Sunday, March 22, 2009

எக்குதப்பா எட்டு கேள்வி

கலைஞராண்ட:

ஈழத்தமிழர் துயர் துடைக்க என்னமோ ஐடியா குட்துகிறியாம். சொக்கு சொக்கி போய் நிக்குதாம். துணி குட்துட்டேன், பாத்ரம் குட்துட்டேன், கலர் டி வி காமெடி சேனல் வராமாதிரி குட்தா சுத்தமா தொட்சில்லாம்னு எதுனா சொன்னியா?

ஜெ யாண்ட:

யம்மாடி. கொடைக்கானல்ல எஸ்டேட் வாங்கினா கொட்சல் குடுக்கறாங்கன்னு இலங்கைல வாங்கி போட்டா வசதின்னு அட்சதில்ல தான இந்த பல்டி?

ம‌ருத்துவ‌ராண்ட:

நாங்க நோக்காடுன்னு வந்தாகண்டி 48 மணி நேரம் போனாதான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்லுவீங்க. கூட்டணி என்னா கோமா கேஸா அய்யா? இன்னும் வாயே தொறக்க மாட்றிங்க?

திருமாவாண்ட:

பாவம்பா. நீ உண்ணாவிரதம் இருந்தப்போ எவ்ளோ நம்பி அந்த புள்ளைங்க கடுதாசு எழுதிச்சிங்க. அது கூட கவனம் வர்லல்ல உனுக்கு. இப்பிடி நம்பிக்கை மோசம் பண்ணிக்கினு அந்தாளு என்னாமா கிழிக்கிறாரு. இங்க கெடந்தே ஆப்பு வைக்கலாம்னு கூப்டுறியே பா மருத்துவர. நாயமா இது?

லல்லுவாண்ட:

3 சீட் தான் தருவேன். அது கூட உனக்கு பவுசில்ல. எட்தா எட்துக்கோ. இல்லாங்காட்டி உடுன்னு சோனியாக்கு சொல்டியேப்பா. நீ ஏம்பா லல்லு பேர தில்லுனு மாத்திக்கல?

மகிந்தாவாண்ட:

சுத்தி சுத்தி லாடம் கட்றானுங்கோ. கல்யாண மாப்ள மாதிரி கசங்காம கொள்ளாம சிர்சிகினேகீறியே. எவனோ சண்ட போடறான். யாரோ சாவறான். கெலிச்சா இங்க. இல்லாட்டி ஓடி பூடலாம்னா?

பான் ‍ கி மூனாண்ட:

ஆயுதம் குடுத்த சப்ப அஜெண்டால சேர்க்க விடலன்னு அப்பாவி ஜனங்க உசிர அமுக்கிட மாட்ட தான ஐ நா சப்ப?

தொங்கபாலுவாண்ட:

சொட்ட பெர்சா வெச்சினுக்கறாண்டா. எவ்ளோ பெரிய நாமம் போட்டாலும் தாங்குவான். இவன் ரொம்ப நல்லவன்னு மக்கள் சொல்றது கேக்குதா?

6 comments:

கலகலப்ரியா said...

ஈழத்தமிழர் துயர் துடைக்க அவரோட மஞ்சத் துண்டைக் கொடுக்கலாம்னு சொன்னாரோ என்னமோ..

vasu balaji said...

:))))))

லோகு said...

நாக்க புடுங்கற மாதிரி கேட்டீங்க.

senthil said...

பாவம்பா. நீ உண்ணாவிரதம் இருந்தப்போ எவ்ளோ நம்பி அந்த புள்ளைங்க கடுதாசு எழுதிச்சிங்க. அது கூட கவனம் வர்லல்ல உனுக்கு. இப்பிடி நம்பிக்கை மோசம் பண்ணிக்கினு அந்தாளு என்னாமா கிழிக்கிறாரு. இங்க கெடந்தே ஆப்பு வைக்கலாம்னு கூப்டுறியே பா மருத்துவர. நாயமா இது?

சொக்ககிதுபா........! பிகிலு அடிக்கப்பா......! நானும்தான்....!

தமிழநம்பி said...

சொட்ட பெர்சா வெச்சினுக்கறாண்டா. எவ்ளோ பெரிய நாமம் போட்டாலும் தாங்குவான். இவன் ரொம்ப நல்லவன்னு மக்கள் சொல்றது கேக்குதா?

- சிரிப்பை அடக்க முடியவில்லை!
சிரித்து முடித்ததும் இந்தத் தமிழினத்தின் இழிநிலை
எண்ணி ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கிப் போனேன்.

கிருஷ்ணா said...

//மகிந்தாவாண்ட:
எவனோ சண்ட போடறான். யாரோ சாவறான். கெலிச்சா இங்க. இல்லாட்டி ஓடி பூடலாம்னா?//

அவருதான் அவுஸ்திரேலியால தன்னோட குடும்பத்துக்கே நிலம் வாங்கிப் போட்டிருக்காராம்ல...