Saturday, April 18, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 27

போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படாவிட்டால் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட வேண்டும்: கருணாநிதி

அந்த ராஜ தந்திர உறவு என்னான்னு சொன்னா தேவலை. இல்லாட்டி வுடு ஜூட். அப்புறம் அய்யகோ போட்டுக்கலாம்னா?
_________________________________________________________
சர்வதேச கண்காணிப்பாளர்களை யுத்த வலயத்திற்குள் அனுமதிக்க முடியாது: அரசாங்கம்

நீ பேசல மவனே. அடிக்கிறாப்போல கூட இல்ல அழுராப்போல அழுன்னு சொல்ல. அப்புறம் ஏன் பேசமாட்ட.
_________________________________________________________
இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி தீக்குளித்த தமிழர் தேசிய இயக்கத் தொண்டர் பலி

பாதி அவனே எரிக்கிறான். மீதி இப்படி எரிஞ்சி போறது தான். எவனும் ஒண்ணும் பண்ணமாட்டான்.
_________________________________________________________
ஆபத்தான நிலைமையில் ஈழமக்கள்:ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது அமெரிக்கா

அட ஏம்பா இந்த நடிப்பு. ஆழ்ந்த அனுதாபம் சொல்லிட்டா அமெரிக்காவே அனுதாபம் சொல்லிடிச்சின்னு சந்தோஷமா சாவோம்ல.
_________________________________________________________
தமிழர்கள்வெளியேறுவதை தடுக்கவில்லைபுலிகள்:ஐநா

அப்புறம் என்னா மயித்துக்கு குண்டடிக்கற‌ன்னு அவன கேக்க என்ன கேடு. இதயும் சொல்லிட்டு புலிகள் விடுவிக்க வேணும்னு என்னா உளறல்.
_________________________________________________________
காணி நிலம் கூட விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது:ராஜபக்சே ஆணை

ஏண்டா நாயே! புதைச்சதெல்லாம் கூட எடுத்தெரிச்சி கடல்ல கலக்கப் போறியா. அந்த நிலம் கூட விடாத.
_________________________________________________________
ராஜபக்சேவுடன் ஐ.நா. நம்பியார் ஆலோசனை

என்னன்ன குண்டு வெச்சிருக்க. எதுக்காவது தடை இருந்தா உடனே நீக்கறோம்னா? இருக்கும்போதே கொத்து குண்டு போடுறானாம். இவரு ஆள அசைக்கிறாராம்.
_________________________________________________________
ஏனென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் இறந்து போன நேரத்தில் இரங்கல் கவிதை ஒன்று நான் எழுதினேன் என்பதற்காக ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விடுத்தார்? இந்த ஆட்சியையே கலைக்க வேண்டுமென்றார். இப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக உள்ள வைகோ, டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் போன்றவர்களின் குரல் பற்றி ஜெயா என்ன சொல்லப் போகிறார்?

உடனே ஆட்சி போய்விடும்னு பயந்து அய்யகோ தமிழ்ரத்தம். அதுக்குதான் அழுதேன்னு கேவலப் பட்டத விட இப்போ கூட சேர்ந்து குரல் கொடுக்குது அந்தம்மா. வெக்கமா இல்லை. பேச்சு வேற.
_________________________________________________________
அமைச்சரவையில் ஈழப்பிரச்னையை அன்புமணி எழுப்பாதது ஏன்?: ராமதாசுக்கு கலைஞர் கேள்வி

அடங்கொய்யாலே! நம்ம கதைய சொல்லிட்டு கேட்டா நல்லா இருக்குமில்லயா? அய்யா பேசக் கூடவா மறந்து போச்சி. எழுப்ப வேண்டியது பிரச்சனைய அல்ல. அது இருக்கு. அது தீர வழி. அதான் தேவை.
_________________________________________________________
ஈழப்பிரச்சனையில் காங்கிரசுடனான உறவை முறித்துக்கொள்ள திமுக தயாரா? ராமதாஸ் கேள்வி

அவரு மாட்டி விடுறா மாதிரி கேட்டாராம். பதிலுக்கு இவரு. இதெல்லாம் எங்களுக்கே தெரியுமே ஐயா.
_________________________________________________________
ஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ

எட்டப்பன் கருணா இதுக்கு பதில் சொல்லிட்டாரு. பணம் மட்டும் வேணும். தனி ஈழம் தேவையில்லயாம்.
_________________________________________________________
தமிழக மக்கள் ராமதாசை சன்னியாசம் அனுப்பி வைப்பார்கள்: பொன்முடி

உங்கள அனுப்ப பூமியில இடமே இல்லயேப்பா.
_________________________________________________________
சொத்து குவிப்பு வழக்கில் தங்கபாலுக்கு நோட்டீஸ்

இப்போவாவது எவ்வளவு அடிச்சதுன்னு கணக்கு பார்க்க வாய்ப்போ? சரியா நடந்தா தொங்குக்கு சங்கு.
_________________________________________________________
அமைச்சராகஅன்புமணி நீடித்ததுதான்துரோகம்:கலைஞர்

இவரு பண்றதுக்கு பேரு பச்சைத் துரோகம். அடுத்ததா தேர்தல்ல தோத்து எட்டப்பன் காவியம்னு திரைப்படம் எழுதி எல்லாருக்கும் இலவச அனுமதிச் சீட்டு.
_________________________________________________________
நாளை ஒரே மேடையில் திமுக கூட்டணியின் 40 வேட்பாளர்கள்:கலைஞர் சிறப்புரை

செருப்புரையாகக் கடவது. அதையும் பொறுக்கி வித்து காசு பார்ப்பார்கள்.
_________________________________________________________

7 comments:

பழமைபேசி said...

கடைசி ஒன்னு, நெம்ப நல்லா இருக்கு!

பாலா... said...

வாங்க பழமை. நன்றி.

கலகலப்ரியா said...

யோவ்.. அதுதான் சிங்கள புத்தாண்டு தாண்டியாச்சில்ல.. ஏதாவது புதுசா ஆரம்பிங்கையா.. பாமரன் பக்கங்கள் புதுப் பொலிவுடன்.. படிக்கத் தவறாதீர்கள்னு நான் விளம்பரம் போடுறேன்..

பாலா... said...

அது செரி. அப்புறம் விகடன், குமுதம் மாதிரி வகைக்கொரு பதிவு தான் போடணும் போல. கத சொன்னாக்கூட இவனுவ எழவு கவனம் வருதே. நான் என்னா பண்ண?

கலகலப்ரியா said...

கவனம் வர்றதெல்லாம் மகா முக்கியமா.. என்னய்யா லாஜிக் இது..

தீப்பெட்டி said...

// கடைசி ஒன்னு, நெம்ப நல்லா இருக்கு!//

ரிப்பீட்டு....

Anonymous said...

//உடனே ஆட்சி போய்விடும்னு பயந்து அய்யகோ தமிழ்ரத்தம். அதுக்குதான் அழுதேன்னு கேவலப் பட்டத விட இப்போ கூட சேர்ந்து குரல் கொடுக்குது அந்தம்மா. வெக்கமா இல்லை. பேச்சு வேற.//

அருமையா சொன்னீங்க,

அம்மா எங்களுக்கு எதிரி,
அய்யா நீங்க துரோகி,
எதிரிய மண்ணிகலாம்..
துரோகிய மண்ணிக்கலாமா..

-----ராசா