Friday, April 24, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 31

ஏமாற்ற வருவார்கள்;கவனமாக இருங்கள்: கனிமொழி

அடிக்கடி இப்படி அப்பாவ, அண்ணன எல்லாம் போட்டுக் குடுக்கிறியேம்மா.
______________________________________________________
எம்.பி.பதவியை ராஜினாமாசெய்யமாட்டேன்:அன்புமணி

உங்க பையனுக்கு என்னாங்க வயசு இப்போ?
______________________________________________________
அதிமுக கூட்டணி நொண்டிக்குதிரை: சிதம்பரம்
அது டாக்டர் சரி பண்ணிடுவாங்களாம். ______________________________________________________
குடும்பம் இல்லாதவருக்கு கோடிக்கணக்கில் சொத்து எதற்கு?: ஜெ.வுக்கு விஜயகாந்த் கேள்வி

குடும்பம் இருந்தா கொள்ளை அடிக்கலாம்னு நினைச்சாரோ?
______________________________________________________
பிரபாகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டோம்:சிங்கள ராணுவ தளபதி

கிளிநொச்சில இருந்து இதே தானே! போங்கடாங்.
______________________________________________________
வீட்டுக்கு அனுப்பமுடியாது என்கிறார் ராஜபக்சே: 5ஆண்டுகள் அகதிகளா தமிழர்கள்?

ஆயுளுக்கும் அவ்வளோதான்.
______________________________________________________
மத்திய,மாநிலஅரசு நடவடிக்கை எடுப்பதால்தான் இலங்கை பிரச்சனை ஓரளவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறது:தங்கபாலு

அப்படின்னா நீங்க சொல்றா மாதிரிதான் எல்லாம் நடக்குதா? அடங்கொக்காமக்கா!
______________________________________________________
இலங்கை இந்தியாவின் ‌கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை: சிதம்பரம்

என்னா கோரினீங்க அவன் சாய்க்கல? கதவிடறதே பிழைப்பாப் போச்சி.
______________________________________________________
யாரைக் கவிழ்க்க இந்த பந்த்: ராமதாஸ்

மக்களதான்! என்ன சந்தேகம்,?
______________________________________________________
உணர்வு மிகுந்த தமிழர் ஒன்றாய் கூடுவோம்!:கலைஞர்

ஒருத்தன் கூட அப்படி இருக்கிறவன் வரமாட்டான்.
______________________________________________________
அப்பாவி தமிழர்களை கொல்வதைநிறுத்துங்கள்:இந்தியா

அப்படி தேடி அடிக்கிற குண்டு ஏதாவது கொடுத்திருக்கா?
______________________________________________________
கடைசி தமிழன் வெளியேறும்வரை போரை நிறுத்த வேண்டும்: இலங்கைக்கு இந்தியா கோரிக்கை

அது சரி. கடைசினு யாரு சொல்றது?
______________________________________________________
இலங்கை தமிழர்களை காப்பதிலே கடமையாக இருக்கிறார் கலைஞர்: திருமா

கண்டிப்பா. அது கருணா, பிள்ளையான் மாதிரி ஆளுங்களான்னு தான் கேள்வி. இனம் இனத்தோடே! சுரக்குடுக்கை ஆத்தோடே!
______________________________________________________
புலிகள் இயக்கம் அரசியலால்தான் உருவானது: தேவேகவுடா

அட தூங்காம இருந்தா சரியாதான் சொல்றாரு!
______________________________________________________
பிரபாகரனை கொல்ல 'ரா' உளவு‌த்துறை ச‌‌தி

இலங்கை ரா போறாது. இந்த ரா வேறயா?
______________________________________________________
இலங்கைமீது இந்தியா போர்தொடுக்கவேண்டும்:திருமா

தொங்குகிட்ட சொல்லுங்க சாமி.
______________________________________________________
மக்கள் மண் சாப்பிட நேரிட்டாலும் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தப்பட மாட்டாதென பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க

மக்களில்ல. நீங்கதான் மண்ண கவ்வ போறிங்க. ஆமாம். ஊழல் கதை என்னாச்சி?
______________________________________________________
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக கருணா நியமனம்

ஆஹா! அரசியல் தீர்வுக்கு அச்சாரம் போட்டாச்சா? எட்டப்பா என்னாடா உன் ஜித்து வேல?
______________________________________________________
விடுதலைப்புலிகளை விட சிறிலங்கா அரசு மீது அதிக தவறு: ப.சிதம்பரம்

செருப்படி பட்டாதான் புத்திவரும்னு திட்டுறது சும்மா இல்ல போலயே? சொக்குக்கு சொல்லுங்க சாமி!
______________________________________________________

12 comments:

அ. நம்பி said...

//யாரைக் கவிழ்க்க இந்த பந்த்: ராமதாஸ்

மக்களதான்! என்ன சந்தேகம்,?//

மக்களைக் கவிழ்த்தால்தான் மே 13- இல் வாக்குப்பெட்டிகள் நிறையும்.

வாக்குப்பெட்டிகள் நிறைந்தால்தான்...

பழமைபேசி said...

//வாக்குப்பெட்டிகள் நிறைந்தால்தான்...//

வீட்டுக்கு எடுத்துகிட்டு.... இஃகிஃகி!

பாலா... said...

/வாக்குப்பெட்டிகள் நிறைந்தால்தான்.../

அவரே தினம் சொல்லிக்கிறாரே. அரியணைசுகம், பதவி சுகம்னு. அதுக்குதேன். பதவி போனா குரங்க பறி கொடுத்த ஆண்டிதான்.

பாலா... said...

/வீட்டுக்கு எடுத்துகிட்டு.... இஃகிஃகி!/

லொள்ளு. ஹூம். நடக்கட்டு.

கிரி said...

//ஏமாற்ற வருவார்கள்;கவனமாக இருங்கள்: கனிமொழி

அடிக்கடி இப்படி அப்பாவ, அண்ணன எல்லாம் போட்டுக் குடுக்கிறியேம்மா.//

ஹா ஹா ஹா

பாலா அனைத்தும் கமெண்ட் ம் அருமை.. பின்னி பெடலெடுக்கறீங்க :-)

பாலா... said...

நன்றி. கிரி

இராகவன் நைஜிரியா said...

இன்னிக்கு நான் லேட்டுப்பா.. அதுக்கு முதல்ல ஒரு மன்னிப்பு கேட்டுகறேன்..

// ஏமாற்ற வருவார்கள்;கவனமாக இருங்கள்: கனிமொழி

அடிக்கடி இப்படி அப்பாவ, அண்ணன எல்லாம் போட்டுக் குடுக்கிறியேம்மா//

போட்டு கொடுப்பது என்பது குடும்ப வழக்கமா?

இராகவன் நைஜிரியா said...

// எம்.பி.பதவியை ராஜினாமாசெய்யமாட்டேன்:அன்புமணி

உங்க பையனுக்கு என்னாங்க வயசு இப்போ? //

இன்னும் எம்.பி ஆகின்ற வயசு வரலீங்க.. அதுவும் ராஜ்யசபா எம்.பி ஆகின்ற வயசு ஆகலீங்க

இராகவன் நைஜிரியா said...

// மத்திய,மாநிலஅரசு நடவடிக்கை எடுப்பதால்தான் இலங்கை பிரச்சனை ஓரளவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறது:தங்கபாலு

அப்படின்னா நீங்க சொல்றா மாதிரிதான் எல்லாம் நடக்குதா? அடங்கொக்காமக்கா!//

joke of the year

பாலா... said...

வாங்க இராகவன் சார். நன்றி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்.

குப்பன்_யாஹூ said...

என்னதான் எழுதி எத்தனை பதிவு போட்டாலும், வலை பதிவாளர்கள் எல்லாரும் உதயசூரியன் கை சின்னத்துக்கு தான் வாகு அளிக்க போறாங்க.

விஷயம் இல்லாமல் இருந்த பதிவர்களுக்கு, இலங்கை பிரச்னை, தேர்தல் நல்ல ஒரு விஷய சுரங்கம் ஆயிற்று.

பாலா... said...

/வலை பதிவாளர்கள் எல்லாரும் உதயசூரியன் கை சின்னத்துக்கு தான் வாகு அளிக்க போறாங்க./

இப்படியும் ஓட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்களா என்ன?

/விஷயம் இல்லாமல் இருந்த பதிவர்களுக்கு, இலங்கை பிரச்னை, தேர்தல் நல்ல ஒரு விஷய சுரங்கம் ஆயிற்று.//
சூரியனும் கையும் இருக்கிறவரைக்கும் பதிவர்களுக்கு பஞ்சமே இல்லை.