Saturday, July 17, 2010

அலெக்சா ரேட்டிங்கும் அல்லக்கைகளும்.

பதிவுலகம் நம்மில் பலருக்கும் ஒரு குறிப்பாக, நம் சிந்தனையைப் பகிரும் தளமாக, பொழுது போக்காக அமைகிறது. என்னதான் அறச்சீற்றம், சமூக சிந்தனை என்று எழுதினாலும், உண்மையில் அனைவருக்கும் பயன்படும் விதம் இந்த ஊடகத்தைப் பயன்படுத்துபவர்கள் வெகுசிலரே. அதிலும், பதிவர்களுக்கு மட்டுமன்றி, கணினி பயன்படுத்துவோருக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கும், பயன்பாட்டுக்கும் உதவும் இடுகைகளை மட்டுமே வெளியிடுவோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இதற்குப் பின்னான உழைப்பு நமக்குத் தெரிவதில்லை. தன்னுடைய நாளாந்த வேலைகளிடையே தேனீ மாதிரி தேடித்தேடி நமக்குத் தரும் இடுகைகள் அடுத்த சில நிமிடங்களில் வேறொரு பதிவரின் தளத்தில் தன் சொந்த இடுகையாக வெளிவரும் அவலமும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. 

திரு சூர்யாகண்ணனின் கணினி பயன்பாட்டு இடுகைகளைப் படித்து பயன் பெற்றவர்கள் ஏராளம். அவரின் இடுகைகள் காபி பேஸ்ட் செய்யப்பட்டதுடன், தினத்தந்தியில் அவருக்குத் தெரியாமலே யாரோ அனுப்பியிருந்த அவலமும் கூட நடந்தது. இத்தனையும் மீறி, அவர் தளராமல் இடுகைகளைப் பகிர்ந்து வந்திருக்கிறார். அலெக்ஸா ராங்கிங்கில் வெகு விரைவில் ஒரு லட்சம் இலக்கை அடைய சமீபித்திருக்கும் நேரம் இது. 92237 என்பது ஒன்றே போதும் இதன் பின்னான உழைப்பைக் கூற.

அடுத்தவர் உழைப்பைச் சுரண்டுவது வேறு. அதன் பலனை அழிப்பது என்ன ஒரு நீச்சத்தனம். 

மின்னஞ்சல் என்பதும் நம் அனைவருக்கும் உயிர்நாடி போல் ஆகிவிட்டது. இன்று காலை சூர்யாவிடமிருந்து வந்த மெயில் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. ஆம். அவரின் பதிவு மட்டுமல்ல, ஜிமெயில்,யாஹூ,ரிடிஃப் மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் அத்தனையும் களவாடப்பட்டிருக்கலாம் என்று மெயில் செய்தார். 

அவருடைய இமெயில் முகவரிக்கு மெயில் செய்தால் அத்தகைய பயனர் கணக்கில்லை என்று திரும்புகிறது. இது குறித்து யாராவது விடயமறிந்தவர்கள் உதவுங்களேன். திரு உண்மைத்தமிழனின் பதிவு முடக்கப்பட்டு பிறகு கிடைத்தது போல் இதுவும் கிடைத்தால் பயன் பெறப்போவது நாம்தான். அதிலும் சூர்யாகண்ணனின் மின்னஞ்சல் மிக முக்கியமானதாகும். அவருடைய பல தகவல்கள் அதில்தான் இருப்பதாகக் கூறுகிறார். 

இத்தனை அதிர்ச்சியிலும் தன்னுடைய பேக்-அப்பிலிருந்து கணினி சம்பந்தமான இடுகைகளைப் பகிர http://sooryakannan.blogspot.com/ இந்த வலைத்தளத்தை தொடங்கியிருக்கிறார். 

இத்தருணத்தில், அவருக்கு உதவுவது நம் கடமை. இழந்த அவரது கணக்குகளை மீளப்பெற உதவக்கூடியவர்கள் வழிமுறையையோ, தொடர்பு கொள்ளவேண்டிய தகவலை கொடுங்களேன். 

மற்ற பதிவர்களும், இந்த இடுகையின் சுட்டியையோ இது குறித்தோ தன் பதிவில் குறிப்பது பலரையும் சென்றடைவதன் மூலம் சூர்யாவுக்கு உதவமுடியும்.


62 comments:

கலகலப்ரியா said...

அந்த நாதாரி... சோமாறி... நாயீ... நாசமா போவட்டு...

ராம்ஜி_யாஹூ said...

These hacking, jacking all have been happening since 1998. We should have one mail id, bloger id, twitter id for social networking and one personal email id (with strong passowrd) for personal purpose.

கலகலப்ரியா said...

ம்க்கும்.. நடந்ததுக்கு தீர்வு சொல்லுங்கையான்னா... ஹிஸ்டரி படிக்கறாய்ங்க...

Subankan said...

எனக்குத் தெரிந்த வேறு சில பதிவர்களின் கணக்குகளும் இவ்வாறு இழக்க‍ப்ப‍ட்டிருக்கின்றன• சம்பந்தப்ப‍ட்ட‍ தளங்களில் இதுகுறித்து முறையிடலாம். ஹக் செய்தவர் அடிப்ப‍டைத் தகவல்களை மாற்றாதவிடத்து மீழப்பெறலாம். மாற்ற‍ப்ப‍ட்டுவிட்டால் மீழப்பெறுவதற்கான சாத்தியம் குறைவே . எதற்கும் அந்தந்த்த் தளங்களிலுள்ள‍ முறையிடும் பக்க‍ங்களில் முயற்சித்துப் பார்க்க‍ச்சொல்லுங்கள் :(

சி.பி.செந்தில்குமார் said...

இது ஒரு முக்கியமான பிரச்சனை.இதற்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டும்

நேசமித்ரன் said...

பாலா சார்

http://www.google.com/support/accounts/bin/answer.py?hl=en&answer=27444

என் ப்ளாக்கும் ஜீமெயில் அக்கவுண்டும் ஹாக் செய்யப்பட்ட போது மேற்கண்ட சுட்டியின் வழியே அடைந்தேன்

நமது மொபைல் நம்பருக்கு அவர்கள் அனுப்பும் கோட் எண்ணைக் கொண்டு மீட்டெடுக்கலாம்

இந்த தகவல் உதவுமா என்று பாருங்கள்

நேசமித்ரன் said...

http://www.google.com/support/accounts/bin/answer.py?hl=en&answer=148360

இந்த சுட்டி பயனளிக்காவிடில்

https://www.google.com/accounts/ForgotPasswd?fpOnly=1

http://www.google.com/support/accounts/bin/request.py?ara=1

இவைகளை முயற்சிக்கலாம்

உண்மைத்தமிழன் said...

பாஸ்வேர்டில் எண்களை சேர்த்து வைத்து கடினமாக்கி வைத்துக் கொள்வதுதான் இந்தக் கொடுமையில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி..!

நண்பர் சூர்யாகண்ணனின் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.. அதே நேரத்தில் உடனுக்குடன் புதிய தளத்தை உருவாக்கியிருக்கும் அவரது செயல் வேகத்தையும் பாராட்டுகிறேன்..!

நேசமித்ரனின் தகவல் முக்கியமானது..!

vasu balaji said...

Thank you nesamithran

பொன் மாலை பொழுது said...

நண்பர் சூர்யா கண்ணனின் வாசகர்களில் நானும் ஒருவன்.
ஆனால் அவரிடமிருந்து அவரின் ஆக்கங்கள் திருடப்படுவது வருத்தமளிக்கிறது..
பதிவுகளை வேறு எவரும் கலவாடாதவாறு செய்ய இயலாதா?
பெரும்பாலும் ID அனைத்தும் proper noun இல் அமைத்துக்கொள்வதும் அவ்வப்போது மாற்றிகொள்வதும்
பாதுகாப்பானது.

பிரபாகர் said...

படித்து அதிர்ச்சியாருக்கிறது, இப்படியெல்லாம் செய்வார்களா என! விரைவில் நண்பருக்கு எல்லாம் திரும்பக் கிடைக்க வேண்டுகிறேன்...

பிரபாகர்...

சிநேகிதன் அக்பர் said...

இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனை இதுதான்.

அவருடைய பதிவு உண்மையிலேயே அனைவருக்கும் பயனளித்தது.

விரைவில் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இது வருந்ததக்க சம்பவம்.. ஏன் இந்தமாதிரியெல்லாம்?.. அவங்களுக்கு மனசாட்சியே கிடையாதா..

நண்பர் சூர்யாக்கண்ணனுக்கு, வருத்தப்படாதீர்கள் கண்ணன்.. நிலமை சரியாகிடும்.

Ramesh said...

இந்தக் கொடுமை அங்கேயுமா... ஏதோ தான் ஒரு பெரியவர்(இதுல என்ன சந்தோசமோ) என்ற நெனெப்பு இப்படி ஹெக் பண்ணிறதால என்ன இலாபம்.. இந்த விடயத்தை பகிர்ந்தமைக்கு நன்றிங்கையா. முடிந்தவர்கள் உதவுவார்கள். செய்தவர்கள் குற்றத்துக்காய் வெட்கப்பட்டாவது திருப்பித் தருவார்கள்

பின்னோக்கி said...

ரொம்ப பிரயோஜனமா எழுதுறவரு சூர்யா. சீக்கிரம் அவருடைய அக்கவுண்ட் கிடைக்க வேண்டும்

Ahamed irshad said...

நல்லது செஞ்சாலே விடமாட்டாங்களே..

மாதத்திற்கு ஒருமுறை கட்டாயமாக கடவுச்சொல்லை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சமீபத்தில் ஒரு வலைப்பூவில் படித்தேன்.. நானும் அதையேதான் பின்பற்றுகிறேன். என்ன பன்றது கண்ணாம்பூச்சி ஆட்டத்துக்கு ஒவ்வொரு இடமாத்தான் மாற வேண்டி இருக்கு இல்லாவிட்டால் இன்று சூர்யா நாளை நாம்ளாக்கூட இருக்கலாம்..

Ahamed irshad said...

உங்கள் ஆக்கங்கள் யாரால் திருடப்பட்டிருக்கிறது என்று அறிய இத்தளத்தில் உங்கள் வலை முகவரியை கொடுத்தால் உடனே சொல்லி விடுகிறது..

http://www.copyscape.com/

செ.சரவணக்குமார் said...

அதிர்ச்சியாக இருக்கிறது பாலா சார். பதிவுகளை பேக் அப் எடுத்துக்கொள்வதன் அவசியம் பற்றி சூர்யா கண்ணன் அவர்களின் வழிகாட்டுதலில் நீங்கள் ஒரு இடுகை எழுதியிருந்ததாக நினைவு. அவரது பதிவே களவாடப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

நண்பர் நேசமித்ரன் சொன்ன வழியைப் பின்பற்றலாம் என நினைக்கிறேன்.

கவலைப்படாதீர்கள் சூர்யா கண்ணன் சார். விரைவில் மீட்டெடுப்பீர்கள்.

Prathap Kumar S. said...

எல்லாம் வயற்றெரிச்சல் கேசுங்க பண்ற வேலை... இதை திரும்பப்பெறலாம்....கம்ம்யுட்டர் சாமியாடிகள் (ஐடி ஆசாமிகள்) தான் உதவமுடியும்...

நசரேயன் said...

கூகுளே ஆண்டவரிடம் முறையிடலாம்

ஜில்தண்ணி said...

தங்களை அதிபுத்திசாலிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஹேக்கர்கள் ஒழிக்க முடியாத கொசுக்கள் போல் ஆகிவிட்டனர் ???

:(

இவனுவோல எதாச்சும் செய்தாக வேண்டும்

ஜில்தண்ணி said...

தங்களை அதிபுத்திசாலிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஹேக்கர்கள் ஒழிக்க முடியாத கொசுக்கள் போல் ஆகிவிட்டனர் ???

:(

இவனுவோல எதாச்சும் செய்தாக வேண்டும்

உமர் | Umar said...

நேசமித்திரன் கொடுத்திருக்கும் கடைசி சுட்டியில் சென்று, gmail உருவாக்கிய தேதியை கொடுத்து, அக்கவுண்டைத் திரும்பப் பெறலாம்.

Gmail பயனர்கள் தங்களது கணக்கு உருவாக்கிய தேதியை குறித்து வைத்துக் கொள்வது, இதுபோன்ற நேரங்களில் உதவும்.

நமது ஈமெயில் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க மேலும் சில பயனுள்ள வழிமுறைகள்.

Unknown said...

எத்தனை பேருக்கு மன வருத்தங்களை ஏற்படுத்தியிருக்கிறான் ஒருவன்.. மிகுந்த வருத்தமாக இருக்கிறது..

நாம் மிகுந்த பாதுகாப்பினை ஏற்படித்திக்கொள்ள இது ஒரு எச்சரிக்கை பதிவு...

பழமைபேசி said...

//"அலெக்சா ரேட்டிங்கும் அல்லக்கைகளும்.//


முதலாளித்துவம் பரவியுள்ள இந்த சமூகத்தில், சந்தைக்கு செல்லும் பெரும் முதலாளிமார்கள் ஒரு சரக்கை ( சாராயம் அல்ல) தகுதி ஆராய எடுத்து பார்க்க வேண்டி வரும், அந்த வேளையில் குனிந்து சரக்கு எடுக்க முடியாது, அதற்கு அவர்களின் தொப்பையும் இடம் கொடுக்காது, அவர்களின் கையும் அழுக்கு ஆகிறும், மேலும் அவர்களின் பை திருட்டு போகும் வாய்ப்பும் அதிகம் அதனாலே அவங்க தங்களோட ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போவாங்க, அவர் அவர் கையாலே அள்ளி முதலாளியிடம் கான்பிபார்கள். அவர்களே பின்னாளில் அள்ளக்கை என்று அழைக்க பட்டார்கள்.


http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

Anonymous said...

இனிமேல் அப்படி நடக்கக்கூடாது. போலீசில் புகார் கொடுக்க சொல்லுங்கள்.

Anonymous said...

ரயில்வேயிலேயா இருக்கிறீர்கள்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவலைப்படாதீர்கள் சூர்யா கண்ணன் விரைவில் மீட்டெடுப்பீர்கள்.

movithan said...

ஒரு திறமையான தமிழ் வலைப்பதிவாளருக்கு ஏற்ப்படுத்தப்பட்ட அநீதி ,மிகவும் கவலை அழிக்கிறது .
வாசிக்கசாலையில் உள்ள பலர்பயன்படுத்தும் புத்தகத்தை திருடியதை ஒத்த செயல்.

ஐயா,இந்த தகவலை பலர் அறியச்செய்த உங்கள் பதிவுக்கு நன்றி.

நாடோடி said...

இந்த‌ கேவ‌ல‌மான‌ வேலையை செய்ப‌வ‌ர்க‌ள் திருந்த‌ மாட்டார்க‌ளா?... க‌ண்டிப்பாக‌ அவ‌ருக்கு திரும்ப‌ கிடைக்கும்.

irnewshari said...

Shri. Surya Kannan must lodge a complaint with cyber crime and put pressure to ensure that guilty is punished. This is essential to ensure that such incidents do not recur again.

Unknown said...

கவலைப்படாதீர்கள் சூர்யா கண்ணன் சார். விரைவில் மீட்டெடுப்பீர்கள்.

Thomas Ruban said...

ஒரு திறமையான நல்ல தொழில்நுட்பம் தெரிந்தவர்க்கே இந்த கதி என்றால் மற்றவர்கள் கதி? நண்பர் சூர்யாகண்ணன் இந்த பிரச்சினையில் இருந்து வெகு விரைவிலேயே வெளிவருவார் என நம்புகிறேன்.

பகிர்வுக்கு நன்றி சார்.

காமராஜ் said...

என்ன கொடுமை இப்படியும் கூட நடக்குமா ? இதென்ன ருசி பாலாண்ணா?.

Jackiesekar said...

நிறைய சைக்கோ இருக்கறானுங்க சார்...இது கொடுமை..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிகவும் வருத்தமாக உள்ளது ...............
தொழில்நுட்ப பதிவருக்கே இப்படியா

Paleo God said...

வழி எனக்குத் தெரியாது சார்.

இதிலிருந்து மீண்டு வந்து சூர்யாகண்ணன் இது போல் நடக்காமலிருக்க நமக்காக ஒரு இடுகை எழுதுவார் என்று நம்புகிறேன்.

Radhakrishnan said...

அதிர்ச்சி அளிக்கிறது. :(

'பரிவை' சே.குமார் said...

படித்து அதிர்ச்சியாருக்கிறது, இப்படியெல்லாம் செய்வார்களா..?

விரைவில் நண்பருக்கு எல்லாம் திரும்பக் கிடைக்க வேண்டுகிறேன்...

அன்புடன் நான் said...

சூர்ய கன்ணனுக்கே இந்த பிரட்சனையா?
பலருக்கு உதவியாக இருந்தவர்.... திரும்ப கிடைக்கும் நப்புவோம்.... ஏதாவது வழிகிடைக்கும்

வணக்கமைய்யா.

Bruno said...

//அலெக்ஸா ராங்கிங்கில் வெகு விரைவில் ஒரு லட்சம் இலக்கை அடைய சமீபித்திருக்கும் நேரம் இது. 92237 என்பது ஒன்றே போதும்//

புரியவில்லை

விளக்க முடியுமா

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இந்த விஷயத்திற்கு ஒரு இடுகை இடும் போது அதற்கு வரும் பின்னூட்டங்களால் பலரும் பயனடைகின்றனர். இப்படி சிலர் இருக்கும் உலகத்தில் தான் அப்படி சிலர். வருத்தப்பட வேண்டிய விஷயம்

ராஜ நடராஜன் said...

//முதலாளித்துவம் பரவியுள்ள இந்த சமூகத்தில், சந்தைக்கு செல்லும் பெரும் முதலாளிமார்கள் ஒரு சரக்கை ( சாராயம் அல்ல) தகுதி ஆராய எடுத்து பார்க்க வேண்டி வரும், அந்த வேளையில் குனிந்து சரக்கு எடுக்க முடியாது, அதற்கு அவர்களின் தொப்பையும் இடம் கொடுக்காது, அவர்களின் கையும் அழுக்கு ஆகிறும், மேலும் அவர்களின் பை திருட்டு போகும் வாய்ப்பும் அதிகம் அதனாலே அவங்க தங்களோட ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போவாங்க, அவர் அவர் கையாலே அள்ளி முதலாளியிடம் கான்பிபார்கள். அவர்களே பின்னாளில் அள்ளக்கை என்று அழைக்க பட்டார்கள்.//

இதென்ன புதுக்கதை?அல்லக்கை என்பதே சரி.நம்ம ஊரு அரசியல்வாதிக்கு கூஜா தூக்குவதால் வந்த காரணப்பெயர்.ஐடி தொப்பையெல்லாம் இப்ப வந்த ஜுஜுபி:)

பாதிக்கப்பட்ட பதிவர்களுக்காக வருந்துகிறேன்.

தேவன் மாயம் said...

இது மிகக் கொடுமை!! அவர் கணக்கை மீட்டெடுக்க முடியும் என நம்புகிறேன்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்ன கொடுமை இது?
பிக்-பாக்கெட் திருடர்களுக்கும் இந்த ஹாக்கர்ஸ்களுக்கும் வித்யாசம் ரொம்ப இல்லை! திரு சூர்யாகண்ணன் இழந்ததை மீட்க இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்!!!

நீச்சல்காரன் said...

அதிர்ச்சியான தகவல். கூகிள் தவிர இதர சேவைகளான டிவிட்டர்,யாஹூ,ரீடிப்ம் ஹக் செய்யப்பட்டிருப்பதால் இது திட்டமிட்ட செயலாக இருக்கும் முடிந்தால் சட்ட ரீதியான நடவடிக்க எடுக்க வேண்டும்.

தாமதிக்காமல் இங்கே முயலுங்கள்
டிவிட்டர் மீட்க: http://support.twitter.com/articles/185703-my-account-is-compromised-hacked-and-i-can-t-log-in
யாஹூ மீட்க: https://edit.yahoo.com/forgotroot
ரீடிப் மீட்க: http://login.rediff.com/cgi-bin/subs/passwd_remind.cgi?FormName=showlogin

Thamira said...

இது போன்ற அநீதிகள் சிறிது நாட்களுக்கு ஒரு முறை அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. வருத்தத்தையும், பயத்தையும் தருவது இது. டெக்னிகல் புலிகள் உதவுவார்கள் என நம்புகிறேன்.

சௌந்தர் said...

அதிர்ச்சி தருகிறது

Thenammai Lakshmanan said...

ஐயோ என்ன கொடுமை இது..பாலா சார்.. சீகிரம் ப்லாகர் பாக் அப் எடுத்து வைக்கணும்..

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு உரிய ஆதாரங்களுடன் திரும்பத் திரும்ப கடிதம் அனுப்பச் சொல்லுங்கள்.

நான் இவ்வாறு மீளப் பெற்றிருக்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

my blog

http://www.vayalaan.blogspot.com

நிஜாம் கான் said...

அண்ணே! நான் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஜிமெயில், பிளாக்கர் வகையறாவில் ஏதோ கோளாறு என்று. ஒருவேளை அப்படியும் ஆகியிருக்கலாம். அதல்லாமல் யாரும் இதை தவறாக பயன்படுத்தி இருந்தால் மிகவும் கண்டிக்கத்தக்கது. அண்ணன் சூரியா கண்ணனின் பதிவுகள் உண்மையிலே கணினி கல்வெட்டுக்கள். திரும்பக் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

Anonymous said...

பாலா சாருக்கும், ஆறுதல் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!.

உங்கள் மேலான ஆதரவோடு எனது புதிய அத்தியாயத்தை துவங்குகிறேன்.

அன்புடன்
சூர்யா கண்ணன்

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி. பலருக்கும் பயன் தரும் விதத்தில் வழிகாட்டிய நேசமித்திரன்,இர்ஷாத்,கும்மி, நீச்சல்காரன் ஆகியோருக்கு பதிவர்கள் அனைவர் சார்பிலும் நன்றி.

vasu balaji said...

புருனோ Bruno said...
//அலெக்ஸா ராங்கிங்கில் வெகு விரைவில் ஒரு லட்சம் இலக்கை அடைய சமீபித்திருக்கும் நேரம் இது. 92237 என்பது ஒன்றே போதும்//

புரியவில்லை

விளக்க முடியுமா//

தவறு என்னுடையது டாக்டர். சூர்யா ஒருலட்சத்தைக் கடந்து 92237 இலக்கை அடைந்துவிட்டார். அலெக்ஸா ரேங்கில் ஒரு தனிநபருக்கு இது சாதனை.

.

vasu balaji said...

Suryakannan said...
பாலா சாருக்கும், ஆறுதல் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!.

உங்கள் மேலான ஆதரவோடு எனது புதிய அத்தியாயத்தை துவங்குகிறேன்.

அன்புடன்
சூர்யா கண்ணன்//

நாங்கள் உங்களுடன் சூர்யா. பாராட்டுகள். முயற்சியைக் கைவிடவேண்டாம். நிச்சயம் திரும்பக் கிட்டும். உழைப்பல்லவா?

vasu balaji said...

இந்த தலாவோட கடமை உணர்ச்சிய பாராட்டணும்பா. எல்லா வேலையும் உட்டுபோட்டு வந்து மைனஸ் குத்துறாரு. என்னானு படிச்சிட்டாவது குத்துதா. சூரியாக்கு இடுகை கிடைக்க கூடாதுன்னு அம்புட்டு நல்லெண்ணமா:))

உமர் | Umar said...

யாரு அந்த தலா? ரெகுலரா உங்களுக்கு மைனஸ் குத்துற ஆளா?

கலகலப்ரியா said...

||கும்மி said...
யாரு அந்த தலா? ரெகுலரா உங்களுக்கு மைனஸ் குத்துற ஆளா?||

ஓரிருவர் தவிர்ந்து மற்ற எல்லாருக்கும் மைனஸ் குத்துற ரோபோ...

உமர் | Umar said...

//ஓரிருவர் தவிர்ந்து மற்ற எல்லாருக்கும் மைனஸ் குத்துற ரோபோ... //

இருக்கட்டும்! இருக்கட்டும்! நல்ல வடிவமைப்பு!

Unknown said...

எனக்கொரு சந்தேகம் இந்த மாதிரி வாடக தாய் அவனுக்கு எப்படி நல்ல......

vasu balaji said...

@விக்கி உலகம்

இடம் மாறி வந்துட்டாரோ?:))