வடிவேலு: ஏன்யா அம்பயரா. எங்கள பார்த்தா எப்படி தெரியுது. அங்கிட்டு அடிக்கிறவன் பக்கம் இருக்கிற அம்பயரன பார்த்தல்ல. அடிக்க இடஞ்சலில்லாம எங்கிட்டு நின்னு மேட்ச் பாக்குறான். இந்தா மூணாவது தடவ. போட விடுறியாய்யா? நான் வரனானு திரும்பி திரும்பி பார்த்து சரியா போடப் போற நேரத்துல பக்கத்துல வந்து பாலுக்கு முண்ட்ற கன்னுகுட்டி மாதிரி மூஞ்ச நீட்ரியே மூதேவி. நான் மட்டும் உசாரா நிப்பாட்டாம எரியப்போய் எசகு பிசகா எங்கயாவது படாத இடத்தில பட்டா கொலக்கேசு ஆகிப்போகுமா இல்லயா? போய்யா. போய் அங்கிட்டு நின்னு பாரு. இல்லன்னா அந்த அம்பயரன இங்க வரசொல்லு. இதுல வேற மறிச்சிட்டேன்னு கைய கைய ஆட்டி டேன்ஸ் வேற. சின்னப்புள்ளத் தனமா .
அம்பயர்: யோவ். போட்றப்போ கால் கோட்டுக்கு வெளிய இருந்திச்சி. அவுட் இல்ல போய்யா.
வடிவேலு: அட கிறுக்குப்பயலே. அப்ப்டின்னா நோ கால்னு வெளங்கறாப்பல சொல்ல வேண்டியதுதானாய்யா என் வெண்ட்று. வெளங்கிக்கிறுவமா இல்லையா? நோபால்னு ஏன்யா குழப்பற?
வடிவேலு: நானும் பாக்கறேன். கப்பல் மாதிரி காருல வராய்ங்க. ஒண்ணுக்கு ஆறேழு மட்ட. அத தூக்க ஒரு ஆளு. ஒருத்தனும் அடிச்சமா குழிக்குள்ள போட்டமான்னு ஆடுறான்ல. மண்ணுல அடிக்கறதும், தண்ணில அடிக்கிறதும் அங்கங்க பொருக்கி பொருக்கி பத்து வாட்டி தட்டி பொந்துக்குள்ள போட்றதும். சாண் தூரத்துல இருக்கறத தள்ளி விட்றதுக்கு ஓணான் பிடிக்கிறவன் மாதிரி என்னா பிலிமு. அறுக்க மாட்டாதவன் இடுப்பில அம்பத்தெட்டு அறுவான்னு இதுக்கு ஆறேழு மட்ட வேற.
சத்தியராஜ்: யோவ் கோல்ஃப்னா என்னா தெரியுமாய்யா?
வடிவேலு:யாரு. எங்களயா கேக்குறிய. இதெல்லாம் நாம அரடவுசர் காலத்திலயே ஆடிட்டம்டி. இந்த மாதிரி புல்லு தரையெல்லாம் கிடையாது. ரோட்டுல கமர்கட் சைசுல கண்ணாடி குண்டு. உருட்டி விட்டு குழில விளுகலன்னா முழங்கைலயே தள்ளி தள்ளி போடணும்டியோ. ரத்தக்களறி ரணக்களரி ஆய்போகும். அவ்ளோ டஃபு. பட்டணத்துல மட்டய வெச்சி புல்லுல ஆடி புரியாத பேர வெச்சிட்டா? நம்ம கிட்டயேவா. அய்யோ. அய்ய்ய்ய்யோ.
வடிவேலு: நிப்பாட்டு நிப்பாட்டு. யோவ் நிப்பாட்ட சொல்லுய்யா மேச்ச. அழுவுணி ஆட்டம் ஆடப்பாக்கராய்ங்கப்பா.
சத்யராஜ்: யோவ். ஏன் கூவர. என்னாச்சி
வடிவேலு: என்னாச்சா. அங்க பாரு. பச்ச சட்ட போட்ட பந்து புடிக்கிறவன் அந்த பக்கம் தான நின்னான். சிவப்பு சட்ட காரன் இந்தா பீச்சாங்கை பக்கம். சாப்ட போயிட்டு வந்து இப்போ பாரு. அவன் நல்லா புடிக்கிறான்னு காச குடுத்து மாத்தி நிக்க வெச்சிட்டான் போல. விட்றுவமா?
சத்யராஜ்: யோவ் ஆஃப் யா. இது தெரியாம ஃபுட்பால் மேட்சுக்கு வந்து ஏன்யா எளவெடுக்கற?
வடிவேலு: அட நாறப்பயலுவளா. பாதிமேட்சுல ஏன்யா ஆஃப் அடிச்சிட்டு இப்பிடி மாறி நிக்கிறது. ஆட்டதுல தோல்வி வெற்றில்லாம் சகஜம் தேன். ஆடி முடிச்சி தோத்தா துக்கத்துக்கு செயிச்சா சந்தோசத்துக்கு ஃபுல்லே அடிச்சிட்டு போக வேண்டியது தானே.
வடிவேலு:அய்யய்யய்ய. என்னய்யா அம்பயரா. ஏன்யா இப்படி என் உசுர வாங்கர. ஈரக்கொல தள்ள ஒடியாந்து பந்து போட்டன்ல. அவன் அடிச்சான்ல. நான் புடிச்சனா இல்லியா. நீயே அவுட் குடுக்கணும். நீ தரலன்னு நான் கேட்டா நோபாலுங்கற. இந்தா இருக்குய்யா பந்து. நான் போய் கடைல வாங்கிட்டா வந்தேன். அவுட்டு குடுய்யா.
அம்பயர்: யோவ். போட்றப்போ கால் கோட்டுக்கு வெளிய இருந்திச்சி. அவுட் இல்ல போய்யா.
வடிவேலு: அட கிறுக்குப்பயலே. அப்ப்டின்னா நோ கால்னு வெளங்கறாப்பல சொல்ல வேண்டியதுதானாய்யா என் வெண்ட்று. வெளங்கிக்கிறுவமா இல்லையா? நோபால்னு ஏன்யா குழப்பற?
வடிவேலு: நானும் பாக்கறேன். கப்பல் மாதிரி காருல வராய்ங்க. ஒண்ணுக்கு ஆறேழு மட்ட. அத தூக்க ஒரு ஆளு. ஒருத்தனும் அடிச்சமா குழிக்குள்ள போட்டமான்னு ஆடுறான்ல. மண்ணுல அடிக்கறதும், தண்ணில அடிக்கிறதும் அங்கங்க பொருக்கி பொருக்கி பத்து வாட்டி தட்டி பொந்துக்குள்ள போட்றதும். சாண் தூரத்துல இருக்கறத தள்ளி விட்றதுக்கு ஓணான் பிடிக்கிறவன் மாதிரி என்னா பிலிமு. அறுக்க மாட்டாதவன் இடுப்பில அம்பத்தெட்டு அறுவான்னு இதுக்கு ஆறேழு மட்ட வேற.
சத்தியராஜ்: யோவ் கோல்ஃப்னா என்னா தெரியுமாய்யா?
வடிவேலு:யாரு. எங்களயா கேக்குறிய. இதெல்லாம் நாம அரடவுசர் காலத்திலயே ஆடிட்டம்டி. இந்த மாதிரி புல்லு தரையெல்லாம் கிடையாது. ரோட்டுல கமர்கட் சைசுல கண்ணாடி குண்டு. உருட்டி விட்டு குழில விளுகலன்னா முழங்கைலயே தள்ளி தள்ளி போடணும்டியோ. ரத்தக்களறி ரணக்களரி ஆய்போகும். அவ்ளோ டஃபு. பட்டணத்துல மட்டய வெச்சி புல்லுல ஆடி புரியாத பேர வெச்சிட்டா? நம்ம கிட்டயேவா. அய்யோ. அய்ய்ய்ய்யோ.
வடிவேலு: நிப்பாட்டு நிப்பாட்டு. யோவ் நிப்பாட்ட சொல்லுய்யா மேச்ச. அழுவுணி ஆட்டம் ஆடப்பாக்கராய்ங்கப்பா.
சத்யராஜ்: யோவ். ஏன் கூவர. என்னாச்சி
வடிவேலு: என்னாச்சா. அங்க பாரு. பச்ச சட்ட போட்ட பந்து புடிக்கிறவன் அந்த பக்கம் தான நின்னான். சிவப்பு சட்ட காரன் இந்தா பீச்சாங்கை பக்கம். சாப்ட போயிட்டு வந்து இப்போ பாரு. அவன் நல்லா புடிக்கிறான்னு காச குடுத்து மாத்தி நிக்க வெச்சிட்டான் போல. விட்றுவமா?
சத்யராஜ்: யோவ் ஆஃப் யா. இது தெரியாம ஃபுட்பால் மேட்சுக்கு வந்து ஏன்யா எளவெடுக்கற?
வடிவேலு: அட நாறப்பயலுவளா. பாதிமேட்சுல ஏன்யா ஆஃப் அடிச்சிட்டு இப்பிடி மாறி நிக்கிறது. ஆட்டதுல தோல்வி வெற்றில்லாம் சகஜம் தேன். ஆடி முடிச்சி தோத்தா துக்கத்துக்கு செயிச்சா சந்தோசத்துக்கு ஃபுல்லே அடிச்சிட்டு போக வேண்டியது தானே.
5 comments:
பாலா சார்.. பேசாம நீங்க சினிமாக்கு காமெடி டயலாக் எழுத போகலாமே.. இல்லேன்னா விகடன்லயாவது எழுதலாமே.. இத பார்த்து யாராவது சான்ஸ் கொடுப்பாங்களான்னு ஒரு நப்பாசைதான் இல்ல?.. சரி சரி.. முயற்சி தொடரட்டும்.. நல்லாத்தான் எழுதுறீங்க..
நன்றி. வசிஷ்டர் வாயால்....
முடியல பாலா.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது :))) உக்காந்து யோசிப்பீங்களோ???
வாங்க கிருஷ்ணா..ஹி ஹி..நன்றி
Post a Comment