Friday, May 28, 2010

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...டென்ஷன்

க்ருஷ்ணா! பரம ஏழையான குசேலன் கிழிஞ்ச துணி மூட்டையில தயங்கித் தயங்கி மறைச்சு வச்சி தவிச்சாராமே! நீ எனக்காக கொண்டு  வந்த அவலைத் தராம என்ன பண்ற குசேலான்னு பிடுங்கி ஆசையா ஒரு வாய் சாப்பிட்டியாமே! வரவாள்ளாம் எனக்கு அது குடு இது குடுன்னு கேக்கறவாதான். இங்க பாருங்கோ. என் நண்பன். எனக்கே எனக்காக அவல் கொண்டு வந்திருக்கான்னு சிலாகிச்சி, அவன கட்டிண்டியாமே. இது நிஜமான்னாளாம். குருவாயூரப்பன் ஆமான்னாளாம்!

அனந்ததராம தீட்சிதர் நாராயணீய உபன்யாசம் நடக்கிறது. உருக உருக இப்படிச் சொல்லும்போதே விசும்புகிறார். கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் முழுதும் கண்ணீர் வழிய அமர்ந்திருக்கிறது.

‘பதிகளைவரித்தரேனு சதிய பங்க ஹொதகலில்லா. நீனே அநாத பந்தோ!’ க்ருஷ்ணா! அஞ்சு பேர் புருஷா இருந்தும் மனைவியோட மானத்த காப்பாத்த உதவ முடியல்ல. இப்படி அநாதையா இருக்கறவாளுக்கு நீதானே ரட்சிக்கிறவன்னு புரந்ததாசர் பாடறார். இன்னொரு நாள் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் உபன்யாசத்தில் சொல்லும்போதே அழுகிறார். மொத்தக் கூட்டமும் சேர்ந்து அழுகிறது.

அயனாவரம் குஹாலயத்தில் அரசமரத்தடி பிள்ளையார் கோவிலில் காலட்சேபங்கள் நடக்கும். குளிரக் குளிர மணல் கொட்டியிருப்பார்கள். ஆறுமணியிலிருந்து கூட்டம் கூடும். வக்கீலாத்து மாமி, ரத்தினநாடார் சம்சாரம், பூக்காரி ராஜம், குப்பை வாரும் லச்சி பெண்கள் புறமென்றால் வெங்கடேச தீட்சிதர், ஆடிட் ஆஃபீஸர் அனந்து, ரிக்‌ஷாக்கார முனியன் எல்லாம் ஆண்கள்புறம் அமர்ந்திருப்பார்கள். இவர்களின் குஞ்சு குளுவான்கள் காலட்சேபத்தில் காதும் விளையாட்டில் கருத்துமாக ஓடுவார்கள்.

பாதிக் காலட்சேபத்தில் தீபாராதனை நடந்து தட்சிணைத் தட்டு வரும். (முடியும் தருணத்தில் தீபாராதனை செய்தால் பாதிப்பேர் தாண்டுவதற்குள் மீதிப்பேர் போய்விடுவார்கள்). காலட்சேபம் முடிய, என்னமா கதை சொல்றார். பகவான் சோதிச்சாலும் கைவிடறதில்லை என்பாள் வக்கீலாத்து மாமி. அட போ மாமி! என்னான்னாலும் வீட்டுக்கு தூரமா இருக்கிற பொம்பளைய சீலைய உருவற வரைக்கும் அந்த சாமி ஏன் விடணும் என கோவமாகக் கேட்பாள் ராஜம்.

அது அப்படியில்லையடி, என்னதான் ஸ்வாமிக்கு நெருக்கமானாலும் கஷ்டம்னு ஒன்னு படவேண்டியிருந்தா பட்டுத்தானாகணும். அத தாங்கற சக்தியும், அதில இருந்து காப்பாத்தறதும் அவந்தான் பண்ணுவான்னு புரியணும்டி நமக்கு என்பாள் மாமி.

மூட நம்பிக்கை? இதனால் அவரவர் கடவுள் பார்த்துப்பார் என்று அவர்கள் வேலையை செய்யாமல் விட்டார்களா என்ன? கோவிலே கதியென்று இருந்து விட்டார்களா என்ன? மனது லேசாகி, உணவுண்டு, நன்றாகத் தூங்கினார்கள். அக்கம் பக்கத்தவருடன் பேசினார்கள். கஷ்டங்களைப் பகிர்ந்துக் கொண்டார்கள். மன இறுக்கம் என்பது மிக அரிதான காலமது.

காலட்சேபம் இல்லாத நாட்களில் ஆறு மணிக்குள் ஏதோ இரவு உணவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு பெண்கள் கூடிப் பேசுவார்கள். ஆண்கள் மாடியிலோ தெருஓரமோ, அரசியல் பேசுவார்கள். அக்கப் போர்தான். பொரணி பேசுவார்கள்தான். 

இந்த பார்வதி பாரு மாமி, அன்னைக்கு விருந்தாளிங்க வந்தாங்கன்னு ஒரு லோட்டால சக்கர கேட்டுச்சு. குப்பாச்சியா அளந்து கீழ சிந்தும்னு ஒரு பேப்பர்ல வெச்சி குடுத்தேன். இன்னைக்கு தலை தட்டி குடுக்குது. என்ன ஒரு ரெண்டு ஸ்பூன் சக்கரை மிச்சம் புடிப்பியா? அத வச்சி மாளிகை கட்டுவியா? அது என்ன புத்தி மாமி என்று கேட்பாள் ஒருத்தி. 

அடுத்த நாள் பார்வதி வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்கும். அதெப்படி மாமிகிட்ட சொல்லுவ? என்ன கேட்டிருக்கலாமில்ல? நீ போன முறை வாங்கினப்ப எப்படி குடுத்தன்னு நான் சொல்லிக்காட்ட மாட்டனா என்பாள்.

அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நின்றுவிடும். ஆனால், ஏதோ ஒரு நாள் பார்வதி இல்லாத நேரம் பள்ளி விட்டு அவள் பிள்ளை உணவுக்கு வந்தால், உங்கம்மா எங்க போச்சோ. நீ வாடா சாப்புட்டு இஸ்கோலுக்கு போ என்று தாயினும் பரிந்தூட்டுவார்கள். புள்ள என்னாச்சோ என்று பதறிவரும் பார்வதிக்கு வழியில் தென்படும் பிள்ளை அத்தை சாப்பாடு குடுத்துச்சு. மீன் குழம்பு சோறு என்று சொல்லிவிட்டு குஷியாகப் போகும்.

உடனே போய் நன்றி சொன்னதுமில்லை. எதிர்பார்த்ததுமில்லை. இரண்டு ஸ்பூன் சக்கரைக்கு சண்டை போட்டவளுக்கு இது பெரிய விஷயமேயில்லை. சிறிய ஊடலுக்குப் பின் நட்பாகி விடுவார்கள். பேசாமலே இருந்தாலும், ஒரு கடன்காரன் வந்து வாயில் வந்தபடி பேசிவிட முடியாது. 

கையிலிருந்தால் காசு தேத்தி கொடுப்பதோ, இல்லையேல் யோவ்! இருக்கறதுன்னா இரு. இல்லாட்டி ஒரு மணி நேரத்துல வா. உந்துட்ட வாங்கிட்டு போய்ட்டே இரு. ஆம்பிளங்க இல்லாதப்ப வந்து கலாட்டா பண்ற வேல வெச்சிக்காத என்று மிரட்டி, தோடோ, மூக்குத்தியோ சேட்டு கடையில் வைத்து பணம் வாங்கிக் கொடுத்து உதவுவார்கள்.

ஒரு விசேஷமோ, சாவோ வீதி கூடி, அல்லது குறைந்தபட்சம் அக்கம் பக்கத்தவர் கூடி உறவு எது, நட்பு எது எனப்பிரிக்க முடியாமல் பங்கேற்ற காலமது. கஷ்டங்கள் இருந்தன. வருத்தங்கள் இருந்தன. பகிர்ந்து கொண்டார்கள். மன இறுக்கம் மிகவும் அரிதான காலமது.

தங்கச்சி கலியாணம்டா, சீட்டு கேக்காதேன்னு சொல்லியும் ஏலம் கேட்டு ஆயிரம் ரூபாய் ஏத்திவிட்டான்யா ராகவன் என்று சண்டைபோடுவார் குமார். குமார் ஊரிலில்லாதபோது அவன் தந்தைக்கு மார்வலியென்று கொண்டு போய் காப்பாற்றுவார் ராகவன். மன்னிப்புகள் பெரிய மனதுடன் ஏற்கப்பட்ட காலம் அது. 

இப்போது அதே ஆறுமணி. அலுவலகத்தில் மூட்டை கட்டிக் கொண்ட வசவு, ரயிலில் பஸ்ஸில் இடம் கிடைக்காமல் வந்த அவதி, வீட்டில் வரும்போதே அலறும் சுட்டி டீவி, ஷூ ஒரு புறம், பள்ளிப் பை ஒரு புறம், மதிய சாப்பாடு பாதிக்கு மேல் சாப்பிடாமல் டிஃபன்பாக்ஸ் ஒரு புறம். வைதபடியே ஹோம் வொர்க் செய்ய விரட்டி, அடுக்களையில் ஒரு கண்ணும் சீரியலில் ஒரு கண்ணும் வைத்தபடி சமையல். ஒரு நிமிஷம் ஸ்கோர் பார்க்க சானல் மாற்றும் பையனுடன் சண்டை.

அதே அழுத்தத்தில் வரும் கணவன் வாங்கி வர மறந்துவிட்ட டீத்தூளுக்கும், மாகிக்கும் சண்டை. தீடீரென ஸ்ட்ரைக்கால் பஸ்ஸோ, ரயிலோ தாமதமாகி வந்தால் பெல் அடித்தும் திறக்காமல் தூங்கிவிடும் பிள்ளைகள். டென்ஷனோடு கத்தி, கதவு திறந்த பிறகு நாலு சாத்து சாத்தினால் அழுது கொண்டே ஸ்னேக்ஸ் தீர்ந்து போய் பசியுடன் தூங்கிவிடும் குழந்தைகள். குற்ற உணர்வை மீறிய எரிச்சல், ஒப்பீடு, வாக்குவாதம். மன இறுக்கம் மிக எளிதான காலம் இது. முரண் படுதலே வாழ்வாகிப் போய்விட்டது.

மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்பதையெல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டு நகர வாழ்க்கை நரக வாழ்வாகிவிட்டது. கிராமப் புரங்களில் இந்த வேஷங்களில்லாததால் தானோ மனுசத்தனம் மிஞ்சியிருக்கிறது? அதனால் தானோ மனதும் அவர்கள் வசமிருக்கிறது?

73 comments:

பிரேமா மகள் said...

நிதர்சனம்...

`அப்பாடி.. இன்னிக்குத்தான் முதன் முதலா ஒரு பதிவுக்கு கமெண்ட் போடற சான்ஸ் கிடைச்சிருக்கு..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே கலக்கல்..

இராகவன் நைஜிரியா said...

// மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்பதையெல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டு நகர வாழ்க்கை நரக வாழ்வாகிவிட்டது. கிராமப் புரங்களில் இந்த வேஷங்களில்லாததால் தானோ மனுசத்தனம் மிஞ்சியிருக்கிறது. அதனால் தானோ மனதும் அவர்கள் வசமிருக்கிறது? //

நெத்தியடி அண்ணே. கல்லமில்லாமல், மனதில் தோன்றியதை நேரிடையாக செல்வதில் கிராமத்துக்கு என்றுமே நிகரில்லை.

இராகவன் நைஜிரியா said...

// மன இறுக்கம் என்பது மிக அரிதான காலமது. //

ஆமாங்க அண்ணே. மன இறுக்கம் என்று சொல்லிகிட்டு... டாக்டருக்கும், மருந்து கடைக்கும் தண்டம் அழ வேண்டிய அவசியமில்லை...

இராகவன் நைஜிரியா said...

// "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...டென்ஷன்" //

கும்மி இருக்க டென்ஷன் பற்றி கவலை எதற்கு..

இராகவன் நைஜிரியா said...

// பிரேமா மகள் said...
நிதர்சனம்...

`அப்பாடி.. இன்னிக்குத்தான் முதன் முதலா ஒரு பதிவுக்கு கமெண்ட் போடற சான்ஸ் கிடைச்சிருக்கு.. //

படிச்சுட்டு ஓட்டு போட்டுவிட்டு வருதற்குள் நீங்க முந்திகிட்டீங்க..

Paleo God said...

//மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்பதையெல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டு நகர வாழ்க்கை நரக வாழ்வாகிவிட்டது. கிராமப் புரங்களில் இந்த வேஷங்களில்லாததால் தானோ மனுசத்தனம் மிஞ்சியிருக்கிறது.//

உண்மைதான் சார்!

Rekha raghavan said...

சிறப்பான கண்ணோட்டம். அருமையான பதிவு.

ரேகா ராகவன்
(now at LA)

Radhakrishnan said...

அசத்தல் ஐயா. கிராமங்களும் தொலைந்து போய் கொண்டிருக்கிறது.

நேசமித்ரன் said...

உங்க அப்சர்வேஷன் பவர்க்கு ஒரு ஷொட்டு!!!

மெல்லிய நினைவுக்கிளறல்!
முடிவில் வழங்கு நிலை வாழ்வின்
துரிதத்தால் திரியும் உறவுகள் மீதான
துயர்

நல்ல இடுகை சார்

மணிஜி said...

காங்கீரிட் காடுகளில் வசிக்கும்
ரோபோக்கள் சார் நாம் இப்போது

க ரா said...

மொத்தத்தில் ஒரு பாலகுமாரன் நாவலின் ஒரு அத்தியாயத்தை படித்த பீல் எனக்கு. அருமை சார்.

பெசொவி said...

டிவியும் இண்டர்நெட்டும் வாழ்க்கையோடு கலந்துவிட்ட இந்த நாட்களில் பழைய ஞாபகங்கள் ஒரு ஆறுதலைத் தருகின்றன என்பதில் சந்தேகமில்லை.
எவ்வளவு அழகாக அந்தக் கால வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள், நன்றி, வாழ்த்துகளுடன்!

அ.முத்து பிரகாஷ் said...

// பாதிக் காலட்சேபத்தில் தீபாராதனை நடந்து தட்சிணைத் தட்டு வரும். (முடியும் தருணத்தில் தீபாராதனை செய்தால் பாதிப்பேர் தாண்டுவதற்குள் மீதிப்பேர் போய்விடுவார்கள்). //
சாமி குத்தம் வந்திடப் போகுது வானம்பாடி சார் ...

// உடனே போய் நன்றி சொன்னதுமில்லை. எதிர்பார்த்ததுமில்லை //
மிக அருமையான பதிவு சார் .. நன்றி !

Unknown said...

hmmm... nallla irukku valakkam pol

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என்னதான் ஸ்வாமிக்கு நெருக்கமானாலும் கஷ்டம்னு ஒன்னு படவேண்டியிருந்தா பட்டுத்தானாகணும். அத தாங்கற சக்தியும், அதில இருந்து காப்பாத்தறதும் அவந்தான் பண்ணுவான்னு புரியணும்டி நமக்கு என்பாள் மாமி. //

சத்தியமான வார்த்தைகள்.

Download சுரேஷ் said...

நாங்களும் சிறுவயதில் இவ்வாறு தான் வளர்ந்தோம் ஆனால் தற்போது அங்கும் இந்த அன்பு மறைந்து வருகின்றது.

அன்புடன் நான் said...

அப்போ காலம் நம்கையில் இருந்தது...
இன்று காலத்தில் கையில் நாமிருக்கிறோம்.

Chitra said...

மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்பதையெல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டு நகர வாழ்க்கை நரக வாழ்வாகிவிட்டது. கிராமப் புரங்களில் இந்த வேஷங்களில்லாததால் தானோ மனுசத்தனம் மிஞ்சியிருக்கிறது? அதனால் தானோ மனதும் அவர்கள் வசமிருக்கிறது?


....... உண்மைதான்..... கிராமங்களும் பலி ஆகாமல் இருக்க வேண்டும்.... மன இறுக்கத்தால், உடல் நலமும் பாதிக்கப்படும் போது, நகரத்திலும் மக்கள் புரிந்து கொள்வார்கள் - மாறுதல் வரும் என்று நம்புவோம்.

ஈரோடு கதிர் said...

//மன்னிப்புகள் பெரிய மனதுடன் ஏற்கப்பட்ட காலம் அது. //

இன்னும் ”மன்னிப்புகள்” கிராமத்தில் இது உயிரோடுதான் இருக்கின்றன...

மிக நேர்த்தியான இடுகை

அனுபவித்து வாசித்தேன்

ராஜ நடராஜன் said...

தனிமனித நட்புகள் நன்றாகவே இருந்தன.

ஆனால் மொத்த பொருளாதார நோக்கில் சோசியலிச இந்திய காலங்கள் கொடுமையானவையென்று நினைக்கிறேன்.

இருந்தும் தலைப்புக்கான வார்த்தை யார் வாயிலிருந்தும் வரவில்லை என்பதும் உண்மை.

ஸ்ரீராம். said...

வாழ்வே செயற்கை ஆகி விட்டது...

கிராமப் புரங்களில் இந்த வேஷங்களில்லாததால் தானோ மனுசத்தனம் மிஞ்சியிருக்கிறது?//


ஆனால் இப்போ கிராமப்புறங்கள் என்று ஒன்று இருக்கா சார்?

ஜோதிஜி said...

சரி. மனதில் ஓடிக் கொண்டேயிருப்பதும் இதுவே தான்,,,,,,,,,

dheva said...

800 வீடுகள் இருக்கும் எனது அப்பார்மென்டில் ஒரு நாள் எதார்த்தமாக கரண்ட் கட் ஆகிவிட....வெளியே வந்த பக்கத்துவீட்டுக்காரரை முதன் முறையாக பார்த்தேன். அவர் 4 வருசமா இருக்காராம்.... நான் 3 வருசமா இருக்கேன். நகரத்து வாழ்வின் மக்கள் தொடர்பு இப்படி....

வெளியே வந்தால் டி.வி சீரியல் போய் விடும். ...என்ற நிலையில் இல்லத்தரசிகள்.....! எங்க சார் வேலை...என்று கேட்டால்...அத்து மீறி சொந்த விசயத்தில் தலையிடுறான்யா என்று குற்றம் சொல்லும் மனோபாவம்.....

லிப்டில் அன்றாடம் பார்க்கும் ஒருவர் தமிழர் போல தெரிய......சார் தமிழான்னு கேட்டதற்கு....யெஸ் என்று சொல்லி விட்டு வேறு பக்கம் தலை திருப்பியவர், என்று மனிதர்கள் இறுகிப்போயிருப்பது நிஜம்தான் சார்.


நீங்கள் சொல்லும் மனிதர்கள் எல்லாம் இப்போது ஒன்று மரித்து விட்டார்கள் அல்லது தங்களின் பிள்ளைகளின் அடுக்குமாடி கட்டிடத்துக்குள் ஒடுங்கிவிட்டார்கள் சார். வருத்தமான விசயம் என்னவென்றால் சாட்டிலைட் டி.வியின் ஆதிக்கத்தால் கிராமங்களிலும் மக்கள் இப்போது தமது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க த்தொடங்கி இருக்கிறார்கள். உங்கள் பதிவின் சாரம்...வலி...புரிகிறது சார்......!

Mahi_Granny said...

எப்பவும் போல கலக்கல் சார்

Anonymous said...

ஒவ்வொரு வரிகளும் சத்தியமான வரிகள்.

மாமி என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே காலடி வைக்கும் போதே சாப்பாட்டையோ / முறுக்கு+தேனீரையோ கொண்டு வந்து வைத்து சாப்பிடு என்று தலை தடவி கொடுக்கும் மாமிகளை இங்கு (நகரத்தில்) பார்க்க முடியாது.

வீட்டினருடன் பேச்சு வார்த்தை இல்லாவிட்டாலும், காணும் போதெல்லாம் எங்களுக்கு விருப்பமான பொருட்களையோ / தின்பண்டங்களையோ கையில் திணித்து விட்டு போகு பாசம், நாங்கள் பிழையே செய்தாலும் எங்களில் பிழை இல்லை என்று எங்கள் பெற்றோருடன் வாதாடிவிட்டு, அவர்கள் இல்லாத நேரத்தில் இனிமேல் அப்படி செய்யாதே கண்ணா என்று சொல்லும் கண்மூடித்தனமான + அக்கறையான பாசம், சிறு காய்ச்சல் என்றாலே ஏதோ உயிர் போகிற வியாதி வந்துவிட்டது போல விழுந்து விழுந்து கவனிக்கும் பாசம், இதெல்லாம் நகரத்தில் எங்கே கிடைக்கிறது.

அம்மாவின் கிராமத்துக்கும் போகும் போது அங்கே உள்ளவர்கள் எங்கள் மேல் காட்டும் பாசத்தில் ஒரு பங்கு கூட எங்க அயலவரிடம் நாங்கள் நகரத்தில் காட்டுவதில்லையே. இங்கே முறைப் படி இன்விடேஷன் கொடுக்காட்டி அது பெரிய விசயம். கிராமத்தில் கூப்பிட முதலே தன் வீட்டு விஷேசம் போல எந்த வித பலனும் எதிர்பார்க்காது எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் அந்த கிராமத்து மக்களின் அன்புக்கு முன் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்.

கலகலப்ரியா said...

ம்ம்...

ரோஸ்விக் said...

நல்ல இடுகை அண்ணே!

ஒரு வகையில நான் குடுத்து வைச்சவன். நீங்க சொல்ற அந்த கிராம வாழ்க்கை வாழ்ந்தவன். இப்போதும் பெரும்பாலும் எனது வாழ்கை முறை அதுபோலவே இருக்கிறது. அப்படியே இருக்கத்தான் எனக்கும் ஆசை.

sweet said...

huh

ennavo KIRAMAM thaan BEST

NAGARAM naragam-nu solli mokkai edhanai naal poduveenga sir?

City-la irukkira engalukku CITY LIFE CITY PEOPLE palakkam

neenga village-la irukkiradhala ungalukku village pidichu irukku

VILLAGE-la ungalukku sugama... nalla manidhargal irukkira mathiri theriyalam

but enakku ennai pontra city ponnunga, pasangalukku CITY life thaan SORKKAM

avanga avangalukku irukkira idam manidhargal BEST :)

neenga irukkira place nalla irukudhu-na athai mattum sollunga

athukkaga matthadhai KURAI SOLLA ungalukku urimai illai....

okvaaa????

really comedy article huh

:)

take care

bye from madhumidha

madhumidha1@yahoo.com

payama irundha ennoda comment podatheenga... ahh chumma

சிநேகிதன் அக்பர் said...

அதுக்குதானே சார் வலைப்பதிவு இருக்கு. அப்போ இல்லாதவங்க?

இல்லாத்வங்களுக்குத்தான் பிரச்சனை இருக்காதே!

சிநேகிதன் அக்பர் said...

சின்ன வயசு காட்சிகளை கண்ணில் கொண்டுவந்து விட்டீர்கள்.

முன்பெல்லாம் தெருச்சண்டை அடிக்கடி நடக்கும். கடுமையான வாக்குவாதங்கள் இருக்கும். சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்த நாட்கள் அவை.

காமராஜ் said...

அமிர்தம், தேனாமிர்தம் சொக்க வைக்கிற சொற்கட்டுக்குள் ஒரு வாழ்க்கையின் காலம் தெளிவாகப்பதிந்து கிடக்குது.எங்கள் ஆசான் தணுஷ்கோடி ராமசமியின் கஸ்பார் கதை
அலையலையாய் அடிக்குது பாலா.ஊடிக்கூடுதல் காதலுக்கு மட்டுமில்லை ஸ்நேகத்துக்கும் வலிமை சேர்க்கும்.அழகு அழகு,

ஆரூரன் விசுவநாதன் said...

//மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்பதையெல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டு நகர வாழ்க்கை நரக வாழ்வாகிவிட்டது.//

நிறைய யோசிக்க வைத்துவிட்டன இந்த வரிகள்.......

ஸ்ரீராம். said...

அனந்ததராம தீட்சிதர் நாராயணீய உபன்யாசம் நடக்கிறது. உருக உருக இப்படிச் சொல்லும்போதே விசும்புகிறார். கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் முழுதும் கண்ணீர் வழிய அமர்ந்திருக்கிறது"//

நான் இவர் கேசெட் கேட்டிருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை.
புலவர் கீரன் சில சமயம் சொற்பொழிவாற்றிக்கொண்டு நடிப்பாக குரலில் அழுகை, வீரம் எல்லாம் கொண்டு வருவார்.
கொத்தமங்கலம் சுப்பு காந்தி கதை சொல்லும் போது உணர்ச்சி தாங்காமல் அழுவாராம். அதை கல்கி தனது பாணியில் ஒரு முறை இப்படிச் சொன்னாராம்..."அடுத்து கொத்தமங்கலம் சுப்பு காந்தி கதை சொல்லி அழுவார்.."

prince said...

ம்ம்ம் ...

தாராபுரத்தான் said...

அம்மா வரட்டும்..அறுபது வயதை தொட்டாலே கிராமத்தில் கொண்டு வந்து விட சொல்லிடலாம்..என்னங்க..சரியா.வாங்க துணைக்கு.

துளசி கோபால் said...

சாதி, அந்தஸ்து, வேலை இப்படி எல்லாம் பிரிச்சுப்பார்க்காம ஒருத்தருக்கொருத்தர் உதவி வாழ்ந்த அன்னியோன்யம் எல்லாம் போயே போச்:(

இப்போ மனுசங்க தனித்தனித் தீவுகள். ஒரே இடத்தில் இருந்தாலும் ஒருத்தரோடு ஒருத்தர் ஒட்டமாட்டாங்க.

பதிவு அருமை.

ஏக்கம்தான் வருது.

செ.சரவணக்குமார் said...

Excellent Bala Sir.

நாகராஜன் said...

எந்த பதிவுக்கும் பின்னூட்டம் இடத்தெரியாத என்னை இந்தப்பதிவு எழுத தூண்டியது...அவ்வளவு அக்மார்க் உண்மைகள்...வாழ்த்துக்கள் நண்பரே....

balavasakan said...

உண்மைதான் சார் கிராமங்களில் தான் மனிதம் எஞ்சியிருக்கிறது !!!

ரிஷபன் said...

ஒரு விசேஷமோ, சாவோ வீதி கூடி, அல்லது குறைந்தபட்சம் அக்கம் பக்கத்தவர் கூடி உறவு எது, நட்பு எது எனப்பிரிக்க முடியாமல் பங்கேற்ற காலமது. கஷ்டங்கள் இருந்தன. வருத்தங்கள் இருந்தன. பகிர்ந்து கொண்டார்கள். மன இறுக்கம் மிகவும் அரிதான காலமது.
அட.. அட.. இதைத்தான் சொல்லி சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறேன்.. சகாக்களிடம்.. எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்.. பிரேமா மகள்.. சொன்னது போல ஒரே வார்த்தை.. நிதர்சனம்.. ஓஹோன்னு பதிவு..

vasu balaji said...

பிரேமா மகள் said...

நிதர்சனம்...

`அப்பாடி.. இன்னிக்குத்தான் முதன் முதலா ஒரு பதிவுக்கு கமெண்ட் போடற சான்ஸ் கிடைச்சிருக்கு..//

முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// நெத்தியடி அண்ணே. கல்லமில்லாமல், மனதில் தோன்றியதை நேரிடையாக செல்வதில் கிராமத்துக்கு என்றுமே நிகரில்லை.//

ஆமாம்ணே. ஆனா இதில சொல்லியிருக்கிற பார்வதியெல்லாம் நகரத்துலதான்:(. எல்லாம் போச்சு

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...


உண்மைதான் சார்!//

நன்றி ஷங்கர்

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

சிறப்பான கண்ணோட்டம். அருமையான பதிவு.

ரேகா ராகவன்
(now at LA)//

நன்றி சார். சிகாகோ விட்டு கிளம்பியாச்சா:)

vasu balaji said...

V.Radhakrishnan said...

அசத்தல் ஐயா. கிராமங்களும் தொலைந்து போய் கொண்டிருக்கிறது.//

ஆமாங்க. அதுதான் கவலையாயிருக்கு

vasu balaji said...

நேசமித்ரன் said...

உங்க அப்சர்வேஷன் பவர்க்கு ஒரு ஷொட்டு!!!

மெல்லிய நினைவுக்கிளறல்!
முடிவில் வழங்கு நிலை வாழ்வின்
துரிதத்தால் திரியும் உறவுகள் மீதான
துயர்

நல்ல இடுகை சார்//

நன்றிங்க நேசமித்ரன்

vasu balaji said...

மணிஜீ...... said...

காங்கீரிட் காடுகளில் வசிக்கும்
ரோபோக்கள் சார் நாம் இப்போது//

on da dot.:(

vasu balaji said...

இராமசாமி கண்ணண் said...

மொத்தத்தில் ஒரு பாலகுமாரன் நாவலின் ஒரு அத்தியாயத்தை படித்த பீல் எனக்கு. அருமை சார்.//

ரொம்ப நன்றிங்க.

vasu balaji said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

டிவியும் இண்டர்நெட்டும் வாழ்க்கையோடு கலந்துவிட்ட இந்த நாட்களில் பழைய ஞாபகங்கள் ஒரு ஆறுதலைத் தருகின்றன என்பதில் சந்தேகமில்லை.
எவ்வளவு அழகாக அந்தக் கால வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள், நன்றி, வாழ்த்துகளுடன்!//

நன்றிங்க பெ.சொ.வி

vasu balaji said...

நியோ said...

// பாதிக் காலட்சேபத்தில் தீபாராதனை நடந்து தட்சிணைத் தட்டு வரும். (முடியும் தருணத்தில் தீபாராதனை செய்தால் பாதிப்பேர் தாண்டுவதற்குள் மீதிப்பேர் போய்விடுவார்கள்). //
சாமி குத்தம் வந்திடப் போகுது வானம்பாடி சார் ...

// உடனே போய் நன்றி சொன்னதுமில்லை. எதிர்பார்த்ததுமில்லை //
மிக அருமையான பதிவு சார் .. நன்றி !//

நன்றிங்க நியோ வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.:)

vasu balaji said...

பேநா மூடி said...

hmmm... nallla irukku valakkam pol//

நன்றி ஆனந்த்.

vasu balaji said...

நாய்க்குட்டி மனசு said...

என்னதான் ஸ்வாமிக்கு நெருக்கமானாலும் கஷ்டம்னு ஒன்னு படவேண்டியிருந்தா பட்டுத்தானாகணும். அத தாங்கற சக்தியும், அதில இருந்து காப்பாத்தறதும் அவந்தான் பண்ணுவான்னு புரியணும்டி நமக்கு என்பாள் மாமி. //

சத்தியமான வார்த்தைகள்.//

நன்றிங்க நாய்க்குட்டி மனசு

vasu balaji said...

Kanchi Suresh said...

நாங்களும் சிறுவயதில் இவ்வாறு தான் வளர்ந்தோம் ஆனால் தற்போது அங்கும் இந்த அன்பு மறைந்து வருகின்றது.//

ஆமாங்க. வருத்தமாயிருக்கு.

vasu balaji said...

சி. கருணாகரசு said...

அப்போ காலம் நம்கையில் இருந்தது...
இன்று காலத்தில் கையில் நாமிருக்கிறோம்.//

ம்ம். ஆமாம். நன்றிங்க கருணாகரசு.

vasu balaji said...

Chitra said...

மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்பதையெல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டு நகர வாழ்க்கை நரக வாழ்வாகிவிட்டது. கிராமப் புரங்களில் இந்த வேஷங்களில்லாததால் தானோ மனுசத்தனம் மிஞ்சியிருக்கிறது? அதனால் தானோ மனதும் அவர்கள் வசமிருக்கிறது?


....... உண்மைதான்..... கிராமங்களும் பலி ஆகாமல் இருக்க வேண்டும்.... மன இறுக்கத்தால், உடல் நலமும் பாதிக்கப்படும் போது, நகரத்திலும் மக்கள் புரிந்து கொள்வார்கள் - மாறுதல் வரும் என்று நம்புவோம்.//

நன்றிங்க சித்ரா

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//மன்னிப்புகள் பெரிய மனதுடன் ஏற்கப்பட்ட காலம் அது. //

இன்னும் ”மன்னிப்புகள்” கிராமத்தில் இது உயிரோடுதான் இருக்கின்றன...

மிக நேர்த்தியான இடுகை

அனுபவித்து வாசித்தேன்//

நன்றி கதிர்.

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

தனிமனித நட்புகள் நன்றாகவே இருந்தன.

ஆனால் மொத்த பொருளாதார நோக்கில் சோசியலிச இந்திய காலங்கள் கொடுமையானவையென்று நினைக்கிறேன்.

இருந்தும் தலைப்புக்கான வார்த்தை யார் வாயிலிருந்தும் வரவில்லை என்பதும் உண்மை.//

நன்றிங்ணா:)

vasu balaji said...

@@நன்றிங்க ஸ்ரீராம்
@@நன்றிங்க தேவிஜி
@@நன்றிங்க தேவா
@@நன்றிங்க Mahi Granny

vasu balaji said...

முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க அனாமிகா துவாரகன்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

ம்ம்...//

ம்ம். நன்றிம்மா

vasu balaji said...

ரோஸ்விக் said...

நல்ல இடுகை அண்ணே!

ஒரு வகையில நான் குடுத்து வைச்சவன். நீங்க சொல்ற அந்த கிராம வாழ்க்கை வாழ்ந்தவன். இப்போதும் பெரும்பாலும் எனது வாழ்கை முறை அதுபோலவே இருக்கிறது. அப்படியே இருக்கத்தான் எனக்கும் ஆசை.//

நன்றிங்க ரோஸ்விக்.

vasu balaji said...

@@ நன்றிங்க அக்பர்
@@ நன்றிங்க ப்ரின்ஸ்
@@ நன்றி வாசு

vasu balaji said...

காமராஜ் said...

அமிர்தம், தேனாமிர்தம் சொக்க வைக்கிற சொற்கட்டுக்குள் ஒரு வாழ்க்கையின் காலம் தெளிவாகப்பதிந்து கிடக்குது.எங்கள் ஆசான் தணுஷ்கோடி ராமசமியின் கஸ்பார் கதை
அலையலையாய் அடிக்குது பாலா.ஊடிக்கூடுதல் காதலுக்கு மட்டுமில்லை ஸ்நேகத்துக்கும் வலிமை சேர்க்கும்.அழகு அழகு,//

ரொம்ப நன்றி காமராஜ். :)

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

//மேனர்ஸ், டீஸன்ஸி, ப்ரைவசி என்பதையெல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டு நகர வாழ்க்கை நரக வாழ்வாகிவிட்டது.//

நிறைய யோசிக்க வைத்துவிட்டன இந்த வரிகள்.......//

ம்கும். யோச்சிக்கிறாராம்ல. அன்புடன் ஆரூரன் போடுறதே மாறிபோச்சு. இதுல ரோசன வேறா:))

vasu balaji said...

தாராபுரத்தான் said...

அம்மா வரட்டும்..அறுபது வயதை தொட்டாலே கிராமத்தில் கொண்டு வந்து விட சொல்லிடலாம்..என்னங்க..சரியா.வாங்க துணைக்கு.//

அட என்னண்ணே. பாலாசி கதிர்லாம் முதல்ல கிளம்பட்டும். நமக்கெங்க்க வயசாச்சு:))

vasu balaji said...

@@முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க துளசி கோபால்

vasu balaji said...

@@நன்றி சரவணக்குமார்

vasu balaji said...

நாகராஜன் said...

எந்த பதிவுக்கும் பின்னூட்டம் இடத்தெரியாத என்னை இந்தப்பதிவு எழுத தூண்டியது...அவ்வளவு அக்மார்க் உண்மைகள்...வாழ்த்துக்கள் நண்பரே....//

ரொம்ப சந்தோஷம் நாகராஜன்.:)

vasu balaji said...

ரிஷபன் said...

ஒரு விசேஷமோ, சாவோ வீதி கூடி, அல்லது குறைந்தபட்சம் அக்கம் பக்கத்தவர் கூடி உறவு எது, நட்பு எது எனப்பிரிக்க முடியாமல் பங்கேற்ற காலமது. கஷ்டங்கள் இருந்தன. வருத்தங்கள் இருந்தன. பகிர்ந்து கொண்டார்கள். மன இறுக்கம் மிகவும் அரிதான காலமது.
அட.. அட.. இதைத்தான் சொல்லி சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறேன்.. சகாக்களிடம்.. எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்.. பிரேமா மகள்.. சொன்னது போல ஒரே வார்த்தை.. நிதர்சனம்.. ஓஹோன்னு பதிவு..//

ரொம்ப நன்றி ரிஷபன்.

நறுமுகை said...

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து நரகமாய் போனவர்களுக்கு இதை படிக்கும் அனுபவத்தை கொடுத்தமைக்கு நன்றி..


@ உங்க போட்டோ சூப்பர்,,


www.narumugai.com

பத்மா said...

வானம்பாடிகள் சார் கிராமத்தில் வளர்ந்து, கிராமத்தில் படித்து ,சிறிது காலம் நகரத்திலும் வாழ்ந்து இருக்கிற படியால் இதை சொல்லலாம் என்று நினைக்கிறேன் .
அக்கம் பக்கம் இருப்போருடன் ஆன உறவு நம்மை பொறுத்தது தான் .அது எந்த இடமாய் இருந்தாலும் கூட .முகம் மலர சிரிக்கும் நட்புடன் கூடிய மனது நாம் பெற்றிருந்தால், நட்பும் தானாய் வரும் தானே?
கிராமங்களிலும் பரம்பரை பரம்பரையாய் தொடர்ந்து வரும் காழ்ப்புணர்ச்சி எல்லாம் உண்டு .
எனகென்னவோ நம்மை பொறுத்து தான் சிநேகம் என்று தோணுகிறது.

vasan said...

ஆனாலும், உங்க‌ளுக்கு இவ்வ‌ள‌வு பாமர‌த்த‌ன‌ம் கூடாது.
டிவியெல்லாம் வ‌ந்து, டிஸ்க் க‌னெக்ஷ‌ன்
குடுத‌த‌பின்னாடி, கிராம‌மாவ‌து, ந‌க‌ர‌மாவ‌து?
கிராம‌மும் முன்னொறியிருச்சில‌!!
அங்கேயும் பாதிக்குப் பாதி த‌லைய‌ பிய்ச்சிக்கிட்டுத்தான்.