இந்த மாதம் 26ம் தேதி நம்ம சிதம்பரம் ஐயாவும் மாலிக் ஐயாவும் இஸ்லாமாபாத் நகரில் சந்திச்சாங்களாம். அப்ப இந்தியக் கொடி தலைகீழா இருந்திச்சாம். சிதம்பரம் ஐயா என்ன இருந்தாலும் ஐ.பி. தலைவரில்லையா. டக்குன்னு கண்டுபிடிச்சி மாலிக் கிட்ட ‘என்ன்னாதிது’ன்னாராம். அவரு ‘ஹி ஹி..ச்ச்சாஆஆரி’ன்னு சரி செய்தாராம். இதெல்லாம் ஒரு மேட்டர்னு இடுகை தேத்துறியான்னு கேக்கறீங்களா! நாயந்தான். சிதம்பரம் ஐயாவே அப்புடித்தான் சொல்லி இருக்காரு.
“I think its a minor mistake and I don’t think we should make much of it.’’
தமிழ் பேப்பரில் திரு சிதம்பரம், கொடி தலைகீழா இருந்ததை ஃபோட்டோ பிடித்தவர்கள் சரி செய்த பிறகும் படம் எடுக்க வேண்டாமா என்று கேட்டிருக்கிறார். நாயந்தானே!
இந்த கொடிகாத்த குமரன்னு ஒருத்தர சொல்லுவாய்ங்களே அவரு காங்கிரஸ்காரருங்ளாண்ணா?
சரி சரி! நமக்கெதுக்கு வீண் விவகாரம். அவரே சின்ன்ன விஷயம் இதுன்னு சொன்னப்புறம் நாம ஊதி பெருசாக்குறது சரியில்லை. இப்ப மேட்டரு என்னன்னா படிச்சதும் படக்குன்னு தோணுனது, அத கண்டு பிடிச்சி அவருகிட்ட நொணாவட்டம் சொல்லி அவருதான் மாத்தணுமா? என் தேசக் கொடி இப்புடி சிரசாசனம் பண்ணப் போச்சான்னு பதறிப் போய் இவரு மாத்தியிருக்க வேணாமாங்கிறது.
இந்த ப்ரோட்டோகால்னு வேற எங்க இருக்கோ இல்லையோ, அரசியல்லையும் அதிகார வர்க்கத்திலையும் இதில்லாம முடியாது. புரோட்டாகாலுன்னாவது சொல்லத் தெரிஞ்சிருக்கணும். இந்த ப்ரோட்டோகால் என்கிற நெறிமுறை காரணமாத்தான் நம்ம ஐயா, அவர மாத்த வச்சிருக்கணும்னு தோணுது.
இந்த ப்ரோட்டோகால் படுத்தற பாடு இருக்கே. சிப்பு சிப்பாவும் வரும். துப்பலாம் போலவும் வரும். சாம்பிளுக்கு கொஞ்சம்:
- காலையில அதிகாரி வரும்போது அவரு டவாலி அதான் ப்யூன் போர்ட்டிகோவில் காத்திருக்கணும். ஒரு வணக்கம் சொல்லி, கதவைத் திறந்துவிட்டு, அவரு பொட்டி, சாப்பாடு எல்லாம் எடுத்துகிட்டு அவருக்கு முன்ன ஓடி, அறைக் கதவைத் திறந்து பிடிக்கணும். திரும்ப சாயந்திரம் கிளம்பும் போதும் இதே கூத்து. ஒரு அதிகாரி சொன்னாராம் அவர் ப்யூனிடம்.தம்பி காலைல ஒரு முறை சாயந்திரம் ஒரு முறைன்னு இல்லை. நான் போக வர நீ வணக்கம் சொல்லணும்னு.
- போகுறப்ப கார்க்கதவ சாத்திட்டு, கிளம்பற வரைக்கும் பக்கத்துல நிக்கப் படாது. எதிர் பக்கமா சல்யூட் அடிச்சிட்டு நிக்கணும். அதிகாரி உடனே தலையாட்ட மாட்டாரு. கொஞ்ச நேரம் நிக்க வச்சிட்டு அப்புறம் சரிம்பாரு.
- வெளியூர்ல இருந்து ஒரு அதிகாரியோ, மந்திரியோ வராருன்னா விமான நிலையத்துல போய் காத்திருந்து வரவேற்று, திரும்ப ஏத்தி விடுறது முறை. உள்ளூர் ஆளுங்களுக்கு என்ன? அதிகாரிக்கு 6 மணிக்கு விமானம்னா கீழதிகாரிங்க மூணுக்கும் நாலுக்கும் அலாரம் வச்சி, எங்க தூங்கிறுவமோன்னு ராவெல்லாம் விழிச்சி எழுந்து ஓடணும்.
- இதுங்க உதவியாளருங்க பாடு இருக்கே பெரும்பாடு. இங்க இருக்கிற அதிகாரி சீனியரா இருப்பாரு. ஏதோ ஒரு காரணத்துல இவருக்கு அதிகாரி ஜுனியரா இருப்பாரு. இவரு உதவியாளரிடம் அவருக்கு கனக்ஷன் போடும்பாரு. உதவியாளர் ஃபோன் போட்டா அந்த அதிகாரியோட உதவியாளர், நீ உங்காள கூப்புடு எங்காளுதான் அதிகாரிம்பாரு. இங்க இருக்கிறவன், யோவ் எங்காளுதான் சீனியரும்பான். இதுல என்னாங்கறீங்களா? முதல்ல எடுக்கிறவரு மத்தவருக்காக காத்திருந்தா ப்ரோட்டோகால் என்னாவறது?
- நம்ம நண்பர் ஒருத்தர் இருக்காரு. ப்ரோட்டோகால்ல கரை தேர்ந்தவரு. அவர் கைமறதியா பெல்லடிச்சிடுவாரு. ப்யூன் வந்து என்னாங்கன்னு நிப்பாரு. எதாவது காரணமா கூப்பிட்டிருந்தாதானே? சாரி சொல்லிட முடியுமா? ஒரு துண்டு பேப்பரை கிழிச்சி சுருட்டி, குப்பைக் கூடை பக்கத்துல எரிஞ்சிட்டு, அதை எடுத்து கூடையில போடுன்னு சொல்லிட்டு வேலையப் பார்ப்பாரு.
- இன்னொருத்தருக்கு ஒரு கிலோமீட்டரில் வீடு. மதியம் சாப்பிட வீட்டுக்குப் போவார். காலையில் வந்து இறங்கியதும் அவருடைய ப்யூன் இவரோட ப்ரீஃப் கேசை எடுத்துக்கிட்டு வரணும். திரும்ப சாயந்திரம் எடுத்துட்டு போகணும். உள்ள ஹிந்து பேப்பரும், ஆஃபீஸ் சாவியும் இருக்கும். இதச் சுமக்க முடியாதாங்கறீங்களா? ப்ரோட்டோகால் என்னாவறது?
வெளிய வந்து அவன் திட்டுறதிட்டு எந்த ப்ரோட்டோகால்லையும் அடங்காது. ச்ச்சேரி. இதுக்கே உங்களுக்கெல்லாம் பொரட்டிகிட்டு வரும். இதுக்கு மேலையும் சொல்லுறது ப்ரோட்டோகாலில்லை. வர்ட்ட்டா!...
(டிஸ்கி: இதைப் படிச்சிட்டு அடப்பாவி மனுஷா! ஏடிஎம்ல பணம் எடுக்குறதில இருந்து எல்லாத்துக்கும் ஒரு ஆளைத்தேடுற ஒரு ப்யூனாதிக்கவாதி என்னமா எழுதுறான்னு இந்த ப்ரியா பொண்ணு நக்கலடிக்கும். அது ப்ரோடோகாலில்லை. அன்பு. அம்புட்டுதான். )