Friday, April 17, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 26

ஐ.நா. பிரதிநிதி விஜய் நம்பியார் இலங்கை வந்துள்ளார்: கோத்தபாயவை சந்தித்து பேச்சு

நம்பியார் புடிச்ச புலிவாலாகாம இருந்தச் செரி!
____________________________________________________________
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானது ரத்து: டைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு

சீமான்யா! இனிமே சிங்கமொன்று புறப்பட்டதே தான். தொங்கு தொங்கிடும்.
____________________________________________________________
இலங்கை இனப்படுகொலையை தடுக்க கோரிக்கை விடுப்போம்: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை

அப்போ இவ்ளோ நாள் விடுத்ததெல்லாம் என்னா?
____________________________________________________________
தமிழகம் சுட்டிக்காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர்: ஜெயலலிதா

இவிங்கள சுட்டனுமாமப்பா! பாசக்கார பயலுவ. பண்ணுவாங்கம்ணி!
____________________________________________________________
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

வேட்பாளரில்லனு சொன்னதால மனசொடிஞ்சிட்டாரா?
____________________________________________________________
ராமதாஸ்-ஜெ. கனவு நிறைவேறாது: தங்கபாலு

இதாஞ்செரி. இப்படி ஏதாவது கனவு சோசியம் சொல்லி பிழைக்கலாம். கவுரவமா.
____________________________________________________________
சீச்சீ! இந்தப்பழம் புளிக்கும்:ஜெ.மீது கலைஞர்கடும்தாக்கு

தேர்தல் முடியட்டும். இந்த நரி என்னா சொல்லுதுன்னு பார்ப்பம்.
____________________________________________________________
இதுதான் நட்பு: ஜெ.வைப் பற்றி நெகிழும் வைகோ

அய்யகோ!வை.கோ! பாசமலர் பார்ட் - 2
____________________________________________________________
மத்திய அரசினை ஆட்டிப்படைக்கும் கருணாநிதி அடிமையா?பழ.நெடுமாறன் கேள்வி

அவரு மக்களதாங்க சொன்னாரு.
____________________________________________________________
சென்னையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டது விடுதலைப்புலி ஆதரவாளர்களா?

சுவத்தில யாராவது ஒன்னுக்கடிச்சுட்டு போனா கூட அவங்களேதான். போங்கடாங்.
____________________________________________________________
தவறான கூட்டணியில் திருமாவளவன் இருக்கிறார்: ராமதாஸ்

எங்க இருந்தாலும் அங்க குழி பறிப்பாருன்னு கலைஞர் சொன்னத பொய்யாக்க பார்க்கிறாரு போல.
____________________________________________________________
கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் ராஜபக்சே கிளிநொச்சிக்கு திடீர் பயணம்

இது அவருக்கு அயல்நாடாம்ல. ஆமா. புடிச்சாச்சின்னு அலட்டி அப்புறம் என்னா பாதுகாப்பு?
____________________________________________________________
ஈழப்பிரச்சனையை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் ஜெ.: ஏ.பி.பரதன்

ராமதாச விட ஒரு படி மேல ஐஸ் வெக்கறது தப்பில்ல. அதுக்காக இது ரொம்ப ஓவர தெரியல.?
____________________________________________________________
இலங்கை தமிழர் பிரச்சனையில் விடுதலைப்புலி களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பின்ன. அவனென்னா கேனயா? போட்டுக் குடுத்துடுவானே.
____________________________________________________________
தமிழர்கள் மீதான ராணுவ நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தெளிவுபடுத்திய பிரணாப் முகர்ஜி.

யப்பா. என்னாமா மொட்டயடிச்சி, காது குத்தி பூ வேற சுத்துறாரு இந்தாளு.
____________________________________________________________
தமிழக மக்களின் அழுத்தம் இந்திய அரசியலில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்று பிரணாப் முகார்ஜி தெரிவித்துள்ளார்.

என்னா பிலிம் காட்டினாலும் 'ஓ' போட்றது தான் போய்யா.
____________________________________________________________
யுத்த சூன்ய வலயத்தில் அரசாங்கம் தாக்குதல் நடத்துகிறது: ஐக்கிய நாடுகள் சபை

தோடா. இப்போதான் தெரியுதாமா?
____________________________________________________________

6 comments:

பாலா... said...

வோட்டுப் போட்டவங்களுக்கும் 'ஓ' போட்டவங்களுக்கும் நன்றி. நல்லவங்களுக்கழகு சொல்லாமல் செல்லல்னு சொலவடை. நம்ம திண்ணைக்கு வந்தவங்கள்ளாம் ரொம்ப நல்லவங்கப்பா. அதான் சொல்லிக்காமலே போய்ட்டாங்க..அவ்வ்வ்வ்

டவுசர் பாண்டி. said...

இன்னாது, எ கோவத்த கேலரிட்டே நைனா, நா போடற பின்னு ஊட்டத்துல, இந்த பொட்டில பொக, வர வைக்கேறேன் பா,

//தமிழகம் சுட்டிக்காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர்: ஜெயலலிதா

இவிங்கள சுட்டனுமாமப்பா! பாசக்கார பயலுவ. பண்ணுவாங்கம்ணி!//

இது நீ போட்டது, இப்போ

டவுசரு டெல்லிங் -
இந்தியாவின் அடுத்த பிரதமர்:

ஜெயலலிதா,

இவிங்கள சுட்டனுமாமப்பா!

//ராமதாஸ்-ஜெ. கனவு நிறைவேறாது: தங்கபாலு
இதாஞ்செரி. இப்படி ஏதாவது கனவு சோசியம் சொல்லி பிழைக்கலாம். கவுரவமா.//

டவு டெல்-

ராமதாஸ்-ஜெ. கனவு நிறைவேறாது

கவுரவமா.
//இதுதான் நட்பு: ஜெ.வைப் பற்றி நெகிழும் வைகோ
அய்யகோ!வை.கோ! பாசமலர் பார்ட் - 2//
//சீச்சீ! இந்தப்பழம் புளிக்கும்:ஜெ.மீது கலைஞர்கடும்தாக்கு//

டவு டெல்-

ஜெ.வைப் பற்றி நெகிழும் வைகோ,

சீச்சீ! இந்தப்பழம் புளிக்கும்:ஜெ,
எம் பொட்டில பொக வர பாக்குது, ஐயோ ! நா வரலே இந்த ஆட்டத்துக்கு.

டவுசர் பாண்டி. said...

"நறுக்குன்னு நாலு வார்த்த - 26"

இன்னாபா ! நாலு வார்த்த இன்னு சொல்ட்டு நானூறு வார்த்த கீது, சோக்கா கீது பா !!

பாலா... said...

அது சரி. நன்றிங்க டவுசர்.

ஆதவன் said...

nall naruks.. super..

பாலா... said...

வாங்க!நன்றி ஆதவன்.