ஒரு வழியாக அனைத்துத் தரப்பிலும் ஒரு வித ஏமாற்றத்தையும் எப்போதும் போல் அடுத்த ஆண்டு சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையும் தந்து 2010 விடை பெறப் போகிறது.
புதுவருடம் அன்று ஒரு கர்ச்சீப்பாவது வாங்கினால் கோவணமாவது மிஞ்சி இருக்கும் என்ற மக்களின் பகுத்தறிவு நம்பிக்கையை வீணாக்காமல் 2 நாள் முன்பிருந்தே ‘தள்ளு’ படி விற்பனை ஆரம்பித்து விட்டது. ஒன்றாம் தேதி அன்று வேலை வெட்டியில்லாமல் அதிகாலையிலிருந்தே வரிசையில் நிற்காமல் இன்றைக்கே பணம் கட்டிவிட்டால், நாளை அலுங்காமல் கசங்காமல் பொருளை வாங்கிச் செல்லும் வசதியைத்தர வியாபாரத் தியாகிகள் தயாராகிவிட்டார்கள்.
இனி எந்திரன் சாதனையை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு ‘ஒரு மொபைலுக்கு மைக்ரோவேவ் அவன்’ இலவசமாக் கொடுத்தவன் உலகத்துலயே டமிலேண்டா என்று மார்தட்டிக் கொள்ளலாம். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்கன்னு சொல்லிச் சொல்லி புடுங்குங்க புடுங்க புடுங்கிக்கிடே இருங்க என்று நம்மையும் சொல்லாமல் சொல்ல வைத்து செல்ஃபோன் எல்லாம் அடிமாட்டு விலைக்கு கிடைக்கிறது. பத்து நாட்களுக்கு முன் ரூ 9000க்கு விற்ற செல்ஃபோன்கள் ரூ 6600 அதுவும் கன்னா பின்னா இலவசங்களுடன்.
வழமை போலவே இதற்காகவே அடிக்கப்பட்ட அதிகபட்ச MRP ஸ்டிக்கர்களுடன் நமக்கு தள்ளுபடி செய்வதற்காகவே பிறப்பெடுத்த வியாபாரிகளால் ஸ்பூன் முதல் லேப்டாப் வரை விழாக்கால தள்ளுபடி சலுகை பொருட்கள் தயார்.
புத்தாண்டு கேளிக்கை விருந்துகளுக்கு மக்களும், அவர்களை கட்டுப்பாட்டில் வைக்க போலீசும் தயார். நள்ளிரவு கோவில் திறந்தால் போராட்டம் என்று டரியலாக்க ராம கோபாலனும் தயார். இரண்டு நாள் விடுமுறையில் வருவதால் டி.வி. (செருப்பு) சிறப்பு நிகழ்ச்சிகளோடு கழிக்க டமிலன் தயார்.
புத்தாண்டு கேளிக்கை விருந்துகளுக்கு மக்களும், அவர்களை கட்டுப்பாட்டில் வைக்க போலீசும் தயார். நள்ளிரவு கோவில் திறந்தால் போராட்டம் என்று டரியலாக்க ராம கோபாலனும் தயார். இரண்டு நாள் விடுமுறையில் வருவதால் டி.வி. (செருப்பு) சிறப்பு நிகழ்ச்சிகளோடு கழிக்க டமிலன் தயார்.
பக்கத்து ஊட்டுல ஃப்ளாட் டி.வி. நாம மட்டும் என்னா போடு சட்டையை, பொறப்படு டி.வி.வாங்க என்ற அதிரடியை விட மெதுவா கிளப்பி மகாபலிபுரம், வண்டலூர் ஜூன்னு எஸ்ஸாயிட்டு ஹோட்டல் சாப்பாடுன்னு அலைக்கழிச்சி கூட்டிட்டு வரது லாபமா? அல்லது அத்தனையும் முடிஞ்சும் பழைபடி ‘பக்கத்தூட்டுல’ என்பதும் தப்பாதா என்ற குழப்பத்தில் மக்கள்சும் தயார்.
பெசண்ட் நகர் ஃப்ளாட்டில் இருந்து கொண்டு, ‘யூஸ்லெஸ் இர்ரெஸ்பான்ஸிபிள் கவர்ன்மெண்ட். பொங்கல் பை இன்னும் தராம என்ன பண்றான்? அமெரிக்காவில இதெல்லாம் சிஸ்டமாடிக் தெரியுமோ? நாம வீட்ல இல்லைன்னாலும் ஸ்டிக்கர் ஒட்டிட்டு போயிடுவான். வந்து வாங்கிக்கோன்னு’ என்று அலட்டவும் தயார்.
நித்தியானந்தாதாம்பா ஃப்ராடு! இவரு சத்தியானந்தா! பொறந்ததுமே அம்மான்னுதான் அழுதாராம். அந்நேரம் கோவில்ல இருந்த அம்மன் கண்ணுல தண்ணி வந்துச்சாம். அவருக்கா யாருக்கு தோணுதோ இழுத்து வச்சி முத்தம் குடுப்பாரு. அதோட அவங்க அதிர்ஷம் எங்கயோ போயிடும். நாளைக்கு ஸ்பெஷல் தரிசனம். ரூ 5000 டிக்கட் கட்டினா, சாமியாரை கிட்ட பார்க்கலாம். ரூ10000 டிக்கட் குடுத்தா முதுகை சொறியலாம் என்ற பசப்பலுக்கு மயங்கவும் டமிலன் தயார்.
நித்தியானந்தாதாம்பா ஃப்ராடு! இவரு சத்தியானந்தா! பொறந்ததுமே அம்மான்னுதான் அழுதாராம். அந்நேரம் கோவில்ல இருந்த அம்மன் கண்ணுல தண்ணி வந்துச்சாம். அவருக்கா யாருக்கு தோணுதோ இழுத்து வச்சி முத்தம் குடுப்பாரு. அதோட அவங்க அதிர்ஷம் எங்கயோ போயிடும். நாளைக்கு ஸ்பெஷல் தரிசனம். ரூ 5000 டிக்கட் கட்டினா, சாமியாரை கிட்ட பார்க்கலாம். ரூ10000 டிக்கட் குடுத்தா முதுகை சொறியலாம் என்ற பசப்பலுக்கு மயங்கவும் டமிலன் தயார்.
நமக்கு மட்டுமா? எல்லாருக்கும்தான் வெங்காயம் ரூ60. அதுக்காக வாங்காம இருக்க முடியுமா என்று வாங்கவும், பெட்ரோலைத் தொடர்ந்து காஸ் விலை ரூ 40 உயரும் என்பதை ஜீரணிக்கவும் தயார்.
ரைட்டு! பெட்ரோல் 60ரூ, காஸ் ரூ 40, வெங்காயம் ரூ 60. கத்திரிக்காய் ரூ 50. கீரைக் கட்டு ரூ 15. கலைஞர் டிவி இலவசம். பொங்கல் பை இலவசம். புடவை வேட்டி இலவசம். எப்புடியும் இந்த வாட்டி டி.ஏ. 10 சதம் ஏத்துவான். 50 சதவீதம் தாண்டினதால அதுவும் பேசிக் பே. வட்டிக்கு வட்டி மாதிரி டி.ஏ.க்கு டி.ஏ. மொத்தமா எவ்வளவு சம்பளம் ஏறும் என்று கணக்கு பார்த்து கோட்டை கட்ட கோவணாண்டி அரசு ஊழியனும் தயார்.
எப்பவும் கிழிக்கிற கிழிக்கே சரக்கில்லாம இப்படி எதையோ ஒப்பேத்த நானும் தயார். அதைப் படிக்க நீங்களும் தயார். வாங்க கொண்டாடலாம்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2011 உங்கள் கனவுகளை நனவாக்கட்டும்.
அன்புடன்
பாலா...
53 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்...
இப்போ எப்படி இருக்கீங்க சார்
இதேனுங்ணா... செல் போனு புதுசா வீங்கினீங்களா... சாரி... வாங்னீங்களாக்கும்
புத்தாண்டு வாழ்த்துகள் பாலாண்ணே.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார் :)
@இராமசாமி
பரவால்லைங்க. நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்.
@ச.செந்தில்வேலன் / S.Senthilvelan
உங்களுக்கும் வாழ்த்துகள் செந்தில்.:)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு
@Subankan
நன்றி சுபாங்கன். புத்தாண்டு வாழ்த்துகள்.
@ஈரோடு கதிர்
ம்கும். நாம என்ன மேயரா. நாலு ஃபோன் வச்சிருக்க.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அதுசரி... அடுத்த ஆண்டும் இதைவிட நல்லாவே விளங்கிடும்... கடக்கிறது கடக்கட்டும் முதல்ல கிழவிய தூக்கி மணையில வைப்போம்...
இனிய புத்தாண்டும் வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
// பத்து நாட்களுக்கு முன் ரூ 9000க்கு விற்ற செல்ஃபோன்கள் ரூ 6600 அதுவும் கன்னா பின்னா இலவசங்களுடன். //
ஏமாந்திட்டீரோ... ? #டவுட்டு
// ஒரு வழியாக அனைத்துத் தரப்பிலும் ஒரு வித ஏமாற்றத்தையும் எப்போதும் போல் அடுத்த ஆண்டு சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையும் தந்து 2010 விடை பெறப் போகிறது.//
பழக்க தோஷத்தில் வடை பெறப் போகிறதுன்னு படிச்சுட்டேன்னே.. :-)
// புதுவருடம் அன்று ஒரு கர்ச்சீப்பாவது வாங்கினால் கோவணமாவது மிஞ்சி இருக்கும் என்ற மக்களின் பகுத்தறிவு நம்பிக்கையை வீணாக்காமல் 2 நாள் முன்பிருந்தே ‘தள்ளு’ படி விற்பனை ஆரம்பித்து விட்டது. //
இப்படியெல்லாம் வேற ஆரம்பிச்சுட்டாங்களா?
சிலபடங்களில் ஆஃபர் தெளிவாகவும், சிலதில் மங்கலாகவும் உள்ளது அடுத்த முறை போடும் போது தெளிவாக போடவும். :)
புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணே.
// ‘ஒரு மொபைலுக்கு மைக்ரோவேவ் அவன்’ இலவசமாக் கொடுத்தவன் உலகத்துலயே டமிலேண்டா என்று மார்தட்டிக் கொள்ளலாம். //
அண்ணே தயிர் சாதத்திற்கு சாம்பார் தொட்டுக்கலாம்... சாம்பார் சாதத்திற்கு தயிர் தொட்டுக்க கூடாதா.
மைக்ரோ வேவனுக்கு மொபைல் ஃப்ரீயா கொடுக்கலாம்... மொபைல் போனுக்கு மைக்ரோவேவ் கொடுக்கப்பிடாதா..
// நள்ளிரவு கோவில் திறந்தால் போராட்டம் என்று டரியலாக்க ராம கோபாலனும் தயார். //
ஆஹா... இப்படியெல்லாம் வேற நடக்குதா?
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார்.
சுட சுட செய்திகளோட வாழ்த்தறீங்க. ஒன்னு ஒன்னும் நறுக் நறுக்னு இருக்கு.
அமெரிக்காவில உட்கார்ந்துகிட்டு இந்தயாவில இருந்த எதையெல்லாம் மிஸ் பண்றோம்னு அசை போடும் கூட்டமும் ரொம்ப அதிகம் உண்டு. கோவில் 12 மணிக்கு திறக்க தயாராயிட்டாங்க.
// நாம மட்டும் என்னா போடு சட்டையை, பொறப்படு டி.வி.வாங்க என்ற அதிரடியை விட மெதுவா கிளப்பி மகாபலிபுரம், வண்டலூர் ஜூன்னு எஸ்ஸாயிட்டு ஹோட்டல் சாப்பாடுன்னு அலைக்கழிச்சி கூட்டிட்டு வரது லாபமா? //
இரட்டை செலவு. எப்படியும் ப்ளாட் டிவி வாங்கித்தான் ஆகணும்..
// அந்நேரம் கோவில்ல இருந்த அம்மன் கண்ணுல தண்ணி வந்துச்சாம். //
ஆமாம் தமிழன் பட போற பாட்டை நினைத்து கண்ணீர் வந்தாலும் வந்திருக்கும்.. :-)
// எப்பவும் கிழிக்கிற கிழிக்கே சரக்கில்லாம இப்படி எதையோ ஒப்பேத்த நானும் தயார். அதைப் படிக்க நீங்களும் தயார். வாங்க கொண்டாடலாம் //
அதுக்கு பின்னூட்டம் போடவும் நாங்க தயாராட்டு இருக்கோமுல்ல... அதையேன் விட்டீங்க..
அப்பாடா... மீ த 25
வருஷ கடைசில நாம ஃபார்ம்லதான் இருக்கோன்னு நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றி.... நன்றி.... நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
விழாக்கால ஏமாற்று வியாபாரங்களை நன்றாகவே சொல்லியுள்ளீர்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அண்ணா, வாழ்த்துகள்!
//நித்தியானந்தாதாம்பா ஃப்ராடு! இவரு சத்தியானந்தா! பொறந்ததுமே அம்மான்னுதான் அழுதாராம். அந்நேரம் கோவில்ல இருந்த அம்மன் கண்ணுல தண்ணி வந்துச்சாம். அவருக்கா யாருக்கு தோணுதோ இழுத்து வச்சி முத்தம் குடுப்பாரு. அதோட அவங்க அதிர்ஷம் எங்கயோ போயிடும். நாளைக்கு ஸ்பெஷல் தரிசனம். ரூ 5000 டிக்கட் கட்டினா, சாமியாரை கிட்ட பார்க்கலாம். ரூ10000 டிக்கட் குடுத்தா முதுகை சொறியலாம் என்ற பசப்பலுக்கு மயங்கவும் டமிலன் தயார்.//:)
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் .
:-))
இவ்வளவு கடுமை இல்லாமல், 2011-ன் கடைசி நாள் அமைய ப்ராப்த்திக்கிறேன், பாலாண்ணா!
புத்தாண்டு வாழ்த்துகள்!
எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்தப் போடு போட்டிருக்கீங்களே ஐயா! இது புத்தாண்டு வாழ்த்தா மொத்தாண்டு வாழ்த்தா? :-)
இதென்ன சார் இன்னிக்கு நியூஸ் பேப்பர்ல வந்த ஒரு நோட்டீஸயும் விடல போல! :)))
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார் :)))
புதுவருட வாழ்த்துக்கள் அப்பா
அய்யா வணக்கம்....
தயார்.... காலத்துக்கேத்த பொறுத்தமான
பகிர்வு.....
நன்றிங்கைய்யா.
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .........
ஒங்க ப்ரொஃபைலே இந்தப் பாமரனைப் பத்தி சொல்லிடுச்சு.
அந்த எஃபெக்ட் சரளமான இந்தப் பதிவு பூராவும் கீரை விதை மாதிரி தூவப் பட்டுக் கிடக்கு பாலா சார்.
ஒங்கள இத்தனை நாளும் மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தலைவா!
2010ம் ஆண்டின் முன்னணி வலைப்பதிவுகள் http://www.tamilmanam.net/top/blogs/2010/1
5 வது இடம்... நல்வாழ்த்துக்கள் அய்யா...
”புத்தாண்டு வாழ்த்து தயார் வாங்கோ”-ன்னு கூப்டிட்டு, புடுங்குங்க புடுங்குங்க புடுங்கிக்கிட்டே இருங்கன்னா”
என்னங்ணா அர்த்தம்...?
//ம்கும். நாம என்ன மேயரா. நாலு ஃபோன் வச்சிருக்க.//
நாலு போன் வெச்சிருந்தா மேயரா...?
இன்னும் ஒன்னு கொறையுது. டிஸ்க்கவுண்ட்ல வாங்கிட்டு நேரா வந்துடறேன். மேயர் பதவிய தயாரா வெச்சிருங்க.
உங்களுக்கும், குடும்பத்திற்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
// எப்பவும் கிழிக்கிற கிழிக்கே சரக்கில்லாம இப்படி எதையோ ஒப்பேத்த நானும் தயார். அதைப் படிக்க நீங்களும் தயார். வாங்க கொண்டாடலாம் //
...அண்ணே, உங்களுக்கே இது ஓவராத்
தெரியலை?
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
ஆர்.ஆர்.ஆர்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஐந்தாவது இடத்திற்கு வாழ்த்துக்கள் சார்
@@நன்றி ஸ்ரீ
@@நன்றி டி.வி.ஆர். சார்.
@@நன்றிங்க இரவு வானம்
@@நன்றி பாலாசி
@@அண்ணே ரொம்ப நன்றி. புத்தாண்டு கும்மியோட:)) பேக் டு ஃபார்ம்.
@@நன்றிங்க அக்பர்
@@நன்றிங்க ஜனா
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி பழமை
@@நன்றிங்க டாக்டர்.
@@நன்றி பா.ரா.
@@நன்றி சேட்டை
@@நன்றி ஷங்கர்
@@நன்றி றமேஸ்
@@நன்றி கருணாகரசு
@@நன்றிங்க யோவ்
@@நன்றி யோகேஷ்
@@நன்றி சுந்தர்ஜி. முதல் வரவுக்கும் ஊக்கத்துக்கும்
@@நன்றி சூர்யா
@@நன்றி மீண்டும் பாலாசி
@@நன்றி சத்திரியன்
@@நன்றி செந்தில்
@@நன்றி ரிஷபன்
@@நன்றி ராமமூர்த்தி
@@மஹி க்ரான்னி. நன்றிங்கம்மா. உங்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துகளும்.:)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//50 சதவீதம் தாண்டினதால அதுவும் பேசிக் பே. வட்டிக்கு வட்டி மாதிரி டி.ஏ.க்கு டி.ஏ. மொத்தமா எவ்வளவு சம்பளம் ஏறும் என்று கணக்கு பார்த்து கோட்டை கட்ட கோவணாண்டி அரசு ஊழியனும் தயார்.//
இது இந்த முறை அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவில் பரிந்துரைக்கப் படவில்லையென விவரம் வெளியானவுடன் நண்பர் ஒருவர் புலம்பினார்.
பின்னர் சில நாட்கள் கழித்து அதே டாபிக்கில் மீண்டும் புலம்பினார். உண்மையாக அது ஆகிப் போனால் வெங்காயம் கிலோ நூறுதான் போங்க.
@@நன்றிங்க அரைக்கிறுக்கன்.
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்........
Post a Comment