Saturday, March 14, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 11

நலிவும் நானும்: கலைஞர் நாட்குறிப்பு

இது கடோசிக்கு அடுத்த சாதனபா. நோக்காட்ல போய் யார்னா இருமல் மருந்தில இருந்து இன்னான்னா இஞ்ஜிக்சன் போட்டாங்கோன்னு எய்தி வெச்சிகினு பேபர்ல போட்டுக்குறாங்களா. பார்டி படா உசாரு. டாக்டருங்க பேஜாரு.

இருமல் மருந்து கொடுத்தார்கள். அதையும் சாப்பிட்டேன்: அவரேதான்

ஆஸ்பத்திரில வேற இன்னாப்பா குடுப்பாங்க.

ஸ்டாலினிடம் நிதி நிலை அறிக்கையைக் கொடுத்து இதுவே என் கடைசி ஆவணவமாக இருக்கலாம் எனக் கூறினேன்: வேற யாரு. தலீவர்தான்

நாட்டு நிதி அறிக்கை தானே. பிரச்சன இல்ல. வீட்டுதுன்னா தான் வில்லங்கம்.

அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என்று கதறிவிட்டார்: தலீவர்

அது. எங்களுக்கே கடோசின்னா அப்பாலயும் இருக்கும்னு தெர்தே. அவருக்கு தெரியாம பூடுமா?

நான் உண்ணாவிரதம் இருந்ததை நகைச் சுவை என்று கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது: ஜெ

அனியாயமா தினம் குப்ப குப்பயா குஞ்சும் குளுவானுமோ சாவர்து இதுங்களுக்கு காமெடி, கூத்துன்னு கீதே. எங்க போய் அடிச்சிக்கிறது.

காமராஜர், ராஜாஜி, எம்.ஜி.ஆர்.-அந்த அரசியல் நாகரிகம் இப்போது இல்லை:கலைஞர்

தோடா. இவரு சொல்றாரு இத.(அண்ணாவ மறந்தே மறந்துட்டாங்கப்பா)

என் படத்தை எரிக்கிற அளவுக்கு என்ன வஞ்சனை செய்தேன்: கலைஞர் டைரி

படத்துக்கே இப்படி வேதனயா கீதே! பாஸ்பரஸ் குண்டுல எரிய குடுத்தவங்க கத என்னா?

பல மனைவிமார்கள்-எண்ணிலடங்கா குழந்தைகள்: கலைஞர் பற்றி ஜெ.கமெண்ட்

நாளைக்கு பதில் நாறபோவுது.

புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டு இரண்டு ராணுவம் அமைக்கலாம்: கோத்தபாய‌

ஆமாம். அவங்களுது பாதி. இவனுங்கோ போய் போய் குட்துட்டு துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடியாந்தது மீதி

இழப்புகள் குறித்து ஃபொன்சேகாவிடம் மகிந்தா கேள்வி

ஜனாதிபதிக்கே காது குத்திட்டானா அந்தாளு.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் தேதிமுக?

கல்யாண மண்டபத்துல மேம்பாலம் கட்டினதெல்லாம் மறந்துட்டாரா கேப்டன். கவனிச்சிட்டாங்களா?

2 comments:

பழமைபேசி said...

//நாளைக்கு பதில் நாறபோவுது.//

உங்களோட நாளைய எள்ளலுக்கு காத்திருக்கிறேன்... இஃகிஃகி!

கலகலப்ரியா said...

விடுங்க சார்.. பாவம் ஒண்ணும் புரியல போல கலைஞர் ஐயாவுக்கு.. எப்டிதான் இவ்ளோ நாள் இந்த அரசியல்ல குப்பை கொட்டினாங்களோ தெரியல..!
ஐயா கலைஞர் அவர்களே.. , தங்கம் விலை எகிறிண்டிருக்கிற நேரத்ல.. சோனியா சொக்கத் தங்கம் நு சொல்லி.. தங்கத்த மலிவாக்கிட்டிங்களே, இதுக்கு மகா ஜனங்க நன்றிதான் சொல்லணும், ஏன் படத்த எரிக்கறாங்க? அவங்க தங்க வியாபாரிங்களா இருப்பாங்களோ? யோசிங்க.. கவலை படாதீங்கோ.. நம்மளால உங்கள தூக்கி எறிஞ்சு பேச முடியல.. ஒண்ணு நிஜம்மாவே இந்த மனுஷன் மண்டைய கிண்டைய போட்டா குத்த உணர்வு ஒண்ணு வரும் அப்டிங்கிற பயம்.. மத்தது நாம தூக்கி எறிஞ்சுதான் நீங்க போய்ட்டிங்கன்னு ஆய்டப்டாதில்ல.. ச்சே.. மனுஷனா பிறந்தா எத்தனைய யோசிக்க வேண்டி இருக்கு.. ஹ்ம்ம்..:(