Tuesday, March 17, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 13

இலங்கை தமிழர்களுக்கு ஈரோட்டில் இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடுவீடாக, கடை, கடையாக சென்று நிவாரணப்பொருட்களை திரட்டினார்கள்.

திரட்டினாங்களா மிரட்டினாங்களா? தேறுச்சா இல்ல தண்டல் தானா? எலெக்சன் கணக்குல எழுதிடலாம்.

இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற வழக்கா? இங்கு ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்படும்! எச்சரிக்கிறார் விமல் வீரவன்ச
அப்டி போடு. இப்போ பார்க்கலாம். அறிக்கை திருப்தி அளிக்கிறதுன்னு சொல்றாங்களான்னு


மக்களை மீட்கும் கோரிக்கைகளை இலங்கை அரசு மெல்லத் தட்டிக்கழிப்பு "ஹிந்து" பத்திரிகை தகவல்
யப்பா! பார்டி ஆளுங்க அடிக்கிற பல்டிய விட பத்திரிகைங்க அடிக்கிற பல்டி அந்தர் பல்டிடா சாமி!


’’இலங்கையில் பாதிப்புக்குள்ளான 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள்" கலைஞர்

அடுப்பு வேணாம்.அவன் போடுற பாஸ்பரஸ் குண்டு எரியரதுல சமைக்கலாம். ஆமா? இதையும் சேர்த்தா அம்மா குடுத்தத விட ஒரு 10ரூ ஆவது கூட வரணும் கணக்கு. இல்லன்னா அந்தம்மா சொல்லி காண்பிக்கும் அல்பமா.


என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டிருக்குமே யானால் இந்த நேரத்தில் இலங்கையில் நிச்சயமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினப் படு கொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.ஜெ
எது புலிக‌ள் ஆயுத‌ங்க‌ளை கீழே போட‌ வேண்டும். பேச்சு மூல‌மே தீர்வுன்னா. என‌க்கு தெரிஞ்சி உண்ணாவிர‌த‌ ப‌ல்டிக்க‌ப்புறம் கோரிக்கை வைக்க‌வே இல்லையே?


“மூக்கறுந்து போன மூளி, அலங்காரி, நாக்கறுந்து தொங்குகின்ற நரி, நாலாந்தரப் பெண், மகுடம் பறி கொடுத்த மாயராணி, செப்படி வித்தை மாமி போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ள கருணாநிதியின் அறிக்கைகளை என்ன என்று சொல்வது. ஜெ
அறிக்கை தான். வேற‌ என்னா. த‌லைவா நாளைக்கு உங்க‌ லிஸ்ட் சும்மா அதிர‌ணும்.


ராதா ர‌வி திமுக‌ வில் சேருகிறார்‍:செய்தி
க‌ழுத‌ கெட்டா குட்டிச் சுவ‌ர். பார்த்து. தாய் வீட்டுக்கு வ‌ந்தார்போல்னு சொல்லிட‌ப்ப‌டாது. இன்னும் அம்மா பாச‌மான்னு நினைச்சிடுவாங்க‌.


பிரபாகரன் போர் முனையில்தான் இருக்கிறார் என்றும், அவருடைய தலைமையில் விடுதலைப்புலிகள் போரில் ஈடுபட்டு வருவதாகவும், இலங்கை ராணுவம் தெரிவித்து உள்ளது.
எப்போ திரும்பி வ‌ந்தாரு? க‌ழிச‌டைங்க‌. குட்டி விமானத்துல ஓடிட்டாரு. நீர்மூழ்கி கப்பல்ல தப்பியாச்சி. பாதாள அறைக்குள்ள படுத்திருக்காருன்னு என்னல்லாம் சொன்னானுவ.


வைகோ கூட்டத்தை புறக்கணித்த ராமதாஸ்,திருமா
வேட்டு ப‌த்தியே பேசிண்டிருந்தா ஓட்டு போயிடுமே.

2 comments:

சிக்கிமுக்கி said...

///’’இலங்கையில் பாதிப்புக்குள்ளான 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்கள்" கலைஞர்

அடுப்பு வேணாம்.அவன் போடுற பாஸ்பரஸ் குண்டு எரியரதுல சமைக்கலாம்.///

- அல்லது இந்திய அரசு கொடுத்த ஆய்தத்ததால் எரியும் குழந்தையின் தீயிலேயே சமைத்துக் கொள்ளும்படுக் கூறப்படலாம்

சிக்கிமுக்கி said...

****பிரபாகரன் போர் முனையில்தான் இருக்கிறார் என்றும், அவருடைய தலைமையில் விடுதலைப்புலிகள் போரில் ஈடுபட்டு வருவதாகவும், இலங்கை ராணுவம் தெரிவித்து உள்ளது.

எப்போ திரும்பி வ‌ந்தாரு? க‌ழிச‌டைங்க‌. குட்டி விமானத்துல ஓடிட்டாரு. நீர்மூழ்கி கப்பல்ல தப்பியாச்சி. பாதாள அறைக்குள்ள படுத்திருக்காருன்னு என்னல்லாம் சொன்னானுவ.****

சூடு சொரணையற்ற பிறவிகள். இரண்டு மூன்று முறை செய்தித்தாள்களில் அவரை சாகடித்த பதர்கள்.
தவறான செய்தி வெளியிட்டு விட்டோம் என்று கூட எழுதாத இழிவுருக்கள். மறுபடியும் அம் மாமறவனைப் பற்றிய உளறல்களை வாந்தி எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.