Thursday, June 17, 2010

என்னத்தச் சொல்லி....

என்னதான் பத்திரிகைச் செய்தியை நம்புறதில்லைன்னு ஒரு தீர்மானத்துல இருந்தாலும்கூட காது குத்தி ஈர்க்குச்சி சொருகினா பரவாயில்லை. கடப்பாரையே சொருகுவேன்னு சொருகுறப்ப புடிச்சி சாத்தலாமான்னு வருதாயில்லையா?

ராமநாதபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் 15வயது சிறுமிக்கு பள்ளியில் பிரசவம் நடந்ததாம். பெண்ணின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்கிறாராம். கடந்த வெள்ளியன்று பள்ளியில் அடிக்கடி கழிப்பறைக்கு சென்று வந்த இவர், அதிகமான உதிரப் போக்கு இருந்ததாகக் கூறினாராம். ஆசிரியைகள், மாற்று உடைக்கு வழி செய்தார்களாம்(?). அப்படியும் ரத்தப் போக்கு நிற்காததால், பெண்ணின் தாயை அழைத்து அனுப்பி வைத்தார்களாம்.

சற்று நேரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு கழிப்பறைக்குச் சென்ற மாணவிகள்,அங்கு ஒரு பிறந்த குழந்தை இருப்பதாகச் சொன்னார்களாம். அப்போதுதான் ஆசிரியர்களுக்கு ரத்தப் போக்கு என்று கூறிய பெண்ணின் மீது சந்தேகம் வந்ததாம். அவளையும் அவள் தாயையும் அழைத்து விசாரித்த போது, திருவிழாவில் ஏற்பட்ட உறவின் மூலம் கருவுற்றதாகவும், வகுப்பு நடக்கையில், பிரசவம் நடந்ததாகவும், அங்கு கிடந்த கண்ணாடித் துண்டால் தொப்புள் கொடியை அறுத்து குழந்தையைப் போட்டுவிட்டு வகுப்புக்கு வந்ததாகவும் கூறினாராம். அவர்கள் விருப்பப் படி பெண்ணின் எதிர்காலம் கருதி, மாற்றுச் சீட்டு கொடுத்து அனுப்பி விட்டார்களாம்.

1. அந்த மாணவியின் தாய்க்கு தெரியாமலா இருக்கும் பெண் கர்ப்பமானது?
2. ஆசிரியைகளுக்குமா தெரியாது ஒரு நிறைமாத கர்ப்பமான மாணவியை?
3.நல்ல பிராயத்திலேயே பிரசவம் என்பது எத்தனை சுலபமானதாக இருந்தாலும் வலியற்று இருந்திருக்குமா என்ன? 15 வயது மாணவி, தானாக யார் உதவியும் இன்றி கழிப்பறைக்கு பலமுறை சென்று வந்து, பிரசவம் தானே பார்த்துக் கொண்டு, திரும்பவும் வகுப்பறைக்கு வரமுடியுமா என்ன?
4.தானே பிரசவம் பார்த்துக் கொள்ள ஒரு 15 வயது பெண்ணுக்கு தெரியுமா என்ன? அந்த அளவு தெளிவிருப்பவர், கருவுறுதல் குறித்தும், அபார்ஷன் குறித்தும் அறியாமலா இருப்பார்.
5.அதெப்படி குழந்தை பிறந்ததும் அழாமல், ஆசிரியர்கள் மாற்றுத் துணியெல்லாம் கொடுத்து, அதன் பிறகும் ரத்தப்போக்கு நிற்காமல், அவர் தாயை அழைத்து அனுப்பிய பிறகு அழும்?
6.குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
7.தாளாளர் வக்கீலாம். அவரு சொன்ன கதை இது. இவரை நம்பி கேசு கொடுக்கிறவன் கதிய நெனைச்சா அவ்வ்வ்வ்வ்:((

போய்யா கதை விடாதே என்பவர்கள் சுட்டிப் படிச்சுக்குங்கப்பா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அதிரடி வேட்டைக்குச் சென்ற இராணுவத்தினரிடம் போராடி ஒரு பெண் தீவிரவாதி உயிர் இழந்தாராம். ஒரு என்கவுண்டருக்குப் போகும் இராணுவத்தினருடன் ஒரு ஆம்புலன்ஸ் கூடவா போகாது? அல்லது ஒரு ஸ்ட்ரெச்சர் கூடவா இருக்காது? அடிபட்ட பெண்ணை இறந்த மாடு, பன்றி ஆகியவற்றைப் போல் தூக்கிச் செல்லும் அவலம் இது. இறக்கும் வரை தீவிரவாதியோ, சமூக விரோதியோ என்னவானாலும், இறந்த ஒரு மனுஷியை இப்படியா தூக்கிச் செல்வார்கள்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அட நம்ம ஊருல என்னன்னாலும் நடக்கும்னு தட்டி விட்டுக்கிட்டு வேலயைப் பார்க்கலாம்தான். இந்த இங்கிலாந்துக்கு என்னா கேடு? எலிசபத் ராணியம்மா நடக்கறதே நாராயணான்னு இருக்கிறப்ப, காரை எடுத்துகிட்டு படு வேகமா பாதுகாப்பு பெல்ட் போடாம ஓட்டுச்சாம்.

ராணின்னா எப்படி வேணுமானாலும் ஓட்டலாமான்னா, கோர்ட்டே அவங்களுதாம். அவங்கள புடிச்சா, அவங்களே அவங்களுக்கு தண்டன குடுத்தா மாதிரி ஆயிடுமாம். அதனால ஒன்னும் பண்ணலயாம்.

ஹூம் இது தெரியாம, தேர்ச் சக்கரத்துல கன்னுகுட்டி மாட்டி செத்துப் போச்சுன்னு மம்மி மாடு பெல் அடிச்சா, தன் மகனுக்கு தண்டன குடுத்தாராம்ல டமிலர் மன்னர். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆமா! ஆங்கிலப் பாட டிவிடில பிட்டுப்படம் இருந்துச்சின்னு பரபரப்பா நியூஸ் வந்து, மதுரையிலதான் லேபில் மாத்தி ஒட்டிட்டாய்ங்கன்னு கப்புன்னு அடங்கிப் போச்சே ஏன்? அல்லோவ்! நீங்க பாட்டுக்கு மதுரை, டிவிடி, பிட்டுபடம், கப்புன்னு எதையோ ஊகிச்சிகிட்டு ஆட்டோவ அனுப்பிச்சிராதீய்ங்கப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


37 comments:

நசரேயன் said...

பிட்டுபடம்ன்னா என்ன?

வானம்பாடிகள் said...

ம்கும். அது ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி மாண்டுறத கருப்பு கண்ணாடி போட்டுட்டு பார்க்கிறதுதான்.:))

Chitra said...

ஹூம் இது தெரியாம, தேர்ச் சக்கரத்துல கன்னுகுட்டி மாட்டி செத்துப் போச்சுன்னு மம்மி மாடு பெல் அடிச்சா, தன் மகனுக்கு தண்டன குடுத்தாராம்ல டமிலர் மன்னர்.

...... அதானே? மகாராணிகிட்ட tuition அனுப்பணும் போல.

பின்னோக்கி said...

முதல் செய்தியைப் படித்து விட்டு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன நடந்திருக்கும் என்பதனை யூகிக்க முடியாததால், உண்மை என்று நம்பினேன் :(.

---

அது அடர்ந்த காட்டுப்பகுதி சார். அதனால் ஆம்புலன்ஸ் வசதி இருந்திருக்காது அல்லது அதனை அந்த இடத்திற்கு ஓட்டிச்செல்ல முடியாமல் இருந்திருக்கலாம். அதனை புகைப்படமாவது எடுக்காமல் இருந்திருக்கலாம்.

அகல்விளக்கு said...

என்னாத்தச் சொல்லங்கய்யா....

காலங்கெட்டுக்கிடக்கு...
இவனுங்க வேற காதுகுத்தி பூ சாத்திருவாங்க போலருக்கு....

:(

க.பாலாசி said...

மொத விசயத்தப்பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.. ஏன் இந்த கதைய ஜோடிச்சி விட்டிருக்காங்கன்னும் தெரியல...அதுவேற வக்கிலம்மாவா இருக்கு..

அந்த ராணியம்மாவுக்கு ஏதோ சம்பளம் பத்தலையாமே அதபத்தி தெரியுமா உங்களுக்கு...

VISA said...

படிக்க ஸ்வாரஸ்யமாக எழுதியிருந்தீர்கள்.
நைஸ் ஒன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

உங்க பதிவுக்கு என்னோட கமென்ட்
...
...
...
...
...
...
...
...

உங்க பதிவோட தலைப்புதான்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ராணின்னா எப்படி வேணுமானாலும் ஓட்டலாமான்னா, கோர்ட்டே அவங்களுதாம். அவங்கள புடிச்சா, அவங்களே அவங்களுக்கு தண்டன குடுத்தா மாதிரி ஆயிடுமாம். அதனால ஒன்னும் பண்ணலயாம்.//

என்ன தப்பு நடந்தாலும் "இதே இங்கிலீஷ் காரன் பீரியட்ன்னு வையி. என்னா சோக்கா தண்டனை குட்திருப்பாந்தெரீமா?"ன்னு கேக்கும் ஆளுங்களுக்கு இந்த வரிகள் சமர்ப்பணம்.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே...

ரொம்ப பேப்பர் படிக்கீறீங்க என நினைக்கிறேன்.

இப்படி படிச்சீங்க, உடம்புக்கு ஆகாது. ஆமாம் சொல்லிபுட்டேன்.

பேநா மூடி said...

Ennatha solla..#transilation

முகிலன் said...

என்னத்தச் சொல்ல சார்

ஜெட்லி said...

ஐயா...எனக்கும் அந்த கர்ப்பம் மேட்டர் டவுட்ஆ தான்
இருந்தது இப்போ நீங்க கிளியர் பண்ணீட்டிங்க.... மதுரை இங்கிலீஷ் பிட் படம் பத்தி சொல்லனும்னா....
ஒரு வேளை திருட்டி வி.சி.டி. பண்றவங்களுக்கு கான்ட்ராட்
கொடுத்து இருப்பாங்களோ...???

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஏதோ உங்க புண்ணியத்துல பேப்பர் படிக்கிறேன் சார் (உங்க பதிவு மூலமா) அதனால...

அண்ணன் ராகவனை கண்டுக்காதீங்க! :))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஏதோ உங்க புண்ணியத்துல பேப்பர் படிக்கிறேன் சார் (உங்க பதிவு மூலமா) அதனால...

அண்ணன் ராகவனை கண்டுக்காதீங்க! :))

கலகலப்ரியா said...

ஜீரணிக்க முடியல... ரெண்டும்... ஏன் சார்.. நல்லாதானே போய்க்கிட்டிருந்திச்சி... ஆபீஸ்ல உசிரு போகுதுன்னு இங்க வந்தா... என்ன கொடுமை... நீங்க காமெடி பீஸாவே இருங்க.. ஐ மீன் எழுதுங்க...

இராமசாமி கண்ணண் said...

காலம் கெட்டு போயி கிடக்கு சார்.

காமராஜ் said...

ஆமா பாலாண்ணா எங்கூர்ல ஒரு தரம் தேங்காய் கண்ணில் நீர் வடிகிறது அதுவும் கடவுளின் சக்தியால் என்று ஒரே கூட்டம். இதைக் கவர் பண்ண, நம்ம சன் குழுமப்பிரதிநிதி வேற. என்னத்தச்சொல்ல ?.
குழந்தை பெறுவது குறித்த மைனஸ் அறிவுகூட இலாத ஞானசிகாமனிகளா பத்திரிகையில் இருப்பார்கள் கொடுமைதான் போங்க.

நாடோடி said...

செய்தி என்ற‌ பெய‌ரில் ந‌ல்லா க‌தை விடுறாங்க‌...

Muthuramalingam said...

First news is really strange.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன கொடுமை இது !
பிரசவம் என்பது ஒரு குழந்தையை உடனே வயிற்றிற்குள் வைத்து மூடிக்கொண்டு சற்று நேரம் கழித்து மீண்டும் வெளியில் எடுத்துக்கொள்ளும் சினிமாபோல் அல்லவா இருக்கிறது . பத்து மாதம் வரை எந்த உடல் வேறுபாடுகளும் இன்றியா அந்த பெண் இருந்திருக்கக்கூடும்..இது எல்லாம் பொழுததுப்போகாமல் யாராவது பக்கம் நிரப்ப செய்த வேலைகளாக இருக்கும் .

இப்படிக்கு நிஜாம் ..., said...

அண்ணே! அப்ப இந்த பிரசவக் கதையும் விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு மாதிரி தானா????

வானம்பாடிகள் said...

@@ நன்றிங்க சித்ரா:)
@@ நன்றி பின்னோக்கி. அந்த ஃபோட்டோல வெட்ட வெளியால்ல இருக்கு.
@@ஆமாம் ராஜா:)
@@அதானே பாலாசி. ராணியம்மாக்கு கோர்ட்டு மட்டும்தான் சொந்தமோ. கருவூலம் இல்லையோ?
@@நன்றி விசா
@@நல்லாச் சொன்னீங்க பெ.சொ.வி. நன்றி.
@@என்னத்தப் பண்ணன்னே. அட்லீஸ்ட் நம்மள சிந்திக்க விடுறாய்ங்களே. நம்பமாட்டாம. :))
@@நன்றி பேநா மூடி

வானம்பாடிகள் said...

முகிலன் said...

/என்னத்தச் சொல்ல சார்//

அது தெரியாமதானே புலம்புறேன்:)

வானம்பாடிகள் said...

ஜெட்லி said...
/
ஐயா...எனக்கும் அந்த கர்ப்பம் மேட்டர் டவுட்ஆ தான்
இருந்தது இப்போ நீங்க கிளியர் பண்ணீட்டிங்க....//
போச்சுடா. நான் கிளியர் ஆகாமதானே புலம்புனேன். இதென்னா கதை.

// மதுரை இங்கிலீஷ் பிட் படம் பத்தி சொல்லனும்னா....
ஒரு வேளை திருட்டி வி.சி.டி. பண்றவங்களுக்கு கான்ட்ராட்
கொடுத்து இருப்பாங்களோ...???//

ஆட்டோ புடிச்சி குடுக்குறீங்களோ:))

வானம்பாடிகள் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

/ஏதோ உங்க புண்ணியத்துல பேப்பர் படிக்கிறேன் சார் (உங்க பதிவு மூலமா) அதனால...

அண்ணன் ராகவனை கண்டுக்காதீங்க! :))//

அவன் குத்தாம் விட்ட காதெல்லாம் நான் காண்ட்ராக்ட் எடுத்துட்டேனா என்ன?

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

//ஜீரணிக்க முடியல... ரெண்டும்... ஏன் சார்.. நல்லாதானே போய்க்கிட்டிருந்திச்சி... ஆபீஸ்ல உசிரு போகுதுன்னு இங்க வந்தா... என்ன கொடுமை... நீங்க காமெடி பீஸாவே இருங்க.. ஐ மீன் எழுதுங்க...//

சாரிம்மா. ச்செரி ச்ச்செரி:))

வானம்பாடிகள் said...

@@ஆமாங்க இராமசாமி கண்ணன்
@@ஆமாங்க காமராஜ். இதே பேப்பர்லதான் மேல்மலையனூர் கோவில்லதான் அம்மன் இருக்கு எங்கையும் போகலைன்னும் செய்தி வந்தது. அத மறந்துட்டேன்:))
@@நன்றி நாடோடி.
@@ஏதோ நடந்திருக்கு. ஆனா செய்தியில வந்தது இல்லை. நன்றி சங்கர்
@@அப்புடித்தான் தெரியுது நிஜாம்.:))

ராசராசசோழன் said...

பல செய்திய போட்டு திணற அடிச்சுடீங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்னத்தச் சொல்லி....

யூர்கன் க்ருகியர் said...

என்னவோ போங்க சாமீ ,,,,,,,,
நம்ம நாட்டுல நடக்கறது ஒன்னும் நல்லா இல்ல.

ஆறுமுகம் முருகேசன் said...

ஹூம் இது தெரியாம, தேர்ச் சக்கரத்துல கன்னுகுட்டி மாட்டி செத்துப் போச்சுன்னு மம்மி மாடு பெல் அடிச்சா, தன் மகனுக்கு தண்டன குடுத்தாராம்ல டமிலர் மன்னர். // ஹா ஹா...

மொத்தப் பதிவுக்கும், என்னத்தச் சொல்லி.
:)

வால்பையன் said...

//தாளாளர் வக்கீலாம். அவரு சொன்ன கதை இது. இவரை நம்பி கேசு கொடுக்கிறவன் கதிய நெனைச்சா அவ்வ்வ்வ்வ்/


கேக்குறவன் கேனயனா இருந்தா எருமமாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொல்வானுங்க!

ஆதிமூலகிருஷ்ணன் said...

பிரசவ செய்தி..? என்ன கொடுமை சார் இது?

அப்புறம் பாட சிடி யில் பிட்டுப்படமா? புதுசா இருக்கு.. என்னாங்கடா இது?

அரைகிறுக்கன் said...

//மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அதிரடி வேட்டைக்குச் சென்ற இராணுவத்தினரிடம் போராடி ஒரு பெண் தீவிரவாதி உயிர் இழந்தாராம். ஒரு என்கவுண்டருக்குப் போகும் இராணுவத்தினருடன் ஒரு ஆம்புலன்ஸ் கூடவா போகாது? அல்லது ஒரு ஸ்ட்ரெச்சர் கூடவா இருக்காது?//

நண்பரோருனர் சொல்லக் கேட்டது. வாய்ப்பேயில்லை. அவர்களே மிதிவெடிகளை தவிர்க்க வாகனத்தில் மிகக் குறைவாகவே பயனிக்கிரார்களாம். ஸ்ட்ரெச்சரா அது அடிபட்ட அவங்களை தூக்கவே கிடைக்காத போது. தண்டேவாடா சம்பவத்தின் புகைப்படங்களைப் பார்க்கவும்.

ராஜ நடராஜன் said...

//ஒரு என்கவுண்டருக்குப் போகும் இராணுவத்தினருடன் ஒரு ஆம்புலன்ஸ் கூடவா போகாது? அல்லது ஒரு ஸ்ட்ரெச்சர் கூடவா இருக்காது? அடிபட்ட பெண்ணை இறந்த மாடு, பன்றி ஆகியவற்றைப் போல் தூக்கிச் செல்லும் அவலம் இது. //

அவலம் மட்டுமில்லை.மனித உரிமை மீறல்களை பங்கு போடுவதில் நீயா?நானா என இந்திய ராணுவமும் சளைக்கவில்லை.

அமுதா கிருஷ்ணா said...

இப்படியும் உலக மகா அழுத்தக்கார பெண்கள் இருப்பார்கள். குண்டான பெண் என்பதால் கர்ப்பம் தெரியவில்லையாம்,சில பெண்களுக்கு 7 மாதம் வரை கூட பெரிய வயிறாக தெரியாது.அப்படி கூட இருக்கலாம்.ட்ரையினில் டாய்லெட்டில் குழந்தை பெற்றுக் கொண்டதாய் நிறைய செய்தி படித்து உள்ளோமே. ஆனால்,ஸ்கூலில் ஏதோ மறைக்கிறார்கள்.கலிகாலம்.
அந்த சிடி பற்றி அதற்கு அப்புறம் ஒரு நியூசும் இல்லை..