தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்
Thursday, December 23, 2010
பிதற்றல் கவிதைகள் -1
காதல் கவிதை கேட்டாய்
உன்னைக் கண்ணாடி முன் நிறுத்தினேன்
சிவந்த உன் கன்னம் சொன்னது
உனக்குப் புரிந்ததென்பதை.
-*-
என்னைக் கூட்டுப் புழுவாக்கிவிட்டு
பிரிந்து செல்கிறாய்
உன் வரவில் பட்டாம்பூச்சியாய்
சிறகடிக்கிறேன்.
-*-
நிமிடங்களால் கடந்து போவதில்லை
என் நாட்கள்
உன் நினைவுகளால்
கடந்து போகின்றன
-*-
குளத்தருகே போகாதே என்றால்
கேட்பதில்லை நீ
பார் உன் கண்ணைக் காதலிக்க
எத்தனை மீன்கள் சண்டையிடுகின்றன?
-*-
உன்னிடம் தீபாராதனை வந்த நொடியில்
சிலிர்த்துக் கை கூப்பினேன்
உள்ளுக்குள் சிரித்து உன் கண்ணில்
கனன்ற காதல் கன்னத்தில் சிவந்தது.
-*-
பக்கத்துச் சிறுவனை
இழுத்தணைத்து முத்தமிடுகிறாய்
பரிதவிக்கிறது
என் கன்னம்.
-*-
உனக்குக் காய்ச்சலா
என்று காதலாய்ப் பார்த்தாய்
உதறியபடி உளறிக் கொட்டினேன்
ஜன்னியென்று.
-*-
Subscribe to:
Post Comments (Atom)
47 comments:
பச்சப்புள்ள கையில பஞ்சி முட்டாய் கிடைச்ச கதையா சும்மா கும்முன்னு இருக்கு கவிதைகள்... மார்கழி மாசம்... பனி, சாரலும் ஊதலுமா காத்துவேற, அந்தி நிலவும் அமிழ்ந்தெழும்பும் காதல் நேரம்... ஏங்க வயித்தெறிச்சல கிளப்புறீங்க...
காதலிக்க தெரியாதவனையும் இழுத்துவிடுற வேலையிது... நான் இந்த ஆட்டைக்கு வரல.. எங்கண்ணன் யூத் கதிர் உங்களுக்கு கைகொடுப்பார்...
நல்லாருக்கு எல்லாக் கவிதையும். முதல் முறையாய் முதல் ஐந்து கமெண்ட்ஸ்க்குள் பின்னூட்டமிட முடிந்த மகிழ்ச்சி எனக்கு!
அதுவும் இந்த முத்தங்கொடுக்கிறதுக சும்மா கொடுக்கும்ங்கிறீங்க... பக்கத்துல நிக்கிறவன ஒரு லுக் வேற... அப்பறம் கன்னம் பரிதவிக்காம பராக்கா பாக்கும்...
ம்ஹீம் சான்சே இல்ல... அதுவும் அந்த 'குளத்து கவி சும்மா ஜிவ்வுன்னு இருக்கு...
@க.பாலாசி
/அதுவும் இந்த முத்தங்கொடுக்கிறதுக சும்மா கொடுக்கும்ங்கிறீங்க... பக்கத்துல நிக்கிறவன ஒரு லுக் வேற... அப்பறம் கன்னம் பரிதவிக்காம பராக்கா பாக்கும்... /
பார்த்து தம்பி. அப்புறம் விருவிறுங்கும்:))
@க.பாலாசி
/காதலிக்க தெரியாதவனையும் இழுத்துவிடுற வேலையிது... நான் இந்த ஆட்டைக்கு வரல..//
யாரு நீய்யி. இதே பொழப்பா இருக்கு ஆட்டையாம்ல ஆட்டை.
//எங்கண்ணன் யூத் கதிர் உங்களுக்கு கைகொடுப்பார்... //
வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரச்சொல்லு உங்கண்ணன. பாத்துருவோம் ஒரு கை
ஒரே காதல் மயமா இருக்கு ..
காதல்.. காதல்.. காதல்.. பின்றீங்க சார்..
கலக்கல்
இதமான வரிகள்.தலை கோதிவிடுகிற எளிமையான கிறு கிறுப்பு.அண்ணா.. ஆதலினால் உய்வுண்டாம்.
//பக்கத்துச் சிறுவனை
இழுத்தணைத்து முத்தமிடுகிறாய்
பரிதவிக்கிறது
என் கன்னம்.//
so sweet.
கவிதை கிடைத்தது நண்பரே.... நல்ல ரசனை..
அட நீங்க கூட பாலாசி கூட போட்டி போட்டுக்கிட்டு . ஆனாலும் நல்லாவே இருக்கு.
அடடே!!! ஆச்சரியக்குறி
காதல் கவிதை கேட்டாய்
உன்னை என் கண்
முன்னே நிறுத்தினேன்
என் கருவிழிக்குள்
சிவந்த உன் கன்னம்
சொன்னது நீ
எவ்வளவு முகச்சாயம்
பூசி இருக்கிறாய் என்று
நான் கூட்டுப் புழுவாகி
உன் கண் மீன்களுக்கு
இறையாகுகிறேன்
நீ ஒரு கொண்டை வைத்த
கெண்ட மீன் என்று தெரிந்தும்
நிமிடங்களை
நிந்தித்தேன்
உன் நினைவுகளை
பழிப்பதால்
ஆனாலும்
உன்னை நிந்திக்க மனமில்லை
நீ என் வாழ்கையை
பாழ் படுத்தினாலும்
குளிக்காதே
என்றால்கேட்பதில்லை
நீயே பார்
நம் தெருவைவும்
௬வத்துடன்
இணைக்க வேண்டும் என
எவ்வளவு பேர் சண்டையிடுகின்றனர்?
உன்னிடம் தீபாராதனை
வந்த நொடியில்
எனக்கு சொர்க்க வாசல் தெரிந்தது
உள்ளுக்குள் அழுதேன்
நரகம் செல்லும் நீ
இப்புவியில் விட்டு சொல்லும்
பொக்கிஷம் காதல் என்று
இடது பக்கத்துச் சிறுவனை
இழுத்தணைத்து
முத்தமிடுகிறாய்
பரிதவிக்கிறது என் கன்னம்
வலது பக்கத்தில் இருப்பது
உன் காதலனா இல்லை கணவனா ?
என நினைத்து
||ஏங்க வயித்தெறிச்சல கிளப்புறீங்க...||
வயிறா!!!!!? :))))
||பரிதவிக்கிறதுஎன் கன்னம்.||
பிரவுண்ணே, அய்யாவ பார்த்தப்போ ஒன்னு குடுத்துட்டு வந்திருக்குலாம்ல!
உனக்குக் காய்ச்சலா
என்று பார்த்தாய்
உதறியபடி உளறிக் கொட்டினேன்
"வயத்தெரிச்சல்" என்று
நீ காதலாய் பார்க்கவில்லை
என நினைத்து
தளபதி:) சக்க போடு. ம்ம்ம்
குளிக்காதே
என்றால்கேட்பதில்லை
நீயே பார்
நம் தெருவைவும்
௬வத்துடன்
இணைக்க வேண்டும் என
எவ்வளவு பேர் சண்டையிடுகின்றனர்
---
தளபதி இதுக்கு புக்கர் கொடுக்க போறாய்ங்களாம் :)
//பக்கத்துச் சிறுவனைஇழுத்தணைத்து முத்தமிடுகிறாய்பரிதவிக்கிறதுஎன் கன்னம்.//
பின்னிட்டீங்க சார்..
"காதல் கவிதை கேட்டாய்
உன்னை என் கண்
முன்னே நிறுத்தினேன்
என் கருவிழிக்குள்
சிவந்த உன் கன்னம்
சொன்னது நீ
எவ்வளவு முகச்சாயம்
பூசி இருக்கிறாய் என்று
"
இதை சொன்னா சொன்னவன் கன்னம் இந்நேரம் செக்க செவேளன ஆயிருக்குமே. அப்புறம் கவிதையா சொல்ற மவனேன்ர ரேஞ்சுக்குப் போயிருமே!
"நான் கூட்டுப் புழுவாகி
உன் கண் மீன்களுக்கு
இறையாகுகிறேன்
நீ ஒரு கொண்டை வைத்த
கெண்ட மீன் என்று தெரிந்தும்"
- வெங்காயம் விக்கிற விலைக்கு கெண்ட மீனா கேட்குது, உன் கொண்டையில குமட்டுறேன்னு வந்துட்டா?
"நிமிடங்களை
நிந்தித்தேன்
உன் நினைவுகளை
பழிப்பதால்
ஆனாலும்
உன்னை நிந்திக்க மனமில்லை
நீ என் வாழ்கையை
பாழ் படுத்தினாலும்"
- எங்க ஊரு எல்லையில இருக்கிற ஒரு அய்யனார் சிலை போதாதா, நீயும் அவருக்கு பக்கத்திலையா?
"குளிக்காதே
என்றால்கேட்பதில்லை
நீயே பார்
நம் தெருவைவும்
௬வத்துடன்
இணைக்க வேண்டும் என
எவ்வளவு பேர் சண்டையிடுகின்றனர்?
"
- குளிக்கணும் என்று நினைச்சு மாட்டுத் தொழுவத்துப் பக்கம் போயிட்டாங்களோ?
"உன்னிடம் தீபாராதனை
வந்த நொடியில்
எனக்கு சொர்க்க வாசல் தெரிந்தது
உள்ளுக்குள் அழுதேன்
நரகம் செல்லும் நீ
இப்புவியில் விட்டு சொல்லும்
பொக்கிஷம் காதல் என்று"
- நல்லா புடைச்சு மரத்தில கட்டி தொங்க வுட்டு தீபாரதனையா? நடக்கட்டு நடக்கட்டு.
அடடா அருமை !
"இடது பக்கத்துச் சிறுவனை
இழுத்தணைத்து
முத்தமிடுகிறாய்
பரிதவிக்கிறது என் கன்னம்
வலது பக்கத்தில் இருப்பது
உன் காதலனா இல்லை கணவனா ?
என நினைத்து"
- எப்பிடி இருந்தாலும் அங்கிட்டு என்ன வேலை உங்களுக்கு. அப்புறம் கன்னம் எப்பிடி செவக்காம இருக்கும்.
வானம்பாடி சார் காதல் கவிதையில கலக்கறாரு. எல்ல யூத்துக்கும் போட்டியாங்க. இளவட்ட பசங்களுக்கு செமப் பாடமா இருக்கும் போல. நம்ம ஈரோடு யூத் ஒன்னும் அதிகம் சொல்லலை.
அருமையான கவிதைகள்..:))
என்ன சொன்னாலும், தளபதியும் உங்களுக்கு ஈடா கவித எழுதி தள்ளறாரு. அட்டகாசம் தளபதி.
ஊஹூம்... வர வர ஒன்னியும் செரியில்ல...
@கலகலப்ரியா
:D. நல்லாக்கீதா.
கவிதையாகி என்னை
சிறகடிகடித்து பறக்க வைத்து
நினைவுகளால் கடந்து
கயல்விழி உன்னை
தெய்வமாய் பூஜித்தும்
தீர்த்தம் சிறுவனுக்காவென
ஜன்னியால் உளறுகிறேன்....
பிரபாகர்...
அன்பின் பாலா - கவிதையில் இறங்கியாயிற்றா ? அனைத்துக் கவிதைகளும் காதல் ரசம் கொப்பளிக்கின்ற கவிதைகள் - குறுங்கவிதைகள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் பாலா - நட்புடன் சீனா
இளமை ஊஞ்சலாடுகிறது :)
குளிரடிக்குது பாலாண்ணா! :-)
@பா.ராஜாராம்
வாங்க பாரா. சேர்ந்தாச்சா:)
எடந்தப்பி வந்துட்டேனா.. இல்லியே.. ஓ.. பனி அதிகம் அதான்..
கிறுகிறுக்க வைக்குது கவிதை-கள்
ம்ஹூம்.. பிரியா.. சான்ஸேஇல்லை.. ஜன்னி ஓவராயிருச்சு..:))
Post a Comment