Saturday, May 29, 2010

கதிர் வினைக்கு எதிர் வினை.

1. நானும் பதிவு எழுதறேன், வலைப்பூவில எழுதறேன்னு சம்பளப் பணத்துல நெட் கனெக்சனும், லோன் போட்டு புதுசா லேப்டாப்பும் வாங்கினையே, முதல்ல அது பிடிக்கலை.

ங்கொய்யால. மத்தபேரெல்லாம் கொள்ளையடிச்சி நெட் கனெக்சன் வாங்கினாமாதிரி என்னா அலம்பலு? இந்த அல்டாப் பிடிக்கலை

2. வலைப்பூ முகப்புல போடறதுக்கு கோயமுத்தூர் போயி 3500 ரூபா செலவு பண்ணி 18 விதமான கெட்டப்ல போட்டோ எடுத்துட்டு வந்தியே அது பிடிக்கலை.

கவுத்து வெச்ச சட்டிய சுத்தி சுத்தி வந்து எடுத்தாலும் ஒரே மாதிரித்தானே இருக்கும். இதுக்கு க்க்க்க்கோஓஓஓஓஓஓஓஓயம்பத்தூர் வேற. இந்த ஓவர் சீனு பிடிக்கலை.

3. நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.

அடங்கொன்னியா! ராத்திரி 11 மணிக்கு மேல ஓசில பேசற பூஸ்டர் பேக்குக்கு கஞ்சத்தனம் பண்ணிக்கிட்டு இப்புடி காசக்கரியாக்கினது சுத்தமா புடிக்கலை.

4. நீயே ஒரு ஹிட் கவுண்டர் செட் பண்ணிட்டு தினமும் குறைஞ்சது 200லிருந்து 300 வாட்டி பிரவுசரை Refresh பண்ணிறியே அது பிடிக்கலை.

அல்பம் அல்பம். விடியக்காத்தால ஒரு 2 மணிக்கு அலாரம் வெச்சிக்கிட்டு ஃபீட்ஜிட்ல பார்த்து யாரும் இல்லைன்னா நேரா கவுண்டர்ல போய் ஸ்டார்ட்டிங் நம்பர் மாத்திக்குடுத்தா எவ்ளோ பேண்ட்வித் மிச்சம். இது கூட தெரியாம..இந்த மடத்தனம் சுத்தமா பிடிக்கலை.

5. யாருமே பின்னூட்டம் போடறதில்லைனு கொஞ்சம் கூட வருத்தப்படாம, நியூமராலஜி புஸ்தகம் வாங்கி, உன்னோட ராசிக்கு பொருந்தற மாதிரி வித்தியாசமா 20 ஆண்கள், 25 பெண்கள் பெயர்களை செலக்ட் பண்ணி அப்பப்ப நீயே பின்னூட்டம் போட்டுக்கிறியே அது பிடிக்கலை.

அடக் கருமமே! அத்தன பின்னூட்டத்துக்கும் பதில் பின்னூட்டமும் இல்லீன்னா நன்றின்னு வேற போட்டுக்கணுமே. அந்தக் கொடுமையும் பிடிக்கலை.

6. போன வாரம் நடந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில “வலைப்பூ புகழ்”னு லேப்டாப் முன்னாலே நீ உட்காந்திருக்கிற மாதிரி போட்டோ போட்டு பிளக்ஸ் பேனர் வைச்சிருந்தியே அது பிடிக்கலை.

இப்போ நடந்த குடுமுழுக்குல “வலைப்புகழ்” பக்கத்துல பக்கித்தனமா “பி.ப”னு வேற போட்டு அதே ப்ளக்ஸ் பேனர சர்ஃப் போட்டு கழுவி கட்டியிருந்தது கேவலமா பிடிக்கலை.

7. “சிறந்த வலைப்பதிவு சிங்கம்”னு எம்ராய்டரிங் பண்ணின பிட்டுத் துணிய தினமும் சட்டைப்பையில் குண்டூசி வைச்சு குத்திட்டு, நெஞ்ச நிமிர்த்திட்டு போயி ரோட்ல கிடந்த கல்லுல கால் நகத்தை பேத்துக்கிட்டியே அது பிடிக்கலை.

அது நடந்து ஆறுமாசமாகியும் புதுசா யாராவது பார்க்கறப்ப வேணும்னே நொண்டிகிட்டு இத சரியாக் குத்தப்போய் கல்லுல அடி பட்றுச்சின்னு அனுதாப ஃபாலோயர் புடிச்சது சுத்தமா பிடிக்கல.

8. வேலை செய்ற கம்பெனியில உன் பேரு போட்டு கொடுத்த விசிட்டிங் கார்டுல வலைப்பூ முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குத்திட்டு, மார்கெட்டிங் போற இடத்திலெல்லாம் வலைப்பூ பத்தியே பேசுறியே அது பிடிக்கலை.

ம்கும். அதுல மாறுதல்.ப்ளாக்ஸ்பாட்.காம்னு இருந்தத படிச்சிட்டு அட ஆமாம்லனு அத்தன வாடிக்கையாளரும் மாறிபோய் ஆப்பு வெச்சத இப்பவும் சொல்லாம விட்டது பிடிக்கவேயில்லை.

9. பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.

பதிலுக்கு வந்த ஜாதகத்துல “வலைப்பூ சிங்கி”ன்னு போட்டு டமுக்கடிப்பான் டியாலோன்னு கையெழுத்து போட்டு வந்தத சொல்லாம விட்டதும் கூட பிடிக்கலை.

10. சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.

படிக்க நெம்ப ஓக்கியமா தெரிஞ்சாலும் அந்த முட்டாள் தனம்னு சொன்னது வருத்தப்பட்டத இல்ல இப்புடி வெட்டி சபதம் போட்டதத்தான் உள்குத்தா சொன்னேன்னு இப்பக்கூட ஒத்துக்காத கிருத்துருமம் புடிக்கவேயில்ல

11.பத்து பாயிண்டுனு சொல்லிட்டு, யார் என்ன கேட்டுடப்போறாங்கனு, 13 பாயிண்ட் எழுதிறியே, இந்த கட்டுப்பாடில்லாத புத்தி பிடிக்கலை.

அப்பவே எவனும் கண்டுக்கல. இப்பமட்டும் திருந்திருவாய்ங்களான்னு 12-13 ஆக்கிட்டு சில மாற்றங்களுடன்னு போடாம மீள்பதிவுன்னே போடுற திமிரு பிடிக்கல.

12. கடைசியா, இத்தனை நாளா கஷ்டப்பட்டு, ஒரு மொக்கை கூட எழுதத் கையலாகாம, இந்தப் பதிவுக்குப்போய் லேபிள்ல “மொக்கை”னு போடப்போறியே அது சுத்தமா பிடிக்கலை.

அட்றா சக்க அட்றா சக்க. என்ன குப்ப எழுதினாலும் அதுல மொக்கன்னு ஒரு வார்த்த வராமாதிரி போட்டு லேபிளும் போடுறத இப்புடிக் குத்திக்காட்டுரது புடிக்கவேயில்லையே ராசா

13. கடை ஆரம்பிச்ச புதுசுல, விலை போகாத சரக்க மீள் இடுகைன்னு போட்டு யாவாரம் பண்றியே அது இன்னும் பிடிக்கல

கருவாடு வித்த காசு நாறுமா! மீள் இடுகைக்கு வந்த பின்னூட்டம் கசக்குமா! இஃகி இஃகின்னு சிரிக்கிறது பிடிக்கல

14. அப்போ வந்த புதுசு சரி. இப்போ பி.ப. ஆனபிறகும், ரொம்ப ஓக்கியம் மாதிரி 12 இருந்தத 13னு ஆக்கிட்டு தலைப்புல அதே பத்த அப்புடியே காபி பேஸ்ட் போட்டு கண்டு பிடிங்கடாபாப்பம்னு அந்த தெனாவட்டு சுத்தமா பிடிக்கல. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூலவர் இங்கே 

(டிஸ்கி: இப்பவே சொல்லிடுறேன். சூதானமா பாருங்க. அப்புறம் வருத்தப்படக் கூடாது. சாரி நாட் அக்ஸப்டட்)

85 comments:

vasu balaji said...

ஸ்டார்ட் மீஜிக்:))

dheva said...

ஒண்ணும் புரியலைங்கண்ணா....கதிர் இடுகை படிச்சு...முடிச்சு திரு திருன்னு முழிசுட்டு இருந்தவங்க எல்லம் இப்போ உங்க பதிலடிய பாத்துப்புட்டு திகச்சு போயி நிக்கறங்கண்ணா!

கதிரு...சாரு...என்ன சொல்லப் போறங்ங்ங்ங்ங்...அண்ணா ஒரு சோடா சொல்லுங்கண்ணா புண்ணியாமா போகும் கிறு கிறுன்னு வருதுங்கண்ணா!

மீசிக் சாட் ஆகிடுசுங்கண்ணா....!

அத்திரி said...

ரைட்டு,,,,,,,,,,,,start

Ahamed irshad said...

நடத்துங்க நடத்துங்க....

Prathap Kumar S. said...

//அனுதாப ஃபாலோயர் புடிச்சது சுத்தமா பிடிக்கல.//

ஹஹஹஹ.. அனுதாப ஓட்டு கேள்விப்பட்டிருக்கேன்... அனுதாப பாலோவர் கூட பண்றாங்களா.... என்னக்கொடுமை சார்...

சூப்பர் எதிர்வினை... ரொம்ப சிரிச்சுட்டேன்...

பத்மா said...

bale sariyaana potti

கலகலப்ரியா said...

||கவுத்து வெச்ச சட்டிய சுத்தி சுத்தி வந்து எடுத்தாலும் ஒரே மாதிரித்தானே இருக்கும்||

இது கீறல் விழுந்த அலுமினியச் சட்டிதானே...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:))

பெசொவி said...

கலக்கல் பாஸ்! கதிரோட பதிவைத் தான் முதல்ல படிச்சேன், சிரிச்சேன்! உங்க எதிர்பதிவைப் படிச்சுட்டு சிரிச்சேன், சிரிச்சேன், சிரிச்சுகிட்டே இருக்கேன்!

அனு said...

இப்போ தான் அங்க படிச்சுட்டு வந்தேன்.. அதுக்குள்ள இங்க ஆரம்பிச்சாச்சா?? நடத்துங்க.. நடத்துங்க..

//அது நடந்து ஆறுமாசமாகியும் புதுசா யாராவது பார்க்கறப்ப வேணும்னே நொண்டிகிட்டு இத சரியாக் குத்தப்போய் கல்லுல அடி பட்றுச்சின்னு அனுதாப ஃபாலோயர் புடிச்சது சுத்தமா பிடிக்கல.//

சூப்பருங்க..

நேசமித்ரன் said...

பாலா சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!

:)

நட்பு வளரட்டும் ! பூவால் எறிந்து கொண்டு விளையாடும் இந்த விளையாட்டுகள் வழி வெளிப்படுத்தும் பிரியம் நன்று!

மணிஜி said...

இந்த எதிர்வினை..அப்படின்னா என்ன சார்?

ஈரோடு கதிர் said...

//நேசமித்ரன் said...
நட்பு வளரட்டும் ! பூவால் எறிந்து கொண்டு விளையாடும் இந்த விளையாட்டுகள்//

அவ்வ்வ்வ்வ்..

பூவால் எறிந்து!!!

என்னானானானானானானாது ’பூ’வா

அண்ணே....

இந்த வானம்பாடி பூ மூட்டையயில்ல போட்டு அமுக்குறாரு

ஈரோடு கதிர் said...

//மணிஜீ...... said...
இந்த எதிர்வினை..அப்படின்னா என்ன சார்?//

செய்வினை தெரியும்ங்ளா?

Ashok D said...

:))

Jackiesekar said...

இந்த விசாரனையில் பல விஷயங்கள் வெளிப்படும் போல இருக்கே...

கிரி said...

:-)))

அகல்விளக்கு said...

//ஜாக்கி சேகர் said...

இந்த விசாரனையில் பல விஷயங்கள் வெளிப்படும் போல இருக்கே...//

அதானே....

Unknown said...

ROTFL :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

கலகலப்ரியா said...

//மணிஜீ...... said...
இந்த எதிர்வினை..அப்படின்னா என்ன சார்?//

ஜீணிம...

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
ஸ்டார்ட் மீஜிக்:))//

இதெல்லாம் நல்லாயில்ல... ஊர்ல ஒருத்தன் இல்லன்னா இப்டியா பண்றது...

//கவுத்து வெச்ச சட்டிய சுத்தி சுத்தி வந்து எடுத்தாலும் ஒரே மாதிரித்தானே இருக்கும். //

அதானே... என்னா பில்டப்புங்கறீங்க... இன்னமும் அடங்கமாட்டுறாரே....

(மறுபடியும் திங்கட்கிழமை பார்ப்போம்...)

அ.முத்து பிரகாஷ் said...

// பூவால் எறிந்து கொண்டு விளையாடும் இந்த விளையாட்டு //
சரியா சொன்னீங்க நேச மித்திரன் ...
இதையும் தாண்டி சாத்தியப் படும் நட்பு தான் நட்பு ...
கொஞ்சம் பொறாமையாத் தானிருக்கு ...

Download சுரேஷ் said...

மூலவர் இங்கே பாவம் சார் அவர் அவரையே அவர் கலாய்க்கிறார் என்றால் நீங்கள் செய்வது இல்லை சிரிப்புதான் வருகிறது.

செ.சரவணக்குமார் said...

ஐயா, சிரிச்சு முடியல...

நேசன் சொன்னாப்புல பூ விளையாட்டு நல்லாத்தான் இருக்கு..

எல்லா பந்தையுமே சிக்ஸராக்குறீங்களே பாலா சார்..

ஈரோடு கதிர் said...

//நியோ said...
இதையும் தாண்டி சாத்தியப் படும் நட்பு தான் நட்பு ...
கொஞ்சம் பொறாமையாத் தானிருக்கு ...
//

பாயிண்ட் நெம்பர் 14 . இந்தப் பொறாமைப் படற மாதிரி நட்போட இருக்கிறது பிடிக்கலை

காமராஜ் said...

இது ரொம்ப நல்லாருக்கு.
எசப்பாட்டும் எதுப்பாட்டும்.
போட்டி போட்டு கலக்றீங்க.

ஸ்ரீராம். said...

ஆஹா...இப்படி எல்லாம் கூடவா? கலக்கறீங்க..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ... கலக்கலோ கலக்கல்.

கும்மி அடிக்க கை பற பறங்குது... இருந்தாலும் மனசு அடங்கு அடங்கு அடக்குது..

முடியலை.. அடுத்த இடுகையில அடிச்சுக்கறேன்..

இராகவன் நைஜிரியா said...

// மத்தபேரெல்லாம் கொள்ளையடிச்சி நெட் கனெக்சன் வாங்கினாமாதிரி என்னா அலம்பலு? இந்த அல்டாப் பிடிக்கலை //

இந்த அல்டாப் பிடிக்கலைன்னா வேற எந்த அல்டாப்புத்தான் பிடிக்கும் சொல்லாம விட்டது பிடிக்கலை..

இராகவன் நைஜிரியா said...

// கவுத்து வெச்ச சட்டிய சுத்தி சுத்தி வந்து எடுத்தாலும் ஒரே மாதிரித்தானே இருக்கும். இதுக்கு க்க்க்க்கோஓஓஓஓஓஓஓஓயம்பத்தூர் வேற. இந்த ஓவர் சீனு பிடிக்கலை.//

சட்டியின் எல்லாம் பக்கமும் ஒரே ஷேப்பாத்தான் இருக்கும் என்று முடிவு கட்டியது பிடிக்கவில்லை

இராகவன் நைஜிரியா said...

// ராத்திரி 11 மணிக்கு மேல ஓசில பேசற பூஸ்டர் பேக்குக்கு கஞ்சத்தனம் பண்ணிக்கிட்டு இப்புடி காசக்கரியாக்கினது சுத்தமா புடிக்கலை. //

சேமிப்பை கஞ்சத்தனம் என்று சொல்லுவது பிடிக்கவில்லை.

இராகவன் நைஜிரியா said...

// விடியக்காத்தால ஒரு 2 மணிக்கு அலாரம் வெச்சிக்கிட்டு ஃபீட்ஜிட்ல பார்த்து யாரும் இல்லைன்னா நேரா கவுண்டர்ல போய் ஸ்டார்ட்டிங் நம்பர் மாத்திக்குடுத்தா எவ்ளோ பேண்ட்வித் மிச்சம். இது கூட தெரியாம..இந்த மடத்தனம் சுத்தமா பிடிக்கலை. //

விடியக்காத்தால 2 மணிக்கு எழுந்து, ஸ்டார்ட்டிங் நம்பர மாத்தினா பேண்டோட வித் எப்படி குறையும் சரியா சொல்லாம விட்டது பிடிக்கலை.

இராகவன் நைஜிரியா said...

// அத்தன பின்னூட்டத்துக்கும் பதில் பின்னூட்டமும் இல்லீன்னா நன்றின்னு வேற போட்டுக்கணுமே. அந்தக் கொடுமையும் பிடிக்கலை. //

நன்றி சொல்வதை பிடிக்கலை என்று சொல்வது பிடிக்கவில்லை

இராகவன் நைஜிரியா said...

// இப்போ நடந்த குடுமுழுக்குல “வலைப்புகழ்” பக்கத்துல பக்கித்தனமா “பி.ப”னு வேற போட்டு அதே ப்ளக்ஸ் பேனர சர்ஃப் போட்டு கழுவி கட்டியிருந்தது கேவலமா பிடிக்கலை.//

பி.ப. போட்டால் என்னவெல்லாம் அடிவிழும் என்று தெரிந்து, தைரியமாக போட்ட்டதை பாராட்டாமல், கேவலமாக என்று சொன்னது பிடிக்கவில்லை.

இராகவன் நைஜிரியா said...

// அது நடந்து ஆறுமாசமாகியும் புதுசா யாராவது பார்க்கறப்ப வேணும்னே நொண்டிகிட்டு இத சரியாக் குத்தப்போய் கல்லுல அடி பட்றுச்சின்னு அனுதாப ஃபாலோயர் புடிச்சது சுத்தமா பிடிக்கல.//

பட்ட காலிலேயே படும் என்ற பழமொழி மறந்து போனது பிடிக்கவில்லை.

இராகவன் நைஜிரியா said...

// ம்கும். அதுல மாறுதல்.ப்ளாக்ஸ்பாட்.காம்னு இருந்தத படிச்சிட்டு அட ஆமாம்லனு அத்தன வாடிக்கையாளரும் மாறிபோய் ஆப்பு வெச்சத இப்பவும் சொல்லாம விட்டது பிடிக்கவேயில்லை. //

வாடிக்கையாளர்கள் வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் ஆப்பு வச்சதை, வாடிக்கையா சொன்னது பிடிக்கவில்லை.

இராகவன் நைஜிரியா said...

// பதிலுக்கு வந்த ஜாதகத்துல “வலைப்பூ சிங்கி”ன்னு போட்டு டமுக்கடிப்பான் டியாலோன்னு கையெழுத்து போட்டு வந்தத சொல்லாம விட்டதும் கூட பிடிக்கலை. //

இதை பொது வெளியில் இப்படி சொன்னது பிடிக்கவில்லை.

இராகவன் நைஜிரியா said...

// படிக்க நெம்ப ஓக்கியமா தெரிஞ்சாலும் அந்த முட்டாள் தனம்னு சொன்னது வருத்தப்பட்டத இல்ல இப்புடி வெட்டி சபதம் போட்டதத்தான் உள்குத்தா சொன்னேன்னு இப்பக்கூட ஒத்துக்காத கிருத்துருமம் புடிக்கவேயில்ல //

கிருத்துருமம் எதையும் என்னிக்குமே ஒத்துக் கொண்டதா சரித்திரம், பூகோளம், அறிவியல், கணக்கு எதுவுமே இல்லாத போது, இதை மட்டும் ஒத்துக்குவேன் என எதிர் பார்த்தது பிடிக்கவில்லை

இராகவன் நைஜிரியா said...

// அட்றா சக்க அட்றா சக்க. என்ன குப்ப எழுதினாலும் அதுல மொக்கன்னு ஒரு வார்த்த வராமாதிரி போட்டு லேபிளும் போடுறத இப்புடிக் குத்திக்காட்டுரது புடிக்கவேயில்லையே ராசா //

குத்திக் காட்டுவதை திருப்பி குத்திக் காட்டுவது பிடிக்கவில்லை.

இராகவன் நைஜிரியா said...

// அப்பவே எவனும் கண்டுக்கல. இப்பமட்டும் திருந்திருவாய்ங்களான்னு 12-13 ஆக்கிட்டு சில மாற்றங்களுடன்னு போடாம மீள்பதிவுன்னே போடுற திமிரு பிடிக்கல. //

மொக்கை அப்படின்னு லேபிள் போட்டுட்டா எப்பவுமே எவருமே கண்டுக்கமாட்டாங்கன்றது உங்களுக்கு தெரியலை என்பது பிடிக்கவில்லை

இராகவன் நைஜிரியா said...

// கருவாடு வித்த காசு நாறுமா! மீள் இடுகைக்கு வந்த பின்னூட்டம் கசக்குமா! இஃகி இஃகின்னு சிரிக்கிறது பிடிக்கல //

மீள் இடுக்கைக்கு வந்த் எதிர் வினை இடுகைக்கு வந்த பின்னூட்டம்தான் கசக்குமா...? மொக்கை பின்னூட்டங்கள் என்னிக்குமே இனிப்புதான் என தெரியாதது பிடிக்கவில்லை.

vasu balaji said...

அண்ணே கும்மி எல்லாத்துக்கும் மேல டாப்பு:))

இராகவன் நைஜிரியா said...

// ஈரோடு கதிர் said...
//நியோ said...
இதையும் தாண்டி சாத்தியப் படும் நட்பு தான் நட்பு ...
கொஞ்சம் பொறாமையாத் தானிருக்கு ...
//

பாயிண்ட் நெம்பர் 14 . இந்தப் பொறாமைப் படற மாதிரி நட்போட இருக்கிறது பிடிக்கலை //

இதையே ரிப்பீட் போட்டுக்கறேன்..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே கதிர் அண்ணே... நீங்க தொலைபேசியில் சொன்னபடி, எதிரி வினைக்கு நல்லா பின்னூட்டம் போட்டாச்சு...

அக்கௌண்ட்ல் போட வேண்டியதைப் போட்டுடுங்க..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// ஈரோடு கதிர் said...
//நியோ said...
இதையும் தாண்டி சாத்தியப் படும் நட்பு தான் நட்பு ...
கொஞ்சம் பொறாமையாத் தானிருக்கு ...
//

பாயிண்ட் நெம்பர் 14 . இந்தப் பொறாமைப் படற மாதிரி நட்போட இருக்கிறது பிடிக்கலை //

இதையே ரிப்பீட் போட்டுக்கறேன்..//

நான் எழுதினதெல்லாம் பிடிக்கலைன்னு சொல்லிட்டு இதுக்கு மட்டும் ரிப்பீட்டிக்கிற அரசியல் எனக்கு பிடிக்கலை:))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
அண்ணே கும்மி எல்லாத்துக்கும் மேல டாப்பு:)) //

தம்பியை அண்ணன் என்று அழைத்து, தலைக்கு மேல் வச்சு கொண்டாடுவது பிடிக்கவில்லை.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

அண்ணே கதிர் அண்ணே... நீங்க தொலைபேசியில் சொன்னபடி, எதிரி வினைக்கு நல்லா பின்னூட்டம் போட்டாச்சு...

அக்கௌண்ட்ல் போட வேண்டியதைப் போட்டுடுங்க..//

இப்புடி ஆள் செட்டப் பண்றது பிடிக்கலை:))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

// ஈரோடு கதிர் said...
//நியோ said...
இதையும் தாண்டி சாத்தியப் படும் நட்பு தான் நட்பு ...
கொஞ்சம் பொறாமையாத் தானிருக்கு ...
//

பாயிண்ட் நெம்பர் 14 . இந்தப் பொறாமைப் படற மாதிரி நட்போட இருக்கிறது பிடிக்கலை //

இதையே ரிப்பீட் போட்டுக்கறேன்..//

நான் எழுதினதெல்லாம் பிடிக்கலைன்னு சொல்லிட்டு இதுக்கு மட்டும் ரிப்பீட்டிக்கிற அரசியல் எனக்கு பிடிக்கலை:)) //

பிடிக்கலைன்னு சொல்வதற்கு முன் அடுத்த கமெண்ட்ட படிக்காம விட்டது பிடிக்கவில்லை.

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா... ஒரு வழியா 50 அடிச்சாச்சு...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

அண்ணே கதிர் அண்ணே... நீங்க தொலைபேசியில் சொன்னபடி, எதிரி வினைக்கு நல்லா பின்னூட்டம் போட்டாச்சு...

அக்கௌண்ட்ல் போட வேண்டியதைப் போட்டுடுங்க..//

இப்புடி ஆள் செட்டப் பண்றது பிடிக்கலை:))//

கும்மியில் ஆள் செட் செய்வது சகஜம். அதை பிடிக்கவில்லை என்று சொல்வது பிடிக்கவில்லை.

இராகவன் நைஜிரியா said...

ஊருக்கு வரும் போது ஈரோடு பக்கம் போகலாமா?

இந்த கும்மிக்கு கதிர் அண்ணன் செம கோபத்தில் இருப்பாரா என் மேல்?

யாராவது சொன்னீங்கன்னா.. அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
ஸ்டார்ட் மீஜிக்:)) //

அண்ணன் போட்ட மீஜிக்குக்கு, நான் என்னால முடிஞ்ச அளவு ஆடிட்டேன். தனியா ஆடுவது ரொம்ப கஷ்டம்.

அதனால மீ எஸ்கேப்பூ.....

cheena (சீனா) said...

கதிர் வினை சூப்பர்
எதிர் வினை - சூப்பரோ சூப்பர்
வாங்குன காசுக்கு ஓவ்ராக்கூவுற அண்ணன் இராகவன் வாழ்க

கதிருக்குப் பாலா சளச்சவரு இல்லன்னா - அண்னன் இராகவன் பாலாவையும் மிஞ்சறாரு

எல்லாருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

ஊருக்கு வரும் போது ஈரோடு பக்கம் போகலாமா?

இந்த கும்மிக்கு கதிர் அண்ணன் செம கோபத்தில் இருப்பாரா என் மேல்?

யாராவது சொன்னீங்கன்னா.. அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.///

கதிருக்கு அறச்சீற்றம்தான் வரும். பின்னூட்டச் சீற்றம் வராது

Bibiliobibuli said...

ஆத்தாடி.......... பதிவுலக சாணக்கியம் இம்பூட்டு இருக்கா? எனக்குத்தான் எதுவுமே புரியாமல்..... கண்ணை கட்டுதே...!!

vasu balaji said...

Rathi said...

ஆத்தாடி.......... பதிவுலக சாணக்கியம் இம்பூட்டு இருக்கா? எனக்குத்தான் எதுவுமே புரியாமல்..... கண்ணை கட்டுதே...!!//

அட இதெல்லாம் காமெடி பீசுங்க. சும்மா டமாசு

Menaga Sathia said...

//யாருமே பின்னூட்டம் போடறதில்லைனு கொஞ்சம் கூட வருத்தப்படாம, நியூமராலஜி புஸ்தகம் வாங்கி, உன்னோட ராசிக்கு பொருந்தற மாதிரி வித்தியாசமா 20 ஆண்கள், 25 பெண்கள் பெயர்களை செலக்ட் பண்ணி அப்பப்ப நீயே பின்னூட்டம் போட்டுக்கிறியே அது பிடிக்கலை.

அடக் கருமமே! அத்தன பின்னூட்டத்துக்கும் பதில் பின்னூட்டமும் இல்லீன்னா நன்றின்னு வேற போட்டுக்கணுமே. அந்தக் கொடுமையும் பிடிக்கலை.// செம காமெடி..நல்லா சிரித்தேன் சார்....

settaikkaran said...

’அங்கே’யும் போயிட்டு ’இங்கே’யும் வந்து பாத்துட்டேன். சபாஷ், சரியான போட்டி! :-)

Jerry Eshananda said...

செம கலாட்டா..

க ரா said...

அவரோட இடுக்கைய படிச்சுட்டு என்ன இதுக்கு வானம்பாடி ஐயா இன்னும் எதிர் இடுக்கை போடலியான்னு பின்னூட்டம் போட்டேன். இப்ப அடிச்சு கலக்கிட்டீங்க. என்னய மாதிரி பச்ச புள்ளைங்கள சிரிச்சு சிரிச்சு வயிறு நோக வைக்கிறிங்களே. இது ஒங்களுக்கே அடுக்குமா :-).

க ரா said...
This comment has been removed by the author.
ஜெட்லி... said...

கலாட்டா பண்ணி இருக்கீங்க ஐயா....
ரசிச்சேன்....

ரோகிணிசிவா said...

ippade oru nalla idukaiya pramote pannamaa , than old is gold idukaiya matum kathir status messagala potu promote pandrathu pidikala .,,,,

சத்ரியன் said...

//பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.

பதிலுக்கு வந்த ஜாதகத்துல “வலைப்பூ சிங்கி”ன்னு போட்டு டமுக்கடிப்பான் டியாலோன்னு கையெழுத்து போட்டு வந்தத சொல்லாம விட்டதும் கூட பிடிக்கலை.//

பாலா,

நேத்து ஒரு ஃபங்சனுக்கு போய்ட்டேன். இன்னிக்கி காத்தால பொட்டிய தட்டினா “இந்த” கூத்தெல்லாம் நடந்து முடிஞ்சிருக்கு.


பாருங்க இந்த கதிரு(ங்கொய்யால அருத்தாத்தான் சரி வரும் போல!) பண்ற அலும்பு தாங்க முடி-இல்ல.

தட்டி கேக்க நீங்க ஒருத்தரு மட்டும் இல்லாம போனா, இந்தாளு வலையொலகத்தையே வெல பேசி வித்துருவாரு போல இருக்கு.

தாராபுரத்தான் said...

என்னுங்க..இது..ஒரே வம்பா இருக்குது..கூட கூட பேசரீங்க..ஈரோட்டு காரர்களைப் பார்த்தா ..

ஈரோடு கதிர் said...

// இராகவன் நைஜிரியா said...

அண்ணே கதிர் அண்ணே... நீங்க தொலைபேசியில் சொன்னபடி, எதிரி வினைக்கு நல்லா பின்னூட்டம் போட்டாச்சு...

அக்கௌண்ட்ல் போட வேண்டியதைப் போட்டுடுங்க..//

பணம் அனுப்பிட்டேன்... நீங்கதான் சில்லறை பாக்கி தரல

நாடோடி said...

எதிர்வினை ந‌ல்லா இருக்கு சார்..ம்ம்ம்ம்.. ந‌ட‌த்துங்க‌..

Unknown said...

கதிர் நீங்க நெனச்சது நடந்திடுச்சு...

எதிர்வினை... சூப்பர் ...

இப்ப நீங்க இதுக்கு எதிர்வினை போடுங்க பாப்போம் ....

டண்டக்க தண்டக்கா ....

again MUSIC START ....

நிஜமா நல்லவன் said...

ஹா...ஹா...ஹா...ஜுப்பரேய்...


இவண்
கசியும் மௌனத்தை அலறவிடுவோர் சங்கம்

G.Ganapathi said...

தேனுங்க ரெண்டுபேரையும் மாறி மாறி படிச்சா ரெண்டு பேரும் வாரிக்கரிங்கள இல்ல எங்கள மாறி ஆளுங்களை எல்லாம் செகரிசுக்கரிங்கள ன்னு புரியமடைன்குதுங்கோவ் எப்போடியோ போகுடுமுங்க நா அனுதபா பாலோயர் இல்லைங்க ( ஆமாங்க ணா அந்த அணு யாருங் )

ஆரூரன் விசுவநாதன் said...

இப்படி எதிர்வினை போட்டே காலத்த ஓட்டிடலாம்னு நினைப்பா உங்களுக்கு?


ம்ஹும்....ஒத்துக்க மாட்டோம்......

இப்படிக்கு,
அகில உலக பாமரன் ரசிகர் மன்றம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அடடா இப்படியா?.

சாமக்கோடங்கி said...

என்னப்பா இது.. இங்க வந்தா எதுவுமே யாருக்குமே பிடிக்கலை.. நல்ல வேளை.. பின்னூட்டம் போடப் பிடிக்கலைன்னு சொல்லி யாரும் வந்த வழியே திரும்பிப் போகாம இருந்தாங்களே.. அது எனக்குப் பிடிச்சிருக்கு...

நன்றி..

பனித்துளி சங்கர் said...

இதுதான் சொந்த செலவில் சூனியமோ !

Unknown said...

Nice treat for film industry comedians. They have a nice long script here. Who knows who will steal this. Well done.

vasu balaji said...

@@ நன்றிங் தேவா.
@@வாங்க அத்திரி. நன்றி வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
@@நன்றி இர்ஷாத்
@@நன்றி ப்ரதாப். ஊர்ல இருந்து வந்தாச்சா:)
@@நன்றிங்க பத்மா

vasu balaji said...

// கலகலப்ரியா said...
||கவுத்து வெச்ச சட்டிய சுத்தி சுத்தி வந்து எடுத்தாலும் ஒரே மாதிரித்தானே இருக்கும்||

இது கீறல் விழுந்த அலுமினியச் சட்டிதானே...//

ஆஆஆஆ. அது என்னா கண்ணு. இருக்கிற நாலு முடில 2 வெள்ள முடின்னு கம்பேனி சீக்ரட்ட போட்டு உடைச்சிட்டியே..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

vasu balaji said...

@@நன்றிங்க செந்தில்
@@நன்றிங்க பெயர் சொல்ல விருப்பமில்லை.
@@நன்றிங்க அனு.

vasu balaji said...

நேசமித்ரன் said...
பாலா சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!

:)

நட்பு வளரட்டும் ! பூவால் எறிந்து கொண்டு விளையாடும் இந்த விளையாட்டுகள் வழி வெளிப்படுத்தும் பிரியம் நன்று!//

மிக்க நன்றி நேசமித்திரன்:)

அன்புடன் நான் said...

ஓ.... அதுக்குதான் இதா?

Thenammai Lakshmanan said...

அடக் கருமமே! அத்தன பின்னூட்டத்துக்கும் பதில் பின்னூட்டமும் இல்லீன்னா நன்றின்னு வேற போட்டுக்கணுமே. அந்தக் கொடுமையும் பிடிக்கலை.//


பாலா சார் இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது,,,:)))

நறுமுகை said...

மொக்கையும் எதிர் மொக்கையும் அருமை


www.narumugai.coம்
நமக்கான ஓரிடம்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.//


சார் இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது...:)))

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.//


சார் இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது...:)))