Saturday, March 7, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 8

காவல் துறை அனுமதி மறுப்பால் உண்ணா விரதம் 9ம் திகதி ‍ ‍‍-‍ ஜெ அறிவிப்பு

என்னாதான் காவல் துறைய உங்க கட்டுப்பாட்டில வெச்சிருந்தாலும் 9ம் நம்பர் உங்களுக்கு ராசின்னு பண்ணுவாங்களா? சுவாமி சொன்னாருங்களா 9ம் தேதி வேற உங்க நட்சத்திரம் வேற அன்னைக்கு வெச்சிண்டா ஓட்டு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்னு. பஞ்சாங்கம் பாக்காமலா திகதி சொல்லுவீங்க

இலங்கை ராணுவத்தை ஆதரித்த ஜெக்கு உண்ணாவிரதமிருக்க அருகதை இல்லை-‍ கலைஞர்

இதெல்லாம் ஓவர் தலைவா! ஆயுதமளித்தவர்களை ஒண்ணும் சொல்லிடப்படாதுன்னு உள்ள போடற நீங்க சொல்றப்போ அந்தம்மா எதாச்சும் சொல்லிச்சா?

ஜெ உண்ணாவிரதமிருப்பது குறித்து ஆராய தேவை இல்லை‍‍‍‍ -‍ வீரமணி

ஈழமே இல்லைன்னு சொல்ற , சண்டைன்னா சாவரது சகஜம்னு சொல்றவங்க ஓட்டுக்கு இருக்கிறஉண்ணாவிரதமே தேவை இல்லைன்னு அவங்க சொல்ல மாட்டாங்களாங்க?

ஜெ உண்ணாவிரதம் அரசியல் நாடகம் -‍ ஜி கே வாசன்

தேர்தல் வந்தாலும் வந்திச்சி. வாயே தொறக்காதவங்கள்ளாம் அறிக்கை விடறாங்கப்பு. ஆமாம் இவர யாருக்காவது தெரியுமா?

ஈழப் பிரச்சினை உள்ளவரை சீமான்கள் உருவாவதை தடுக்க முடியாது -‍ சத்தியராஜ்

பிரச்சினை ஈழத்தில இல்லைங்கண்ணோவ். அடிக்கிற ஜால்ரால. அம்மாவோட கோவத்தில. அரசியல் கூட்டணியில.

ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்கு தேர்தலில் நிற்காத கட்சிகள்தான் எங்களுக்கு வேண்டும்:தங்கர்பச்சான்

இந்தாளுக்கு ஆனாலும் லொள்ளு. அப்படி இருந்தா அது கட்சின்னு எந்த கேனயனாவது ஒத்துக்குவானா?

வன்னியில் குழந்தைகளுக்குப் பால் மா, சிறுவர்களுக்கு பயத்தம் கஞ்சி, பெரியவர்களுக்கு உப்புக்கஞ்சி வழங்க புலிகள் ஏற்பாடு ‍‍-‍ செய்தி

பட்டினி போட்டு குண்ட போட்டு சாவடிக்கிறவனுக்கு பேரு அரசாங்கம். இருக்கறத வெச்சி இப்படி பார்க்குறவங்களுக்கு பேரு தீவிரவாதி. நல்ல உலகம்டா சாமி.

இலங்கை தமிழர்களைக் பாதுகாக்க கோரி சென்னையில் 6 பார்வையற்றோர் நடைபயணம்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இப்படி பண்ணுறவங்க பார்வையற்றோர்னா, எங்கயோ நடக்குது எனக்கு என்னான்னு இருக்கிறவங்கள என்ன சொல்றது.

சீமானை பார்க்கப் போன டைரக்டர்கள் அமீர், சுந்தர ராஜன் கைது

பாரதி ராஜாவும் போய் இருந்தா வசதி. சீமான் என்ன சீட்டாட கை குறையுதுன்னா கேட்டாரு. போங்கடா!

3 comments:

பழமைபேசி said...

பார்க்கப் போனவங்களும் கைதா? :-o(

Anonymous said...

பட்டினி போட்டு குண்ட போட்டு சாவடிக்கிறவனுக்கு பேரு அரசாங்கம். இருக்கறத வெச்சி இப்படி பார்க்குறவங்களுக்கு பேரு தீவிரவாதி. நல்ல உலகம்டா சாமி

Eezhapriya said...

பாலா சார் .. சாரி.. எனக்கு இதுக்கு என்ன சொல்றதுன்னு புரியல.. இப்டியுமா இருப்பாங்க மனுஷங்க நு .. அருவெறுப்பா இருக்கு சார்..