Wednesday, March 18, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 14

இந்திராகாந்தி வழங்கிய ஆயுதங்கள்தான் விடுதலைப் புலிகளிடம் உள்ளது: பழ.நெடுமாறன்

அவ்வளவு பழச வெச்சா இந்த போடு போடுறாங்க. என்னன்னாலும் அந்த காலத்து தரமே வேற. நாள்பட்டு உழைக்கும் போல. அது ஆயுதம்னாலும்.

இந்தியாவின் உதவியால் புலிகளை வென்றோம்: இலங்கை அமைச்சர்

இப்படியா போட்டு குடுப்பானுங்க தேர்தல் சமயத்துல. இங்க இல்லவே இல்லைங்கராங்க ராசா.

போர் நிறுத்தத்தை நிராகரித்தது இலங்கை அரசு

போராத காலம் வந்தா புடனில அறைஞ்சாலும் உறைக்காது.

இலங்கை ராணுவ தாக்குதல்: நிறைமாத கர்ப்பிணியும், சிசுவும் துடிதுடித்து இறந்துள்ளனர். : செய்தி

ஐ நா ஆழ்ந்த கவலையுடன் கவனிச்சிக்கிட்டு தான் இருக்கு. என்னைக்காவது என்னன்னு கேக்காம போய்டுமா?

தேர்தலில் புதியவர்களுக்கே அதிகம் வாய்ப்பு:கலைஞர்

நாடாளுமன்ற தேர்தல் தானே. குடுக்கலாம்.

பகுத்தறிவாளர்கள் முக்கண்ணை நம்புவது இல்லை. பாவம் பகுத்தறிவு: ஜெ.வுக்கு கலைஞர் பதில்

அப்போ அன்னைக்கு அரசியல் பண்புக்கு விட்ட அறிக்கைல எம்.ஜி.ஆர் உடல் நலமடைய பிரார்த்தித்தேன்னு சொன்னது பொய்யா?

முதல்வரின் அறிக்கைகளிலே அந்த அம்மை யாரைஇப்படிப்பட்ட வார்த்தைகளால் எப்போதாவது வர்ணித்திருக்கிறாரா என்பதை நீங்களே கூறுங்கள்: ஆற்காடு வீராசாமி

முதல்வரா இல்லாதப்பொ சொன்னாங்களோ என்னாமோ. ஆமா. எடுபிடின்னு சொன்னாங்கன்னு எகிறிட்டு அவர சொன்னதுக்கு இவர் ஏன் பதில் சொல்றாரு?

உண்மையை மக்களுக்கு தெரிவிப்பது எனதுகடமை:ஜெ

நம்பிட்டோம்ல.

யாருடைய ஜாதகம் பிரகாசமாக இருக்கிறதோ அவர்களையே வேட்பாளராக அறிவிக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது: செய்தி

ஜோஸ்யக்காரங்களுக்கு அடிச்சது யோகம். ஆர்வக்கோளாரில கட்சித்தலைமை பதவி யோகம் வரா மாதிரி எழுதிட போறாங்கண்ணோவ். ஆப்புதான்.

No comments: