Monday, March 16, 2009

கத கேளு கத கேளு - 3

ஒரு காட்டில ஒரு கலைமான் இருந்திச்சாம். அதுக்கு தான் தான் ரொம்ப அழகுன்னு கர்வம். ஒரு நாள் ஒரு ஆற்றில தண்ணி குடிச்சிண்டு தன்னோட பிம்பத்த பார்த்திச்சாம். ஆஹா. நான் என்ன அழகு. அழகான உடம்பு. என்னை மாதிரி அழகான கொம்பு வேற எந்த மிருகத்துக்கும் இல்லை. மினு மினுன்னு தோல். இவ்வளவு அழகா என்னை ப‌டைச்சிட்டு கால் மட்டும் குச்சி குச்சியா அசிங்கமா ஏன் படைச்சான். ரசனையே இல்லாமன்னு வருத்தமா பார்த்துச்சாம். அப்போ ஒரு வேடன் வர இது பாய்ஞ்சி ஓடிச்சாம். காடு கரடுன்னு ஓட வேடன் துரத்த இது பறந்தடிச்சிண்டு ஓட ஒரு கிளைல இதோட கொம்பு சிக்கிடிச்சி. வேடன் நெருங்கிக்கிட்டிருக்கான். இது தவிச்சி ஒரு மாதிரியா விடுவிச்சிண்டு ஓட ஆரம்பிக்க வேடன் நெருங்கிட்டான். ஒரே பாய்ச்சலா ஓடி தப்பிச்சி, ஆத்தாடி, கொம்பு அழகுதான். ஆனா குச்சியா இருந்தாலும் காலால தான உசிர் பிழைச்சதுன்னு நினைச்சதாம்.

(இத படிச்சிட்டு அம்மாதான் மான், வேடன் தேர்தல், கொம்பு கூட்டணி, கால் ஈழ (மன்னிக்கணும் அம்மாக்கு தான் ஈழமே இல்லையே) இலங்கை பிரச்னைன்னோ நினைச்சா நான் பொறுப்பில்ல சாமிகளா)

4 comments:

கலகலப்ரியா said...

கொம்பு கால் பிடிபடல .. சாரி.. தலை கால் புரியல நு சொன்னேன்..

vasu balaji said...

:>..election result vanthal puriyum

பழமைபேசி said...

இஃகிஃகி! நல்ல கதை...

Anonymous said...

இத படிச்சிட்டு அம்மாதான் மான், வேடன் தேர்தல், கொம்பு கூட்டணி, கால் ஈழ (மன்னிக்கணும் அம்மாக்கு தான் ஈழமே இல்லையே) இலங்கை பிரச்னைன்னோ நினைச்சா நான் பொறுப்பில்ல சாமிகளா)
ARUMAI NANBARE