Tuesday, March 24, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 15

சோனியா போட்டியிட தடை விதிக்க வேண்டும்:சு.சாமி

இவரு வாய தொறக்கவே தடை விதிக்க வேண்டும்.

அமைச்சர்கள் அன்புமணி, வேலு ராஜினாமா செய்யவில்லை: பாமக

அடுத்த மந்திரி வந்தப்புறமும் ப்ளீஸ் இன்னும் ஒரு நாளைக்கு இருந்துக்கறோம்னு கேக்காம இருந்தா சரி. யப்பா. உட்டா உதாரெல்லாம் என்னா?

உரிய அரசியல் பங்கு வழங்கும் கட்சியுடன் கூட்டணி: புதிய தமிழகம்

அட பாவிங்களா. இவ்ளோ ஓபனாவா கேப்பீங்க?

எதையும் எதிர்பார்த்து திமுகவுக்கு வரவில்லை: கண்ணப்பன்

எங்கப்பனும் குதிருக்குள்ள இல்லைங்ணா.

எம்ஜிஆரை தவிர எந்தவொரு நடிகரும் முதல்வராக முடியாது: அதிமுக

நடிகைதான் ஆக முடியுமா?

தமிழக மக்கள் கைகாட்டுபவர்களே ஆட்சி அமைக்க முடியும்: ப.சிதம்பரம்

ரொம்பதான்யா கொழுப்பு இந்தாளுக்கு. இளிச்சவாப் பயலுகனு எப்டி சொல்றாரு அய்யா.

ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற கலைஞர் முன்வர வேண்டும்: ராமதாஸ்

ஆமாம். இனிமேலாவது கழுத்தறுக்காம இருந்தா போரும்னு தான் எதிர்பார்க்கறாங்க.

புலிகளின் சகல போராளிகளூக்கும் மன்னிப்பு வழங்கப்படும்: கெஹலிய ரம்புக்வெல்ல

அட சீ போடா. உன்ன யாராவது கேட்டாங்களா? மாயவரம் ரெண்டு டிக்கட்னு கூவறாமாதிரி இருக்கு.

ம.தி.மு.க. என்றால் மறுபடியும் தி.மு.க.: கலைஞர்

தி மு க என்றால் திராவிடர்களை முட்டாளாக்கிய கட்சியா? பேராச போவுதா பாரு. டேக் ஓவர் பிட்டா நைனா. இல்ல வைகோவ உள்ள தள்ளி கட்சிய கபளீகரம் பண்ற ஐடியாவா.

காங். - லல்லுபிரசாத் கூட்டணி முறிந்தது

தில்லுபிரசாத்.

மன்மோகன்சிங் தான் மீண்டும் பிரதமர்: சோனியா

இதெல்லாம் ரொம்ப ஓவரு. சும்மாவே அந்தாளு பேச மாட்டாரு. இப்போ சர்ஜரி வேற. வாயே தொறக்காம இருக்க வேற ஆள் தேவையா?

காங்கிரஸ் கூட்டணிக்கு பா.ம.க. வரும்: தங்கபாலு

மருத்துவர் நாடி பிடிக்காம வைத்தியம் பார்க்க மாட்டாரு தொங்கு

மார்ச் 26ல் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி குறித்து அறிவிப்பு: செய்தி

பகுத்தறிவா. புடலங்காயா. தேர்தல்மா தேர்தல். நாளு, நட்சத்திரம், ஜாதகம் எல்லாம் பார்த்து நிறைஞ்ச அமாவாசைலதான் நடக்கும். கொள்ள அடிக்க புறப்பட்டா பவுர்ணமில பண்ணமுடியுமா?


4 comments:

கலகலப்ரியா said...

இந்த அரசியல்வாதிங்க நாற்றத்தில உலகமே நாறுது.. நாய்ப் பொழைப்பு பேய்ப் பொழைப்புன்னு என்னமோ சொல்லுவாங்க.. அதெல்லாம் இவங்க பொழைப்புக்கு முன்னாடி எவ்ளோ மேல்.. சை..

கிருஷ்ணா said...

//எம்ஜிஆரை தவிர எந்தவொரு நடிகரும் முதல்வராக முடியாது: அதிமுக//

தமிழ்நாட்டுல ஒரு ஹீரோ(எம்.ஜி.ஆர்), ஒரு கவர்ச்சிக்கன்னி (ஜெயலலிதா), ஒரு காமடியன் (கருணாநிதி) ஆட்சி செஞ்சாச்சு, இனி வில்லன்தான் பாக்கின்னு சொன்னாங்க. உண்மையா பாலா?

vasu balaji said...

ஆஹா..அப்படியா சேதி..இத நம்பிதான் ராதா ரவி இந்த பக்கம் தாவிச்சோ? ஆனா பாருங்க கருணாநிதி காமெடியன்னா நான் ஒத்துக்க மாட்டேன். நவரச திலகம்ல அவரு..முதுகு வலினு அழுவாச்சி, சொக்குவ சொன்னா கோவம், ஈழத் தமிழருக்கு வில்லன், காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கும்னு காமெடி, அம்மா திட்டுதுன்னு சோகம்..யாராவது ஈடு குடுக்க முடியுமா?

vasu balaji said...

//இந்த அரசியல்வாதிங்க நாற்றத்தில உலகமே நாறுது.. //
:((..பாருங்க அங்க வரைக்கும் நாறுது. நாம இதுக்குள்ளயே டெய்லி..மல்லிப்பூ வாசம் தலை நோவுதுன்னு கருவாட்டு கூட காரி தண்ணி தெளிச்ச கதை தான் நம்ம பொழப்பு..இந்த நாத்தம் இல்லாம நாளே போகாது நமக்கு.