Sunday, March 29, 2009

நறுக்குன்னு நாலுவார்த்த - 16

காங்.அரசின் சாதனைபுத்தகம்:வீடு, வீடாக வினியோகம்: செய்தி
இதிலயாவது பக்சே ஒத்துக்கறா மாதிரி செத்தவங்க, அடிபட்டவங்க எண்ணிக்கை இருக்கா? ரொம்பதாண்டா ஏத்தம் உங்களுக்கு. அங்கங்க துப்பறத தனியா சாதனை போடுவிங்களா?
_____________________________________________________________
லல்லுவைவிட மனைவி,பிள்ளைகளுக்கே அதிகசொத்து
தன்னலமில்லா தலைவன். நல்ல குடும்பத்தலைவன்.
_____________________________________________________________
மாத சம்பளம் ரூ.6,250 இருந்தால்போதும் நானோ கார் வாங்கலாம்
அது சரி. எவ்ளோ சம்பளமிருந்தா பெட்ரோல் வாங்கலாம். ____________________________________________________________
ஏப்ரல் 1 முதல் எந்த ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்
நல்ல நாள் பார்த்தாய்ங்கப்பு. ஆமாம். அக்கவுண்ட்ல பணம் இருக்கணுமில்ல?
______________________________________________________________
தமிழகத்தின் நவீன புத்தர் விஜயகாந்த்:திமுக கமெண்ட்
ஆமாம். ஸ்ரீலங்காவின் நவீன புத்தர் மகிந்தான்னு சொக்கு சொல்லிட்டாங்கல்ல. இவரு சொல்ல வேணாம்?
_____________________________________________________________
தனித்தும்,விழித்தும்,பசித்தும் இருக்கிறேன்:விஜயகாந்த்
முதல் ரெண்டு பிரச்ன இல்ல கேப்டன். எலக்ஷன் நேரத்தில மூணாவது இருக்கப்படாதே?
_____________________________________________________________
திமுகவுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆதரவு
அய்யோ தாங்க முடியல. கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டின்னு நிறைய பானை விற்கும்னு நினைச்சாங்களோ?
_____________________________________________________________
40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்: தங்கபாலு
கில்லாடிபா தொங்கு. தமிழ்நாட்டிலன்னு சொல்லல. இந்தியா முழுக்கன்னாலும் இது ஓவரு.
_____________________________________________________________
வருண் காந்தியை கைது செய்ய வேண்டும்: திருமா
கண்ணாடி வீடு. கல்லு. கவனமிருக்கட்டும். கூட்டணில இல்லன்னா கத வேற.
_____________________________________________________________
பிரபாகரனை ஆதரிக்கும் ராமதாஸ்-எதிர்க்கும் ஜெ.:கலைஞர்
உங்க கத என்னா? 50:50?
_____________________________________________________________
இலங்கை போர் பகுதியில் 2 லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்: ஐரோப்பிய மனித நேய ஆணையம்
இத சொல்றதுக்குதானா நீங்க? அதான் கத்துனமே. இவங்கள என்ன பண்ண உத்தேசம்?
____________________________________________________________
இலங்கை பிரசனைக்குஅமைதி வழியில்தீர்வு:அமெரிக்கா
சூபரப்பு. வாயே தொறக்காம இருந்தா மொத்தமா போய்ட்டா பயங்கரவாதம் ஒழிந்தது. இல்லாம தோக்குறா மாதிரி பக்சே இருந்தா ஜனநாயக முறையில் பேச்சு வார்த்தை. ஆமாம் இந்த இறையாண்மைல்லாம் கிடையாதா?
____________________________________________________________
ஈழஅவலம்: மக்களும் செத்துவிட்டார்கள் - மருந்துகளும் கெட்டுவிட்டது?
ஆஹா! அப்படிப்போகுதா கத. எப்படியும் சாவடிக்க போறது. இதுக்கெதுக்கு சாப்பாடு, மருந்தெல்லாம்னு விட்டதாக்கும். நல்லா இருங்கடா.
___________________________________________________________
திமுகவின் தலைவர் பதவிக்காக பேராசைப்பட்ட தம்பி:கலைஞர் கவிதை
இந்த சாக்குல ஸ்டாலினுக்கு தான்னு சொல்லிட்டியே தலிவா. உன்ன அடிச்சிக்க ஆளே கிடையாது.
____________________________________________________________
அரசியல் வியாபாரம் செய்கிறது பா.ம.க.: காங்கிரஸ்
அதெப்பிடி பண்ணலாம். ஏக போக உரிமை இவங்களுக்குதானே? மவனே ரிஸல்ட் வரட்டும்டி. பார்க்கதானே போறோம்.

6 comments:

பழமைபேசி said...

நறுக்குன்னு சொன்னது ’சுரு’க்குன்னு இருக்கு!!

கலகலப்ரியா said...

ஹ்ம்ம்.. வடிவேலுக்கு வசனம் எழுதுற மாதிரி யோசிங்க சார்.. இன்னும் பிரம்மாதமா வரும்.. சாரி.. நான் சுப்புடு பேத்தி.. நீங்க இன்னும் நல்லா ஒசரனும் (கிழிஞ்சது இதெல்லாம் இனி நடக்கற காரியமா..).. அதனால நம்ம விமர்சனத்த உங்க படிக்கல்லா பயன்படுத்திக்கோங்க.. (கல்லு மேல ஏறி நின்னா ஒசந்துடலாம்ல ஹிஹி..)

vasu balaji said...

அரசியல் வாதி காமெடிக்கு முன்னாடி வடிவேலெல்லாம் சரிவராது. சுப்புடு கிழிச்ச யாரும் சோடை போனதில்ல. அதுவே பாராட்டு. பேத்தின்னா இன்னும் கேக்கணுமா? ஏன் படிக்கல்லு. நம்ம ரேஞ்சுக்கு கல்லுல ஆஸ்கார்னு வெச்சிக்குவம்ல.

கிருஷ்ணா said...

//இலங்கை பிரசனைக்குஅமைதி வழியில்தீர்வு:அமெரிக்கா//

இதத்தான், எல்லாத் தமிழ் மக்களையும் இல்லாமல் செஞ்சுட்டா அமைதிதானேன்னு மகிந்தவும் சொல்லுறாரு..

vasu balaji said...

//இதத்தான், எல்லாத் தமிழ் மக்களையும் இல்லாமல் செஞ்சுட்டா அமைதிதானேன்னு மகிந்தவும் சொல்லுறாரு..//

இருக்கலாம். மொத்தமா தீத்துகட்டி மௌன அஞ்சலின்னு அமைதியா நிக்க சொல்றானோ. 9/11 ல போனவங்கதான் மனுசனுங்க. மத்ததெல்லாம் இவனுக்கு மனுசனாவே தெரியாது. பெட்ரோல் இருக்கற நாட்ட தவிர.

ஆ.ஞானசேகரன் said...

நச்சுன்னு....