Friday, April 23, 2010

கேரக்டர் - சுந்தரம்

இந்த டாய்லட்ல ஆம்பிளைங்கன்னு அடையாளத்துக்கு ஒரு உருவம் போட்டிருக்கும் பார்த்திருப்பீங்களே. வெறப்பா தோளும் கையுமா.அப்புடி ஒரு உருவம் நெசமாவே நடந்து வந்தா எப்படியிருக்கும்? அதும் ஒரு லயமா தோளக் குலுக்கி, தலைய வெட்டி, கோழி நடக்குறப்ப கழுத்து முன்னுக்கும் பின்னுக்கும் போகுமே அப்புடி ஒரு வெட்டு, க்கும்னு ஒரு சவுண்டுனு நடப்பாரு. இவருதாங்க நம்ம சுந்தரம்.

அஞ்சடி ரெண்டங்குலம் இருப்பாரு. சம்மந்தமே இல்லாம அகலமான முதுகு, நீளமா கையி. சிவப்புன்னு சொல்லுற நிறம். மொத மொத அவர பார்த்ததே டாய்லட்ல. இருக்குறது ரண்டு வாஷ் பேசின், ஒன்னுல குழாயில்ல, இருந்த ஒன்ன முழுசா தொறந்தாரு. வெயிட் லிஃப்டர் ஒரு பந்தாவா குனிஞ்சி பின்னாடி ஆட்டி ஆட்டி கம்பிய புடிச்சிகிட்டு தலைய தூக்கி பார்ப்பாரே. அப்புடி இவரும் சாவதானமா அட்ஜஸ்ட் பண்ணி நின்னு கன்னாடி பார்த்தாரு. வலப்பக்கம், இடப்பக்கம், கொஞ்சமா குனிஞ்சி, அப்புறம் மேலாலன்னு பார்த்தாரு.

பாக்கட்டுள்ள கடுதாசில மடிச்ச ஒரு சாம்பிள் சோப் எடுத்து செட் பண்ணாரு. நாறுனாலும் பரவால்லடே! என்னா ப்ளானுன்னு பார்க்காம போறதில்லைன்னு நின்னுட்டேன். ஒரு பத்து நிமிஷம் முகத்த கழுவறதும், சோப்பு அப்புறதும் திரும்ப கழுவறதும்னு போச்சு. கைக்குட்டைய எடுத்து முகம் தொடைச்சாரு. சரி முடிச்சிட்டாருன்னு நான் ரெடியானேன். பின்னாடி கைய விட்டு சீப்பு எடுத்தாரு. கழுவுனாரு. திருப்பி கழுவினாரு. உதறினாரு. திரும்ப கழுவினாரு. கர்சீப்ல துடைச்சாரு. தலைய சீவோ சீவுன்னு சீவினாரு.

திரும்ப கழுவி, திரும்ப உதறி ஒரு வழியா பாக்கட்டுக்குள்ள அனுப்புனாரு. அப்பாடா முடிச்சான்னு நினைச்சேன். ம்ஹூம். சோப்ப எடுத்து உதறி, அதே வெண்ணெய் பேப்பர்ல மடிச்சி பாக்கட்டுள்ள போட்டாரு. கை கழுவினாரு. உதறினாரு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. ஆச்சுடான்னு நினைச்சேன். ம்ஹூம். திரும்ப குழாய் கீழ கைய வெச்சு கட்டை விரல் நகத்தால மத்த விரல் நகம், மத்த விரல் நகத்தால கட்டை விரல் நகம்னு கழுவினாரு.

மொத்தமா ஒரு 20 நிமிசம் போயிருக்கும். பிரிய மனமில்லாம கண்ணாடிய பார்த்தபடியே போனாரு. யாருன்னு பார்த்தா புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறாருன்னாங்க. பயபுள்ளைக்கு ஏதோ ஃபோபியா போலயே. ஆளு ராசா மாதிரி இருக்கானேன்னு நினைச்சிட்டே வேலைய பார்க்க போனேன்.

மதியம் சாப்பாட்டுக்கு கை கழுவ போனா ஒரு ரகளையே நடக்குது. ஒரு பத்து பேருகிட்ட சாப்பாட்டு டப்பா, கை கழுவ நின்னுட்டிருக்க நம்ம ஐய்யா நகம் கழுவிட்டிருக்காரு. யாரு சொன்னாலும் சட்ட பண்ணல. பதில் சொன்னா சண்ட போடலாம். ஒன்னுமே பேசாம நடத்திட்டிருக்கிறவன என்ன பண்ண?

அப்புறம் ஐய்யா இருந்தா வேற குழாய் தேடி போக ஆரம்பிச்சிட்டாங்க. ஊட்டுல பெருசுங்க இருக்கே. புள்ள இப்புடி இருக்கானேன்னு பார்க்கமாட்டாங்க? அத உட்டு போட்டு ஒரு ஏமாளிப் பொண்ண புடிச்சி கட்டிவச்சிட்டாங்க. பயபுள்ள இன்னும் பாலிஷ், இன்னும் பளபளன்னு ஆய்ட்டாரு. ஒரு நாள் ஆபீஸ் வந்தவரு கையெழுத்தும் போட்டுட்டு பாலீஷ் பண்ண போனாரு. ரொம்ப கோவமா அதிகாரிட்ட வந்து எனக்கு லீவ் வேணும்னாரு.

என்ன அர்ஜண்ட்? கையெழுத்து போட்டாச்சில்ல. மதியமா போ அரை நாள் லீவ் போட்டுன்னா, கோவமா இல்ல நான் போணும்னு அடம் புடிச்சாரு. என்னய்யா அப்புடி அவசரம்? வேலைய பாருன்னாங்க. இல்ல எம் பொண்டாட்டி பனியனுக்குள்ள மிளகாய்த்தூள் கொட்டி வச்சிட்டா. அவங்க அப்பன் ஊட்டுக்கு கூட்டிட்டு போய் நாயம் கேக்கணும்னு பிடிவாதம் புடிச்சாரு.

ஒழிஞ்சி போன்னு அனுப்பி விட்டாங்க. போனவன் ரெண்டு நாள் கழிச்சி வந்தான் இளிச்சிகிட்டே. என்ன நடந்துச்சின்னா அன்னைக்கு வெள்ளிக்கிழமை. அந்தம்மா குளிச்சி முடிச்சி சமைச்சிட்டிருக்க அய்யா குளிச்சிட்டு ட்ரெஸ் பண்ணிட்டிருக்காரு. தலை சரியா துவட்டலைன்னு தங்கமணி சொல்லிச்சாம். துவட்டிவிடுன்னு வழிஞ்சதுல பனியன்ல அந்தம்மா பூசியிருந்த மஞ்சள் அப்பியிருக்கும் போல. ஆபீஸ் கிளம்பி வர, வியர்வைல நனைஞ்சி  பனியன்ல சரியா அலசாத சோப்பும் மஞ்சளும் சேர்ந்து சிவப்பா தெரிஞ்சது போல.

இவரு லீவ் போட்டு வீட்ல போய் என்ன ஏதுன்னே கேக்காம ரெண்டு அப்பு அப்பி, பஸ் புடிச்சி மாமனார் ஊருக்கு இழுத்துட்டு போக சாயுங்காலம் ஆகிப்போச்சி. அழுது வீங்கின முகமும், அசுர பார்வையில மாப்பிள்ளையும் பார்த்து அரண்டு போய்ட்டாங்களாம். இவரு பராசக்தி ரேஞ்சுக்கு வசனம் பேசி, அனுமார் மாரைப் பிளந்து உள்ள சீதா ராமனைக் காட்டினா மாதிரி சட்டையை பட்டன் தெறிக்க பிச்சி காட்டினா மஞ்ச மஞ்சளா இருக்கு.

மாமனார் தலையில அடிச்சிகிட்டு, மாக்கான்னாலும் மாப்பிள்ளையாச்சேன்னு விருந்து போட்டு அனுப்பியிருக்காரு. ஹி ஹி. நாந்தான் தப்பா நினைச்சிட்டேன்னு வந்து எல்லார்ட்டையும் வழிஞ்சாரு. கடவுள் ஏங்கறவங்களுக்கு குழந்தையில்லாம சாவடிக்கறதும், இந்த மாதிரி ஏப்பராசிங்களுக்கு இந்தா புடின்னு கொடுக்கறதும் சகஜம்தானே. குழந்தை பிறந்துச்சி. ஆம்பிள்ளை சிங்கம்னு போய் பார்த்துட்டு வந்து, லீவ் போட்டு பேரு வைக்க, புண்ணியா வசனம்னு போனாரு.

போய் பார்த்தா பழைய சீலைய தூளியா கட்டி போட்டிருந்தாங்களாம். அப்புடித்தான் எல்லா வீட்டிலையும் நடக்கும், தொட்டில் இல்லைன்னா. பார்த்த மாத்திரத்துல இவருக்கு வந்திச்சி கோவம். விசுக்குன்னு கடைவீதிக்கு போய் காடாத்துணி வாங்கிட்டு வீட்டுக்குள்ள வந்து, எம்புள்ளைய பழைய சீலையில போடுவியா? இந்தா புதுத்துணி.  இதுல போடுன்னு தகறாரு. பண்ணியிருக்காரு. அவங்க பதறிப்போய், அடக் கடவுளே பொறந்த குழந்தைக்கு புது காடா துணில தொட்டில் போடக்கூடாதுப்பான்னா மாமனார ஒரு அப்பு, பொண்டாட்டிய ஒரு அப்புன்னு அப்பி, அப்புறம் அங்க இருந்தவங்க புடிச்சி உலுக்கி, பன்னாடையே, இறந்து போன குழந்தையதாண்டா அப்புடி தூளிமாதிரி கட்டி கொண்டு போவாங்கன்னு சொன்னா அப்புறம் புரிஞ்சது அய்யாக்கு.

தங்கமணி புள்ளைய பாப்பாளா இந்த புண்ணாக்க பாப்பாளா? தன்னை கவனிக்கறதே இல்லைன்னு ஒரு மனக் குறை. அது வியாதியாகி சண்டை. எங்க தன்னோட சண்டை போட்டு கோவத்துல புள்ளைய கொன்னுடுவாளோன்னு சந்தேகம். வேலைக்கு கிளம்பறது சர்ப்ரைஸா போய் செக் பண்றது. லீவ் போட்டு போய் செக் பண்றதுன்னு வங்கொடுமையாகிப் போச்சு. அப்பவும் யாருக்கும் இவன டாக்டர் கிட்ட கொண்டு போகணும்னு தோணலை.

ஆஃபீஸ்லயும் காலைல வருவாரு. கோல்ஃப் ப்ளேயர் குழிகிட்ட பால் நின்னா சுத்தி சுத்தி குறி பார்க்குறா மாதிரி டேபிளை சுத்தி சுத்தி வச்சிட்டு போனது அப்புடியே இருக்கான்னு பார்ப்பாரு. அரை மணிநேரம் இப்படிப் போகும். அப்புறம் சமாதானமாகி, எல்லாம் எண்ணி சரி பார்த்து, காஃபி வர குடிச்சிட்டு தூங்கிடுவாரு. பன்னிரண்டரைக்கு எழுந்து முகம் கழுவிட்டு சாப்பிட்டு வந்து அரட்டை அடிச்சி, ரெண்டு ரெண்டரைக்கு டீ வர குடிச்சிட்டு தூங்கிடுவாரு.

நாலரை மணிக்கு எழுந்து முகம் கழுவி, ஃபைலெல்லாம் அடுக்கி, திரும்ப கோல்ஃப் ப்ளேயர் மாதிரி சர்வே பார்த்துட்டு வீட்டுக்கு கிளம்பிடுவாரு. என்ன ? வேலையெல்லாம் அப்படியே நிக்குது? இப்படியெல்லாம் தூங்கக்கூடாதுன்னா, ஒரு மாதிரி சிரிச்சபடி வைஃப் மருந்து வச்சிட்டா. அது ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும்போது மயக்கமா இருக்குன்னு சொல்லுவாரு.

ஹி ஹி. இப்புடியே கிட்ட கிட்ட அதே சீட்ல 15 வருஷம் ஓட்டிட்டாருங்கோவ். இவரு கொடுமை தாளாம பொண்டாட்டி டைவர்ஸ் பண்ணிடிச்சி. இப்பவும் வீட்டுல இருக்கிறவங்க இவருக்கு ஒரு வைத்தியம் பார்க்கலாம்னு நினைக்கல போல. எவ்வளவு சுத்தமா கழுவிட்டிருந்தாரோ இப்போ நேர் மாறா, குளிக்காம, சில நேரம் பத்து நாள் ஒரே ட்ரெஸ்ஸோடன்னு வராரு. தூங்குறாரு. சில நேரம் ஏதோ ஒன்னு ரெண்டு வேல குடுத்தா பார்ப்பாரு.

என்னத்த சொல்ல? சில நேரம் பாவமா இருக்கும். டாக்டர பாருப்பான்னு ஒரு வாட்டி ஆலோசனை சொன்னேன். நான் என்ன மெண்டலா சார்னாரு. இல்லப்பா நாந்தான்னு விட்டுட்டேன்.

74 comments:

பிரபாகர் said...

ஸ்... அப்பா! வடை எனக்குத்தான்....

பிரபாகர்...

பிரபாகர் said...

//கடவுள் ஏங்கறவங்களுக்கு குழந்தையில்லாம சாவடிக்கறதும், இந்த மாதிரி ஏப்பராசிங்களுக்கு இந்தா புடின்னு கொடுக்கறதும் சகஜம்தானே//

இந்த மாதிரியெல்லாம் சாதாரணமா சொல்லிட்டு அசத்துறீங்க அய்யா!

பிரபாகர்...

பிரபாகர் said...

//
நான் என்ன மெண்டலா சார்னான். இல்லப்பா நாந்தான்னு விட்டுட்டேன்.
//
இப்படித்தாங்கய்யா! நிறய பேரு நம்மள லூசாக்கிடுவாங்க!

பிரபாகர்...

பிரபாகர் said...

//அனுமார் மாரைப் பிளந்து உள்ள சீதா ராமனைக் காட்டினா மாதிரி சட்டையை பட்டன் தெறிக்க பிச்சி காட்டினா மஞ்ச மஞ்சளா இருக்கு.//

என்னா உதாரணம்... அருமை...

பிரபாகர்...

padma said...

இது ஒரு மனோ வியாதி,பாவம்!

நல்ல observation sir உங்களுக்கு .

அமைதிச்சாரல் said...

அந்த பொண்ணு நிலைமை பரிதாபம்தான். அசத்தலான பதிவு.

ராஜ நடராஜன் said...

அய்யோ!பரிதாபம்:(

நாடோடி said...

அபூர்வ‌மான‌ கேர‌க்ட‌ர் தான்.....

பழமைபேசி said...

அடடே...

நசரேயன் said...

அண்ணன்.. அண்ணன்தான்

இராமசாமி கண்ணண் said...

எங்க வீட்டு பக்கத்துலயும் இப்படி ஒருத்தர் இருந்தாரு. கை கால் கழுவறதுக்கே அரை டேங்க தண்ணிய காலி பன்னுவாப்ல.

பா.ராஜாராம் said...

என்ன observation பாலா சார்!

great!

அது சரி said...

Well, what to say? For the sake of greater humanity, people should be sent to a mental hospital or should be sent to prison until they die. There is no point in allowing them in the society.

Chitra said...

என்னத்த சொல்ல? சில நேரம் பாவமா இருக்கும். டாக்டர பாருப்பான்னு ஒரு வாட்டி ஆலோசனை சொன்னேன். நான் என்ன மெண்டலா சார்னாரு. இல்லப்பா நாந்தான்னு விட்டுட்டேன்.


..... Did he have obsessive compulsive disorder? mmm..... paavam!

Dr.P.Kandaswamy said...

ஒரு 10 % ஜனங்க இப்படித்தான் இருக்காங்க, என்ன செய்யறது?

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

இப்படிப்பட்டவர்களுக்கு நாம் தான் உதவவேண்டும்

ப்ரின்ஸ் said...

ஏதாவது நல்ல டாக்டர் இருந்தா சொல்லுங்க சாமியோ!!!! எல்லாம் வரு முன் காப்போம் நடவடிக்கை தான் (எய்ட்ஸ விடவும் பயங்கரமா இருக்கும் போல)

ரோஸ்விக் said...

இவருதான் கக்கூஸ் படத்துக்கு மாடலா இருந்திருப்பாரோ?? :-)

அந்த உருவம் என் கண்ணு முன்னாடியே போறது மாதிரி இருந்துச்சு உங்க எழுத்து நடை. அருமை-ன்னு தானே சொல்ல முடியும்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

என்னத்த சொல்ல? சில நேரம் பாவமா இருக்கும். டாக்டர பாருப்பான்னு ஒரு வாட்டி ஆலோசனை சொன்னேன். நான் என்ன மெண்டலா சார்னாரு. இல்லப்பா நாந்தான்னு விட்டுட்டேன்.//

:(

சேட்டைக்காரன் said...

நகைச்சுவை இழையோட சொல்லியிருந்தாலும், கேரக்டர் சுந்தரத்துக்கு நிச்சயமாக ஏதோ உளவியல் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுவதால், அனுதாபமே மிஞ்சுகிறது.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

நடை இயல்பான நடை - கண்களின் வலிமை - பார்த்ததை - உள் வாங்கி - மெருகேற்றி - எழுத்தில் கொண்டு வரும் திறமை - பாராட்டுக்குரியது பாலா

கேரக்டர் - சுந்தரம் - சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தலான பதிவு.

மாதேவி said...

வாழ்க்கையில் ரென்சன் அதிகரித்து உளவியலாகப் பாதிக்கப் பட்டவர்கள் இப்படி நடப்பதுண்டு.

நீங்கள் கூறியதுபோல டாக்டரைப் பார்ப்பது அல்லது கவுன்சிலிங் போவது சிறந்ததாக இருக்கும்.

’மனவிழி’சத்ரியன் said...

//ஹி ஹி. இப்புடியே கிட்ட கிட்ட அதே சீட்ல 15 வருஷம் ஓட்டிட்டாருங்கோவ். //

ரொம்ப நல்ல கம்பெனியா இருக்கும் போல் தெரியுதே. எனக்கும் கொஞ்சம் ரெக்கமெண்ட் பண்ணப்பிடாதா?

’மனவிழி’சத்ரியன் said...

//சில நேரம் பாவமா இருக்கும். டாக்டர பாருப்பான்னு ஒரு வாட்டி ஆலோசனை சொன்னேன். நான் என்ன மெண்டலா சார்னாரு. இல்லப்பா நாந்தான்னு விட்டுட்டேன்.//

அப்புறம்... நீங்க போயி டொக்டர பாத்தீங்களா? இல்லியா?

’மனவிழி’சத்ரியன் said...

//இந்த டாய்லட்ல ஆம்பிளைங்கன்னு அடையாளத்துக்கு ஒரு உருவம் போட்டிருக்கும் பார்த்திருப்பீங்களே.//

வேற எங்கயும் ஆம்பிளைங்க அடையாளத்த பாத்ததே இல்லயா?

ஏஞ்சாமி இப்பிடியெல்லாம்?

’மனவிழி’சத்ரியன் said...

//ஸ்... அப்பா! வடை எனக்குத்தான்....//

இந்தாளு வேற , எப்பப்பாத்தாலும் ”வடை”க்கு அலைஞ்சிக்கிட்டு...!

ஸ்ரீராம். said...

நாம் பார்ப்பவர் எல்லோரிடமும் இப்படி ஒரு கேரக்டர் இருக்கு என்றாலும் அதை இப்படி எடுத்து எழுத உங்களால்தான் முடியும்...

’மனவிழி’சத்ரியன் said...

//என்ன observation பாலா சார்!

great!//

பா.ரா. மாமா,

15 வருஷமா கவனிச்சாராம்ல!

யூர்கன் க்ருகியர் said...

கல்யாணத்துக்கு முன்னாடி பளிங்கு கல் மாதிரி பள பளன்னு இருந்த சுந்தரம் கல்யாணத்துக்கு பின்னாடி பாலீஷ் போடாத பழைய பூட்ஸ் மாதிரி ஆயிட்டாரே..

இந்த மாதிரி மனநிலை பிறழ்ந்தவர்களை வேலைக்கு 15 வருசமா வச்சிட்டு இருந்த மன்னாரு கம்பெனி எதுங்க ?

செ.சரவணக்குமார் said...

உங்களுக்கே உரித்தான அசத்தலான நடையில் நகைச்சுவை இழையோட ஒரு நல்ல பதிவு பாலா சார். கேரக்டர் சுந்தரத்தை நினைத்தால் கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கிறது. உளவியல் ரீதியான பாதிப்பில் இருக்கும் இதுபோன்ற நபர்களின் நடவடிக்கைகள் சற்று வேடிக்கையாக இருந்தாலும் அவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது.

அகல்விளக்கு said...

//இந்த மாதிரி மனநிலை பிறழ்ந்தவர்களை வேலைக்கு 15 வருசமா வச்சிட்டு இருந்த மன்னாரு கம்பெனி எதுங்க ?//

தி லைஃப் லைன் ஆப் இண்டியா....

அகல்விளக்கு said...

//தங்கமணி புள்ளைய பாப்பாளா இந்த புண்ணாக்க பாப்பாளா?/

ரொம்ப கஷ்டம்ங்க. அந்தம்மா டைவர்ஸ் பண்ணது தப்பே இல்ல...

க.பாலாசி said...

//இல்ல எம் பொண்டாட்டி பனியனுக்குள்ள மிளகாய்த்தூள் கொட்டி வச்சிட்டா. //

இந்த மனுஷனுக்கு உண்மையாவே கொட்டி வச்சிருக்கணும்...

கேரக்டர படிக்கும்போது எனக்கு மிஸ்டர் பீன் படம் பாத்தமாதிரி ஒரு ஃபீலிங்.... அவ்ளோ நக்கலு....

இந்தாள கட்டிக்கிட்ட அந்த பொம்பள என்னா பாடுபட்டுச்சோ... அதான் டைவர்ஸ் பண்ணிடுச்சு....

ம்ம்ம்.........

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////பாக்கட்டுள்ள கடுதாசில மடிச்ச ஒரு சாம்பிள் சோப் எடுத்து செட் பண்ணாரு. நாறுனாலும் பரவால்லடே! என்னா ப்ளானுன்னு பார்க்காம போறதில்லைன்னு நின்னுட்டேன். /////////


என்ன ஒரு வில்லாத்தனம் .
பாவம் அவர் .

ஈரோடு கதிர் said...

//தலைய சீவோ சீவுன்னு சீவினாரு. //

நமக்கு முடியில்லையேன்னு வயித்தெறிச்சலு

Sabarinathan Arthanari said...

இது சீரியஸ் விசயமாக தான் படுகிறது. மன நிலை தவறியவர்கள் அதை உணர்ந்து கொள்வது கடினம் தானே ?!

அவருடைய நண்பர்களோ அல்லது உறவினர்களோ மன நல மருத்துவரை அணுக வைக்க முயற்சி செய்யலாம்

’மனவிழி’சத்ரியன் said...

//தலைய சீவோ சீவுன்னு சீவினாரு. //

நமக்கு முடியில்லையேன்னு வயித்தெறிச்சலு//

அட! இதான் காரணமா? அப்ப சரி.

’மனவிழி’சத்ரியன் said...

//இந்த மனுஷனுக்கு உண்மையாவே கொட்டி வச்சிருக்கணும்... //

சரி மாப்ள. உங்க வீட்டுல சொல்லி வெக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

ரொ...ம்...ப.... லேட்டோ ஓஓஓஓஓஓஓஒ...

சரி சரி நோ கோபம். அதான் வந்துட்டேன் இல்ல... வொய் டென்ஷன் ... நோ டென்ஷன்... நோ....நோ...

இராகவன் நைஜிரியா said...

// இந்த டாய்லட்ல ஆம்பிளைங்கன்னு அடையாளத்துக்கு ஒரு உருவம் போட்டிருக்கும் பார்த்திருப்பீங்களே. //

ஆஹா... ஆரம்பமே களை கட்ட்டுதே..

இராகவன் நைஜிரியா said...

// அஞ்சடி ரெண்டங்குலம் இருப்பாரு. //

அகலமா? உயரமா?

இராகவன் நைஜிரியா said...

// தலைய சீவோ சீவுன்னு சீவினாரு. //

அது சரி... கூந்தல் உள்ள சீமாட்டி... நாம அதப் பத்தி கவலைப் படலாமா?

இராகவன் நைஜிரியா said...

// மாமனார் தலையில அடிச்சிகிட்டு, //

தன் தலையில அடிச்சுகிட்டதற்கு பதிலா... மாப்பிள்ளை தலையில இரண்டு போட்டு இருந்தார்னா... அன்னிக்கே வழிக்கு வந்துருப்பாரு..

அகல்விளக்கு said...

இந்தப் பக்கம் ஏதோ கும்மி வாசம் வருதே-ன்னு வந்தேன்...

இராகவன் நைஜிரியா said...

// டாக்டர பாருப்பான்னு ஒரு வாட்டி ஆலோசனை சொன்னேன். நான் என்ன மெண்டலா சார்னாரு. //

அது சரி... புரிஞ்சுக்கிற மனநிலையிலா அவர் இருக்காரு?

இராகவன் நைஜிரியா said...

// அகல்விளக்கு said...
இந்தப் பக்கம் ஏதோ கும்மி வாசம் வருதே-ன்னு வந்தேன்... //

நல்லாத்தான் வாசம் புடிக்கிறாங்கப்பா..

சரி வந்ததுதான் வந்தீங்க... கொஞ்சம் கும்மி அடிச்சுட்டுப் போறது

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகர் said...
ஸ்... அப்பா! வடை எனக்குத்தான்....

பிரபாகர்...
//

அடாது வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் விடாது வடை வாங்கு பிரபாகர் அண்ணனுக்கு ஒரு “ஓ” போடுங்கப்பா..

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகர் said...
இந்த மாதிரியெல்லாம் சாதாரணமா சொல்லிட்டு அசத்துறீங்க அய்யா!

பிரபாகர்.. //

அசாதரணமானாதையும் சாதாரணமாகச் சொல்லுவதுதான் அண்ணன் ஸ்டைல்.

அகல்விளக்கு said...

//இராகவன் நைஜிரியா said...

சரி வந்ததுதான் வந்தீங்க... கொஞ்சம் கும்மி அடிச்சுட்டுப் போறது//

ஸ்டார்ட் மீஜிக்...

அகல்விளக்கு said...

//இராகவன் நைஜிரியா said...

சரி வந்ததுதான் வந்தீங்க... கொஞ்சம் கும்மி அடிச்சுட்டுப் போறது//

ஸ்டார்ட் மீஜிக்...

அகல்விளக்கு said...

// யூர்கன் க்ருகியர் said...
இந்த மாதிரி மனநிலை பிறழ்ந்தவர்களை வேலைக்கு 15 வருசமா வச்சிட்டு இருந்த மன்னாரு கம்பெனி எதுங்க ?//

வேற யாருங்க...

எல்லாம் நம்ம அரசாங்கம்தான்..

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

அகல்விளக்கு said...

// இராகவன் நைஜிரியா said...

// அஞ்சடி ரெண்டங்குலம் இருப்பாரு.//

அகலமா? உயரமா?//

இல்ல ரெண்டுமா??

அகல்விளக்கு said...

//பிரபாகர் said...

//அனுமார் மாரைப் பிளந்து உள்ள சீதா ராமனைக் காட்டினா மாதிரி சட்டையை பட்டன் தெறிக்க பிச்சி காட்டினா மஞ்ச மஞ்சளா இருக்கு.//

என்னா உதாரணம்... அருமை...

பிரபாகர்...//


அண்ணன் ஏற்கனவே இத பண்ணியிருப்பாரு போலயே....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அகல்விளக்கு said...

// ஈரோடு கதிர் said...
//தலைய சீவோ சீவுன்னு சீவினாரு. //
நமக்கு முடியில்லையேன்னு வயித்தெறிச்சலு//

'நமக்கு' அப்படிங்கிற பொதுப்பதம் நல்லாருக்கு....

:-)

இராகவன் நைஜிரியா said...

// அகல்விளக்கு said...
// ஈரோடு கதிர் said...
//தலைய சீவோ சீவுன்னு சீவினாரு. //
நமக்கு முடியில்லையேன்னு வயித்தெறிச்சலு//

'நமக்கு' அப்படிங்கிற பொதுப்பதம் நல்லாருக்கு....

:-)//

ரிப்பீட்டிக்கிறேன்

வானம்பாடிகள் said...

@@நன்றி பிரபாகர்
@@ஆமாங்க பத்மா. நன்றி
@@நன்றி அமைதிச்சாரல்.
@@நன்றி நடராஜன். ஆமாம்.
@@நன்றிங்க நாடோடி
@@நன்றிங்க பழமை
@@நன்றி நசரேயன்:)
@@நன்றி கண்ணன். ஆமாம் நிறைய.
@@நன்றிங்க பா.ரா

வானம்பாடிகள் said...

அது சரி said...

/ Well, what to say? For the sake of greater humanity, people should be sent to a mental hospital or should be sent to prison until they die. There is no point in allowing them in the society./

He is smart enough to bring union pressure if questioned about his indiscipline. He will just blink, wont answer, wont work. He is otherwise perfectly normal.

வானம்பாடிகள் said...

@@ I think so chitra. But this suits him better so he is happy.
@@நன்றிங்க டாக்டர். முதல் வருகைக்கும் பின்னூடதத்திற்கும்.
@@நன்றி நண்டு@. இல்லைங்க இது கொஞ்சம் வேறமாதிரி.
@@நன்றி ப்ரின்ஸ்
@@நன்றி ரோஸ்விக்
@@நன்றி ஷங்கர்.
@@நன்றி சேட்டை. ம்ம்
@@நன்றிங்க சீனா? எங்க ரொம்ப நாளா கடைப்பக்கம் காணோம்.
@@நன்றிங்க டி.வி.ஆர்.
@@நன்றிங்க மாதேவி. ஆனா அவருக்கு அதில் விருப்பமில்லை.
@@நன்றி சத்திரியன். ஆமாம். தருமசத்திரம் இது.
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி யூர்கன்:)). சொல்லக்கூடாதே:))
@@நன்றி சரவணக்குமார்.
@@ஆஹா ராசா கும்மியா:) நடத்து
@@நன்றி பாலாசி
@@நன்றி பனித்துளி
@@நன்ற்ங்ணோவ். ம்கும். எரிஞ்சிட்டாலும்
@@ஆகா ராகவண்ணாக்கு கம்பெனி கும்மிக்கு

கலகலப்ரியா said...

ம்ம்... இதெல்லாம் கவனிச்சுக்கிட்டு ப்ளாக் போடுற ஆளப் பத்தி நான் எழுதுறேன் ஒரு நாள்... முக்கியமா இதெல்லாம் சொல்றப்போ எப்டி சிரிப்பாங்கன்னு சொல்றேன்... சும்மா அதிருமில்ல...

வானம்பாடிகள் said...

/ம்ம்... இதெல்லாம் கவனிச்சுக்கிட்டு ப்ளாக் போடுற ஆளப் பத்தி நான் எழுதுறேன் ஒரு நாள்... முக்கியமா இதெல்லாம் சொல்றப்போ எப்டி சிரிப்பாங்கன்னு சொல்றேன்... சும்மா அதிருமில்ல.../

ஆஹா! தாமதமில்லாம எழுத்து. நான் எப்படி இருக்கேன்னு பார்க்க ஆவலா இருக்கு. :))

நேசமித்ரன் said...

அண்ணே கலக்கல் இடுகை
நல்லா கவனிச்சிருக்கீங்க
//
/ம்ம்... இதெல்லாம் கவனிச்சுக்கிட்டு ப்ளாக் போடுற ஆளப் பத்தி நான் எழுதுறேன் ஒரு நாள்... முக்கியமா இதெல்லாம் சொல்றப்போ எப்டி சிரிப்பாங்கன்னு சொல்றேன்... சும்மா அதிருமில்ல.../

ஆஹா! தாமதமில்லாம எழுத்து. நான் எப்படி இருக்கேன்னு பார்க்க ஆவலா இருக்கு. :))

April 24, 2010 8:09 PM///


Waiting :)

ரோகிணிசிவா said...

good observaton and good presentation too ,thank u for sharing .
psychiatrist makes difference not only for te person and also to his family ,according to me te worst suffering for one in the life time is psychiatric illness,and those psychiatrists,who treat them are real Gods,though most Dr are addressed as Gods

Balavasakan said...

பாவம் சார் நீங்களும் உங்கள் அலுவலகமும்...!

முகிலன் said...

//பிரபாகர் said...
ஸ்... அப்பா! வடை எனக்குத்தான்....

பிரபாகர்.//

அந்த வடை ஊசிப்போகக் கடவது... (நற நற நற)

முகிலன் said...

இது கண்டிப்பா O.C.D கேஸ்தான்..

முகிலன் said...

//அது சரி said...
Well, what to say? For the sake of greater humanity, people should be sent to a mental hospital or should be sent to prison until they die. There is no point in allowing them in the society.//

தப்பு டெல்டா.. இவங்களை சரியா ட்ரீட் பண்ணாலே போதும்.

வானம்பாடிகள் said...

நேசமித்ரன் said...

/அண்ணே கலக்கல் இடுகை
நல்லா கவனிச்சிருக்கீங்க//


இல்லைங்க அனுபவிச்சிருக்கேன்:))//
/ம்ம்... இதெல்லாம் கவனிச்சுக்கிட்டு ப்ளாக் போடுற ஆளப் பத்தி நான் எழுதுறேன் ஒரு நாள்... முக்கியமா இதெல்லாம் சொல்றப்போ எப்டி சிரிப்பாங்கன்னு சொல்றேன்... சும்மா அதிருமில்ல.../

ஆஹா! தாமதமில்லாம எழுத்து. நான் எப்படி இருக்கேன்னு பார்க்க ஆவலா இருக்கு. :))

Waiting :)//

ஆஹா!

வானம்பாடிகள் said...

ரோகிணிசிவா said...

good observaton and good presentation too ,thank u for sharing .
psychiatrist makes difference not only for te person and also to his family ,according to me te worst suffering for one in the life time is psychiatric illness,and those psychiatrists,who treat them are real Gods,though most Dr are addressed as Gods//

நன்றிங்க. சரியாச் சொன்னீங்க. ஆனா அவருக்கு இது வசதியா இருக்குங்க.

வானம்பாடிகள் said...

Balavasakan said...

பாவம் சார் நீங்களும் உங்கள் அலுவலகமும்...!//

ஆமாம். அவ்வ்வ்

வானம்பாடிகள் said...

முகிலன் said...

இது கண்டிப்பா O.C.D கேஸ்தான்..//

ஆமாம். ஆனா அது முத்திப்போய் சந்தேக கேசாகிப் போச்சு.

/தப்பு டெல்டா.. இவங்களை சரியா ட்ரீட் பண்ணாலே போதும்./

ஹி ஹி. சாரி. இவரு பெசல். அதெல்லாம் போய் வந்தும் இப்படி இருக்கறது வசதியாப் போச்சு. கொஞ்சம் கடுமையா பேசினா யூனியன் ரெப்கு சரக்கடிக்க காசு குடுத்து நம்மள டரியலாக்குவாரு. மத்தபடி எல்லாத்துலயும் நார்மல்.

காமராஜ் said...

பாலா சார் அந்த கோல்ப் காரர எங்க புடிச்சீங்க இருக்கிறதுலயே அதான் டாப் க்ளாஸ்.சரவெடி வெடிச்சுக்கிட்டே இருக்கு. இன்னொரு தரமும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.

கிராமத்து கருப்பன் said...

கடைசிவரை அந்த வியாதிக்கு என்ன பேருன்னு சொல்லவெயில்லையே...