வடிவேலு: அய்யோ! நான் என்ன பண்ணுவேன். என்ன பண்ணுவேன். ஓட்ட பிரிச்சிரிவாய்ங்க உசாரா இருங்கன்னு ஓட்டுமேல உக்காந்து சொன்னேனே. கேட்டியளா. எத்தன பேருகிட்ட அடிய வாங்கி உதய வாங்கி அங்க இங்க கடிய வாங்கி நண்டு சிண்டுகிட்டல்லாம் நாறிபோன நானு இந்தாளுக்கு பயந்து ஓட்டுமேல உக்காந்தப்ப யோசிக்க வேணாமா. காமெடியன் சொல்றான்னு கண்டுக்காம கேப்டன விட்டுட்டிங்களே. மதுரக்காரன அந்தூருக்காரனுக்கு தான தெரியும். அத்தன பேரும் வெள்ளந்தியா இருந்துட்டாய்ங்களே.
தலிவர்: மன்னிச்சிக்கப்பா..
வடிவேலு: அய்யா.அய்யா. அந்த வார்த்தைய சொல்லிறாதிங்க. அந்தாளுக்கு அந்த வார்த்தய பிடிக்காது. நாள பின்ன வெளீய இருந்து தர ஆதரவும் தரமாட்டாருய்யா..
வடிவேலு: ஹூம். என்னா முத்துக்காள. சோகமா உக்காந்திருக்க. எலக்சன் வேற வருது. தெம்பா இருக்க வேணாமா. ஓடி ஆடி இருந்தா நாலு காசு பார்க்கலாமில்ல
முத்துக்காள: அட போண்ண. உங்கிட்ட வாங்கின காசுக்கு உன் சின்னத்துல ஒரு குத்து, அவன் குடுத்த காசுக்கு அவன் சின்னத்துல ஒரு குத்துன்னு வஞ்சன இல்லாம வளர்ந்தவண்ண நானு.இப்போ போய் மிசின கொண்டு வந்து வெச்சி ஒரு வாட்டிதான் அமுக்க முடியும்னா வாழ்ந்து என்னா பண்ண?
வடிவேலு: ய்ய்ய்ய்யூ யூப்லடிஃபூலாபனிடயடாபனேஸ்.
பார்த்திபன்: ஏய். இங்கவா. என்னா சொன்ன திருப்பி சொல்லு
வடிவேலு:என்னாது? திருப்பி சொல்லவா. இது நீ சொன்னா மாதிரி திருப்பி சொல்ல தமிழில்ல. இங்கிலீசு.
பார்த்திபன்: நீ அப்படி திருப்பி சொல்ல வேணாம். சொன்னத அப்டியே திரும்ப சொல்லு.
வடிவேலு: தம்பி. அர்சன்டா ஒரு வேல இருக்கு. நீ இங்கயே இரு. வந்து சொல்றேன். வர்ட்டா.
பார்த்திபன்: இப்ப சொல்றியா. உன் மச்சான கூப்டவா.
வடிவேலு: ஏன்யா ஏன். ஏன் என் உசிர எடுக்கற. எந்தப் படத்துல எப்ப சொல்ல சொல்லுவாய்ங்கன்னு தெரியாம சும்மா இருக்கற நேரமெல்லாம் சொல்லி சொல்லிப் பார்த்துக்கிருக்கேன். டக்னு சொல்லுன்னா எப்டி சொல்றது.
சத்யராஜ்: வடிவேலு. இப்பவே சொல்லிட்டேன். டென்னிஸ் மேட்ச்ல வந்து கூப்பாடு போட்டா வெளிய இளுத்து விட்றுவாங்க. பொத்திக்கிட்டு மேட்ச பாரு.
வடிவேலு: ப்ஸ்ட். அண்ணே. காத கொண்டு வாங்க. கத்தாம சொல்லுறேன்.
சத்யராஜ்: என்னாடா
வடிவேலு:அந்த வெள்ளக்கார சிறுக்கிய பார்த்தியா. உசரக்க உக்காந்து என்னா வேல பண்ணுறா. ஆடிகிருக்காய்ன்ல அந்தால உசரக்க ஒரு நெட்டயன். அவன்மேல அவளுக்கு லவ்வு போல. 15, 30னு சொல்லிட்டு கூச்சமில்லாம லவ்வுங்குது. இந்தக் கேனச் சிறுக்கன் அது புரியாம ஆடிக்கிட்டே இருக்கான்.
வடிவேலு:அடப்பாவி. இத்தன பேர இளிச்சவாப் பயலாக்கிட்டாண்ணே இந்த பார்த்திபன்.
சத்யராஜ்:என்னாடா உளர்ற
வடிவேலு:நானா உளர்றேன். அந்த பாவி பஸ்ல என்ட சொன்னா மாதிரி ப்ளேன்ல டிக்கட் வாங்கலைன்னா பாதிலஇறக்கி விடமாட்டாங்கன்னு கொள்ள பேத்துகிட்ட சொல்லி ஏமாத்திருக்கான் போல. பரதேசி பயபுள்ளய நம்பி ப்ளேன்ல ஏறிட்டு இப்போ பாரு. அம்புட்டு பயலயும் பாதில இறக்கி விட்டுக்கிருக்காய்ன்
சத்யராஜ்: அட நாசமா போனவனே. இது பாரா ஜம்பிங்டா.
4 comments:
super jokes
நைஸ் ...
இரசிக்கும்படி இருந்தன ...
பாலாண்ணே, கலந்து கட்டியிருக்கீங்க போல இருக்கு!
வாங்க பழமை..இஃகிஃகி
Post a Comment