Friday, March 6, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 7

இலங்கைத் தமிழர் நலனுக்காக உண்ணா விரதம் --‍ ‍‍ ஜெ அறிவிப்பு!

அதானே. தேர்தல் மகிமையே மகிமை. அது சரி. அங்க இருக்கிற ஆளெல்லாம் ஈழத்தமிழர்னு சொன்னாலும் பிடிவாதமா இந்தம்மா இலங்கைத் தமிழர்னு தான் சொல்லும். நாள பின்ன ஈழத்தமிழருக்கு ஆதரவுன்னு கேஸ் வந்தாலும் எஸ்கேப். ஆமாம். சண்டன்னா சாவரது சகஜம்னு தான சொல்லிச்சி இந்தம்மா? அப்புறம் எதுக்கு இந்த வேல.

கலைஞர் ஓய்வு பெற வேண்டும் ‍ --‍ ஜெ

தோடா! எப்டியாவது முதலமைச்சர் ஆய்டணும். கலைக்கலாம்னா பா ஜ கவும் கை குடுக்கல. காங்கிரசுக்கு எதிர்காலம்னு மிரட்டல் விட்டாலும் கண்டுக்கல. அது சரி. இந்தமாக்கு ஓய்வு பெற வயசாகலையா?

இலங்கைத் தமிழருக்கு உதவ நிதி -‍ ஜெ

அய்யா திரட்டினா அமுக்கிட்டாருன்னு சொல்லிட்டீங்க. நீங்க என்னா பண்றிங்கன்னு எங்களுக்கு எப்படி தெரியுமுங்க. பக்சேட்ட குடுத்து குட்றான்னு சொல்லிடுங்க. இன்னும் கொஞசம் ஆயுதம் வாங்கி உதவுவாரு.

என்னை ஓய்வு பெற சொல்வதா -‍ ஜெவுக்கு கலைஞர் கண்டனம்.

அவங்க சொன்னா நாம கேட்ற போற‌மா? டென்ஷனாவாதீங்க தலைவரே.

13வது வயதிலிருந்து இன்று 85வது வயது வரையில் எழுதுகிறேன், எழுதுகிறேன் எழுதிக்கொண்டே இருக்கிறேன். ‍ -‍ கலைஞர்

அத்தனையும் காசு தலைவா. சும்மாவா மைக்கு வேஸ்டா? ஆனா மனோகரா வசனம் எப்பவோ எழுதினது. இப்ப உங்களுக்கு பொருந்துதுன்னு சீமான போட்டு கிராபிக்ஸ் போட்டிருக்காங்க. பார்த்து எழுதுங்க தலைவா.




இந்த "நீலி'' மேய்ச்சலுக்கு வரலாம் என்று கனவு காண்பதும் இரண்டுமே நடக்கவே நடக்காது. -‍ கலைஞர்

மாத்தி மாத்தி மேஞ்சிண்டு தான இருக்கிங்க. ஆமாங்க. இந்த வேலையே பயிர மேயரதுன்னு சொல்றது இதானாங்க.

திருமாவளவனை கைது செய்யாதது ஏன்? -‍ ஜெ கேள்வி.

நீங்க தானம்மா சொன்னீங்க. காவல் துறையை கட்டுப்படுத்த தெரியாத முதல்வர்னு. சொன்னா கேக்கவா போறாங்க. இவ்ளோ தகறாருக்கு காரணமான சுவாமியவே கைது பண்ணலயே. அத ஏன் கேக்க தோணாது.

பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் பற்றி பாரதியார் பாடி இருந்தால் எப்படி இருக்கும் -‍ வைகோ

என்ன அம்மாக்கு கோவம் வரும்னு அய்யா கைது பண்ணி இருப்பாரு. பண்ணலைன்னா பாரதியாரை ஏன் கைது செய்யலைன்னு அம்மா சவால் விட்டிருக்கும். அப்படி நிஜமா ஏக்கமா கேட்டிருந்தா தேனிசை செல்லப்பா பாட்டு மாதிரிதான் இருந்திருக்கும்.