பொழுது ஏற ஏற
உழைத்த காசு
இருண்டதும் புட்டியாக!
*****
வாழ்க்கைப் பக்கங்களின்
எதிர்பாராதவை எஞ்சிப் போயின
காலி புட்டியாகவும் கோழி இறகாகவும்
*****
எந்த வடிவமும் நிலைப்பதில்லை
குடிமகன் புரண்ட
கடற்கரை மணலில்..
*****
மலை உச்சியில் புணர்ந்த
மேகம் தந்த குளிரை விரட்ட
மனம் தேடுகிறது சரக்கை.
*****
கவுஜ இங்கே...