Monday, May 10, 2010

கேரக்டர்..மணியண்ணா..

"அகஜானன பத்மார்க்கம்
 கஜானனமஹர்நிசம்
 அனேகதந்தம் பக்தானாம்
 ஏகதந்தமுபாஸ்மஹே”

பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூரம் ஏற்றி பூஜை முடித்து பிள்ளையாரப்பா, அய்யப்பா நீங்க நடத்திக் குடுங்கோ! அம்மா இங்க வாங்கோ! சாரெங்கே! ஹாரத்தி எடுத்துக்கோங்கோ! டேய் ரமணி வெந்நீர் அண்டாவ ஏத்து! ஏத்து பரபரன்னு!

முன்னமே மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு இணுக்கு மல்லி வைத்து தயாராய் இருந்த அடுப்பில் விறகுகளுக்கு இடையே ஹாரத்தி கர்ப்பூரத்தை விரலால் எடுத்து வைத்து கும்பிட்ட கையோடு..

இனிமே நீங்க போய்க்கலாம். அப்புறம் முக்கியமான மேட்டர். பொறுப்பா ஆம்பளைல ஒன்னு, பொம்மனாட்டில ஒரு அம்மாவ டிசைட் பண்ணி எனக்கு காணிச்சி கொடுங்கோ. ஆராருக்கு ஏது வேணுன்னாலும் அவாதான் வந்து கேக்கணும். அதும் எங்கிட்டயோ, நான் சொல்ற ஆளுட்டையோதான் கேக்கணும். ஆளாளுக்கு வந்துண்டு ஆராரையோ கேட்டுண்டு மாட்டேந்நுட்டான், முடியாது போந்நுட்டான்னு தகராரு வரப்படாது. மநசிலாச்சா?

அப்பறம் ப்ரொவிஷன், காகறி எல்லாம் எங்கேன்னு காட்டிக் குடுங்கோ! எடோ ரமணி! சாரோட போய் எல்லாம் எங்கன்னு பார்த்து எடுத்துண்டு வா. முந்திரி, திராட்சை, ஏலக்கா காட்டி எடுத்துண்டு வந்து பொறுப்பில வச்சிக்கோ. பறக்காவட்டிகள் வந்துண்டு பாதாம் பால் கேக்கும். கோச்சிக்காதீங்கோ சார். பல இடத்துல அப்படித்தான் அடிபட்டாய்டுத்து. முக்கியமா தேங்கா சமையலுக்கு தனியா கொடுத்துடுங்கோ. அப்புறம் முஹூர்த்தத்துக்கு தேங்கா இல்லைன்னாலும் முடியர வரைக்கும் நாந்தரமாட்டேன்.

டேய் வழுக்கை! அவன கூப்புடுடா சொறிஞ்சிண்டு நிக்கறான் பாரு சம்பந்தியாத்து மாமா மாதிரி! போய் வெங்காயம் உறி போடா!

ஏதோ ஒரு விசேஷம். அது கலியாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ மணியண்ணா சமையல் வித்தியாசமின்றி இப்படித்தான் துவங்கும்.

பச்சை சிவப்பு கரை மயில்கண் நீர்க்காவி வேஷ்டி, தோளில் சிவப்பு காசித்துண்டு, வாயோரம் இடுக்கிய கும்பகோணம் வெற்றிலை பன்னீர்ப்புகையிலை , கருவளையம் விழுந்த கண், அடுப்பில் வெந்தே புடம்போட்ட தங்க நிறதேகம், அழுக்குப் பூணூல், ஸ்படிகமாலை, அய்யப்பன் டாலர் கோர்த்த துளசி மாலை, U வடிவ சந்தனக் கீற்றுக்குள் குங்குமப் பொட்டு, கீழே ஹோமச்சாந்து, அலை அலையாய் அமைந்த கிராப் தலை. ‘அகஜானன பத்மார்க்கம் ஆரம்பித்த நொடி முதல், எல்லாம் முடிந்த பிறகு வீட்டுப் பெரியவர்கள் கையால் தாம்பூலத்தில் சம்பளம் வாங்கி, திருப்தியா பண்ணியிருந்தா பகவானுக்கு! குறையிருந்தா சொல்லுங்கோ. அது எனக்கு திருத்திக்க என்று விடை பெறும்வரை மணியண்ணாவுக்கு சொந்தம், பந்தம், நட்பு, அதிகாரி என்ற ஒரு வேறுபாடும் கிடையாது.
 
ஆறு மணிக்கு டிஃபன் என்றால் தோ! பத்து நிமிஷம் இலை போட சொல்லியிருக்கேன் என்றோ பதினொன்றறைக்கு சாப்பாடு என்றால் வாழையிலை போறாது என்ற பேச்சோ இருக்காது. மணியண்ணா சுத்தம் என்றால் பரம சுத்தம். சாப்பாட்டில் முடி, உப்பு அதிகம், சாம்பாரை விளாவி ரசம், இழுத்து இழுத்து பரிமாறல் என்ற ஒரு குறையும் இருக்காது.
 
மணியண்ணாவுக்கு கோவம் வரும் ஒரு விஷயம் உண்டென்றால், சமையல்காரன்னா வாய்க்கு வந்தது லிஸ்ட் போடுவான் என்று குறைத்து வாங்குவதோ, ஒற்றனைப் போட்டு சாமான் கடத்திப் போய் விற்கிறானா என்று உளவு பார்ப்பதோ மட்டுமே. 

ரயில்வேயில் கணக்கர் வேலை. சக பணியாளர்கள் குழுவில். காசுக்கு வேலை செய்யும் சமையல்காரனல்ல மணியண்ணா. தெரிந்தவர், தெரியாதவர் யாரானாலும் சரி, அண்ணா! ஒரு விசேஷம் என்று வந்தவரிடம், என்ன விசேஷம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டதும் அடுத்த கேள்வி ஆத்துல ஆரானா பெரியவா இருக்காளா என்பது. இருக்கிறார்கள் என்றால் சரி, நான் அவாட்ட பேசிக்கறேன் என்பார். இல்லையெனில் எந்த ஊர் நீங்க என்று அந்த ஊர் முறைக்கு சீர் பட்சணம் என்ன, சாப்பாட்டு வகையறாக்கள் என்ன என்று லிஸ்ட் தருவார். 
 
கலியாணமோ, சீமந்தமோ பந்தா பண்ணிக் கொண்டு சீருக்கு எகிரும் சம்பந்தி வகையறாக்களை, ரொம்பவும் உரிமையாக ஓரம் கட்டிக் கொண்டு போய் இதுக்காகவெல்லாம் டென்ஷன் ஆலாமா? நான் பார்த்துக்கறேன் ஒரு குறையும் இருக்காது. 51 ஜாங்கிரி, 51 முறுக்கு அவ்வளவுதானே நானாச்சு என்று நட்பாக்குவார். பெண்வீட்டாரிடம், இதுக்கு போய் சண்டையா, சைசைக் குறைச்சா போச்சு போங்கோண்ணா என்று சிரிக்க வைப்பார். 
 
ஒரு முறை உறவினரின் திருமணத்தில் முஹூர்த்தத்துக்கு முதல் நாள் 200 பேருக்கு சாப்பாடு என ஏற்பாடு. கடைசிப் பந்தி முடியும் தருணத்தில் இஞ்சினியரான மாப்பிள்ளையின் கம்பெனி தொழிலாளர்கள் 50 பேர் வந்திறங்க மாப்பிள்ளை வீட்டார் பந்தாவாக சாப்பாடு இருக்கில்லையா என்று கேட்டுப் போய் விட்டனர். பெண்ணின் அப்பாவுக்கு மயக்கம் வராத குறை. 
 
மணியண்ணா வந்தார், மாப்பிள்ளையிடம் போனார். சிரித்தபடி ஃப்ரெண்ட்ஸா? சரக்கெல்லாம் வாங்கி வெச்சாச்சா? ஒரு ரவுண்டு முடியட்டும், காரமா உருளைக்கிழங்கு கறியும், வத்தக் குழம்பும், சாம்பாரும் ரெடியாயிருக்கும் என்று ஆப்பு வைத்துவிட்டு போய்விட்டார்.

சாப்பிட வரலாம் என்று மணியண்ணா குரல் கொடுக்கும்போது ஒரு ரவுண்டு முடிந்திருக்கவில்லை. அத்தனை போதையிலும் அய்யரே! கல்யாண விருந்து இப்படி சாப்பிட்டதேயில்லை அய்யரே என்று அத்தனை பேரும் சொல்லிவிட்டு போனபோது பெண்ணின் தகப்பனார் விக்கி விக்கி அழுதார். 

இரவு விருந்து முடிந்ததும், பைக்குள்ளிருந்து குவார்ட்டர் வெளியே எடுப்பார். மறைவாய் அடித்துவிட்டு வெற்றிலை பாக்கு புகையிலை இடுக்கி, ஒரு சிகரெட்டும் இழுத்துவிட்டு துண்டால் உதறி கை மடித்துப் படுப்பார். ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ தூக்கம். திரும்ப காய் நறுக்க, வெந்நீர் போடவென உத்தரவு பறக்கும். 

என் அக்காவுக்கு சீமந்தம். மணியண்ணா சமையல். மொட்டை மாடியில் கேஸ் வைத்து சமைப்பது என்று முடிவாகிவிட்டது. முதல் நாள் மாலை பூஜை ஆரம்பித்தது. எந்த அறிகுறியுமின்றி கருமேகம் திரண்டது. பிள்ளையாருக்கு என்ன கோவமோ! மணியண்ணா பார்த்தார். கணேசா! கொஞ்சமாவா படுத்தறாய் நீ. உனக்காச்சு எனக்காச்சு. மழைதானே! பார்த்துக்கறேண்டா என்று பேசியபடி தாம்பாளத்தை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டாயிற்று. ஜாங்கிரிக்கு உளுந்து அரைத்தபடி ரெடியாயிருக்க மழையென்றால் அப்படி ஒரு மழை. 

பாலா! எண்ணெய்க்கு குடை பிடி. பெரிய குடையா பிடி என்றவாறு ஜாங்கிரி பிழிய ஆரம்பித்தார். அசைவில் தூரலில் என்று வெடித்துச் சிதறியது எண்ணெய். சளைக்கவில்லை மனுஷன். சரியாக அரைமணியில் ஜாங்கிரி முடிய துடைத்து விட்டாற்போல் வானம். மழையில் சற்றே கரைந்த மஞ்சள் பிள்ளையாரிடம் குறும்பாக சோதிக்கறயா நீ! நீயிருக்கிறப்ப எனக்கென்ன கவலை. ம்ம். என்ன சொல்றாய் என்றபடி வேலை தொடர்ந்தது.
 
ஒன்பது மணியளவில் அம்மா, மணி இங்க வாடா என்றாள். என்ன மாமி என்று வந்தார் மணியண்ணா. உன் கூட வந்தவா சாப்பிட்டா பார்த்தேன். நீ சாப்பிடலையேடா. கை அலம்பிண்டு வா என்று அழைத்தாள். சாதமும் சாம்பாரும் எப்போது சமைத்தாளோ தெரியாது. . பிசைந்து கையில் உருட்டிக் கொடுத்தாள். 
 
ஒன்றும் பேசாமல் உண்டவர், கை கழுவி அம்மா! எத்தனை விசேஷத்துக்கு சமைச்சிருக்கேன். ஒரு நாளோ ரெண்டு நாளோ சாப்பிடமாட்டேன். காஃபில ஓடிடும். ஆத்துல போய்தான் சாப்பாடு.  இத்தன வருஷத்தில சமையல்காரன் சாப்பிட்டானான்னு கேட்டதும் நீங்கதான். தனியா சமைச்சு சாப்பிட கொடுத்ததும் நீங்கதான் என்றபோது இருவருக்கும் கண்ணில் ஆறாய்க் கண்ணீர்.

நிஜம்தான். நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா நம்மில் பெரும்பாலோருக்கு?

சில மாதங்களுக்கு முன் வாலண்டரி ரிடையர்மெண்ட் கொடுத்துவிட்டு கண் கலங்கியபடி ஒன்னும் கேக்காத பாலா! எத்தனை வந்தாலும் சமையல்காரனுக்கு கரண்டிதான் கடைசி வரைக்கும் என்று போனார். விக்கித்து நின்றேன்.

86 comments:

vasu balaji said...

சூர்யா! ப்ரியா! மற்றும் நண்பர்களுக்கு மிக்க நன்றி. ப்ரியம்மோவ்! ஆர்டர் கேரீட் அவுட்:))

பிரபாகர் said...

இது அநியாயம்! மொத ஆளா பின்னூட்டம் போட்டுட்டு லொல்லு விடறது! எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கய்யா!

பிரபாகர்...

பிரபாகர் said...

இடுகைக்காக ஆவலாய் காத்திருக்கும் எங்களை ஏமாற்றாமல் இடுகையளித்த எங்கள் அன்பு அய்யா வாழ்க வாழ்க!

முதல் கமென்ட்ட டிஸ்கியில போடுங்க!

பிரபாகர்...

சூர்யா ௧ண்ணன் said...

பதிமூணே முக்கால்...
அட போட்டுட்டிங்களா..

நன்றி தலைவா! ..
ரசிகர்களின் வேண்டுகோளை உடனே செயல் படுத்திய தானைத் தலைவர்.. எங்கள் தங்க தலைவர் வாழ்க!..

பத்மா said...

ரொம்ப நாளா எழுதலியேன்னு நெனச்சேன் .கிளாஸ் character சார் .ஆனா இதுக்குள்ளேயும் கொஞ்சமா தெரிஞ்சதே உங்கம்மா வோட ப்ரியம் .அது தான் விஸ்வரூபமா இருக்கு .
u are gifted . அம்மாக்கு பிள்ளையாய் இருப்பதில்

தாராபுரத்தான் said...

நிஜம்தான். நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா நம்மில் பெரும்பாலோருக்கு?
உண்மை...ஆமா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க தலைவா.

பத்மா said...

பாலக்காடுத் தமிழ் கொள்ளாம்.

பிரபாகர் said...

பணம், பதவி என அலையும் நாய்கள் நிறைந்த இந்தத் தருணத்தில்....

மணியண்ணா... தி கிரேட்!

படிச்சிட்டு மனசு கனமாவும், ஒரு விதத்தில நிறைவாவும் இருக்கு ஒரு மனிதரை வாழ்வில தெரிஞ்சிகிட்டதுல!

பிரபாகர்...

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

ராஜ நடராஜன் said...

இது!

எழுத்து நடையா அல்லது நசரேயன் எபக்ட்டா சில வார்த்தைகள்:)

ராஜ நடராஜன் said...

//உள்ளேன் ஐயா//

ஆபத்தில்லாதவை.

vasu balaji said...

எழுத்து நடையா அல்லது நசரேயன் எபக்ட்டா சில வார்த்தைகள்:)//

பாலக்காட்டுத் தமிழ்:))

க.பாலாசி said...

//இத்தன வருஷத்தில சமையல்காரன் சாப்பிட்டானான்னு கேட்டதும் நீங்கதான்//

உண்மதானுங்க... ஆனாலும் செலபேரு மட்டும் கடைசியில... கேட்பாங்க... ஆனா எனக்குத்தெரிஞ்சி தவசுப்புள்ளைங்க (சமையக்காரங்க)தான் சமைச்சத இலையிலப்போட்டு சாப்பிடமாட்டாங்க...

அருமையான நினைவுகள்... கொஞ்சநேரம் மண்டபத்து சமையக்கட்டுலையும், கொஞ்சநேரம் மஞ்சப்புள்ளையாரோட மழையிலையும் நனைந்தேன்....

ஆமா.. ஜாங்கிரி எப்டி இருந்துச்சு...!!!

Thamira said...

எழுத்தின் லாகவம். பின்னியிருக்கிறீர்கள்.

கொஞ்சம் ஹேப்பி எண்டிங் கொடுத்தால்தான் என்னவாம்?

VISA said...

நெகிழ்வு!!!

settaikkaran said...

மணியண்ணா, பெயருக்கேற்ற மணியான பெரியவர் தான்! அவர் குறித்த வர்ணனையைப் படித்தபோதும் சரி, கொட்டும் மழையில் பிள்ளையாருக்கு சவால் விட்டு அவர் ஜாங்கிரி பிழிந்ததைப் படித்தபோதிலும் சரி, எங்கேயோ எப்போதோ ஒரு விசேஷத்தில் இவரைப் போல ஒருவரைச் சந்திருக்கக் கூடுமோ என்ற சிந்தனை ஏற்பட்டது உண்மை! அருமையான பகிர்வு!

பா.ராஜாராம் said...

பதினைந்து வருடங்களுக்கு பிறகு..

அச்சசல் ஒரு தி.ஜா. சிறுகதை வாசித்த நிறைவு பாலா சார்.

மிளிரும் அனுபவம்.

அம்மா,அம்மாதான்.

பொங்கி, பொங்கி வர்றது...

சுவாமி, தொடர்ந்து நடத்துங்கோ... :-)

செ.சரவணக்குமார் said...

அசத்தீட்டீங்க. கேப் விடாம எழுதுங்க தலைவரே.

dheva said...

பிரமிக்க வைத்து விட்டீர்கள்! என்னெ எழுத்து நடை....ஒரு நல்ல படைப்பு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்...படித்து முடித்து விட்டேன்....மணி அண்ணா மட்டும் மனசு விட்டு இறங்க வில்லையே சார்......! நெஞ்சு நிறைக்கும் முடிவு மற்றும் படிப்பினை!


வாத்தியார் சார் நீங்கள் ....உங்களை எப்படி வாழ்த்துவது! தொடர்ந்து உங்கள் படைப்புகளை தாருங்கள் சார்!

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ம்...அருமை

கலகலப்ரியா said...

அது..!

மணியண்ணாவா... ஏதேதோ ஞாபகங்கள்...

தேர்ந்த எழுத்து... மற்றும் அனுபவம்..

Unknown said...

பிரவாகமான நடை சார்.. நடுவுல ஒரு பெரிய கேப் விட்டாலும் சரியான இடுகையோட திரும்பி வந்திருக்கீங்க..

அடிக்கடி எழுதுங்க சார்

Chitra said...

நிஜம்தான். நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா நம்மில் பெரும்பாலோருக்கு?

சில மாதங்களுக்கு முன் வாலண்டரி ரிடையர்மெண்ட் கொடுத்துவிட்டு கண் கலங்கியபடி ஒன்னும் கேக்காத பாலா! எத்தனை வந்தாலும் சமையல்காரனுக்கு கரண்டிதான் கடைசி வரைக்கும் என்று போனார். விக்கித்து நின்றேன்.

.......அப்படியே நேரில் அந்த மணி அண்ணாவை கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். மிகவும் ஒன்றி போய் படித்தேன். அருமை.

மணிஜி said...

நானா சார்?

மணிஜி said...

தலைவரெ.இப்பத்தான் வந்தேன்..

மணிஜி said...

பா.ரா சொன்னதும் கொஞ்சம் சரிதான் பட்டி பார்த்தால் அதேதான்

மணிஜி said...

டெல்லி கணேஷை நியாபகபடுத்திக் கொண்டேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பதிவு.

ஒவ்வொரு கேரக்டரையும் விவரிக்கும் விதம் அழகு. ஒரு நல்ல தொகுப்பு தயாராகிக் கொண்டிருக்கிறதென நினைக்கிறேன்.

இரண்டு வார இடைவேளையாகி விட்டதே??

sriram said...

அருமை, வேறொண்ணும் சொல்லத் தோன்றவில்லை
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பனித்துளி சங்கர் said...

நான் இதுவரை சிதறாமல் பதிவுடன் ஒன்றிப் போய் வாசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று .பாத்திரத்தின் இயல்புகள் மாறாத எழுத்து நடை.
இறுதியில் உள்ளம் கனத்துப்பொககிவிட்டது அய்யா . பகிர்வுக்கு நன்றி !

vasu balaji said...

பிரபாகர் said...

இடுகைக்காக ஆவலாய் காத்திருக்கும் எங்களை ஏமாற்றாமல் இடுகையளித்த எங்கள் அன்பு அய்யா வாழ்க வாழ்க!

முதல் கமென்ட்ட டிஸ்கியில போடுங்க!

பிரபாகர்...//

ஆரம்பிச்சாச்சா பிரவு:)

/ சூர்யா ௧ண்ணன் said...

பதிமூணே முக்கால்...
அட போட்டுட்டிங்களா..

நன்றி தலைவா! ..
ரசிகர்களின் வேண்டுகோளை உடனே செயல் படுத்திய தானைத் தலைவர்.. எங்கள் தங்க தலைவர் வாழ்க!..//

தலைவா! நாளைக்கு துறுத்தல்கள்ள தர்ணா:))

vasu balaji said...

padma said...

ரொம்ப நாளா எழுதலியேன்னு நெனச்சேன் .கிளாஸ் character சார் .ஆனா இதுக்குள்ளேயும் கொஞ்சமா தெரிஞ்சதே உங்கம்மா வோட ப்ரியம் .அது தான் விஸ்வரூபமா இருக்கு .
u are gifted . அம்மாக்கு பிள்ளையாய் இருப்பதில்//

நன்றிங்க பத்மா.

/ padma said...

பாலக்காடுத் தமிழ் கொள்ளாம்.//

நன்னி நன்னி:))

vasu balaji said...

தாராபுரத்தான் said...

நிஜம்தான். நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா நம்மில் பெரும்பாலோருக்கு?
உண்மை...ஆமா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க தலைவா.//

அண்ணா என்னா இது தலைவாவா? வர வர உங்க அழிம்பு தாங்கல:))

vasu balaji said...

பிரபாகர் said...

பணம், பதவி என அலையும் நாய்கள் நிறைந்த இந்தத் தருணத்தில்....

மணியண்ணா... தி கிரேட்!

படிச்சிட்டு மனசு கனமாவும், ஒரு விதத்தில நிறைவாவும் இருக்கு ஒரு மனிதரை வாழ்வில தெரிஞ்சிகிட்டதுல!

பிரபாகர்...//

நன்றி பிரவு மீண்டும்:)

vasu balaji said...

நசரேயன் said...

உள்ளேன் ஐயா//

வீட்டுப்பாடம் எங்க? (நன்றி மணிஜீ)

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

//உள்ளேன் ஐயா//

ஆபத்தில்லாதவை.//

இப்போ புரியுதாண்ணா? ஏன் அண்ணாச்சி துண்டு ஏன் கொள்வாரில்லைன்னு:))

vasu balaji said...

க.பாலாசி said...

//இத்தன வருஷத்தில சமையல்காரன் சாப்பிட்டானான்னு கேட்டதும் நீங்கதான்//

உண்மதானுங்க... ஆனாலும் செலபேரு மட்டும் கடைசியில... கேட்பாங்க... ஆனா எனக்குத்தெரிஞ்சி தவசுப்புள்ளைங்க (சமையக்காரங்க)தான் சமைச்சத இலையிலப்போட்டு சாப்பிடமாட்டாங்க...

அருமையான நினைவுகள்... கொஞ்சநேரம் மண்டபத்து சமையக்கட்டுலையும், கொஞ்சநேரம் மஞ்சப்புள்ளையாரோட மழையிலையும் நனைந்தேன்....

ஆமா.. ஜாங்கிரி எப்டி இருந்துச்சு...!!!//

நன்றி பாலாசி. ஜாங்கிரி நிஜம்மாவே அருமை!

vasu balaji said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

எழுத்தின் லாகவம். பின்னியிருக்கிறீர்கள்.

கொஞ்சம் ஹேப்பி எண்டிங் கொடுத்தால்தான் என்னவாம்?//

நன்றி ஆதி! என்ன செய்ய? அவர்கள் வாழ்க்கையில் அது இல்லையே:(

vasu balaji said...

VISA said...

நெகிழ்வு!!!//

நன்றி விசா

vasu balaji said...

சேட்டைக்காரன் said...

மணியண்ணா, பெயருக்கேற்ற மணியான பெரியவர் தான்! அவர் குறித்த வர்ணனையைப் படித்தபோதும் சரி, கொட்டும் மழையில் பிள்ளையாருக்கு சவால் விட்டு அவர் ஜாங்கிரி பிழிந்ததைப் படித்தபோதிலும் சரி, எங்கேயோ எப்போதோ ஒரு விசேஷத்தில் இவரைப் போல ஒருவரைச் சந்திருக்கக் கூடுமோ என்ற சிந்தனை ஏற்பட்டது உண்மை! அருமையான பகிர்வு!/

நன்றி சேட்டை:)

vasu balaji said...

பா.ராஜாராம் said...

பதினைந்து வருடங்களுக்கு பிறகு..

அச்சசல் ஒரு தி.ஜா. சிறுகதை வாசித்த நிறைவு பாலா சார்.

மிளிரும் அனுபவம்.

அம்மா,அம்மாதான்.

பொங்கி, பொங்கி வர்றது...

சுவாமி, தொடர்ந்து நடத்துங்கோ... :-)//

நன்றி பா.ரா. தி.ஜா.ரா. நினைவுக்கு வந்தாரென்றால் சிலிர்த்துப் போச்சு. அபிமானம் என்றாலும் பெரிய பாராட்டு எனக்கு.

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

அசத்தீட்டீங்க. கேப் விடாம எழுதுங்க தலைவரே.//

நன்றி சரவணக்குமார். கொஞ்சம் வெறுமை! முயல்கிறேன்.

vasu balaji said...

dheva said...

பிரமிக்க வைத்து விட்டீர்கள்! என்னெ எழுத்து நடை....ஒரு நல்ல படைப்பு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்...படித்து முடித்து விட்டேன்....மணி அண்ணா மட்டும் மனசு விட்டு இறங்க வில்லையே சார்......! நெஞ்சு நிறைக்கும் முடிவு மற்றும் படிப்பினை!


வாத்தியார் சார் நீங்கள் ....உங்களை எப்படி வாழ்த்துவது! தொடர்ந்து உங்கள் படைப்புகளை தாருங்கள் சார்!//

நன்றி தேவா. முயல்கிறேன்:). நானும் மாணவன்தான்.

vasu balaji said...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ம்...அருமை//

நன்றிங்க:)

vasu balaji said...

கலகலப்ரியா said...

அது..!

மணியண்ணாவா... ஏதேதோ ஞாபகங்கள்...

தேர்ந்த எழுத்து... மற்றும் அனுபவம்..//

அம்மா!:((

vasu balaji said...

முகிலன் said...

பிரவாகமான நடை சார்.. நடுவுல ஒரு பெரிய கேப் விட்டாலும் சரியான இடுகையோட திரும்பி வந்திருக்கீங்க..

அடிக்கடி எழுதுங்க சார்//

நன்றி தினேஷ். நிச்சயம் :)

vasu balaji said...

Chitra said...


.......அப்படியே நேரில் அந்த மணி அண்ணாவை கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். மிகவும் ஒன்றி போய் படித்தேன். அருமை.//

நன்றிங்க சித்ரா:)

vasu balaji said...

மணிஜீ...... said...

நானா சார்?//

சௌஜன்யம்னா ஆமாம்.

/ தலைவரெ.இப்பத்தான் வந்தேன்..//

உடனே தொலைபேசியில் பாரட்டினதும் நெகிழ்ந்து போச்சு மணிஜீ.

/ மணிஜீ...... said...

பா.ரா சொன்னதும் கொஞ்சம் சரிதான் பட்டி பார்த்தால் அதேதான்//

ஆண்டவா! இப்படியொரு அபிமானமா. எப்படி நன்றி சொல்ல.

/டெல்லி கணேஷை நியாபகபடுத்திக் கொண்டேன்/

இவர் கொஞ்சம் குள்ளம். ஆனாலும் சரியாயிருப்பார்.

vasu balaji said...

ச.செந்தில்வேலன் said...

அருமையான பதிவு.

ஒவ்வொரு கேரக்டரையும் விவரிக்கும் விதம் அழகு. ஒரு நல்ல தொகுப்பு தயாராகிக் கொண்டிருக்கிறதென நினைக்கிறேன்.//

ஆஹா!

//இரண்டு வார இடைவேளையாகி விட்டதே??//

ஆமாங்க செந்தில். கொஞ்சம் வெறுமை.சலிப்பு.

vasu balaji said...

sriram said...

அருமை, வேறொண்ணும் சொல்லத் தோன்றவில்லை
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

நன்றிங்க ஸ்ரீராம்.

vasu balaji said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நான் இதுவரை சிதறாமல் பதிவுடன் ஒன்றிப் போய் வாசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று .பாத்திரத்தின் இயல்புகள் மாறாத எழுத்து நடை.
இறுதியில் உள்ளம் கனத்துப்பொககிவிட்டது அய்யா . பகிர்வுக்கு நன்றி !//

நன்றி சங்கர்

க ரா said...

அற்புதம் சார்.

அரசூரான் said...

சில கேரக்டர்கள பார்த்தா பிரமிப்பா இருக்கு, சிலவற்றை எழுத்து வடிவில் படிச்சா பிரமிப்பா இருக்கும். மணியண்ணா கேரக்டர சங்கர் டைரக்ஷன்ல வந்த ஜெண்டில்மேன் மாதிரி... பிரமாண்டபமா பதிவிட்டிருக்கீங்க... அனுபவித்ததில் வந்த பதிவு என்று எண்ணுகின்றேன்... அருமை.

அது சரி(18185106603874041862) said...

//
சில மாதங்களுக்கு முன் வாலண்டரி ரிடையர்மெண்ட் கொடுத்துவிட்டு கண் கலங்கியபடி ஒன்னும் கேக்காத பாலா! எத்தனை வந்தாலும் சமையல்காரனுக்கு கரண்டிதான் கடைசி வரைக்கும் என்று போனார். விக்கித்து நின்றேன்
//

நடுத் தெருவில் பெய்த மழை போல வாழ்க்கை எங்கோ வழிந்துப் போய்க் கொண்டே தான் இருக்கிறது.....

prince said...

ஏதோ தினசரி பேப்பர் கிடைக்காதது போல ஒரு உணர்வு உங்கள் இடுகை வெளிவர தாமதம் ஆனது. பரவாஇல்ல தாமதம் ஆனாலும் நல்ல தரமா தான் வந்திருக்கு.கொஞ்சம் பொறுமையா படிக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ளே 54 பேர் பின்னூட்டிட்டாங்க. இதை பார்க்கும் போது மனிதநேயம் எல்லோர்இடமும் ஒளிந்து கிடக்கு ஆனா வெளிபடுத்தினா முட்டாள் ஆக்கிடுவான்களோ என்ற அறியாமை அல்லது முன்னெச்சரிக்கை(பயம்) தான் அதிகம்.ஏற்கனவே சொல்லவந்ததை எல்லோரும் சொல்லிட்டதால .....

Rekha raghavan said...

மணியண்ணா கேரக்டரை மறக்கமுடியாம பண்ணிடுத்து உங்களோடஎழுத்து நடை. பாராட்டுகள்.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அச்சசல் ஒரு தி.ஜா. சிறுகதை வாசித்த நிறைவு பாலா சார்//

வழிமொழிகிறேன்..அற்புதம் பாலா..இதைத் தவிர வேறு ஏதும் சொல்லத் தெரியவில்லை

ஈரோடு கதிர் said...

//நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா//

மர மண்டைக்குள் குத்திக் குதறுகிறது இந்தக் கேள்வி

நாடோடி said...

கொஞ்ச‌ம் நாள் எழுத‌வில்லை என்றாலும் அருமையான‌ கேர‌க்ட‌ருட‌ன் வ‌ந்திருக்கீங்க‌ சார்,,,

கே. பி. ஜனா... said...

என்னங்க இது, மணியண்ணாவை அழகா எங்க மனசிலே ஏத்தி விட்டுட்டீங்களே! ...சமைக்க வர்றவங்களுக்கு நாம சமைச்சு சாப்பிடக் கொடுக்கிறது என்ன ஒரு சந்தோஷம் தரும் விஷயம்! அருமை! - கே.பி.ஜனா

Radhakrishnan said...

//நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா நம்மில் பெரும்பாலோருக்கு?//

கேட்டது உண்டு. வயிறார சாப்பிட்டுச் செல்லாமல் எவரையும் விடுவதில்லை. மணியண்ணா மனம் கலங்க வைக்கிறார்.

சத்ரியன் said...

// நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா நம்மில் பெரும்பாலோருக்கு?//

பாலா,

நிஜம்தான்!

படிச்சி போட்டுட்டு நெகிழ்ந்து போயிட்டேன் சாமி.

(என்னை சுத்தியுந்தான் பல கேரக்டர் இருக்கு. என்னல எழுத முடியலயே.)

ஸ்ரீராம். said...

நெகிழ்வான பதிவு..பல விசேஷங்களில் சந்திக்கக் கூடிய கேரக்டர். ஆனால் இதே பெயரில் ஒரு நபர் தொன்னூறுகளில் எங்கள் இல்லாத திருமணத்தில் வெறுப்பேற்றியது நினைவுக்கு வந்தது.

vasu balaji said...

இராமசாமி கண்ணண் said...

அற்புதம் சார்.//

நன்றிங்க

vasu balaji said...

அரசூரான் said...

சில கேரக்டர்கள பார்த்தா பிரமிப்பா இருக்கு, சிலவற்றை எழுத்து வடிவில் படிச்சா பிரமிப்பா இருக்கும். மணியண்ணா கேரக்டர சங்கர் டைரக்ஷன்ல வந்த ஜெண்டில்மேன் மாதிரி... பிரமாண்டபமா பதிவிட்டிருக்கீங்க... அனுபவித்ததில் வந்த பதிவு என்று எண்ணுகின்றேன்... அருமை.//

நன்றிங்க அரசூரான். வரவுக்கும் கருத்துக்கும்

vasu balaji said...

ப்ரின்ஸ் said...

ஏதோ தினசரி பேப்பர் கிடைக்காதது போல ஒரு உணர்வு உங்கள் இடுகை வெளிவர தாமதம் ஆனது. பரவாஇல்ல தாமதம் ஆனாலும் நல்ல தரமா தான் வந்திருக்கு.கொஞ்சம் பொறுமையா படிக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ளே 54 பேர் பின்னூட்டிட்டாங்க. இதை பார்க்கும் போது மனிதநேயம் எல்லோர்இடமும் ஒளிந்து கிடக்கு ஆனா வெளிபடுத்தினா முட்டாள் ஆக்கிடுவான்களோ என்ற அறியாமை அல்லது முன்னெச்சரிக்கை(பயம்) தான் அதிகம்.ஏற்கனவே சொல்லவந்ததை எல்லோரும் சொல்லிட்டதால .....//

இதுவும் சரின்னு தோணுது ப்ரின்ஸ். அழகா சொல்லியிருக்கீங்க

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

மணியண்ணா கேரக்டரை மறக்கமுடியாம பண்ணிடுத்து உங்களோடஎழுத்து நடை. பாராட்டுகள்.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)//

நன்றிங்க சார்

vasu balaji said...

அது சரி said...

//
நடுத் தெருவில் பெய்த மழை போல வாழ்க்கை எங்கோ வழிந்துப் போய்க் கொண்டே தான் இருக்கிறது...../

ஆமாம். நன்றி அது சரி

vasu balaji said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அச்சசல் ஒரு தி.ஜா. சிறுகதை வாசித்த நிறைவு பாலா சார்//

வழிமொழிகிறேன்..அற்புதம் பாலா..இதைத் தவிர வேறு ஏதும் சொல்லத் தெரியவில்லை//

நன்றி சார்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

// மர மண்டைக்குள் குத்திக் குதறுகிறது இந்தக் கேள்வி//

ம்ம்.

vasu balaji said...

நாடோடி said...

கொஞ்ச‌ம் நாள் எழுத‌வில்லை என்றாலும் அருமையான‌ கேர‌க்ட‌ருட‌ன் வ‌ந்திருக்கீங்க‌ சார்,,,/

நன்றிங்க நாடோடி

vasu balaji said...

K.B.JANARTHANAN said...

என்னங்க இது, மணியண்ணாவை அழகா எங்க மனசிலே ஏத்தி விட்டுட்டீங்களே! ...சமைக்க வர்றவங்களுக்கு நாம சமைச்சு சாப்பிடக் கொடுக்கிறது என்ன ஒரு சந்தோஷம் தரும் விஷயம்! அருமை! - கே.பி.ஜனா//

நன்றிங்க ஜனா

vasu balaji said...

V.Radhakrishnan said...

// கேட்டது உண்டு. வயிறார சாப்பிட்டுச் செல்லாமல் எவரையும் விடுவதில்லை. மணியண்ணா மனம் கலங்க வைக்கிறார்.//

கேக்கவே சந்தோஷமா இருக்குங்க.

vasu balaji said...

’மனவிழி’சத்ரியன் said...

// நம் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க வருபவரை சாப்பிட்டீர்களா என்று கேட்கத் தோணியிருக்கிறதா நம்மில் பெரும்பாலோருக்கு?//

பாலா,

நிஜம்தான்!

படிச்சி போட்டுட்டு நெகிழ்ந்து போயிட்டேன் சாமி.

(என்னை சுத்தியுந்தான் பல கேரக்டர் இருக்கு. என்னல எழுத முடியலயே.)//

நன்றிங்க கண்ணன். :). முடியலையே இல்ல. தோணலை அப்படித்தானே:))

vasu balaji said...

/ ஸ்ரீராம். said...

நெகிழ்வான பதிவு..பல விசேஷங்களில் சந்திக்கக் கூடிய கேரக்டர். ஆனால் இதே பெயரில் ஒரு நபர் தொன்னூறுகளில் எங்கள் இல்லாத திருமணத்தில் வெறுப்பேற்றியது நினைவுக்கு வந்தது.//

நன்றி ஸ்ரீராம். சிலர் அப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.:)

Thenammai Lakshmanan said...

பாலா சார் எங்கள் வீட்டிற்கு திருமணங்களில் மற்ற அனுவல்களில் சமைக்க வரும் வெள்ளைச்சாமி., ஆத்தங்குடி பெருமாள். அமெரிக்க நடேசன்.. போன்றவர்களை இந்த இடுகை நினைவு கூற வைத்தது நன்றீ...

புலவன் புலிகேசி said...

உன்மையில் மணியண்ணா க்ரேட் ஐயா..

Unknown said...

நல்ல பதிவு.

காமராஜ் said...

ரத்தமும் சதையுமான வாழ்க்கையை அப்படியே நெக்குருகப்புட்டு வைத்துவிட்டது எழுத்து.அடிமட்டத்து மனிதர்களிடம் ஸ்நேகமான,சிரிப்பும் சந்தேகமில்லாத பேச்சும் பரிமாறினால்போதும் வாழ்க்கயின் பல தருணங்களை கொண்டுவந்து கொடுப்பார்கள்.மேஜை துடைக்கும் பையனிடம் பேரென்ன, எந்த ஊர்,சாப்டியா என்று கேட்டுவிட்டு வந்துவிடுவோம்.ஆனால் அவனது கண்கள் வீடுபோகும் வரை நம் முதுகோடு கூடவரும்.அப்படியொரு அழகு கதை.

பெசொவி said...

என்ன ஒரு அழகான பதிவு! ஒரு சிறந்த சிறுகதையைப் படிப்பதுபோல உணர்ந்தேன்! அந்தக் கால தொழிலாளர்களின் தொழில் பக்தியைப் பறைசாற்றுகிறது.



கீப் இட் அப், சார்!

vasu balaji said...

thenammailakshmanan said...

பாலா சார் எங்கள் வீட்டிற்கு திருமணங்களில் மற்ற அனுவல்களில் சமைக்க வரும் வெள்ளைச்சாமி., ஆத்தங்குடி பெருமாள். அமெரிக்க நடேசன்.. போன்றவர்களை இந்த இடுகை நினைவு கூற வைத்தது நன்றீ...//

நன்றிங்கம்மா.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

உன்மையில் மணியண்ணா க்ரேட் ஐயா..//

நன்றி புலிகேசி

vasu balaji said...

தாமோதர் சந்துரு said...

நல்ல பதிவு.

நன்றி சந்துரு

vasu balaji said...

காமராஜ் said...

ரத்தமும் சதையுமான வாழ்க்கையை அப்படியே நெக்குருகப்புட்டு வைத்துவிட்டது எழுத்து.அடிமட்டத்து மனிதர்களிடம் ஸ்நேகமான,சிரிப்பும் சந்தேகமில்லாத பேச்சும் பரிமாறினால்போதும் வாழ்க்கயின் பல தருணங்களை கொண்டுவந்து கொடுப்பார்கள்.மேஜை துடைக்கும் பையனிடம் பேரென்ன, எந்த ஊர்,சாப்டியா என்று கேட்டுவிட்டு வந்துவிடுவோம்.ஆனால் அவனது கண்கள் வீடுபோகும் வரை நம் முதுகோடு கூடவரும்.அப்படியொரு அழகு கதை.//

நன்றிங்க காமராஜ்:)

vasu balaji said...

நன்றிங்க பெயர்சொல்ல விருப்பமில்லை

Paleo God said...

நேரில் அனுபவித்தவன் என்ற முறையில் துக்கம் தொண்டை அடைக்கிறது சார் ..!