Thursday, May 27, 2010

சிக்கு புக்கு இரயிலே..

நேற்றைய பின்னூட்டங்களின் விளக்கமாகவும், இரயில்வேத்துறை குறித்த மேலதிக விளக்கமாகவும் இந்த விவாதம் தொடர்கிறது. 

இதுவரை வந்த பின்னூட்டங்களோ, கேள்விகளோ சுட்டுவது இரயில்வே என்பது பயணிகள் போக்குவரத்து சம்பந்தப்பட்டது என்பது போலவே அமைந்துள்ளது. சரக்குப் போக்குவரத்து என்ற ஒன்று இருப்பதை யாரும் கண்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ப்ரூனோ கூட அதிகபட்ச புரிதலுடன் பின்னூட்டமிட்டிருந்தாலும் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லும் பார்சல் சிலவு குறித்து வினா எழுப்பியிருந்தார்.

இந்த விளக்கம் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். ஒரு பார்சல் வேனில் ப்ரூனோவின் மோட்டர் பைக், கருவேப்பிலை, மீன், ஊர்மாற்றிப் போகும் ஒருவரின் பொருட்கள், டெக்ஸ்டைல் மூட்டைகள் எல்லாம் அடுக்கப்படுகின்றன என வைத்துக் கொள்வோம். அந்த பார்சல் வேனை கோவையிலிருந்து சென்னைக்கு இயக்குவதற்கான செலவுகள் அனைத்தையும் கணக்கில் கொண்டு லாபமே இல்லாமல் எல்லாப் பொருட்களுக்கும் பகிர்வதாக வைத்துக் கொள்வோம்.

கிலோவுக்கு இவ்வளவு என்று சமமாகப் பகிர முடியுமா? அப்படிச் செய்தால் கருவேப்பிலை, மீன், தக்காளி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை என்னவாகும்? எனவேதான் உணவுப் பொருளுக்கு மிகக் குறைந்த கட்டணம், பைக்குக்கு கூடுதல் கட்டணம் வரும். ஆனால் எந்தக் காலத்திலும் இரயில் மூலம் கொண்டுவரும் கட்டணமானது லாரிக் கட்டணத்தை விடக் குறைவாகவே இருக்கும். 

முதலில் பின்னூட்டங்களுக்கான விளக்கங்கள்:

பிள்ளையாண்டான்
/50 சதவிகித அல்லது அதற்க்கும் மேற்பட்டமுன்பதிவு செய்யக் கூடிய இடங்களை, "தட்கல்" முறைக்கு ஒதுக்குவதால்தான்//

எந்தக் காலத்திலும் 50 சதம் ஒதுக்கப் படவில்லை. தத்கல் சரவணக்குமார் சொன்ன மாதிரி திடீர் பயணம் செய்ய நேர்பவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் பெரிய லாபம் ஒன்றும் ஈட்டித்தருவதல்ல. எல்லா வண்டிகளிலும் தத்கல் எல்லாக் காலங்களிலும் நிரம்பி விடுவதில்லை. டாக்டர் ப்ரூனோ கூட தன் இடுகையில் ஒரு கணக்கு கொடுத்திருந்தார். தினசரி அந்தமாதிரி அனைத்து வண்டிகளும் ஓடுவதில்லை சார். ஒரு சில மிகக் குறைந்த அளவு (5) இரயில்கள் ஈட்டும் லாபமே இதர இரயில்களில் உண்டாகும் நஷ்டத்தை ஈடுகட்டுகிறது. 

//"தட்கல்" முறையில் (ஒரு டிக்கெட்டுக்கு) ரூ.150 கூடுதலாக‌ மற்றும் முழு பயண டிக்கெட் கட்டணம் வாங்கப் படுகிறது.//

குறைந்தபட்சம் 75ரூ அதிகபட்சம் 150ரூ என்பதே சரி. டிக்கட் தொகையில் 30% தத்கல் கட்டணம். 

//இதில் வந்த வருமானத்தைத் தான் லாலு பிரசாத் யாதவ், ரயில்வேத் துறை லாப நோக்கில் செயல்படுகிறது என்று கூறி பணியாளர்களுக்கு போனஸாக வாரி வழங்கினார்.//

என்ன சொல்ல? ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். இரயில்வேத் தொழிலாளியின் போனஸ் லாபத்தைக் கொண்டல்ல. உற்பத்தித் திறனைப் பொறுத்து. ஒரு கடைனிலை ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ10000. 90 நாட்கள் போனஸ் என்றால் ரூ 30000 போனஸ் என்று அர்த்தமில்லை. போனசுக்காக கணக்கில் எடுக்கப்படும் சம்பளம், ரூ 3500 மட்டுமே. 30000 அடிப்படைச் சம்பளம் உள்ள ஒரு சூப்பர்வைசருக்கும் அவ்வளவே. 

ஆமாம். இரயில்வேயாவது ஏதோ சம்பாதிக்கிறது. கணக்குத் தணிக்கைத் துறைக்கு எந்த தத்கல் லாபத்தை வைத்துக் கொடுப்பது? தபால் துறைக்கு ஸ்பீட்போஸ்ட் லாபத்திலிருந்தா தரப்படுகிறது:))?

//லாபம் கொழிக்கும் ரயில்வேத் துறையை, ஏன் தனியார் மயமாக்க வேண்டும்?//

ரயில்வேத்துறை ஒருபோதும் தனியார் மயமாகாது. காரணம் தனியாரின் நோக்கம் லாபம் மட்டுமே. உருளைக்கிழங்குத் தட்டுப்பாட்டுக்கு ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் நாம். ஆனால் லாபம் மட்டுமே கணக்கில் கொண்டால் தென்னக இரயில்வேயில் சரக்குப் போக்குவரத்தை மூடிவிட்டு, 5 பயணிகள் ரயில் மட்டுமே ஓட்டலாம். எப்படி வசதி?:))


//புதிய பாதைகள் உருவாக்குவது மற்றும் அகலப் பாதை மாற்றும் கடைநிலை பணிகளை செய்யும் வேலைகளை, அரசியில் உள்ளீடுகளால், சில பல குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்குவதால் ஏற்படும் ரயில்வே துறைக்கு ஏற்படும் இழப்புகள் ஏராளம். //

முழுவதும் சரியல்ல. நீங்கள் கூறுவது தாமதத்துக்கான காரணமென்றால் முழுதும் தவறு. காரணம், ஒரு அகலப்பாதை அமைக்க 45 கோடி செல்வாகும் என்றால் ஒரு வருட பட்ஜெட்டில் அதற்கான முழுத்தொகையும் கொடுக்கப்படுவதில்லை. இந்த வருடம் 3 கோடி அளிக்கப்பட்டால் அந்த அளவுக்குத்தான் வேலை முடியும். விலைவாசி உயர்வால் 45கோடியில் திட்டமிடப்பட்டது 10 வருடத்தில் 60கோடியில் முடியும் அவலம் மறுக்கமுடியாதது. பணமில்லை சார். என்ன பண்ண?

கதிர்:

//ஏன் ஒரே ஒரு ரயில் கூட இந்த 150 கி.மீ. அதுவும் நாலு மாநகராட்சி இருக்கிற ரூட்ல வரலைனு தெரியல....//

இந்த ஆண்டு கோயமுத்தூர் ஈரோட்டுக்கு இடையே ஒரு MEMU விடுவாய்ங்களே! இன்னும் விடலையா?

அரைகிறுக்கன்:

//தட்காளில் நாற்பது சதம்வரை ஆன பின்பும் பொதுவான முன்பதிவுகளில் காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கையை குறைக்காமல் அப்படியே பழைய எண்ணிக்கையில் வைத்திருப்பது//

இரண்டும் வேறு வேறு. தத்காலில் சார்ட் ரெடியாகுமுன் காலியிருப்பின் பொது வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்களுக்கு இடம் கிடைக்கும்.

//எரியாத விளக்குகள் ஓடாத விசிறிகள்
மட்டமான நாற்றமெடுக்கும் கழிவறைகள்
அதிலும் குறிப்பாகதொலைதூர வண்டிகளில் காலை எழுந்து பார்த்தால் அதிலும் தண்ணீர் இருப்பதில்லை//

வண்டிகள் பற்றாக்குறை. தண்ணீர் வாங்கப் படுகிறது. சப்ளை வரவில்லையெனில் இப்படி நிகழலாம்.

புருனோ:

// IRCTCயில் தனி நபர்கள் பெறக்கூடிய இ-டிக்கட்,//
இதை தவறு என்று கூறுகிறீர்களா. என்ன கொடுமை சார்
நீங்களும் இதில் முன்பதிவு செய்ய வேண்டியது தானே//

இல்லையே சார். கவுண்ட்டர் திறக்குமுன்பே இந்த வகையிலும் ரிசர்வேஷன் செய்யப்படுவதால், முந்தின நாள் காத்துக் கிடந்தாலும் ஸ்டேஷனில் இடம் இருக்க வாய்ப்பில்லை என்றேன்.

மற்ற விளக்கங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரயில்வேயைப் பொறுத்தவரை அதன் வரவு செலவுகளுக்கு அத்துறையே பொறுப்பு. ஆனால் லாப நோக்கு கருதி செயல்பட முடியாது. ஆட்சியாளர்களின் கொள்கைக்கேற்ப நாட்டு நலன் கருதி லாபமில்லாவிடினும் இரயில் இயக்கியாக வேண்டும். செல்ஃபோனிலும், பெட்ரோலியத்திலும் விருப்பம் காட்டும் டாட்டாக்களும், அம்பானிகளும் இரயில்வேத்துறையில் முதலீட்டுக்கு விரும்பமாட்டார்கள். காரணம் முதலீட்டுக்கேற்ற லாபம் வராது. இரயில்வேயின் சம்பாத்தியத்துக்குள் வண்டியியக்குதலும் போக முதலீடும் செய்யவேண்டும்.

தென்னக இரயில்வேயைப் பொறுத்த வரை 2008-09ம் ஆண்டில் 100ரூ வருமானத்துக்கு 126ரூ செலவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த நிலைதான் பெரும்பாலான இரயில்வேக்களுக்கு. இதுதான் நிதர்சனம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரயில்வே அமைச்சரின் பட்ஜெட் பேச்சிலிருந்து சில பகுதிகள்:

Madam, I would like to bring the attention of the august House to theinformation that the route-kilometres of the Railways was 53,596 kms in 1950.

After a span of 58 years, we have now reached only 64,015 kms, adding just 10,419 kms, an annual average of only 180 kms. 

The time has come for the business community to come and join hands to build partnerships with the Railways.

At this point i would like to assure my Railway family that we are not going for privatisation of the Railways. It will remain a government organisation.

இந்தச் சுட்டி முழுமையான புரிதலுக்கு உதவும். 
~~~~~~

51 comments:

Chitra said...

நிறைய புது விஷயங்களை சொல்லி இருக்கீங்க.... interesting and useful info. பகிர்வுக்கு நன்றி.

சத்ரியன் said...

பாலா,

இது மாதிரி துறை சார்ந்த பதிவும் தேவைதான்.

Mrs.Menagasathia said...

பகிர்வுக்கு நன்றி சார்!!

அகல்விளக்கு said...

நல்ல பகிர்வு அய்யா...

எம்.எம்.அப்துல்லா said...

நீங்க சொல்லியிருப்பது சரியோ தப்போ, நம்ம சாதிக்காரர்ங்குற முறையில உங்களை நான் ஆதரிக்கிறேன்.

:)

ராஜ நடராஜன் said...

//செல்ஃபோனிலும், பெட்ரோலியத்திலும் விருப்பம் காட்டும் டாட்டாக்களும், அம்பானிகளும் இரயில்வேத்துறையில் முதலீட்டுக்கு விரும்பமாட்டார்கள்.//

பெட்டிக்கடைகளையே சூப்பர்மார்க்கட்டாக்கும் அம்பானிகள் ரயில்வேயை விட்டு வைப்பார்களா?விட்டுப் பாருங்கள் அப்புறம் தெரியும்.

பழமைபேசி said...

//கவுண்டர் திறக்குமுன்பே//

ஒன்னு தமிழ்ல, விநியோகப்பட்டி, சீட்டுப்பட்டி திறக்கு முன்பேன்னு எழுதணும்.... இல்லையா, கவுண்ட்டர்னாவது எழுதணும்....

வானம்பாடிகள் said...

ஏற்கனவே முதலீட்டுக்கு வழியிருக்கு சார். யாரும் வரலை. Build Own lease and Transfer scheme ஊத்திக்கிச்சி. 100ரூ வருமானத்துக்கு 126ரூ செலவுன்னா போட்ட காசு எப்புடி வரும். யாரு வருவா?

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...
//கவுண்டர் திறக்குமுன்பே//

ஒன்னு தமிழ்ல, விநியோகப்பட்டி, சீட்டுப்பட்டி திறக்கு முன்பேன்னு எழுதணும்.... இல்லையா, கவுண்ட்டர்னாவது எழுதணும்..//

இந்த வில்லங்கம் வேற இருக்கோ. மாத்திட்டனுங்கோவ்:))

எம்.எம்.அப்துல்லா said...

//பழமைபேசி said...
//கவுண்டர் திறக்குமுன்பே//

ஒன்னு தமிழ்ல, விநியோகப்பட்டி, சீட்டுப்பட்டி திறக்கு முன்பேன்னு எழுதணும்.... இல்லையா, கவுண்ட்டர்னாவது எழுதணும்..//

//


கோயமுத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ளதை எழுதியிருப்பாரு

:))

புருனோ Bruno said...

/ஆனால் லாபம் மட்டுமே கணக்கில் கொண்டால் தென்னக இரயில்வேயில் சரக்குப் போக்குவரத்தை மூடிவிட்டு, 5 பயணிகள் ரயில் மட்டுமே ஓட்டலாம். எப்படி வசதி?:))//

சூப்பர்

ஆனால் இது பலருக்கு புரியாது என்பதால் சிறு கோனார் நோட்ஸ்

By the way, Indian Posts cannot refuse delivery of a letter

Where as Private Courier Service will deliver only in cities / big towns

Now you are free to praise the private couriers !!!
இப்பொழுதும் புரியவில்லை என்றால் கேளுங்கள்

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி said...
ஒன்னு தமிழ்ல, விநியோகப்பட்டி, சீட்டுப்பட்டி திறக்கு முன்பேன்னு எழுதணும்.... இல்லையா, கவுண்ட்டர்னாவது எழுதணும்....//

இதுதான் ஆப்புல........... டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பு

புருனோ Bruno said...

//
இல்லையே சார். கவுண்டர் திறக்குமுன்பே இந்த வகையிலும் ரிசர்வேஷன் செய்யப்படுவதால், முந்தின நாள் காத்துக் கிடந்தாலும் ஸ்டேஷனில் இடம் இருக்க வாய்ப்பில்லை என்றேன்.//

வழக்கமாக இ டிக்கட்டில் காலை கவுண்டர் திறக்கும்முன்னர் பதிவு செய்யலாம்

ஆனால் முதல் நாள் பதிவு (அதாவது பயணத்திற்கு 90 நாட்களுக்கு முன்னர்) செய்வது அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் தான் செய்ய முடியும்

அப்படித்தானே

புருனோ Bruno said...

//After a span of 58 years, we have now reached only 64,015 kms, adding just 10,419 kms, an annual average of only 180 kms. //

ஆனால் ஒரு வழி பாதை இருவழிப்பாதையானது. மீட்டர் கேஜ் பிராட் கேஜ் ஆனது, மின்மயம் என்று கணக்கெடுக்கவேண்டும். அதே போல் இந்த கணக்குகளை மாநிலம் வாரியாக எடுத்தால் எந்த மாநிலத்திற்கு பட்டை நாமம் சாத்தப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்

புருனோ Bruno said...

////செல்ஃபோனிலும், பெட்ரோலியத்திலும் விருப்பம் காட்டும் டாட்டாக்களும், அம்பானிகளும் இரயில்வேத்துறையில் முதலீட்டுக்கு விரும்பமாட்டார்கள்.//

பெட்டிக்கடைகளையே சூப்பர்மார்க்கட்டாக்கும் அம்பானிகள் ரயில்வேயை விட்டு வைப்பார்களா?விட்டுப் பாருங்கள் அப்புறம் தெரியும்.//

இல்லை ராஜ நடராஜன் சார்

அவர்கள் வேண்டுமானால் தொடர்வண்டி நிலையத்தின் உணவகத்தை நடத்துவார்கள்

சரக்கு போக்குவரத்தை நடத்துவார்கள்

அல்லது சக்கரங்களில் அரண்மனை தொடர்வண்டிகளை நடத்துவார்கள்

பாண்டியன் விரைவு வண்டியும், சென்னை பாண்டி பாசஞ்சரும், தாம்பரம் கடற்கரை மின்வண்டியும் அவர்களை ஈர்க்காது

சரியா வானம்பாடி சார்

புருனோ Bruno said...

//ப்ரூனோ கூட அதிகபட்ச புரிதலுடன் பின்னூட்டமிட்டிருந்தாலும் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லும் பார்சல் சிலவு குறித்து வினா எழுப்பியிருந்தார்.//

நான் செலவு அதிகம் என்று முறையிடவில்லை

நேரடியாக ஏற்றப்படாமல் மறைமுகமாக ஏற்றப்பட்ட செலவைத்தான் நான் கூறினேன்

அதே போல் முதலில் பயணிகளுக்கு இருந்த பல சலுகைகள் மெதுவாக அமைதியாக பறிக்கப்பட்டன

சலுகைகளை நீக்க தொடர்வண்டி நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு. ஆனால் “கட்டணம் உயர்த்தபப்டவில்லை” என்று கூறிக்கொண்டே மறைமுகமாக லல்லு உயர்த்தியதை நான் சுட்டிக்காட்டவே விரும்பினேன்

--

//பைக்குக்கு கூடுதல் கட்டணம் வரும். ஆனால் எந்தக் காலத்திலும் இரயில் மூலம் கொண்டுவரும் கட்டணமானது லாரிக் கட்டணத்தை விடக் குறைவாகவே இருக்கும். //

நீங்கள் சொல்லாத மற்றொரு விஷயம்

எந்த பொருளும் தொடர்வண்டிமூலம் அனுப்பப்படும் போது பத்திரமாக சேதம் எதுவும் இல்லாமல்வரும்

இரு சக்கர வாகனங்களை தொடர்வண்டியில் அனுப்பினால் விளக்கு உடையாது, இருக்கை கிழியாது - இது என் அனுபவம்

--

மற்றவர்களுக்கு ஒரு கேள்வி - தொடர்வண்டியில் பயணம் செய்திருப்பீர்கள். இறங்கும் போது அந்த பெட்டி ஊழியரிடம் (coach attendant) நன்றி, வணக்கம் என்று ஏதாவது இது வரை கூறியுள்ளீர்களா

ச.செந்தில்வேலன் said...

நேற்றைய பதிவிற்கே பின்னூட்டமிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். நேரப்பற்றாக்குறையால் முடியவில்லை. மன்னிக்கவும்.

மிக சிறப்பான பதிவு. சிறப்பான விளக்கங்கள்.

என் கருத்துகள்..

இரயில்வே துறை போல ஒரு நிறுவனம் அமைக்க முடியுமா என்றால் வியப்பாகவே இருக்கிறது. ஆயிரக்கணக்கான ரயில்கள் தினமும் இலட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்வது வியப்பே.

1997 முதல் 2008 வரை தொடர்ந்து ரயில்வே சேவையைப் பயன்படுத்தியவன் என்ற வகையில் என் கருத்துகள்..

* ரயில்வே துறையை ஒரு அரசாங்க நிறுவனம், சேவை அடிப்படையில் பார்ப்பதை விட்டுவிட்டு வாடிக்கையாளர்களை நோக்கி செயல்பட ஆரம்பித்தால் நல்லது. சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தது 200 சொகுசுப் பேருந்துகள் ஓடுகிறது என்று வைத்துக்கொள்வோம். 200 * 35 = 7000. ஒரு பயணியிடம் 400 முதல் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஓரிரு ரயில்களைக் கூடுதலாக விட்டு தத்கால் விலையை நிர்ணித்தால் (385) என்னாகும்?

அனைத்து சொகுசுப்பேருந்துகளும் துண்டத்தூக்கிப் போட வேண்டியது தான்.

* அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்கு ரயில்கள் போன்ற அதிக பயணிகளைக் கொண்டு செல்லும் சேவைகளே தேவை. கோவைக்கும் - சேலத்திற்கும் இடையே நான்கு அல்லது ஐந்து ரயில்கள் கிளம்பினால் அனைத்து பேருந்துகளைப் பெருவாரியாகக் குறைத்துவிடலாம்.

* சரக்குக் கட்டணம் குறைவாக இருப்பது நமக்குச் சாதகமே. சரக்கு ரயில்கள் நம் நாட்டில் செல்வதெல்லாம் முக்கிய பாதைகளில் மட்டும் தான். அனைத்து வழித்தடங்களிலும் சரக்கு ரயில்கள் இயங்கினால் பெருமளவு சாலைப்போக்குவரத்து குறையும்.

* "மாத்தியோசி"க்கும் அமைச்சரும் அரசாங்கமும் அமைந்தால் தனியார் மயமாக்காமலேயே ரயில்வே துறையை சிறந்த நிறுவனமாக்கமுடியும்.

* சென்னையில் இருந்த பொழுது ஒவ்வொரு வார இறுதியிலும் எனக்கு கோவைக்குப் பயணச்சீட்டு இருந்தது. தேவையில்லை என்றால் ரத்து செய்ய 20 ரூபாய் தான். ஆனால் பயணச்சீட்டு இல்லையென்று 500 ரூபாய் கொடுத்து ஊருக்குச் செல்வதை விட 20 ரூபாய் செலவாவது மேல். என்னைப் போன்றவர்களாலும் பயணச்சீட்டுத் தட்டுப்பாடு வரும்.

* பல நாட்கள் 8 மணிக்கு சீட்டில் உட்கார்ந்தால் 8:20க்கெல்லாம் காத்திருப்போர் பட்டியலிற்கு வருவது காமெடியாக இருக்கும். நம் மக்கள் தொகையைப் பார்க்கும் பொழுது இது நேர்வது வியப்பில்லை. www.irctc.co.in தளத்தின் அலெக்ஸா ராங்க் 475 என்பதே இணைய முன்பதிவின் பிரபலத்தன்மையைப் புரியவைக்கும்.

* தமிழகத்தில் அதிகமாக பக்தர்கள் குவியும் இடம் பழநி. இந்த ஊரிற்கு மீட்டர் கேஜ் இருக்கும் பொழுது 4 ரயில்களே ஓடிக்கொண்டிருக்கும். ரயில்வே துறை, பணம் கொழிக்கும் வழித்தடங்களையும் கண்டுபிடித்து சேவையை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

இந்தப் பின்னூட்டமே ஒரு பதிவின் நீளம் வந்துவிட்டது.. :)

ச.செந்தில்வேலன் said...

//மற்றவர்களுக்கு ஒரு கேள்வி - தொடர்வண்டியில் பயணம் செய்திருப்பீர்கள். இறங்கும் போது அந்த பெட்டி ஊழியரிடம் (coach attendant) நன்றி, வணக்கம் என்று ஏதாவது இது வரை கூறியுள்ளீர்களா
//

சிலமுறை கூறியுள்ளேன் புருனோ சார்.

புருனோ Bruno said...

//* ரயில்வே துறையை ஒரு அரசாங்க நிறுவனம், சேவை அடிப்படையில் பார்ப்பதை விட்டுவிட்டு வாடிக்கையாளர்களை நோக்கி செயல்பட ஆரம்பித்தால் நல்லது. //

நான் கூறிய தபால் துறை / கூரியர் உதாரணத்தை படித்து விட்டு, அதன் பிறகும் நீங்கள் இந்த் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா என்று கூறுங்கள்

--

//www.irctc.co.in தளத்தின் அலெக்ஸா ராங்க் 475 என்பதே இணைய முன்பதிவின் பிரபலத்தன்மையைப் புரியவைக்கும்.
//

தகவலுக்கு நன்றி

மணிஜீ...... said...

தலைவரே..உங்களை ரயில்வே அமைச்சராக்கிடலாம்

ஸ்ரீராம். said...

நிறையக் கேள்விகள்..நிறைய விளக்கங்கள்..

இவ்வளவு எல்லாம் யோசிப்பதில்லை..இடம் கிடைத்ததா..ரெயிலில் பயணம்..இல்லையா பஸ்..எத்தனையோ நடைமுறைக் கஷ்டங்கள்..

இதற்கெல்லாம் யார் இவ்வளவு விளக்கம் தருகிறார்கள். ...

வானம்பாடிகள் said...

புருனோ Bruno said...
//
இல்லையே சார். கவுண்டர் திறக்குமுன்பே இந்த வகையிலும் ரிசர்வேஷன் செய்யப்படுவதால், முந்தின நாள் காத்துக் கிடந்தாலும் ஸ்டேஷனில் இடம் இருக்க வாய்ப்பில்லை என்றேன்.//

வழக்கமாக இ டிக்கட்டில் காலை கவுண்டர் திறக்கும்முன்னர் பதிவு செய்யலாம்

ஆனால் முதல் நாள் பதிவு (அதாவது பயணத்திற்கு 90 நாட்களுக்கு முன்னர்) செய்வது அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் தான் செய்ய முடியும்


மிகச்சரி:)

வானம்பாடிகள் said...

ஆனால் ஒரு வழி பாதை இருவழிப்பாதையானது. மீட்டர் கேஜ் பிராட் கேஜ் ஆனது, மின்மயம் என்று கணக்கெடுக்கவேண்டும். அதே போல் இந்த கணக்குகளை மாநிலம் வாரியாக எடுத்தால் எந்த மாநிலத்திற்கு பட்டை நாமம் சாத்தப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்//

இது சரிதானென்றாலும் பூகோள அமைப்பில் தமிழ்நாட்டுக்கு சாபக்கேடு. ஒரு கோடியாகப் போய்விட்டோம். நம்மிடமிருந்து புறப்படும் சரக்கு நிலக்கரி, சிமெண்ட், உப்பு, டெக்ஸ்டைல்,ஸ்டீல் இவ்வளவே. இதிலும் தரைவழிப்போட்டி. பயணிகள் இரயில் வருமானம் தெரிந்தகதை. :)

வானம்பாடிகள் said...

நேரடியாக ஏற்றப்படாமல் மறைமுகமாக ஏற்றப்பட்ட செலவைத்தான் நான் கூறினேன்//

அது மறைமுகமல்ல. நிர்வாக வசதிக்கான கணக்கியல் வசதி:))

/இல்லை ராஜ நடராஜன் சார்

அவர்கள் வேண்டுமானால் தொடர்வண்டி நிலையத்தின் உணவகத்தை நடத்துவார்கள்

சரக்கு போக்குவரத்தை நடத்துவார்கள்

அல்லது சக்கரங்களில் அரண்மனை தொடர்வண்டிகளை நடத்துவார்கள்

பாண்டியன் விரைவு வண்டியும், சென்னை பாண்டி பாசஞ்சரும், தாம்பரம் கடற்கரை மின்வண்டியும் அவர்களை ஈர்க்காது/

உணவகம் முடியாது:).IRCTC அதற்காகவே உருவாக்கப்பட்டது.

சரக்குரயில் விடமாட்டார்கள். ஏனெனில் கட்டணம் அரசாங்கம் நிர்ணயிக்கும்.

மின்வண்டி நிச்சயமாக முடியாது. ராணுவத்தைப் போட்டுதான் ஓட்டவேண்டும். 20ரூ சீசன் டிக்கட்டுக்கு எங்க போக?

வானம்பாடிகள் said...

ச.செந்தில்வேலன் said...

/ரயில்வே துறையை ஒரு அரசாங்க நிறுவனம், சேவை அடிப்படையில் பார்ப்பதை விட்டுவிட்டு வாடிக்கையாளர்களை நோக்கி செயல்பட ஆரம்பித்தால் நல்லது. சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தது 200 சொகுசுப் பேருந்துகள் ஓடுகிறது என்று வைத்துக்கொள்வோம். 200 * 35 = 7000. ஒரு பயணியிடம் 400 முதல் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஓரிரு ரயில்களைக் கூடுதலாக விட்டு தத்கால் விலையை நிர்ணித்தால் (385) என்னாகும்?

அனைத்து சொகுசுப்பேருந்துகளும் துண்டத்தூக்கிப் போட வேண்டியது தான்.//

முதலீட்டுக்கு மிக அதிகம். அரசு ரயில்வேக்கு கடனாகத்தான் கொடுக்கும். டிவிடண்ட் கொடுக்க வேண்டும். பராமரிப்புச் செலவு அதிகம். நஷ்டம் ஏற்பட்டால் அரசாங்கம் சமன் செய்யாது.

/சரக்குக் கட்டணம் குறைவாக இருப்பது நமக்குச் சாதகமே. சரக்கு ரயில்கள் நம் நாட்டில் செல்வதெல்லாம் முக்கிய பாதைகளில் மட்டும் தான். அனைத்து வழித்தடங்களிலும் சரக்கு ரயில்கள் இயங்கினால் பெருமளவு சாலைப்போக்குவரத்து குறையும்./

இல்லை. அப்படி இருந்ததுதான் ஆதரவின்றி நிர்வாகச் செலவைக் குறைக்க இப்படியாகிவிட்டது. ஓரிடத்தில் சேகரித்து ஒரு வண்டியாக்கி அனுப்புவதால் முக்கியத்தடங்களில் மட்டுமே எனத் தோன்றலாம்.

/தமிழகத்தில் அதிகமாக பக்தர்கள் குவியும் இடம் பழநி. இந்த ஊரிற்கு மீட்டர் கேஜ் இருக்கும் பொழுது 4 ரயில்களே ஓடிக்கொண்டிருக்கும். ரயில்வே துறை, பணம் கொழிக்கும் வழித்தடங்களையும் கண்டுபிடித்து சேவையை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்./

பயணிகள் அதிகமிருந்தால் பணம் வருமென்பதில்லை. காரணம் டெலஸ்கோபிக் ரேட். குறைந்த கட்டணம். டிக்கட்டில்லாப் பயணத்தைத் தடுக்கவேண்டுமானால் டிக்கட் செக்கர் ஒரு கூடுதல் நிரந்தரச் செலவு.
நன்றி செந்தில்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//மணிஜீ...... said...
தலைவரே..உங்களை ரயில்வே அமைச்சராக்கிடலாம்//

ஹிந்தி தெரியுமா த‌லைவா??????

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//எம்.எம்.அப்துல்லா said...
நீங்க சொல்லியிருப்பது சரியோ தப்போ, நம்ம சாதிக்காரர்ங்குற முறையில உங்களை நான் ஆதரிக்கிறேன்.

:)//

நானும்! :)


ரயில் ஓடும்போது ரிதமிக்கா எப்படி சார் சவுண்ட் வருது?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இதுவரை ரயில்வே பற்றி தெரியாத பல தகவல்கள் தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி !

கலகலப்ரியா said...

ம்ம்.. என்ன சார் இங்கயும் ரயில் சர்வீஸ் ஆரம்பிச்சிட்டீங்களா... நடக்கட்டு.. ஐ மீன் ஓடட்டு ஓடட்டு...

எல்லாரும் கேள்வி கேக்கறாய்ங்க... நானும் ஒரு கேள்வி கேக்கறேன் சார்..

சிக்குபுக்கு ரயிலேக்கும்.. லாடுலபக்குதாஸுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குதுங்களா சார்?

வானம்பாடிகள் said...

// கலகலப்ரியா said...
ம்ம்.. என்ன சார் இங்கயும் ரயில் சர்வீஸ் ஆரம்பிச்சிட்டீங்களா... நடக்கட்டு.. ஐ மீன் ஓடட்டு ஓடட்டு...

எல்லாரும் கேள்வி கேக்கறாய்ங்க... நானும் ஒரு கேள்வி கேக்கறேன் சார்..

சிக்குபுக்கு ரயிலேக்கும்.. லாடுலபக்குதாஸுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குதுங்களா சார்?//

=)).சாமி முடியல:)). ஆமாம். சிக்குபுக்கு ரயிலேல ஏன் இடம் காலியில்லைன்னு சண்ட போட்டவர நீ என்ன லாடு லபக்தாசான்னு கேட்டுட்டாங்களாம்:))

நசரேயன் said...

அண்ணே நான் நேத்து ஒரு கேள்வி கேட்டேன்

வானம்பாடிகள் said...

நசரேயன் said...
அண்ணே நான் நேத்து ஒரு கேள்வி கேட்டேன்

நேத்து கேட்ட கேள்விக்கு நேத்தே பதில் சொன்னேனே:))

கலகலப்ரியா said...

||ரயில் ஓடும்போது ரிதமிக்கா எப்படி சார் சவுண்ட் வருது?||

எல்லாம் "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே" புண்ணியம்.. (காத எதுக்கும் ஒரு வாட்டி செக் பண்ணிக்குங்க..)

கலகலப்ரியா said...

||புருனோ Bruno said...
/ஆனால் லாபம் மட்டுமே கணக்கில் கொண்டால் தென்னக இரயில்வேயில் சரக்குப் போக்குவரத்தை மூடிவிட்டு, 5 பயணிகள் ரயில் மட்டுமே ஓட்டலாம். எப்படி வசதி?:))//

சூப்பர்||

சார்.. நீங்க ரயில்வே டாக்டருங்களா..

கலகலப்ரியா said...

||
=)).சாமி முடியல:)). ஆமாம். சிக்குபுக்கு ரயிலேல ஏன் இடம் காலியில்லைன்னு சண்ட போட்டவர நீ என்ன லாடு லபக்தாசான்னு கேட்டுட்டாங்களாம்:))||

ஐயய்யோ... அவர்தான் சார் லாடுலபக்கு..

கலகலப்ரியா said...

|| மணிஜீ...... said...
தலைவரே..உங்களை ரயில்வே அமைச்சராக்கிடலாம்||

ஆமாம் சார்.. டீக்காப்பி.. முறுக்கு.. காண்ட்ராக்ட் எனக்கு கொடுத்துடுங்க..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
|| மணிஜீ...... said...
தலைவரே..உங்களை ரயில்வே அமைச்சராக்கிடலாம்||

ஆமாம் சார்.. டீக்காப்பி.. முறுக்கு.. காண்ட்ராக்ட் எனக்கு கொடுத்துடுங்க..//

ஐ. காண்ட்ராக்ட்!!!. கமிஷன் எனக்கா:))

கலகலப்ரியா said...

||க‌ரிச‌ல்கார‌ன் said...
//மணிஜீ...... said...
தலைவரே..உங்களை ரயில்வே அமைச்சராக்கிடலாம்//

ஹிந்தி தெரியுமா த‌லைவா?????||

அந்த கொடுமைய ஏன் சார் கேக்கறீங்க.. அவங்க அஸிஸ்டண்டு கூட.. ஹான்.. ஹான் - அப்டின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் சார்... சாரை கேக்கணுமா சார்... ஹானோஹான்தான்..

கலகலப்ரியா said...

||ஐ. காண்ட்ராக்ட்!!!. கமிஷன் எனக்கா:))|

ஓ.. இது ஐக்கிய இலங்கை ரயில்வேயா... "eye" contract எல்லாம் அங்கதானே நடக்குது...

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
||க‌ரிச‌ல்கார‌ன் said...
//மணிஜீ...... said...
தலைவரே..உங்களை ரயில்வே அமைச்சராக்கிடலாம்//

ஹிந்தி தெரியுமா த‌லைவா?????||

அந்த கொடுமைய ஏன் சார் கேக்கறீங்க.. அவங்க அஸிஸ்டண்டு கூட.. ஹான்.. ஹான் - அப்டின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் சார்... சாரை கேக்கணுமா சார்... ஹானோஹான்தான்..//

அவ்வ்வ்வ்வ்வ்வ். 45 வயசுல கட்டாயமா ஹிந்தி க்ளாசுக்கு அனுப்பி பையனும் பொண்ணும் சிரிப்பா சிரிச்சத மறந்துட்டியாம்மா=))

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
||ஐ. காண்ட்ராக்ட்!!!. கமிஷன் எனக்கா:))|

ஓ.. இது ஐக்கிய இலங்கை ரயில்வேயா... "eye" contract எல்லாம் அங்கதானே நடக்குது...//

அய்யோ. இது அந்த ஐ இல்ல. அது கதிர் டிபார்ட்மெண்ட்=))

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸ்ஸபா.. நான் ஜூட்.. சார் யாராவது கேள்வி கேட்டு பதில் தெரியலைன்னா எனக்கு மெயில் அனுப்புங்க... நான் வந்து பதில் சொல்றேன்..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸ்ஸபா.. நான் ஜூட்.. சார் யாராவது கேள்வி கேட்டு பதில் தெரியலைன்னா எனக்கு மெயில் அனுப்புங்க... நான் வந்து பதில் சொல்றேன்.//

ஆஹா! நீதான் சரி. இந்த சவத்துப்போன இடுகை கலகலா ஆயிடிச்சி:))

கலகலப்ரியா said...

||அவ்வ்வ்வ்வ்வ்வ். 45 வயசுல கட்டாயமா ஹிந்தி க்ளாசுக்கு அனுப்பி பையனும் பொண்ணும் சிரிப்பா சிரிச்சத மறந்துட்டியாம்மா=))||

என்னது உங்களுக்கு 45 வயசுலயா... அப்போ நான் பொறக்கவே இல்லயே.. அங்கிளும்.. ஆண்டியும் ஒண்ணுமே சொல்லல தாத்தா... அவ்வ்வ்வ்...

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
||அவ்வ்வ்வ்வ்வ்வ். 45 வயசுல கட்டாயமா ஹிந்தி க்ளாசுக்கு அனுப்பி பையனும் பொண்ணும் சிரிப்பா சிரிச்சத மறந்துட்டியாம்மா=))||

என்னது உங்களுக்கு 45 வயசுலயா... அப்போ நான் பொறக்கவே இல்லயே.. அங்கிளும்.. ஆண்டியும் ஒண்ணுமே சொல்லல தாத்தா... அவ்வ்வ்வ்...//

அய்யய்யோ! நீதான் அந்த ஹிந்தி டீச்சரா=))

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் has left a new comment on the post "சிக்கு புக்கு இரயிலே..":

கலகலப்ரியா said...

||அவ்வ்வ்வ்வ்வ்வ். 45 வயசுல கட்டாயமா ஹிந்தி க்ளாசுக்கு அனுப்பி பையனும் பொண்ணும் சிரிப்பா சிரிச்சத மறந்துட்டியாம்மா=))||

என்னது உங்களுக்கு 45 வயசுலயா... அப்போ நான் பொறக்கவே இல்லயே.. அங்கிளும்.. ஆண்டியும் ஒண்ணுமே சொல்லல தாத்தா... அவ்வ்வ்வ்...//

அய்யய்யோ! நீதான் அந்த ஹிந்தி டீச்சரா=)) ||

சார்.. நான் பிந்தி டீச்சர்... நசரேயன் கேள்வி கேட்டாலே நீங்க ஸ்பெல்லோ போடுறீங்க.. கியான்னா என்னன்னு நான் கேட்டுக்கிட்டு அலையறேன்..

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
//சார்.. நான் பிந்தி டீச்சர்... நசரேயன் கேள்வி கேட்டாலே நீங்க ஸ்பெல்லோ போடுறீங்க.. கியான்னா என்னன்னு நான் கேட்டுக்கிட்டு அலையறேன்..//

அது பட்டர்ஃப்ளை எஃபெக்ட் மாதிரி அண்ணாச்சி எஃபெக்ட்=)). ஒன்னுஞ்செய்யயேலாது=))

கிரி said...

சார் தகவல்களுக்கு நன்றி! சார் இதைப்போல துறை சார்ந்த பதிவுகளை இட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு இருக்கும் அனுபவத்திற்கு பல தகவல்களை எங்களுக்கு விளக்கலாம்.

Mahi_Granny said...

பலரின் சந்தேகங்களுக்கும் வரிசையாய் பதில் சொன்ன வானம்பாடிகள் சார் தங்களுக்கு நன்றி .

"உழவன்" "Uzhavan" said...

// தபால் துறைக்கு ஸ்பீட்போஸ்ட் லாபத்திலிருந்தா தரப்படுகிறது:))?
 
:-)))

வடுவூர் குமார் said...

ரொம்ப‌ நாளாக‌ இர‌யில்வே துறையை ப‌ற்றி யாருமே எழுத‌ மாட்டாங்க‌ளா? என்று நினைத்துக்கொண்டிருந்தேன்,உங்க‌ள் ப‌திவை பார்த்த‌தும் நீங்கிய‌து.இனிமேல் தான் ப‌டிக்க‌னும் ஒவ்வொன்றாக‌.