Sunday, April 25, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V4.6

இந்திய மருத்துவ கவுன்ஸில் இயக்குனர் 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடி பட்டார்..செய்தி.

ஓ. இத வச்சித்தான் வளரும் நாடுன்னு சொல்றாய்ங்களோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மருத்துவ கவுன்ஸில் இயக்குனர் வீட்டில் ரொக்கப் பணம் 1800 கோடி சிக்கியது.

பாப்ரே பாப். சேட்டு பேர கெடுத்துட்டானே. வட்டி போச்சே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இயக்குனர் வீட்டில் 1500 கிலோ தங்கம் பறிமுதல்.

ஊட்ல எல்லாம் துணிக்கு பதில் நகையாத்தான் போடுவாங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முக்கிய தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப் பட்டது.

அங்க கூடவா போன் பேசுவாய்ங்க. அய்யே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனி உங்களை வள்ளல் கருணாநிதி என்றழைப்பதில் பெருமை கொள்கிறோம். மாற்றுத் திறனாளிகள் வாரியத்துக்கு 45 லட்சம் வழங்கியதற்கு பத்திரிகையாளர் பாராட்டு... செய்தி

இதத்தான் குடுத்த காசுக்கு மேலயே கூவறதுங்கறதோ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் திருத்தியமைப்பு: ஆலோசகராக கனிமொழி எம்.பி. நியமனம் 

வாட் பத்திரிகையாள்ஸ்! இப்ப என்ன சொல்லி அழைப்பதில் பெருமை கொள்ளுவீங்க?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐபிஎல் சூதாட்டத்தில் 27 வீரகளுக்கு தொடர்பு.

அடங்கொன்னியா! சூதாடினா வீரன் பட்டம் தராய்ங்களாம்டா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துருவித் துருவிக் கேட்கும் கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும் என்கிறார் நித்தியானந்தா.

முக்காலமும் அறிந்தவர்னு காட்டிக்கிறாரோ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காயம், காரமில்லாத உணவு கேட்டார் நித்தியானந்தர்.

எது கேட்டாலும் குடுப்பீங்களாய்யா? லேகியம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு தூக்கம் வருது என்று பதில் சொல்கிறார் நித்தி.

கேள்வியக் கேளு தூக்கம் வரட்டும்னு சொல்லுவாரு. கேளுங்கப்பா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் சிக்கல்: நவீன் சாவ்லா?

ஓட்டு காசு அன்னியச் செலாவணில கேப்பாய்ங்கன்னா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி.

திருடுனா கை வெட்ற நாடு இல்ல அது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை!

அதுக்குதானே ஆஸ்ரமம் வெச்சான் அந்தாளு. மொத்தப் பேரும் போய் சிஷ்யனாய்ட்டீங்களா என்னா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரஞ்சிதாவை விசாரிக்க மாட்டோம். செய்தி

விருது விழா எதும் வருதுங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விடுதலைப்புலி தலைவர்களை நாடு கடத்தினோம்: மலேசிய அமைச்சர் திடுக்கிடும் தகவல்

ஓ. தேர்தல் முடிஞ்சி அறுவடைக் காலமோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொருளாதார மந்திரியானார் ராஜபக்சே சகோதரர்

அதாஞ்சரி. வந்தது போனதுக்கு கணக்கு வேணாமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அமிதாப்புடன் சென்றால் எட்டப்பன் பழி வந்தே தீரும்

அப்ப தனியா போறீங்களா? என்னமோ எட்டப்பன்னா எட்டிக்காய் மாதிரி என்னா சீனு?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்திய திரையுலகம் ராஜபக்சே கையால் விருது பெறுவதா? பழ.நெடுமாறன் கண்டனம்

அட அவன் எத்தி விட்டாலே பொறுக்கிட்டு வருவாய்ங்கய்யா. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கைது செய்யப்பட்ட தமிழர்களை மலேசியாவிலேயே தங்கவைக்க இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்! திருமா

அடுத்த ஊர்க்காரனுக்கு அட்வைசு சொல்றதுல நம்மள அடிச்சிக்க ஆளில்ல. ஏன் நீ கூப்டுக்கன்னா என்ன பண்றது தெருமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

70 comments:

நாடோடி said...

ந‌றுக்ஸ் எல்லாம் ந‌ல்ல‌ ச‌வுண்டா இருக்கு.....

நாடோடி said...

ஓ... நான் தான் முத‌ல் ஆளா.......

அஹமது இர்ஷாத் said...

//முக்கிய தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப் பட்டது.

அங்க கூடவா போன் பேசுவாய்ங்க. அய்யே//

அடிச்சு தூள் கெளப்புங்க...

அஹமது இர்ஷாத் said...

அய் நாந்தான் 2nd.....!

இராகவன் நைஜிரியா said...

கமெண்ட் எல்லாம் வழமை போல் சூப்பர் அண்ணே..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

கமெண்ட் எல்லாம் வழமை போல் சூப்பர் அண்ணே..//

அப்ப கும்மியில்லையா. அவ்வ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

// இந்திய மருத்துவ கவுன்ஸில் இயக்குனர் 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடி பட்டார்..செய்தி.//

//கவுன்ஸில் இயக்குனர் வீட்டில் ரொக்கப் பணம் 1800 கோடி சிக்கியது. //

//1500 கிலோ தங்கம் பறிமுதல்.//

ஆஹா... இந்தியா ஏழை நாடு. :-(

இராகவன் நைஜிரியா said...

// வீட்டில் 1500 கிலோ தங்கம் பறிமுதல்.
ஊட்ல எல்லாம் துணிக்கு பதில் நகையாத்தான் போடுவாங்களா? //

இது... இது... அண்ணன் டச்..

இராகவன் நைஜிரியா said...

// முக்கிய தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப் பட்டது. //

தலைவர்கள் ஏன் முக்கினாங்க... கான்சுடுபேஷன் ப்ராப்ளம்..?

இராகவன் நைஜிரியா said...

// மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் திருத்தியமைப்பு: ஆலோசகராக கனிமொழி எம்.பி. நியமனம் //

மக்கள் நலம் பேணுபவர். தம் மக்கள் நலம் பேணுபவர்...

இராகவன் நைஜிரியா said...

// ஐபிஎல் சூதாட்டத்தில் 27 வீரகளுக்கு தொடர்பு.

அடங்கொன்னியா! சூதாடினா வீரன் பட்டம் தராய்ங்களாம்டா. //

சூதாட்டம் இல்லை என்றால்தான் அது கிரிக்கெட் ஆட்டம் இல்லைங்க அண்ணே..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ ஆஹா... இந்தியா ஏழை நாடு. :-(/

அண்ணே கலர் டிவி கணக்கும் சேர்த்து ஒரு தமிழன் 10000ரூ கடனாளியாம்ணே.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// முக்கிய தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப் பட்டது. //

தலைவர்கள் ஏன் முக்கினாங்க... கான்சுடுபேஷன் ப்ராப்ளம்..?//

அதப்போய் ஒட்டு கேக்கரானே:))

இராகவன் நைஜிரியா said...

// வெங்காயம், காரமில்லாத உணவு கேட்டார் நித்தியானந்தர்.

எது கேட்டாலும் குடுப்பீங்களாய்யா? லேகியம்? //

இது வரை சாப்பிட்ட லேகியம் போதாதா அண்ணே?

காமராஜ் said...

//ஐபிஎல் சூதாட்டத்தில் 27 வீரகளுக்கு தொடர்பு.

அடங்கொன்னியா! சூதாடினா வீரன் பட்டம் தராய்ங்களாம்டா.//

அசத்தல் கமெண்ட்.
வேதனையை வேறெப்படி சரிசெய்ய ?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ மக்கள் நலம் பேணுபவர். தம் மக்கள் நலம் பேணுபவர்...//

ஹிஹி. சைலண்டா சோலிய முடிச்சிட்டாரேண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் சிக்கல்: நவீன் சாவ்லா?

ஓட்டு காசு அன்னியச் செலாவணில கேப்பாய்ங்கன்னா? //

இந்தியா ரூபாயில் கொடுப்பதை விட இது ரொம்ப ஈசி அண்ணே... ஸ்விஸ் வங்கில இருப்பதை ஈசியா தூக்கிக் கொடுத்திடலாம்ல..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ இது வரை சாப்பிட்ட லேகியம் போதாதா அண்ணே?//

பின்ன சாப்பிட மறுக்கிறாராமே.

இராகவன் நைஜிரியா said...

// நித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை!

அதுக்குதானே ஆஸ்ரமம் வெச்சான் அந்தாளு. மொத்தப் பேரும் போய் சிஷ்யனாய்ட்டீங்களா என்னா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

உண்மை வெளி வருமா அண்ணே?

வானம்பாடிகள் said...

காமராஜ் said...

/ அசத்தல் கமெண்ட்.
வேதனையை வேறெப்படி சரிசெய்ய ?//

விளையாட்டுக்கு தனி அர்த்தமே கண்டு பிடிச்சிட்டானுங்களே சார்:((

இராகவன் நைஜிரியா said...

// ரஞ்சிதாவை விசாரிக்க மாட்டோம். செய்தி

விருது விழா எதும் வருதுங்களா? //

மேலவையில் அவருக்கு ஒரு இடம் கொடுக்க சாத்தியங்கள் அதிகம்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/உண்மை வெளி வருமா அண்ணே?/

எங்க உட்றீங்க.

இராகவன் நைஜிரியா said...

// பொருளாதார மந்திரியானார் ராஜபக்சே சகோதரர்

அதாஞ்சரி. வந்தது போனதுக்கு கணக்கு வேணாமா? //

குடும்பப் பொருளாதாரம் காக்க... நாட்டின் பொருளாதார மந்திரியாக்கிட்டாங்களோ?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/இந்தியா ரூபாயில் கொடுப்பதை விட இது ரொம்ப ஈசி அண்ணே... ஸ்விஸ் வங்கில இருப்பதை ஈசியா தூக்கிக் கொடுத்திடலாம்ல../

குடுக்கறதுக்கு போய் ஸ்விஸ் வங்கில வைக்கிறாங்களா.

இராகவன் நைஜிரியா said...

// கைது செய்யப்பட்ட தமிழர்களை மலேசியாவிலேயே தங்கவைக்க இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்! திருமா

அடுத்த ஊர்க்காரனுக்கு அட்வைசு சொல்றதுல நம்மள அடிச்சிக்க ஆளில்ல. ஏன் நீ கூப்டுக்கன்னா என்ன பண்றது தெருமா //

அட்வைஸ் - செலவில்லாதது...

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ மேலவையில் அவருக்கு ஒரு இடம் கொடுக்க சாத்தியங்கள் அதிகம்.//

எனி உள்குத்து:))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/இந்தியா ரூபாயில் கொடுப்பதை விட இது ரொம்ப ஈசி அண்ணே... ஸ்விஸ் வங்கில இருப்பதை ஈசியா தூக்கிக் கொடுத்திடலாம்ல../

குடுக்கறதுக்கு போய் ஸ்விஸ் வங்கில வைக்கிறாங்களா. //

அண்ணே இங்க கொடுப்பது என்பது முதல் போடுவது மாதிரி... ஆடு வளர்ப்பது ஜீவகாருண்யத்திற்காகவா?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/இந்தியா ரூபாயில் கொடுப்பதை விட இது ரொம்ப ஈசி அண்ணே... ஸ்விஸ் வங்கில இருப்பதை ஈசியா தூக்கிக் கொடுத்திடலாம்ல../

குடுக்கறதுக்கு போய் ஸ்விஸ் வங்கில வைக்கிறாங்களா.//

நோ உள்குத்து... அவரின் கலைச் சேவையைப் பாராட்டி அளிக்கப்படுகின்றது.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/உண்மை வெளி வருமா அண்ணே?/

எங்க உட்றீங்க. //

விட்டா மட்டும் வெளியில தெரிஞ்சுடவா போகுது...

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ மக்கள் நலம் பேணுபவர். தம் மக்கள் நலம் பேணுபவர்...//

ஹிஹி. சைலண்டா சோலிய முடிச்சிட்டாரேண்ணே. //

நத்திங் நியூ...

இராகவன் நைஜிரியா said...

// நாடோடி said...
ஓ... நான் தான் முத‌ல் ஆளா....... //

ஆஹா வடைப் போச்சே...

ஃபார் & ஆன் பிஹாப் ஆஃப்
பிராபாகர்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

கமெண்ட் எல்லாம் வழமை போல் சூப்பர் அண்ணே..//

அப்ப கும்மியில்லையா. அவ்வ்வ்வ்
//

அண்ணே இங்க கும்மி அடிக்கவில்லை என்றால் வேறு எங்கு கும்மி அடிப்பேன்...

Kiruthikan Kumarasamy said...

///முக்கிய தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப் பட்டது.

அங்க கூடவா போன் பேசுவாய்ங்க. அய்யே///

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....

மிச்சம் எல்லாமே நச்சுன்னு இருக்குங்கண்ணா

ராஜ நடராஜன் said...

//மருத்துவ கவுன்ஸில் இயக்குனர் வீட்டில் ரொக்கப் பணம் 1800 கோடி சிக்கியது.

பாப்ரே பாப். சேட்டு பேர கெடுத்துட்டானே. வட்டி போச்சே.//

பாப்ரே பாப்!

ராஜ நடராஜன் said...

////இனி உங்களை வள்ளல் கருணாநிதி என்றழைப்பதில் பெருமை கொள்கிறோம். மாற்றுத் திறனாளிகள் வாரியத்துக்கு 45 லட்சம் வழங்கியதற்கு பத்திரிகையாளர் பாராட்டு... செய்தி

இதத்தான் குடுத்த காசுக்கு மேலயே கூவறதுங்கறதோ!//

மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் திருத்தியமைப்பு: ஆலோசகராக கனிமொழி எம்.பி. நியமனம்

வாட் பத்திரிகையாள்ஸ்! இப்ப என்ன சொல்லி அழைப்பதில் பெருமை கொள்ளுவீங்க?////

வள்ளலுக்கு எதிர்பதம் வள்ளியா?

ராஜ நடராஜன் said...

//வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் சிக்கல்: நவீன் சாவ்லா?

ஓட்டு காசு அன்னியச் செலாவணில கேப்பாய்ங்கன்னா?//

மாங்கு மாங்குன்னு நான் இடுகையில மொத்தமா சொன்னதை ஒரே வரியில் சொல்லீட்டீங்க:)

செ.சரவணக்குமார் said...

அடிச்சு நொறுக்குங்க சார். கடைசி கமெண்ட் சூப்பர்.

Balavasakan said...

நல்லா நறுக்கிட்டீங்க சார்வாள்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மொத்தமுமே சூப்பர்!!!!!!!!!!!!

//வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் சிக்கல்: நவீன் சாவ்லா?

ஓட்டு காசு அன்னியச் செலாவணில கேப்பாய்ங்கன்னா?
//

அது.....!

சைவகொத்துப்பரோட்டா said...

ம்ம்.....நறுக், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாத்தான்
இருக்கு!!!

கலகலப்ரியா said...

சூப்பரா கீது சாரே... நீங்கோ அடிக்கடி இந்த நறுக் போடுங்கோ... இது பட்சுதான் நான் லோகத்தில என்ன நடக்குதுன்னே தெரிஞ்சுக்கறேன்..

||முக்கிய தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப் பட்டது.||

யூ டியூப் லின்க் ப்ளீஸ்..

||இனி உங்களை வள்ளல் கருணாநிதி என்றழைப்பதில் பெருமை கொள்கிறோம். மாற்றுத் திறனாளிகள் வாரியத்துக்கு 45 லட்சம் வழங்கியதற்கு பத்திரிகையாளர் பாராட்டு... செய்தி
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் திருத்தியமைப்பு: ஆலோசகராக கனிமொழி எம்.பி. நியமனம் ||

மீனைச் சிங்காரிச்சு பூனைய காவல் வச்ச மாதிரி கீது..

||நித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை!||

சத்திய சோதனை..

||பொருளாதார மந்திரியானார் ராஜபக்சே சகோதரர்||

ஹவ் மெனி பிரதர்ஸ் ஹாவ் யூ காட் "பீபல்"

||இந்திய திரையுலகம் ராஜபக்சே கையால் விருது பெறுவதா? பழ.நெடுமாறன் கண்டனம்||

வாட் இஸ் திஸ் மிஸ்டர் ஃப்ருட் நெடுமாஆர்ன் .. ஐயாம் த பெஸ்ட் ஆக்டர் இன் த வேர்ல்ட்.. ஹெஹேஹெஹே - ராஜபக்சே

கலகலப்ரியா said...

||வள்ளலுக்கு எதிர்பதம் வள்ளியா?||

விட்டா திருவிளையாடல் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணுவீங்க போலருக்கே... இது "வள்"-ளலாக்கும்...

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/ ஹவ் மெனி பிரதர்ஸ் ஹாவ் யூ காட் "பீபல்"/

ஃபார் கெட்டிங் மனி ஆல் டமில்ஸ் ஆர் பிரதர்ஸ். ஃபார் ஷேரிங் மனி ஒன்லி ட்ட்ட்டூ.

யூர்கன் க்ருகியர் said...

//இந்திய மருத்துவ கவுன்ஸில் இயக்குனர் 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடி பட்டார்..செய்தி.//

சீக்கிரம் ட்ரீட்மென்ட் கொடுங்கைய்யா...

யூர்கன் க்ருகியர் said...

//முக்கிய தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப் பட்டது.//

நாறி இருக்குமே ??

//வெங்காயம், காரமில்லாத உணவு கேட்டார் நித்தியானந்தர்.//

கரெக்ட் ..இல்லனா தலைநகரம் படத்துல வடிவேல் போன கொரில்லா செல் மாதிரி ஆயிடும்

யூர்கன் க்ருகியர் said...

//அமிதாப்புடன் சென்றால் எட்டப்பன் பழி வந்தே தீரும்//

க்காளி... அமி(த்+ஆ)ப்பு" பேருலேயே ஆப்பு வச்சிருக்கான் ... வைக்காம என்ன பண்ணுவான் !!

சேட்டைக்காரன் said...

கலக்கறீங்க ஐயா! சிரிச்சுச் சிரிச்சே பைத்தியம் புடிச்சிரும் போலிருக்கு! என்னத்த பண்ணறது, நம்ம தலைவிதி, இடுக்கண் வருங்கால் நகுக.....!

Rathi said...

நறுக்கு, நறுக்காய் ஒரே பதிவில் ஒட்டு மொத்த இந்தியாவும்!! கலக்கிட்டீங்க.

ஜெட்லி said...

ஒவ்வொன்னும் நச்சுனு இருக்கு.....
நித்தி...பாதாம் வேணும்னு கேட்டாராமே...??

நேசமித்ரன் said...

//மீனைச் சிங்காரிச்சு பூனைய காவல் வச்ச மாதிரி கீது.. //

:)


அடிச்சு பட்டாசு கிளப்பிட்டீங்க சார்

VISA said...

நித்தி மேட்டர் தவிர மத்ததெல்லாம் டாப்

பிரசன்னா said...

காமெண்ட்ஸ் நச்..!

//ரொக்கப் பணம் 1800 கோடி சிக்கியது//

ஏயப்பா.. இவ்ளோ பணத்த எங்க பதுக்கி வச்சார்..?

//காரமில்லாத உணவு கேட்டார்//

வாழ இலை கேக்கலியா :)

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நறுக் நறுக் தான்
அசத்தல்

பிரபாகர் said...

சாமி! லஞ்சம் வாங்கறதுக்கு அளவில்லையா?

வழக்கத்தைவிட நறுக் கொஞ்சம் மிஸ்ஸிங் அய்யா!

பிரபாகர்...

ரோஸ்விக் said...

நறுக்குன்னு இருப்பதைவிட செம நக்கலாகவும் இருக்கு.

//துருவித் துருவிக் கேட்கும் கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும் என்கிறார் நித்தியானந்தா.//

இதுக்குத் தான் அப்பவே கோவியாருகிட்ட உங்க வலைத்தளத்துக்கு இந்தப் பேரு (காலம்) வைக்காதீங்கன்னு சொன்னேன். இப்பப் பாருங்க நித்தியானந்தா இவரைக் கூப்பிடுறாரு. :-)))

’மனவிழி’சத்ரியன் said...

//கைது செய்யப்பட்ட தமிழர்களை மலேசியாவிலேயே தங்கவைக்க இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்! திருமா

அடுத்த ஊர்க்காரனுக்கு அட்வைசு சொல்றதுல நம்மள அடிச்சிக்க ஆளில்ல. ஏன் நீ கூப்டுக்கன்னா என்ன பண்றது தெருமா?//

ஹி..ஹி..ஹி...

அதான் அந்த அய்யா இல்ல. அவருகிட்ட சொல்லி, மத்திய அரசுக்கு கடுதாசி அனுப்பச் சொல்வாய்ங்க.....

கிரி said...

//முக்கிய தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப் பட்டது.

அங்க கூடவா போன் பேசுவாய்ங்க. அய்யே//

ஹா ஹா ஹா

//வெங்காயம், காரமில்லாத உணவு கேட்டார் நித்தியானந்தர்//

பார்ப்போம் எத்தனை நாள் தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறார் என்று

சார் நீங்க மறுபடியும் நறுக்குன்னு நாலு வார்த்தை தொடருவது சந்தோசம்.

ஈரோடு கதிர் said...

நறுக் எல்லாம் சுறுக்..சுறுக்

எப்படியோ தூங்குன சிங்கத்த எழுப்பிவிட்டாச்சு

மங்குனி அமைச்சர் said...

சூப்பர் தல, ஆமா 1800 எத்தின சைபர்

Chitra said...

~
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் சிக்கல்: நவீன் சாவ்லா?

ஓட்டு காசு அன்னியச் செலாவணில கேப்பாய்ங்கன்னா?


....ha,ha,ha,ha,ha..... hilarious!

க.பாலாசி said...

//வீட்டில் 1500 கிலோ தங்கம் பறிமுதல்.//

நாட்ல தங்கம் வெல ஏண்டா ஏறிகிட்டேயிருக்குன்னு பாத்தா இவன்தான் காரணமாயிருப்பான் போலருக்கு...

//தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப் பட்டது.//

இனிமே தலைவருங்க... முக்க கூட பயப்படுவானுங்க...

க.பாலாசி said...

//உங்களை வள்ளல் கருணாநிதி என்றழைப்பதில் பெருமை கொள்கிறோம்.//

ங்ங்ங்கொய்யால... உம் மூஞ்சில........த்தூ....

"உழவன்" "Uzhavan" said...

என்னதான் நாம நறுக்குனு கேட்டாலும், கேட்கிறவனுக்கு சுருக்குனு இருந்தாதான புண்ணியம்.. இப்படி எவனுக்குமே இருக்காது போல :-)

padma said...

ஜோரா இருக்குங்க enjoyable aa irukku

thenammailakshmanan said...

ஊட்ல எல்லாம் துணிக்கு பதில் நகையாத்தான் போடுவாங்களா?//

எல்லாமே அருமை பாலா சார்
அதில் இது ரொம்ப நல்ல குறும்பான கேள்வி...ஹாஹாஹா

வானம்பாடிகள் said...

@@நன்றி நாடோடி
@@நன்றி இர்ஷாத்
@@நன்றி அண்ணே.
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றி கிருத்திகன்
@@நன்றிண்ணா:)
@@நன்றி சரவணக்குமார்
@@நன்றி பெயர்சொல்ல விருப்பமில்லை
@@நன்றிங்க சைவகொத்துபரோட்டா

வானம்பாடிகள் said...

@@நன்றிம்மா ப்ரியா.யூடியூப் லிங்கா. அது சரி
மீனைச் சிங்காரிச்சு... ரொம்ப சிரிச்சேன் இதுக்கு. :))

வானம்பாடிகள் said...

@@நன்றி யூர்கன்
@@நன்றிங்க சேட்டை
@@நன்றிங்க ரதி
@@நன்றி ஜெட்லி
@@நன்றி நேசன்
@@நன்றி விசா
@@நன்றி ப்ரஸன்னா
@@நன்றி நண்டு@
@@நன்றி பிரபா
@@நன்றி ரோஸ்விக்
@@நன்றி கண்ணா
@@நன்றி கதிர் ம்கும்
@@நன்றி மங்குனி
@@நன்றி சித்ரா
@@நன்றி கிரி
@@நன்றி பாலாசி
@@நன்றி உழவன்
@@நன்றி பத்மா
@@நன்றிங்க தேனம்மை

ராஜ நடராஜன் said...

தூங்குனது போதும்:)

மெல்லினமே மெல்லினமே said...

romba supper a irukku sir!