Thursday, April 9, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த- 21

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசை எதிர்த்து பிரசாரம்: பா.ம.க

சரி. ஆனா எங்க அணிக்கு வாக்களியுங்கள்னு கேக்க மாட்டிங்களே. 49‍ஓ கு போடுங்கனு சொல்லுவீங்களா? நீங்க துரோகத்த பத்தி எல்லாம் பேசலாமாங்கையா?‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

-----------------------------------------------------------------------

ஈழத்தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்: திருமாவளவன்
அது வரைக்கும் அந்த இனம் இருக்குமா? மனசாட்சியே இல்லையா?

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-----------------------------------------------------------------------

ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை சோனியாகாந்தி: திருமாவளவன்
இல்லைங்க திருமா. முதல்ல இருந்தேதான். நீங்க தான் அதுவா இதுவான்னு ஊசலாடி, இப்போ கலைஞரே ஒண்ணுமில்லன்னு ஆக்கிட்டீங்க.

----------------------------------------------------------------------

பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும்: வைகோ
அட ஆளே எரிஞ்சி போராங்களாம். துரும்பு எந்த மூலைக்கு. இப்பிடியே மைக் கிடைச்சா உதார் விட்டுண்டிருக்கலாம்.

-----------------------------------------------------------------------

ஈழத்தமிழர்களை பாதுகாக்க எந்த தியாகமும் செய்ய தயார்: ராமதாஸ்
தேர்தல், பதவி தவிர.

-----------------------------------------------------------------------

ஈழத்தமிழருக்காக தேர்தலை புறக்கணிக்க தயார்: விஜயகாந்த்
இவரு பங்குக்கு இவரு உதார். யாராவது சரி சொல்லுங்கப்பா.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-----------------------------------------------------------------------

இலங்கை தமிழர் பிரச்சினையில் திருமாவளவன் சர்க்கஸ் புலியாக மாறிவிட்டார்: தா.பாண்டியன்
கோமாளி சொல்லிவிட்டார்.

-----------------------------------------------------------------------

சென்னையில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பைகள் அனுப்பப்படுகின்றன

வாங்க அங்க ஆளு இருக்காமாதிரி பண்ணுங்கப்பு. இதிலயும் தேர்தல் கமிசன் அனுமதிச்சான்னு ஒரு உள்குத்து இருக்கு. இத விட தேர்தல் தான் முக்கியமில்லிங்களா?

-----------------------------------------------------------------------

இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆயுதங்களை திரும்பபெற வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
எப்போ விசாரணை ஆரம்பிச்சி, எப்போ தீர்ப்பு சொல்லி...........

-----------------------------------------------------------------------

இலங்கையில் உலக போரை விட கொடூரம்: திருமா
அடுத்த வருஷம் பாட புத்தகத்துல போட்டுக்கலாம்.

என்னா இப்போ?

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-----------------------------------------------------------------------

வைகோவை கைது செய்ய வேண்டும்:சு.சாமி

ஆரம்பிச்சிட்டான்டா. முட்ட நாத்தம் போய்டுச்சி போல. ஆர்டர் பண்ணுங்கப்பா அழுகின முட்ட அரை லாரி.

-----------------------------------------------------------------------

காங்கிரசை எதிர்க்க மாட்டோம்: திருமாவளவன்
குரங்காட்டி வச்சிருக்கிற குரங்கு கூட இப்படி குட்டிக்கரணம் போடாது. ஒரே நாள்ள எத்தனை?‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

-----------------------------------------------------------------------‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

12 comments:

அ. நம்பி said...

//குரங்காட்டி வச்சிருக்கிற குரங்கு கூட இப்படி குட்டிக்கரணம் போடாது. ஒரே நாள்ள எத்தனை?‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍//

குரங்கு போடாது; அது என்ன தேர்தலிலா நிற்கிறது?

கலகலப்ரியா said...

அங்க எரிஞ்சிட்டிருக்கிறவங்களுக்கு திதி பண்ண கூட நாதி இல்லை.. இவங்க அனுப்புற பொட்டலத்த வச்சு என்ன பண்ண போறாங்க..?

யாரு.. சோனியா அம்மா.. நம்பிக்கையா..? அவங்க என்ன வெட்டியான் வேலை பார்க்குறாங்களா? எரியற தமிழனுக்கு காவல் காக்க?

பாலா... said...

/குரங்கு போடாது; அது என்ன தேர்தலிலா நிற்கிறது?/
சரியாச் சொன்னீங்க‌

பாலா... said...

/அவங்க என்ன வெட்டியான் வேலை பார்க்குறாங்களா? எரியற தமிழனுக்கு காவல் காக்க?/
அந்த மரியாத கூட இல்லாமதான் போகிக்கு கொளுத்தறா மாதிரி எரிஞ்சி நிக்குதே. வெட்டியானுக்குகூட வேல இல்ல. அப்படி யாராவது இருந்தா அவங்களும் அந்த சாம்பலுள்ள தானே.

கிரி said...

இவனுகளும் இவனுக அரசியலும் ..கடுப்பு தான் வருது

பழமைபேசி said...

உணவு இடைவேளைல மீண்டு வந்து படிக்கிறேன்...

பாலா... said...

வாங்க பழமைபேசி.

நவநீதன் said...

//ஈழத்தமிழர்களை பாதுகாக்க எந்த தியாகமும் செய்ய தயார்: ராமதாஸ்
தேர்தல், பதவி தவிர.//

தொழில்னு வந்துட்டா பந்த பாசம் எல்லாம் கெடையாதுங்க.

Anonymous said...

நச்

Prasanna.S.Manian said...

really nice, keep it up
i updated my
new post here check out

பாலா... said...

அனைவருக்கும் நன்றி

Vishalivinh said...

அய்யா,
இன்னொரு விசயமுங்கோ. நான் நேற்று ஒரு வட இந்தியரை சந்தித்தேன். அவர் சொல்படி இலங்கை விவகாரம் ஏன்னு கேக்குறாங்க. அதாவது நமது வட பத்திரிக்கைகல் இந்த விசயத்தை வெளியிடுவதில்லை. இதுக்கு பேரு இந்தியா. ஆண்டவா. தமிழன் எங்கேயும் தனியே?????