Monday, December 13, 2010

மெடல் அள்ளலாம்...

சும்மானாச்சும் இந்த கல்மாடி, மண்மாடி, சிங்குங்களை நம்பி விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்து ஒலிம்பிக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டின்னு அனுப்பி வடை போச்சேன்னு இருந்தா ஊழல்தான் மிச்சம். திறமை எங்க இருக்குன்னு தேடிக் கண்டு பிடிக்கணும். முக்கியமா இவங்களுக்கு எல்லாம் பயிற்சின்னு தண்ட செலவு செய்ய வேண்டியிருக்காது. அதையும் கணக்குல எழுதி ஆட்டையைப் போட நல்ல வாய்ப்பு. முதலமைச்சர்தான் எப்படியாவது இத புரிய வச்சு தமிழக டீமை தேர்ந்தெடுத்து அடுத்த ஒலிம்பிக்குக்கு வழி செய்யணும். ஏதோ என்னால முடிஞ்ச ஒத்தாசை இதோ:

100மீ, 200மீ, 4x100 ரிலே: நந்தனம், பச்சையப்பா, நியூ காலேஜ் கல்லூரி மாணவர்கள், ஓட்டேரி, வியாசர்பாடி ஏரியாவில் வேலைக்குப் போகும் இளைஞர்கள், அரக்கோணம் போன்ற தூர இடங்களிலிருந்து வந்து ட்ரெயினில் பயணிக்கிற இளைஞர்கள் இவங்கள தேர்ந்தெடுத்தா மூணு மெடலும் நமக்குத்தான். பஸ் கூடவே ஓடி, அக்கம்பக்கத்துல வண்டி ஓட்டுறவன டரியலாக்கி, நல்ல பீக் ஸ்பீடுல ஏர்ற அழகும், அதை விட எங்க இறங்கினா பஸ் கூடவே ஓடி பஸ்ஸோட சேர்ந்து ப்ரேக் அடிச்சா மாதிரி நின்னு பஸ்ஸுக்குள்ள இருக்கிற பொண்ணுங்கள ஒரு லுக்கு விடலாம்னு தெரிஞ்சி இறங்கி ஓடியார அழகும், சொல்லத் தரமா? அதுவும் ரிலே ரேஸ் பார்ட்டிங்க, பஸ் ஸ்பீடு அதிகம்னா பக்கத்துல வர பைக்குல தொத்திக்கிட்டு விரட்டிப் புடிப்பாய்ங்க. பாருங்க.  கண்கொள்ளாக் காட்சி.

டென்னிஸ், பிங்பாங்,பாட்மிண்டன்: விம்பிள்டன் வகையறாக்கும் அனுப்பலாம் இவங்களை. எப்பேர்ப்பட்ட சேம்பியனா இருக்கட்டும். ஏஸ், வால்லி, பேக் ஹேண்ட் ஷாட், ஃபோர் ஹேண்ட் ஷாட், ட்ராப் எது வேணா இருக்கட்டும். நம்மூரு 5 வயசு பையங்கிட்ட தோத்துடுவாய்ங்க. பின்ன, ஆறு மணியானா டென்னிஸ் பேட் மஸ்கிடோ கேச்சர வெச்சிகிட்டு ஒரு நாளைக்கு டன்னு கணக்குல இல்ல விடிய விடிய ப்ராக்டிசு. பசங்க ஆளுக்கு ஒரு மட்டை ஆளுக்கு ஒரு ரூம்புன்னு இல்ல ப்ராக்டிஸ் பண்றாய்ங்க.

ஜாவலின்: மைலாப்பூர், மாம்பலம் மாதிரி பாஷ் லொகாலிட்டி பேப்பர் போடுற பசங்க. ங்கொய்யால அஞ்சாவது மாடி பால்கனிக்கு போற போக்குல சுருட்டி அடிப்பானுவ பேப்பர. அது பிரியறதுக்குள்ள போய் லேண்ட் ஆவும். நீள வாக்குலயும் சரி. கேட்டுக்கும் போர்ட்டிகோவுக்கும் அரை கிலோமீட்டர் இருந்தாலும் அர்ச்சுனரு அம்புதேன்.

ஸ்விம்மிங், போலோ, ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸ்:
வியாசர்பாடி கன்னிகாபுரம், கோட்டூர்புரம் மக்கள விட்டா இதுக்கு வேற யாரு. மழைக்காலத்துல தொறந்து வச்ச மேன் ஹோலுக்குள்ள முங்கினாலும் ஒரு எத்துல மேல வந்து முன்னேறி போய்க்கிட்டே இருப்பாய்ங்க. முன்னாடி போனவன் முங்கினானேன்னு பின்னாடி வர ஆளு உசாராவானான்னா அவனும் அப்படியே முங்கி மேல வருவான்.

ஹைஜம்ப்: செண்ட்ரல், ஈஸ்ட்கோஸ்ட் ரோடு, இன்னும் எங்கல்லாம் மெரிடியன் இருக்கோ அங்க புடிக்கலாம் ஆளுங்கள. பொசுக்குன்னு ஓடி ஒரு எத்துல தாவி மத்த பக்கம் வர காருக்கு முன்னாடி பாஞ்சு, அஞ்சாறு பைக் காரனை குடை சாய்ச்சுட்டு  போய்க்கிட்டே இருப்பான்.

லாங் ஜம்ப், ட்ரிப்பிள் ஜம்ப்:
இதுக்கு எல்லா ஏரியாலையும் ஆளப் புடிக்கலாம். அங்கங்க தேங்கி நிக்கிற குட்டையை பேண்டும் சாரியும் நனையாம தூக்கிப் பிடிச்சி பேலன்ஸ் கூட இல்லாம தாண்டுற நம்மாளுக மாதிரி ஒளக சேம்பியனுங்க தாண்டி காட்டட்டும் பார்க்கலாம். முக்கியமா சட்டமன்ற, நாடாளுமன்ற எம்.எல்.ஏ, எம்.பிக்களை விட்றப்படாது.

கால்பந்து: மாமூல் குடுக்காம ரோட்டோரம் கடை வச்சிருக்கிறவங்கிட்ட தகறாரு பண்ற தாதா. எத்துற எத்துல கடைக்காரன் வேணாம் வேணாம்னு கையைப் பிரிச்சிகிட்டு மடக்கினாலும்,  கோசு, கருணைக் கிழங்கு, குண்டான் சட்டி, தட்டுக் கூடைன்னு மீன்பாடி வண்டில நச்சுன்னுல்ல போய் உக்காருது.

மல்யுத்தம்: ராயபுரம், மாதவரம்,மூலக் கொத்தளம்,ஆட்டு தொட்டி, ஓட்டேரி இங்க கிடைக்காத சேம்பியனா? ஆர்மி டேங்க் சைஸ்ல இருந்துகிட்டு சுண்டு விரலை மட்டும் நுழைச்சி,  ‘அய்ய உள்ள போயேன்’னு சவுண்டு விட்டு அரக்கி அரக்கி, காலரு, கழுத்துன்னு புடுச்சி தொங்கி புளியம்பழம் மாதிரி உலுக்கி விழுத்தி, உள்ள போய் நின்னுகிட்டு, ‘ஏம்ப்பா! லேடீசுக்கு இடம் விட்டு ஒதுங்கி நிக்கமாட்டியா’ன்னு சவுண்டு விடுவாங்க பாருங்க அந்த வார்த்தைக்கே ரெண்டடி பின்னாடி போவாய்ங்க அக்கம் பக்கத்து ஆளுங்க.

சைக்ளிங்: லாரிய, பஸ்ஸ புடிச்சிகிட்டு மிதிக்க சோம்பேரித்தனப்பட்டுகிட்டு ஒத்தக்கைல ஹேண்டில் பாரோட பறக்குறானுவளே. இதுலயும் டிவி கேமரா வண்டிய புடிச்சிட்டு வந்துருவாய்ங்க.

வட்டெறிதல்: வேற யாரு. பஸ்ஸ்டேண்டு பரோட்டா கடை மாஸ்டரு. சுத்தாம திரும்பாம சரியா டேபிளுக்கு வீசுவாருல்ல.

குண்டெறிதல்: கூலிக்காசை டாஸ்மாக்ல தொலைச்சிட்டு சவுண்ட் விடுறவருக்கு நச்சுன்னு வந்து மண்டைய தாக்குறா மாதிரி குண்டான வீசுறவய்ங்கள விட முடியுமா? கேட்டுப் பாருங்க. அவிங்க வீட்டு அம்மணி டேலண்டப் பத்தி சொல்லுவாரு.

மராத்தான்:
நம்ம பிக்பாக்கட் அண்ணாச்சிங்கதான். மவுண்ட்ரோடுல விரட்டினா மந்தவெளி, பெசண்ட் நகர் வரைக்கும் ஓடுவாய்ங்க.

கூடைப் பந்து: நம்ம சரவணா ஸ்டோர் துணிக்கடை பசங்க.

துப்பாக்கி சுடுதல்: ஹி ஹி. நம்ம என்கவுண்டர் போலீசுங்கதேன்.

கராத்தே: பஸ்ஸுல நின்னுட்டு வரப்ப கழுத்துக்கு முட்டு குடுத்து பிக்பாக்கட் கும்பல் பாக்கட்டுல ஆட்டையப் போடாம குனிஞ்சி நெளிஞ்சி அவன் கைக்கு தடுப்பு குடுத்து பயணிக்கிற பொதுஜனம்.

இது போக, பாரா ஜம்பிங், பங்கீ ஜம்பிங், மோட்டோக்ராஸுக்கெல்லாமும் ஆளுங்க இருக்கு நம்மகிட்ட. ஹூம். நமக்குத் தெரியுது. விளையாட்டுத் துறைக்கு தெரியலையே. 


(டிஸ்கி: இந்த இடுகை கூட ஒரு கைல மஸ்கிட்டோ கேச்சர சுத்தி சுத்தி கொசுவதம் பண்ணிக்கிட்டே எழுதிட்டேன். அதனால கொசுத்தொல்லை தாங்கல நாராயணான்னு சொன்னா எனக்கொன்னும் இல்லை)
~~~~~~~~~~~~~~

32 comments:

பழமைபேசி said...

சென்னைக்கு வெளியில யாருமே இல்லீங்களாண்ணே?!

க ரா said...

சரிதான் சார் .. சும்மா பிரிச்சு மேஞ்சுட்டீங்க :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Philosophy Prabhakaran said...

செம குத்து... கலக்கிட்டீங்கண்ணா...

Unknown said...

இன்னா சார் இது. கமெண்டரிக்கு சென்னை பாஷையிலே பின்றதுக்கு எந்த ஏரியா சார்.

பழமை சொல்றா மாதிரி சென்னையில் மட்டும் அதிகம் ஊழல் இருப்பதால் ஒரே சென்னை நகர் மக்களை மட்டும் அலசி ஆராய்ஞ்சு செலெக்ஷன் பண்ணியிருக்கீங்க. புரிஞ்சிடிச்சி எங்களுக்கு.

vasu balaji said...

@பழமைபேசி
ம்கும். பின்னூட்டம் போடுறவங்க அவங்க ஊரு டீம் நாமினேட் பன்ணுவாய்ங்கன்னுதான்

vasu balaji said...

@Sethu
அவிங்கவிங்க ஊருக்கு அவிங்கதான் பேசணும். :))

Unknown said...

அப்ப உங்க ஊரு சென்னைத் தமிழில் ஒரு வரி கூட இல்ல.

உங்க பெரம்பூர் மக்கள் எதில் சேத்தி?

Unknown said...

சௌகார் பேட்டைக்கு கருணை காட்டிய புண்ணியவான் நீங்க. என்ன அருமையாப் பேசி ரெண்டு புடவையை தலையில கட்டிடறாங்க. பேரம் முடிஞ்சு அரை மணி நேரம் கழிச்சு விலையைப் பாத்து ஒரு சுத்து சுத்தும் பாருங்க. சூப்பர். ஏதாவதொரு போட்டியில சேர்த்துருங்க சார் இவங்கள.

நசரேயன் said...

ம்ம்ம்

vasu balaji said...

@Sethu

போட்டி ஏலத்துக்கு விட்றலாம்.

vasu balaji said...

@Sethu

வியாசர்பாடி, மாதவரமெல்லாம் இருக்கே. பெரம்பூரும் அடக்கம்.

vasu balaji said...

@நசரேயன்

அடங்கொன்னியா. கவுஜ இல்லைன்னா தளபதி முக்குவாரு. ச்சேரி ச்சேரி இந்தாங்க:))

“உன்னைக் குத்துவிளக்கென்றதாலா
நான் விட்டில் பூச்சியாய் உன்னைச்
சுற்றிவருகிறேன்”

பெசொவி said...

//முன்னாடி போனவன் முங்கினானேன்னு பின்னாடி வர ஆளு உசாராவானான்னா அவனும் அப்படியே முங்கி மேல வருவான்.//

bala sir rocks
:)))))

ஸ்ரீராம். said...

வித்தியாச வித்யாசமா யோசிக்கிறீங்க...! வீசற பரோட்டா திரும்ப டேபிளுக்கே வருதுன்னா அது வட்டேரிதலா, பூமராங்கா...!!

காமராஜ் said...

வழக்கம்போல நல்லா சிரிக்கசிரிக்க எழுதிருக்கிங்கண்ணா.

சாரி. அதுக்காக எல்லாத்தையும் அப்டியே ஏத்துக்க முடியாது. தமிழ்நாடுன்னா சென்னை மட்டுமில்ல.
மத்த மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேணும்.
அதனால வயிறு வலிக்கசிரிக்கவச்சத்துக்கு ஓட்டு வேணா போடலாம்.
டிபேட்டுன்னா டிபேட்டுதான்.

மத்த மாவட்டத்துக்காரங்க கொஞ்சம் கைகுடுங்க ப்ளீஸ்.

தல தளபதி said...

//கராத்தே: பஸ்ஸுல நின்னுட்டு வரப்ப கழுத்துக்கு முட்டு குடுத்து பிக்பாக்கட் கும்பல் பாக்கட்டுல ஆட்டையப் போடாம குனிஞ்சி நெளிஞ்சி அவன் கைக்கு தடுப்பு குடுத்து பயணிக்கிற பொதுஜனம்.//

அப்ப எனக்கும் கராத்தே தெரியுமா? டெய்லி இப்புடித்தானே போய்கிட்டிருக்கேன்.

a said...

ஆள் பிடிக்கிற வேலய உங்ககிட்டத்தான் கொடுக்கணும்.

Chitra said...

மராத்தான்: நம்ம பிக்பாக்கட் அண்ணாச்சிங்கதான். மவுண்ட்ரோடுல விரட்டினா மந்தவெளி, பெசண்ட் நகர் வரைக்கும் ஓடுவாய்ங்க.

கூடைப் பந்து: நம்ம சரவணா ஸ்டோர் துணிக்கடை பசங்க.


.......ஹா,ஹா,ஹா,ஹா... நல்லா கலாய்ச்சு இருக்கீங்க. ரசித்தேன்!

vasu balaji said...

@காமராஜ்
/தமிழ்நாடுன்னா சென்னை மட்டுமில்ல.
மத்த மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேணும்./
மொத போர்க்கொடியே கொங்கு மாவட்டத்தின் சார்பா அமெரிக்கால இருந்து வந்துடுச்சி. :)) சொன்னா மாதிரி பழகுற களம் எல்லா ஊருலயும் ஒன்னுதானே. வீரர்கள் ஏரியா நீங்கதான் சொல்லோணும்:))

பிரபாகர் said...

//லாரிய, பஸ்ஸ புடிச்சிகிட்டு மிதிக்க சோம்பேரித்தனப்பட்டுகிட்டு ஒத்தக்கைல ஹேண்டில் பாரோட பறக்குறானுவளே. இதுலயும் டிவி கேமரா வண்டிய புடிச்சிட்டு வந்துருவாய்ங்க.//

படிச்சதும் ஒரு விஷயம் ஞாபகம் வந்துச்சி. ஸ்கூல் படிக்கிறப்போ டிராக்டர் டிப்பர ஒரு கையால பிடிச்சிகிட்டு மெதிக்காம சைக்கிள ஓட்டி, மாமாகிட்ட பெருமையா சொல்லி பிரம்படி வாங்கினேன். எவ்வளவு பிரமாதமான அறிவுப்பூர்வமான விஷயம், மாமாவுக்கு புரியலையேன்னு ரொம்ப நாள் நினைச்சிட்டிருந்தேன், ஒருத்தன் தவறி விழுந்து தலையில டயர் ஏறி சாவற வரைக்கும்.

எல்லாம் கலக்கலா இருங்குங்கய்யா...

Mahi_Granny said...

உங்களால முடிஞ்ச ஒத்தாசையை அருமையாய் செய்து இருக்கீங்க. ஏரியா வாரியாக players தேர்ந்தெடுத்தது சூப்பர்.சரியான selection

'பரிவை' சே.குமார் said...

சும்மா பிரிச்சு மேஞ்சுட்டீங்க...

இராகவன் நைஜிரியா said...

கூறிய அனைத்தும் உண்மை... உண்மையைத் தவிற வேறில்லை..

இராகவன் நைஜிரியா said...

மீ த 25

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
சென்னைக்கு வெளியில யாருமே இல்லீங்களாண்ணே?! //

அண்ணே நிறைய பேர் இருக்காங்க. இப்ப பாருங்க நான் கூட நைஜிரியாவில்தான் இருக்கேன்...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
சென்னைக்கு வெளியில யாருமே இல்லீங்களாண்ணே?! //

அண்ணே நிறைய பேர் இருக்காங்க. இப்ப பாருங்க நான் கூட நைஜிரியாவில்தான் இருக்கேன்...//

அண்ணே காய்கறி நறுக்கறதெல்லாம் இன்னும் ஒலிம்பிக்ல சேர்க்கலையே

ADMIN said...

ஓஹோ..ன்னு எழுதறீங்கண்ணே..!ஜமாய்ங்க...!

க.பாலாசி said...

ஹல்ல்லோ இது செல்லாது.. எல்லாத்தையும் உங்க பக்கத்துலையே வச்சிகிட்டா நாங்க என்னாப்பண்றது... எங்கள்டையும் இங்க உள்ள எல்லாப்பேரும் இருக்காங்க.. ஆமா இப்டி தேர்ந்தெடுத்தா கலின்ஞருக்கு பாராட்டு விழா உண்டா!!!

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
சென்னைக்கு வெளியில யாருமே இல்லீங்களாண்ணே?! //

அண்ணே நிறைய பேர் இருக்காங்க. இப்ப பாருங்க நான் கூட நைஜிரியாவில்தான் இருக்கேன்...//

அண்ணே காய்கறி நறுக்கறதெல்லாம் இன்னும் ஒலிம்பிக்ல சேர்க்கலையே //

இதுக்கு ஒரு போராட்டாம் நடத்த முடியுமான்னு பார்க்கணும் அண்ணே..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

(டிஸ்கி: இந்த இடுகை கூட ஒரு கைல மஸ்கிட்டோ கேச்சர சுத்தி சுத்தி கொசுவதம் பண்ணிக்கிட்டே எழுதிட்டேன்.
//

ஒரு கையில பேட்.. இன்னொரு கையில கீ போர்ட்.. பேசாம, நீங்களும் அடுத்த ஒலிம்பிக்க கலந்துக்கலாம் சார்...


பதிவு ...சூப்பர்....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சக்க லொள்ளுங்க... சிரிச்சு மீளல..

அந்த புரோட்டா, செய்தித்தாள் எல்லாம் கலக்கல்.