Friday, April 2, 2010

ரெட் ரிப்பன் ரயில்

ஒரு பத்திரிகைன்னா குறைஞ்ச பட்சம் மலச்சிக்கல் இருக்கிறவங்க கழிப்பறைக்கு கொண்டு போய் படிக்கவாவது உதவணும். காலையில பத்திரிகைய படிச்சா வாந்தி வருது.

சம்பளமோ, போனசோ எதுனாலும் திநகர்ல கொண்டு கொட்டினாதான் நமக்கு விடியும். ரோட்டோரம் மரங்களும் அங்கனதான் இருக்கு. மரத்து கீழதான் ஹேர்கிளிப், ஸ்டிக்கர் பொட்டு கடைகளும் இருக்கு. நான் நிறைய பார்த்து நொந்து போயிருக்கேன். வயசு புள்ளைங்க மரத்திலிருக்கும் ஒரு விளம்பரத்தை கண்ணு விரியப் பார்த்து திகைத்து நிற்பதை.

மரத்துக்கு மரம் ஒரு பிரபல மருத்துவமனையின் விளம்பரம்.  “அரை மணி நேரத்தில் வலியின்றி கருக்கலைப்புச் செய்யப்படும். ஒரு நெருங்கிய உறவினருடன் வரவும்.” இன்னும் ஐம்பது வருடமானாலும் நாம் இப்படித்தான் இருப்போம் போலும்.

எங்கம்மா 16 வயசுலதான் வேண்டாத தெய்வத்த வேண்டி பெரிய மனுசியாச்சி. நாம்பதினஞ்சு. எம்பொண்ணும் என்னய மாதிரிதான்னு இருந்துட்டு அது 12 வயசுல பள்ளியில் வயதுக்கு வந்து பயந்து அழுது வந்தாலும் உறைக்காது நம்மவர்க்கு. தெரிஞ்சிக்க வேண்டியதை சொல்லிக் கொடுக்கக் கூச்சம் என்பதா? சொல்லத் தெரியாது என்பதா?

ஏன் பொங்குறன்னு கேக்கறீங்களா? பல லட்சம் ப்ரதிகள் விற்பனையாகும் ஒரு எழவெடுத்த தினசரி செய்யும் சமூக சேவையை பாருங்கள்.


பல கோடி ரூபாய் செலவில், அரசுத்துறை எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்ச்சிக்கு ரெட் ரிப்பன் ரெயில் என்ற ஒரு இரயில் மூலம் தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் விளக்கத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் காட்டப்படும் படங்கள் மாணவ மாணவிகளைக் கெடுத்து விடுமாம். கருத்தடைச் சாதனம் பற்றிக் கேட்டு மாணவிகள் வெட்கப்பட்டு ஓடி விட்டார்களாம்.

ஒரு அதி மேதாவி சொன்னதாம். எய்ட்ஸ் குறித்து, உடல் உறுப்பு குறித்து யாருக்கு சந்தேகம் இருக்கிறதோ அவர்களுக்குதான் விழிப்புணர்வு தேவை. அது குறித்து ஒன்றும் அறியாத மாணவ மாணவிகளுக்கு இது தேவையில்லையாம்.

ஆமாம். இது குறித்தெல்லாம் தெரிந்துவிட்டால் சாமியார் சல்லாப வியாபாரம் நடக்காதே. விழிப்புணர்வு வந்துவிடுமே.

சரி! ஒரு வேளை தான் எழுதுவதிலாவது ஒரு நேர்மையான நம்பிக்கையுடன் தொழில் தர்மம், கொள்கை, கலாச்சாரக் காவலன் முத்திரையாவது இருக்கிறதா என்றால் காசுக்கு இவன் செய்யும் சேவை இது


ரயிலாவது இவன் சொல்கிறார்போல் தேடிப் போய் கெட்டுப் போகும் வழி. இவன் பத்திரிகையை வாங்கி வீட்டில் வைத்தாலே பிள்ளைகள் கெட்டுப் போகுமே.

அரசு கண்டிப்பாக இத்தகைய பத்திரிகைகள் மேல் தயங்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெற்றோர்களாக நம் பிள்ளைகளை இதற்கு ஊக்குவிப்பது நம் கடமை. சென்னை செண்ட்ரலில் 11ம் ப்ளாட்பாரத்தில் இந்த ரயில் இருக்கிறது.

51 comments:

கலகலப்ரியா said...

//காலையில பத்திரிகைய படிச்சா வாந்தி வருது. //

அப்போ மாலைல படிங்க... என்ன கொடுமை சரவணா...

ஈரோடு கதிர் said...

ஒரு வேள வேற கலர் ரிப்பன் ரயில் உட்ருந்தா வலிப்புணர்வு... சாரி விழிப்புணர்வு சரியா ரீச்சாயிருக்குமோ?

கலகலப்ரியா said...

//கருத்தடைச் சாதனம் பற்றிக் கேட்டு மாணவிகள் வெட்கப்பட்டு ஓடி விட்டார்களாம். //

ச்ச்ச்சோ...

பழமைபேசி said...

அறச்சீற்றம்.... விழிப்புணர்வுக்கான இடுகை! வணங்குகிறேன்!!

sriram said...

தந்தி பத்தி தப்பா சொல்லிட்டீங்கல்ல, இப்போ பாஞ்சி வருவானுங்க பாருங்க தின மலர் செய்யுறதெல்லாம் சொல்லுவியான்னு கேட்டுகிட்டு..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சைவகொத்துப்பரோட்டா said...

ரொம்ப.....ரொம்ப..........
சூடான, அவசியமான இடுகை.

சூர்யா ௧ண்ணன் said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

நியாயமான அறச்சீற்றம் ஐயா...

பத்திரிக்கை தர்மம் எல்லாம் இப்போ பணம் காசு மட்டும்தான்... :((

நசரேயன் said...

//அரசு கண்டிப்பாக இத்தகைய பத்திரிகைகள் மேல் தயங்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
//

தயவு செய்து காத்து இருக்கவும் 2050 வரை

Chitra said...

ஒரு பத்திரிகைன்னா குறைஞ்ச பட்சம் மலச்சிக்கல் இருக்கிறவங்க கழிப்பறைக்கு கொண்டு போய் படிக்கவாவது உதவணும். காலையில பத்திரிகைய படிச்சா வாந்தி வருது.


............ applause ! முதல் வரிகளிலேயே சொல்ல வந்த கருத்தை நச்னு சொல்லிட்டீங்க.

கலகலப்ரியா said...

//
ஒரு அதி மேதாவி சொன்னதாம். எய்ட்ஸ் குறித்து, உடல் உறுப்பு குறித்து யாருக்கு சந்தேகம் இருக்கிறதோ அவர்களுக்குதான் விழிப்புணர்வு தேவை. அது குறித்து ஒன்றும் அறியாத மாணவ மாணவிகளுக்கு இது தேவையில்லையாம்.//

ஆகா.. இப்போதான் படம் க்ளிக் பண்ணாம விட்டுட்டோமேன்னு கவனம் வந்து திரும்ப வந்து க்ளிக் பண்ணேன்.. அட அட அட... அட அட அட... இது எங்கள் தமிழ்த்தாய்... கலாச்சாரத்தைக் கட்ட்ட்டிக் காக்கும் கண்ணகி.. தமிழ்ப் பண்பாட்டின் சின்னம்... சிலை வைக்க ஏற்பாடு பண்ணுறத விட்டுப்புட்டு நக்கலா பண்ணுறீங்க... உங்கள மாதிரி ஆளுங்களாலதான் சமூகம் சீரழிந்து விட்டது...

கலகலப்ரியா said...

ஐய்யய்யோ மத்தப் படத்தில அந்தப் பொம்மை படம் பயம்மா இருக்கு சார்... நம்புங்க.. ட்ரெயின்ல வெக்கப்பட்டு ஓடினது நான் இல்லை...

ராஜ நடராஜன் said...

முதல் முறையா படிக்கும் போது தி.நகர்,மரம்ன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.ரெட் ரிப்பன் ரயிலை மறுபடியும் படிக்கும் போதுதான் சொல்ல வந்தது புரிந்தது.

(வர வர ட்யூப் லைட்டாவே ஆகிட்டு வர்ற ராஜா)

எல்லாருக்கிட்டயும் புலம்ப முடியல.அதனால உங்ககிட்ட.ஆமா!சங்கம்,சிங்கம்ன்னு அடிபடுதே!அதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

10,20 பேர் ஒண்ணா இணையறதுக்கே இந்த சிரமம்.அந்த மனுசன் 30 வருசமா ஒரு இயக்கத்தை அத்தனை சிரமத்துக்குள்ளும் அணி அணியாக திரட்டியது எவ்வளவு பெரிய சாதனை?

அட!புலம் பெயர்ந்ததுகளா?புலத்துக்குள்ளே புலம்புறதுகளா?காதுல விழுதா!

ராஜ நடராஜன் said...

உங்களுக்கெல்லாம் பின்னூட்டம் போடறத தவிர வேற வேலையே இல்லையா:)

முந்தைய பின்னூட்டம் போடும் போது 7பேர்தான் காட்டுச்சு.இப்ப 13.

ராஜ நடராஜன் said...

////காலையில பத்திரிகைய படிச்சா வாந்தி வருது. //

அப்போ மாலைல படிங்க... என்ன கொடுமை சரவணா...//

நசரேயன் எதிர்த்த பெஞ்சுல உட்கார்ந்திருந்தாலும் கலகலப்ரியா கலகல:)

றமேஸ்-Ramesh said...

முதல் பராவே போதும்... பத்திரிகை எல்லாம் பார்க்கவே பிடிக்கல..
நல்ல பகிர்வு விழிப்புணர்வான பதிவு

இராமசாமி கண்ணண் said...

நல்ல பதிவு சார். நல்ல நச்சுன்னு நடு மண்டைல ஒரு போடு போட்ட மாதிரி இருக்கு. ஆனா அவனுங்களுக்கு அறிவு வருமான்னு தெரியல.

கயல் said...

ம்ம்! என்ன பண்ணுறது இவனுங்களை? யாராவது தெளிஞ்சிருவாங்கன்னா பத்திக்கிட்டு வந்திரும். சில நல்ல விசயங்களை இந்த மாதிரி தேவையற்ற விமர்ச்சனங்களினால் திசைமாதிரி போயிடுது! நல்ல விசயத்துக்குத் தான் பொங்குவீங்கன்னு தெரியும்... அதான் ஒரு எட்டு பாத்துட்டு போலாமுன்னு... வரட்டா?

ஜெரி ஈசானந்தன். said...

Train..train.go away,
come again another day..
அப்பிடீன்னு,சொல்லிட்டாங்களோ.

ஈரோடு கதிர் said...

//அரசு கண்டிப்பாக இத்தகைய பத்திரிகைகள் மேல் தயங்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். //

க்க்கும்.... ரொம்பத்தான் ஆச....

ஈரோடு கதிர் said...

//ஜெரி ஈசானந்தன். said...
Train..train.go away,
come again another day..
அப்பிடீன்னு,சொல்லிட்டாங்களோ.//

ஈசானந்’தா’..னே பேர் இருந்திருக்கலாம்...

இராகவன் நைஜிரியா said...

பத்திரிக்கை என்பது வியாபரமாகிவிட்டது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பது மாறி பணநாயகத்தின் முதல் தூணாக பத்திரிக்கைகள் மாறிவிட்டன.

மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளுக்கு இவர்கள் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அவசியமான இடுகை.

நாஞ்சில் பிரதாப் said...

நம்ம மக்களை நினைச்சாலும் சிரிப்புத்தான் சார் வருது... மானாட மயிலாட, ராணிஆறு ராஜா யாருன்னு ஆபாச நிகழ்ச்சிகளை குழந்தைகளோட குடும்பத்தோட பார்ப்பாங்களாம் இதுமாதிரி விழிப்புணர்வு படங்களில் ஆபாசமாக தெரிகிறதாம்...என் கொடுமை சார் இது...

நேசமித்ரன் said...

என்ன மாதிரியான சமூகத்தை கட்டமைக்க விரும்புகிறார்கள் இவர்கள்

குறைந்த பட்ச தார்மீகமும் தீர்ந்து போனவர்கள்...

ச்சே

:(

நாடோடி said...

நல்ல விழிப்புணர்வு இடுகை...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நான் 9ஆவது டான்பாஸ்கோவில் படிக்கும்போது ஒரு பாதிரியார்தான் எங்களுக்கும், ஆக்ஸிலியம் பள்ளி மாணவிகளுக்கும் சேர்த்து ஒன்றாய் புரொஜெக்டரிலேயே படமாய், பாடம் எடுத்தார், கேள்விகள் கேட்க வைத்து மிகவும் உபயோகமாய் அந்த நிகழ்வை ஆக்கினார். காலையில் சிறப்பான ஏற்பாடுகளுடன் அந்த ரயிலை கண்டேன். பெரிய வண்ணத்திரைகளுடன் மாலையிலும் பெரும்பாலான மக்கள் வந்த வண்ணமே இருந்தனர்.
--
பத்திரிக்கை..ஹும்ம்!!

புரொஃபைல் படத்த மாத்துங்க சார் ஒரு சாட்டைய கையில வெச்சிருக்கற மாதிரி,,:)

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

//பெற்றோர்களாக நம் பிள்ளைகளை இதற்கு ஊக்குவிப்பது நம் கடமை.//
சரியா சொன்னீங்க .

~~Romeo~~ said...

நேத்து பார்க்கலாம் என்று சென்றேன் செம கூட்டம். பார்க்க முடியவில்லை, இன்னும் கொஞ்சம் நாள் இருந்து இருக்கலாம்.

கேவலமான செய்தி அது. ஊடங்கங்கள் எல்லாம் இப்படி எழுதினால் அப்பறம் எப்போது தான் பாலியல் கல்வியை நாம் நடைமுறபடுத்த முடியும் ??

முகிலன் said...

இந்த ஜென்மங்களெல்லாம் திருந்தவே திருந்தாதுகள்..

ஆனாலும் நாம் எறிய வேண்டிய கல்லை எறிந்துதான் ஆகவேண்டும்.

சூர்யா ௧ண்ணன் said...

தலைவா!

இது குறித்த விழிப்புணர்வு வந்தாலோ அல்லது , தயக்கம் போயிருச்சுன்னா, இவங்களுக்கு "தேவ லீலை" யும் "ரகசிய சிநேகதி" யும் படம் காமிச்சு எப்படி வியாபாரம் பண்ணுவான்?

கேடு கேட்ட வியாபாரிகள்..

ச.செந்தில்வேலன் said...

அவசியமான இடுகை.

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! ரெண்டு படத்துக்கும் நல்ல லிங்க் கொடுத்திருக்கீங்க. சினிமால சீரியல்ல காட்டாத விச்யமா? மானாட மயிலாய ஒன்னு போதாதா ரெட் ரிப்பனை மிஞ்ச!!!

க.பாலாசி said...

//அரசு கண்டிப்பாக இத்தகைய பத்திரிகைகள் மேல் தயங்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். //

நீங்க எந்த அரச சொல்றீங்க... இப்ப, இங்கண நடந்திகிட்டு இருக்குற அரசையா.?? ஏங்கய்யா நீங்கவேற... அவுத்துப்போட்டுட்டு ஆடுறவள கீழ ஒட்காந்துகிட்டு வேறஎதாவது தெரியுதான்னு பாக்குற அரசியல் கூட்டங்க இது....

க.பாலாசி said...

நல்ல ஆதங்கம்... அந்த ட்ரெயின் ஈரோட்டுக்கு வந்தா சொல்லுங்க... நிறைய தெரிஞ்சிக்கணும்...

அஹமது இர்ஷாத் said...

நச் பதிவு.

ஸ்ரீராம். said...

தெரிஞ்சுதான் எழுதறாங்களா, தெரியாம எதையாவது எழுதிடறாங்களான்னு தெரிய மாட்டேங்குது

princerajan C.T said...

சமூக அக்கறை கொண்ட பதிவுகள் வரவேற்க தக்கது

ரோஸ்விக் said...

எலவெடுத்தவனுகளுக்கு என்ன எழுதுறதுன்னே தெரியாமப் போச்சு போல. கேட்டா என்ன தெரியுமா சொல்லுவாய்ங்க மக்கள் இன்னும் எப்படியெல்லாம் மடத்தனமா இருக்காங்கன்னு சொல்றதுக்காக இத பிரசுருச்சொம்பாய்ங்க... இவனுக திருந்தவே மாட்டாய்ங்களா??

தாராபுரத்தான் said...

அப்படி ஒரே போடா போடுங்க..எல்லோரும் சேர்ந்து அடிப்போம்.

பின்னோக்கி said...

இதத்தான் சாத்தான் வேதம் ஓதுதுன்னு சொல்லுவாங்க. விளம்பரம் குழந்தைகளைக் கெடுக்காதா என்ன ?.. இப்படியே எய்ட்ஸ்ல முதல் இடத்துல இருக்குற பெருமைய தக்க வெச்சுக்க சொல்றாங்க போல. இவங்களை யாரு ரயில்வே ஸ்டேஷன் போய் பார்க்க சொன்னா ?.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஸ்கூல் பசங்களுக்கு கண்டிப்பா விழிப்புணர்வு தேவை,வாரப்பத்திரிக்கை வாங்குவதை நிறுத்தலாமே?அதில் கிடைப்பதெல்லாம்,காய்கலப விளம்பரங்களும்,நித்யானந்தா செய்திகளும் தான்.

முதல் பத்தி அருமை

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இன்றைய நிலையில் மிகவும் அவசியமான ஒரு பதிவு நண்பரே ! சிறப்பாக சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் !

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்லதொரு ஹாட் பகிர்வு.

padma said...

please read the comments in my recent post

வெறுமை said...

நல்ல பதிவு சார் ....இவனுங்க பைதியக்காரதனத்தை தடுக்க எந்த ஊடக சட்டமும் இல்லையா...

வானம்பாடிகள் said...

@@நன்றிம்மா. ம்கும் வெறும் வயத்துலயே குமட்டுது. இதுல மாலையில வேற:)
@@நன்றி கதிர். சன் டி.வில வந்திருந்தா ஆயிருக்கலாம்.
@@நன்றிங்க பழமை
@@அதமட்டும் விட்டு வெக்கப் போறமா. :). நன்றி ஸ்ரீராம். முதல் வருகைன்னு நினைக்கிறேன்:)
@@நன்றிங்க சைவம்
@@வாங்க ராஜா நன்றி
@@காத்திருந்தாலும் நம்மாளூங்க மாறமாட்டாங்க நசரேயன்
@நன்றிங்க சித்ரா
@@ஆமாம்மா. கலாச்சாரம்:))
@@வாங்க நடராஜன்சார். :)) யாமொன்றுமறியோம். போனோம். வந்தோம்.:)

வானம்பாடிகள் said...

@@நன்றி றமேஸ்
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றிங்க கயல். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
@@:)).நல்ல காலம் போராட்டம் நடத்தலை ஜெரி
@@நன்றிங்கண்ணே
@நன்றிங்க டி.வி.ஆர்
@@நன்றிங்க பிரதாப்
@நன்றிங்க நேசமித்திரன்
@@நன்றிங்க நாடோடி
@நன்றிங்க நண்டு
@@மிக்க நன்ரி ஷங்கர்
@@நன்றிஙக ரோமியோ
@@நன்றி முகிலன்
@நன்றி சூர்யா
@@நன்றிங்க செந்தில்வேலன்
@@ஆமாங்க நிஜாம். வாஸ்தவம்
@நன்றி பாலாசி:))
@@நன்றிங்க ஸ்ரீராம்
@நன்றி ப்ரின்ஸ்
@@நன்றி ரோஸ்விக்
@@நன்றிங்கண்ணா
@@நன்றிங்க இர்ஷாத்

வானம்பாடிகள் said...

நன்றின்க பின்னோக்கி
நன்றி கார்த்திகேயன்
நன்றி ஆதி
நன்றி வெறுமை.
நன்றி பனித்துளி சங்கர்

கிரி said...

சார் அருமையான பதிவு. நம்மை இப்படி கூறி கூறியே வெட்கப்பட வைத்தே எதையும் அறிந்து கொள்ள இயலாமல் செய்து விடுகிறார்கள்.

சார் நீங்க இப்பெல்லாம் இதைப்போல பதிவுகளை வெகுவாக குறைத்து விட்டீர்கள், வருத்தம் அளிக்கிறது :-(

Li. said...

ஹ ஹா ஹா... :-) சத்தியமா இந்த செய்திய paper- ல படித்ததும் எனக்கும் இதே கடுப்புதான் sir வந்தது. ஆனால் செய்தி வெளியிட்ட paper-இன் தரம் எனக்கு 8 - ஆம் வகுப்பு படிக்கும் போதே புரிந்து விட்டதால், கோபம் வரவில்லை... அந்த சின்ன கடுப்போடு நின்றுவிட்டது... இப்பொழுது பத்திரிக்கைகள் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு பயன்படாமல் போகலாம், but தண்ணீர் கஷ்டம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக பயன்படும் வகையில் தயாரிக்கிறார்கள் பாருங்கள்... சந்தோஷம்.