------------------------------------------------------------
இதுமாதிரி அத்திரி பல்டில்லாம் தான் சென்னை செந்தமிழ்ல சொல்றது இப்பிடி
" ஐ உட்டாலங்கிடி கிரிகிரி சைதாப்பேட்ட வடகறின்னு"

10 comments:

கலகலப்ரியா said...

ம்ம்.. அது என்ன பெசலு.. இருபத்தி ஒண்ணுக்கு அப்புறம்.. இருபத்தி இரண்டுன்னு தெரியலன்னா.. பெஷலு.. சரி சரி.. நடத்துங்கோ..

பாலா... said...

இல்ல. இது ஒரெ ஒரு மீட்டிங்ல ரெண்டே பேரு அடிச்ச கூத்து. அதான் பெசலு.

கலகலப்ரியா said...
This comment has been removed by the author.
கலகலப்ரியா said...

//கலைஞர்........%ç*(/))====/&ç&த&//
ஐயோ அதை ஏன் கேக்குறீங்க.. ஐயா அவங்கம்மா வயித்தில இருக்கிறப்பவே நான் ஈழ மண்ணில்தான் பொறப்பேன் அப்டின்னு கையையும் காலையும் அடிச்சிக்கிட்டு வெளில வர மாட்டேன்னு அடம் பிடிச்சாரு.. இதுதான் ஈழம் நு ஏமாத்தி வெளில இழுத்து போட்டுட்டாங்க..

அது மட்டுமா.. ஐயா பொறந்ததில இருந்து கொடுக்கிற குரலும், அழுத அழுகையும் ஈழத்துக்காகத்தான்..

அட அத விட.. அவரோட மயிர் எப்டி போச்சுங்கிறீங்க.. "ஈழத்தின் உயிர் நீப்பின், மயிர் நீக்கும் கவரிமான்" தினமும்.. நூறு, இருநூறுன்னு கொட்டிக்கிட்டிருக்குங்க.. லட்சக்கணக்கில போனா மயிர் கடன் வாங்கித்தான் உதிர்க்கணும்...

பாலா... said...

=)).அய்யோ இவனுங்க அடிச்ச கூத்து தாங்காம பெசலு போட்டேன். இப்பிடி கலக்கினா என்னால முடியாது சாமியோவ்.

சக்(ங்)கடத்தார் said...

வணக்கம் தம்பி பாலாஜி! பிள்ளை கலகலப் பிரியா! எல்லோரும் எப்பிடி ராசாக்கள் இருக்கிறீங்கள்?? பதிவுகள் பல போட்டு ஒரே கலக்கல் தான்?? ம்..நடத்தும் பலாஜி..


நான் பதிவு போட இல்லையென்றாலும் நீங்கள் பதிவு போட்டுக் கலக்கித் தள்ளுறியள்?

தொடருங்கோ ராசாமார்! கலைஞ்சரைக் கலைச்சுப் போட்டு நல்ல இளைய தலை முறையிட்டை ஆட்சியைக் கொடுத்தால் தான் தமிழ் நாடு உருப்படுமாம்? என்ன உண்மையோ??? அப்ப நான் வரட்டே?

கிருஷ்ணா said...

//நம்பி வந்தவர்கள் மீது நச்சுக்குண்டுகள் வீசுகிறார்கள்:திருமா//

தன்னைப்பற்றித் தானே சொல்லியிருக்கிறார். இவங்களயெல்லாம் நம்பினவங்களுக்கு இதுவும் வேணும். இன்னும் வேணும்..

அ. நம்பி said...

//காலில் விழுந்து கேட்கிறேன் ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்: கலைஞருக்கு திருமா வேண்டுகோள்//

(ஊரை ஏமாற்றும் கலையில்) இன்னொரு கலைஞர் உருவாகிக்கொண்டிருக்கிறார்.

கிரி said...

//நாளைக்கு எங்கயாவது ஒரு வெள்ளக்காரன் அவங்கள ஈழத் தமிழன், நம்மள ஈனத் தமிழன்னு சொல்லதான் போறான்.//

கலக்கல்

பாலா... said...

அனைவருக்கும் நன்றி