Wednesday, December 22, 2010

நறுக்னு நாலு வார்த்த V 5.6

பொன்சேகாவைப் போர்க்குற்றவாளியாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது

ஹி ஹி. நீ அவனக் காட்டு. அவங்கோத்தபாய காட்டுவன். அவன் அண்ணனைக் காட்டுவான். உன்னால நான்கெட்டேன்னு சாவுங்கடா.
--------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைப் பிரச்சினையில் மிக விரைவில் நேரடியாகத் தலையிடுவேன்: ராகுல் காந்தி

அய்யோ! மிச்சமும் போச்சா?
--------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் பம்மாத்து! வெறும் 5,000 வீடுகள் மட்டுமே புதிதாக கட்டப்படுமாம்

அடிச்ச காசுன்னா பூஜ்யம் குறையும். குடுக்கறதுன்னா பூஜ்யம் கூடும். பரதேசிங்க.
--------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியைப்பிடிக்க விரும்பவில்லை : ராகுல்

ஆஹா. அதான் ஈழம் வழியா வர்ரீங்களோ?
 
--------------------------------------------------------------------------------------------------------------
ரஜினிகாந்த் சினிமாவில் மட்டும் தான் வீரத்தை காட்டுவார் : சு.சாமி

அடிங்கொய்யால. அடிக்கறா அடிக்கறான்னு ஜட்ஜ் நாற்காலி கீழ ஒளிஞ்சிட்டு சவுண்டப்பாரு.
 
--------------------------------------------------------------------------------------------------------------
கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் பெற முடியும்: ராகுல்

ஆமாப்பா. தொண்டருங்க ஒழைங்க. இவரு வந்து ஆச்சிய புடிச்சுக்குவாரு.
 
--------------------------------------------------------------------------------------------------------------
வெங்காயத்தை பிரதமர் பார்த்துக்கொள்வார்: ராகுல்

பாவம்யா. அதையாச்சும் உரிக்க உரிமையில்லையா. பார்த்துக்கற வேலைதானா?
 
--------------------------------------------------------------------------------------------------------------
கொள்கை பிடிப்புள்ள ஒரே கட்சி பாமக: ராமதாஸ்

‘மவனே மந்திரி’ கொள்கைப் பிடிப்புதானே. கொரங்குப் பிடியில்ல அது.
 
--------------------------------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவின் ஊழல் முறைகேடுகளை விளக்கி ஊருக்கு ஊர் கூட்டம்: கலைஞர்

எல்லாத்தையும் மாதிரி உங்க ஊழலையும் ஒப்பிட்டு சொல்லிடுங்கதல. வயிறெரிஞ்சி சாவட்டும்.
 
--------------------------------------------------------------------------------------------------------------
ராகுல்காந்தி படி ஏறிப்போய் யாரையும் பார்க்கமாட்டார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அதான் காவடி தூக்க நீ இருக்கியே பன்னாட.
 
--------------------------------------------------------------------------------------------------------------
தி.மு.க.வுக்கு சோதனையை ஏற்படுத்தலாமா என்று கனவு காண்கிறார்கள்: கலைஞர்

அவங்களாச்சும் கனவு காண தூங்குறாய்ங்க. நமக்கு அதும் போச்சே தலை.
 
--------------------------------------------------------------------------------------------------------------
சங்கரராமன் கொலை வழக்கு: சாட்சி பல்டி

அது என்ன கோர்ட்டா இல்லை சர்க்கஸா. அதேன்னாது பல்டி பல்டின்னு.
 
--------------------------------------------------------------------------------------------------------------
வெங்காயம் விலை படிப்படியாக குறையும்: பவார்

அய்ங். உங்கூர்ல படில அளந்தா விக்கிறாய்ங்க?
 
--------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைத் தமிழர்களின் நிலை கவலையளிக்கிறது: ராகுல்காந்தி

மம்மீ! சன் பாவம் சன் பாவம். தமிலன் பாவம் தமிலன் பாவம்.ஆடு நனையுறது ஓநாய் அழுவறதுன்னு கண்டதும் கவனம் வந்து தொலையுது.
 
--------------------------------------------------------------------------------------------------------------
தமிழக மீனவர்களையும், இலங்கை தமிழர்களையும் பாதுகாக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்

இந்த இலங்கை விஷயத்துல தமிழக அரசியல் வியாதிகள் கும்பகர்ணனுங்க. தேர்தலுக்கு தேர்தல்தான் முழிச்சுக்குவாங்க போல.
 
--------------------------------------------------------------------------------------------------------------

22 comments:

ம.தி.சுதா said...

தமிழன் தான் ஈழத்தை வச்ச தன்னுடைய அரசியலை ஓட்டறாண்ணு பார்த்த இவனுகளும் வாறாங்களா.... இவரோட தகப்பனரை போட பற்றி (battery) வாங்கிக் கொடுத்தவனையே தூக்கில் போட துடிக்கும் கூட்டமிது... இவரோட தகப்பனாருக்கு எத்தனை தரம் தூக்கு போடணும் (அவரின் அட்டுளியத்தக்கு..)

முதலில் இதற்கு தீர்வு தரட்டும் மிகுதியை நம்பலாம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல். ஜெயலலிதா, ராமதாஸ், கோத்தபாய, வெங்காயம், மன்மோகன் எல்லாம் டாப்பு.

சந்ரு said...

கலக்குறிங்க தலைவா...

Sethu said...

Super hot.

May i request u to take off the word pannada.

Yellaame saattai adi.

நசரேயன் said...

//அதான் காவடி தூக்க நீ இருக்கியே
பன்னாட//

மரியாதை பலமா இருக்கு

வானம்பாடிகள் said...

@Sethu
அவ்வ் தளபதி காபி பேஸ்ட் போட்டாச். இனி தூக்கினாலும் யூசில்ல. கெடக்கட்டும். சாரி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

kalakkal

ஸ்ரீராம். said...

:))

//"வெங்காயம் விலை படிப்படியாக குறையும்: பவார்

அய்ங். உங்கூர்ல படில அளந்தா விக்கிறாய்ங்க?"//

வெங்காய மேட்டரு பெரிய மேட்டரா இருக்கும் போல..!!

காமராஜ் said...

//வெங்காயத்தை பிரதமர் பார்த்துக்கொள்வார்: ராகுல்

பாவம்யா. அதையாச்சும் உரிக்க உரிமையில்லையா. பார்த்துக்கற வேலைதானா? //

ithu paalaannaa. class.naruk

ஆரூரன் விசுவநாதன் said...

எத்தனை முறைதான் கலக்கல், சூப்பர், அப்படின்னே கமெண்ட் போடறது.

ம்ம்ம்.....சூப்பர்

சேட்டைக்காரன் said...

நறுக்குன்னு நாலு வார்த்தை அங்கங்கே ’சுருக்’குன்னு ஊசி மாதிரி இருக்குது ஐயா! :-)

தமிழ்க் காதலன். said...

நறுக்குன்னு நாலு வார்த்தை பெயருக்கு ஏற்றார் போல் நச்சுன்னு இருக்கு.... அப்படியே நம்ம பக்கம் வாங்க.... சூடா முறுக்கு சமோசால்லாம் சுவையா கிடக்குது..... அன்புடன்... தமிழ்க்காதலன். (ithayasaaral.blogspot.com )

அகல்விளக்கு said...

saravedi....

:)

Muthuramalingam said...

ஜெயலலிதாவின் ஊழல் முறைகேடுகளை விளக்கி ஊருக்கு ஊர் கூட்டம்: கலைஞர்

எல்லாத்தையும் மாதிரி உங்க ஊழலையும் ஒப்பிட்டு சொல்லிடுங்கதல. வயிறெறரிஞ்சி சாவட்டும்.

Ithu than Top.

He should compare both

சே.குமார் said...

டாப்பு.... டாப்பு.... டாப்பு....

க.பாலாசி said...

இது அடி.. நெத்தியடி... என்னத்ததான் திட்டினாலும் எவனுக்காச்சும் சொரண வருதா பாருங்க.. எ.மா. மேல மழப்பேஞ்சமாதிரி கம்முன்னு இருக்காணுக...

கே.ஆர்.பி.செந்தில் said...

இந்த ராகுல்காந்தி வந்து இந்தியாவ காப்பாத்தற அளவுக்கு நாமெலாம் இருக்கோம் என்பது எவ்வளவு கேவலமான விசயம் ,..

ஜோதிஜி said...

அவங்கோத்த பாய

கொஞ்சம் பிசகி படித்தால் வேறு மாதிரியாக வருகின்றது.

கடுமையாக உழைத்தால்

டெல்லி ஹரியானா சாலையில் ?நடுஇரவில் பண்ணை வீடுகளில் உழைப்பு வேகமாகத் தான் நடக்கிறது?

மவனே மந்திரி

மத்தவன் எல்லோரும் எந்திரி.

அதென்னங்க குறிசொல்லில் நகைச்சுவை என்று போட்டுருக்கீங்க?

ஈரோடு கதிர் said...

அட, நேத்து நீங்க ராகுல்ஜிய பார்க்க போகலையா :)))

அப்போ நீங்க அறிவு ஜீவி இல்லையோ?

இனியவன் said...

அப்படி பொடுங்க அரிவாள !.

சாமக்கோடங்கி said...

//அவங்கோத்த பாய

கொஞ்சம் பிசகி படித்தால் வேறு மாதிரியாக வருகின்றது.//

நானும் நெனச்சேன்... ஆனா அவனுக்கு மரியாதை ஒரு கேடா...

சாமக்கோடங்கி said...

பன்னாட என்ற சொல்லை உபயோகித்ததற்கு என்னுடைய "வென்மையான" கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

பன்னாடையாவது அடுப்பு எரித்து சுடுதண்ணி செய்ய உதவும்... ஆமாம்...