Friday, November 26, 2010

கேரக்டர் சிட்நாநா...

சில நேரம் ஒரு மனிதரை ஒரு பருவத்தில் கண்டிருப்போம். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவரைச் சந்திக்கும்போது அந்தப் பருவத்துக்கான புரிதலில் ஒரு புதிய பரிமாணம் தோன்றும். அதிலும் மிக அபூர்வமாக ஒரு சிலர் நம் மனதில் இருக்கும் உருவத்தை விசுவரூபமாக்கி மெய் சிலிர்க்கச் செய்வார்கள். அந்த அனுபவம் அலாதியானது. ‘சிட்நாநா’(சிட்டி நாயனா என்கிற சித்தப்பா) அத்தகையதோர் அற்புத மனிதர்.

முதன் முறை அவரைச் சந்தித்தபோது எனக்கு 11 வயது. மனிதர்களைப் பிடிக்கும் பிடிக்காது என்பதற்குப் பெரிய காரணங்கள் ஏதும் இருந்துவிட முடியாது. பழகும் விதம், குழந்தைகளோடான அந்நியோன்னியம், பரிசுகள் போன்றவையே அவற்றைத் தீர்மானிக்கும். அதையும் தாண்டிய ஏதோ ஒன்றை உணர்வது வெகு சிலருக்கு வாய்க்கும். அது என்னவென்று புரியாமல் இருக்கலாம். ஆனால் அதனாலெல்லாம் அந்தத் தாக்கம் குறைந்துவிடப் போவதில்லை. அவர்களின் ஒரு குணம், ஏதோ ஒரு சிறப்பு நம்மையறியாமல் நம்மை வழிநடத்தும் விதையாக அமர்ந்துவிடும்.

நான் 11 வயதில் பார்த்த சிட்நாநாவுக்கும் 19 வயதில் பார்த்த சிட்நாநாவுக்கும் புற மாற்றங்கள் இருந்தனவே தவிர பெரியதாக அவரிடம் ஒன்றும் மாற்றமில்லை. ஆனால் என் வயதின் முதிர்ச்சி, அனுபவம், மனிதர்களைப் படித்த சற்றே விரிந்த மன விசாலம்,அந்த மனிதரில் புதிய கோணங்களைக் காட்டத் தவறவில்லை. மீண்டும் என்னைச் செதுக்கிக் கொள்ள ஒரு பெரிய நிகழ்வு அது.

எங்கள் வீட்டு மாடியில் புதியதாய் விசாலமான ஒரு அறையும், ஒரு ஓரம் கழிப்பறை/குளியலறையும் கட்ட ஆரம்பித்தபோதுதான் என் தோழன் ‘பெத்த நானாவின்’ மகன் முரளி சொன்னான், இது ‘சிட்நாநா’வுக்கென்று. பரபரவென வேலை முடிந்து மேலே தளத்துக்குப் பதில் அஸ்பெஸ்டாஸ் போடப்பட்டதும் அந்த வயதுக்கேயான புரிதலில் சிட்நாநா மற்றவர்களை விட கொஞ்சம் வசதி குறைந்தவர், அல்லது ஏழை என்ற ஓர் எண்ணம்.

சிட்நானாவும், தீபாவளியும் ஒன்றாய் வரும் நாள் நெருங்கியது. பெத்தநாநாவின் பிள்ளைகள், ஹரி, முரளி, சுந்தருடன் இன்னொரு சிட்நாநாவின் மகன்களுக்கு சிட்நாநாவின் வருகை தீபாவளியை விட அதிக எதிர்பார்ப்பைத் தந்தது. இவர்கள் ஒவ்வொருவர் மூலமும் கிடைத்த தகவலின் படி சிட்நாநா பம்பாயிலிருந்து வருகிறார், பெரிய பணக்காரர், நல்ல செல்வாக்குள்ளவர், குடும்பம் இல்லை, அவருடை வீடுதான் நாங்கள் குடியிருக்கும் தொகுப்பு, சென்னையில் அவருக்கு 15க்கும் மேற்பட்ட டாக்ஸிகள் ஓடிக் கொண்டிருப்பது, எல்லாம் விட வரும்போதெல்லாம் சொந்தம் மட்டுமின்றி மற்ற குழந்தைகளுக்கும் பரிசோ, அவை தீர்ந்து விட்ட தருணத்தில் காசோ, எல்லாம் விட மாலைகளில் அவர்களுடன் விளையாட்டுப் பேச்சோ கதைகளோ கதைப்பது போன்ற அரிதான குணம் கொண்டவர் என்பது அவருக்காகக் காத்திருப்பவர்களை விட, இப்படி ஒரு மனிதர் எப்படியிருப்பார் என்ற எதிர்பார்ப்பை என்னிடம் உருவாக்கியது.

தீபாவளிக்கு ஒரு நாள் முன் ஒரு அதிகாலைப் பரபரப்பில் காலை மெயிலில் சிட்நாநா வந்துவிட்டதை அறிய முடிந்தது. அவருக்காக ஃப்ளாஸ்கில் காஃபி கொண்டு சென்ற சுந்தர், ‘சிட்நாநா’ வந்துட்டாங்கடா என்று ஓடியபோது நானும் ஓடினேன். பெத்த நாநாவைப் போன்று அலை அலையான முடி, கோதுமை நிறம், ஒரு வேளை பணக்காரர் என்பதால் குண்டாக இருக்கலாம், பம்பாய் என்பதால் பைஜாமா ஜிப்பா இப்படியாக இருந்தது நான் வரைந்திருந்த மன ஓவியம்.

உள்ளே அமர்ந்திருந்த மனிதரைக் கண்டதும் பெரிய அதிர்ச்சி. ஒரு பயம். திகைப்பு. ‘பரிகெத்தொத்துரா நான்னா. படுதாவு. எவரிதி?’ (ஓடி வராதே, விழுவாய், யார் இது) என்ற கேள்வியைத் தொடர்ந்த ஒரு சிரிப்பு இன்றும் என் மனதில் பசுமையாய் நினைவிருக்கிறது. என்னையறியாமல் கை கூப்பி வணங்கியது அவரை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும். ‘நீ பேரேமிடிக்கு’ நாக்கு புரள மறுத்தது. சுந்தர்தான் பேரைச் சொன்னான்.

ஆஜானுபாகுவான உடலும் உயரமும். தும்பைப்பூ வேட்டியில் வெள்ளை முழுக்கைச் சட்டையுடன் அமர்ந்திருந்தார் மனிதர். கருத்துச் சிவந்து மினுமினுத்த பெரிய காது. தடித்த இமைகளும், உதடும். மடிப்பு மடிப்பாய் செதில் செதிலான முகம். மூக்கு உள்ளடங்கி துளை மட்டும் வித்தியாசமாக இருந்தது. உதவியாளன் ஆற்றிக் கொடுத்த காஃபியை இரண்டு கரங்களால் பற்றிய போது கரிக்கட்டைகளாய் விறைத்து நுனி சற்றே வளர்ந்த விரல்கள். அத்தனையும் அந்த வயதில் ஒரு பயம் தந்திருக்க வேண்டும். மாறாக வாத்ஸ்ல்யமான குரலும், அந்த தடித்த உதடுகளில் தவழ்ந்த புன்னகையும், நெற்றியில் ஸ்ரீசூர்ண ஒற்றையும், அதையும் மீறிக் கண்ணில் இருந்த ஏதோ ஒன்றும் கட்டிப் போட்டது.

பிள்ளைகளுக்காக மாலையில் வந்திறங்கிய பட்டாசும், இனிப்புப் பாக்கட்டுகளும், தீபாவளி இனாமும்( ஹி ஹி வாழ்க்கையில் முதன் முதலில் எனக்கெ எனக்காக ஒரு பத்துரூபாய்த் தாள்) விட ‘இப்புடு வீடு’ (இப்போது இவன்) என்று ஒன்றொன்றாக ஒரு பிள்ளைகளையையும் விடாமல் முறைவைத்து குழந்தைகளோடு குழந்தையாய் வேட்டு விட்டதும், ரசித்ததும் மறக்கவே மறக்காது. பட்டாசு வெடிப்பதை விட நான் அவரை உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

தீபாவளியன்று அதிகாலையில் தன் உதவியாளருடன் ஒவ்வொரு குடித்தனமாக வந்து வெளியே நின்றபடியே உதவியாளர் மூலம் இனிப்பைப் பகிர்ந்து தீபாவளி வாழ்த்துச் சொல்லி விறைத்த கைககளைக் கூப்பியபோது நெகிழ்ந்து போகாதவர் யார்? ஒரு சிலர் உள்ளே அழைத்தபோதும், அந்த அழகிய சிரிப்புடன் மறுத்து அடுத்த வீட்டுக்கு நகர்ந்தபோது அவர் பின்னால் ஒரு வாண்டுப் படையே போனது. பட்டாசாவது மண்ணாவது.

மதிய உணவுக்கு பெத்தம்மா கேரியரில் கொண்டு வந்து, ‘வத்து வதினாவை’ (வேண்டாம் அண்ணி) புறந்தள்ளிப் பரிமாரியபோதும், சாப்பிட வாகாக உள்ளங்கையில் உருட்டி வைத்தபோதும், பெத்தம்மாவின் முகம் எப்போதையும் விட கொள்ளையழகு. அதைவிட அழகு, போதுமென வாய் சொல்ல நீண்ட கையுடன் சிட்நானாவின் கண்கள். அதன் பிறகு நாங்கள் வீடு மாறிப் போனதும் பிறகு எனக்கு வேலை கிடைத்தபின் அதே வீட்டில் குடி வந்ததும் ஏறக்குறைய எட்டு வருடங்களுக்குப் பிறகு நடந்தது.

ஹரி மெர்ச்சண்ட் நேவியில், முரளி படிப்பை நிறுத்தி ஏதோ கடையில், சுந்தர் கல்லூரியில். எங்கள் நட்போ ஹாய், ஹலோவில். இந்த முறை சிட்நாநா வருவதை பெத்தநாநாதான் சொன்னார். கேட்டதும் மனதில் எப்படி இருக்கிறாரோ என்ற ஒரு வருத்தம் தோன்றியது. டாக்ஸியில் வந்து இறங்கிய சிட்நாநாவுக்குப் பின்னே ஒரு யுவதியும், ஒரு குழந்தையும். இன்னொரு டாக்ஸியில் உதவியாளர்கள் வந்திறங்கினர். ரொம்பவே மாறியிருந்தார் சிட்நாநா. புருவம் அறவே இல்லை. இமைகளோ ஒரு கோடாய். மூக்கிருந்த இடத்தில் இரு துவாரங்கள். கூப்பிய கைகளில் ஓரிரண்டு விரல்கள் மட்டும். ஆனால், அந்தச் சிரிப்பும், கண்ணும் மாறவேயில்லை.

‘அரேரே! பாலாஜிகாதுரா நுவ்வு? பாகுன்னாவா?’ என்ற விசாரிப்பில் அதிர்ந்துபோனேன். வெறும் இரண்டு நாள், அதுவும் எட்டு வருடங்களுக்கு முன் கூட்டத்தில் ஒரு சிறுவனை கவனம் வைத்துக் கொள்வது பெரியது. அதிலும் இன்னார் என அடையாளம் காணமுடிவது பெரிய ஆச்சரியம். அன்றைக்கு பெத்த நாநாவின் மகள் கஸ்தூரி அக்காவின் மூலம் சின்நாநாவின் முழுப் பரிமாணமும் புலப்பட்டது.

சிறு வயதில் வீட்டில் காசு திருடியதற்காக தாத்தையா அடித்த அடியில் மும்பைக்கு ஓடியவர். ஓடியவருக்குப் புகலிடம் வேறென்ன? எப்படியோ வாலிபத்திலேயே தமிழர் வாழும் ஒரு பகுதிக்கு தாதா. கடவுள். பல பிள்ளைகளுக்கு கல்வி, திருமணங்கள், மருத்துவ உதவி. மதம் மொழி வேறுபாடின்றி தந்த ‘நாராயண் பாயி’ கடவுள். செல்வாக்கான மனிதர். அவர் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் ‘கண்பதி’ ஊர்வலமோ, சந்தனக் கூடோ, குருத்தோலை ஊர்வலமோ சிட்நாநாதான் ஸ்பான்ஸர்.

சிட்நானாவுடன் வந்திருப்பவர் அவருடைய உதவியாளர் ஒருவரின் காதலி. மதம் வேண்டாமே. இந்த நாய் அவளுக்குக் குழந்தையை கொடுத்துவிட்டுத் தலை மறைவானது. வீட்டை விட்டும் விரட்டப் பட்டிருக்கிறாள். இதெல்லாம் அறியாமலே ஓடியவனைத் தேடும் மும்முரத்தில் இருந்தவருக்கு அவன் வேறொரு குழுவில் இணைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏதோ கேஸில் சிக்கி ஜெயிலுக்கும் போய்விட்ட நிலையில் இவளைப் பற்றியத் தகவல் தெரிந்தபோது எட்டு மாதக் கர்ப்பிணியாம். ஒரு சேரியில் ஒரு தடுப்பில், கூலி வேலை, வீட்டு வேலை செய்து பிழைப்பதை அறிந்திருக்கிறார்.

பணக்காரர். தாதா. அவளை ஏமாற்றியவனும் இவருடனில்லை. யாருக்கான வாழ்வையோ யார் மூலமோ அமைக்கிறதே விதியோ, தெய்வமோ ஏதோ ஒன்று. பெற்றவர்கள் விரட்டியவளுக்கு தந்தையானார். பிறந்த பெண் குழந்தையை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டார். மனிதம் மொத்தமாகப் போய் விடவில்லையே. இவளுக்கு வாழ்வாதாரம் தர சிட்நாநா என்றால், அங்கம் சுருங்கி, அவயங்கள் இற்று விழ முடங்கிப் போன சிட்நாநாவுக்கு இவள் தாயானாள்.

சொந்த அண்ணன் வீட்டில் கூட நுழையாமல், தனித் தட்டு, டிஃபன் கேரியர் சாப்பாடு, அஸ்பெஸ்டாஸ் கூரையில் தங்கல் என்றிருந்தவரை யாரோ ஒரு பெண் தொட்டுத் துடைக்க, உணவூட்ட அனுமதித்திருப்பாரா என்ன? போராடி வென்றிருக்கிறாள் அவரை. ஒரு மாலை வேளையில், அவளையும் அவள் பிள்ளையையும் ‘நா கூதுரம்மா. நா மனவராலு’ (என் பெண்ணம்மா. இது என் பெயர்த்தி) என்று பெருமையோடு அறிமுகம் செய்தது அற்புதம். அந்தப் பெண்ணின் முகத்தில் ‘என் அப்பா’ என்ற பெருமை.

அடுத்த வருடம் சிட்நாநா இறந்து போனார். எப்போதும் சிரித்திருக்கும் பெத்தநாநா கண்கலங்கியது அந்த ஒரு முறைதான். அந்தக் குழந்தை டாக்டராக இருப்பதாக சில வருடங்களுக்கு முன் தன் மகனின் திருமணத்துக்கு அழைக்க வந்த கஸ்தூரி அக்கா சொன்னார். 
 ~~~~~~~~~~~~~

44 comments:

பிரபாகர் said...

ஆசான்,

எந்த நேரம் இடுகை போட்டாலும் படிக்க தயாரா இருப்போமில்ல!... முதலா பார்த்துட்டு படிக்கிறேன்...

பிரபாகர்...

பிரபாகர் said...

ஆஹா... என்ன ஒரு கேரக்டர்...! சிட்நாநா மனதில் ஆணியடித்தார்போல் இறங்கியிருக்கிறார். இதுபோன்று பாழ்பட்ட சமுதாயத்தால் தனிமைப் படுத்தப்பட்டவர்களை பார்த்து அதில் ஒருவரிடம் மிகப் பெரிய பாடத்தை கற்றிருக்கிறேன். இடுகையாய் பகிர்கிறேன் அய்யா!...

நிறைய இடங்களில் உங்களின் சொல்லாடலை மிக ரசித்தேன்!...

கேரக்டர்களால் எங்களைக் கட்டிப்போடும் உங்களுக்கு, உங்களின் எழுத்துக்கு என் வந்தனம்...

பிரபாகர்...

Unknown said...

Good Morning Sir

vasu balaji said...

@Sethu
good evening sethu:)

க ரா said...

சார் வழக்கம்போல ... அருமைன்னு சொல்லிட்டு போயிர முடியல.. மனசு லயிச்சு போய் ஒரு 15 தடவயாது திரும்பி திரும்பி படிச்சிருப்பேன்...

Unknown said...

சின்னாயனாக்கு பெத்த நமஸ்காரம் சார்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மூச்சு விடாம படிக்கவைத்த இடுக்கை..

சூப்பர் பாஸ்..( என்கின்ற வானம்பாடிகள்..)

ப.கந்தசாமி said...

ரொம்பவும் உருக்கமான கேரக்டர். கடைசி பாரா உள்ளத்தை தொட்டுவிட்டது. அருமையான பதிவு.

காமராஜ் said...

// யாருக்கான வாழ்வையோ யார் மூலமோ அமைக்கிறதே விதியோ, தெய்வமோ ஏதோ ஒன்று. பெற்றவர்கள் விரட்டியவளுக்கு தந்தையானார். பிறந்த பெண் குழந்தையை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டார். மனிதம் மொத்தமாகப் போய் விடவில்லையே. இவளுக்கு வாழ்வாதாரம் தர சிட்நாநா என்றால், அங்கம் சுருங்கி, அவயங்கள் இற்று விழ முடங்கிப் போன சிட்நாநாவுக்கு இவள் தாயானாள்.//

அண்ணா க்ளாஸ் அண்ணா.
இப்படியான மனிதர்கள் இன்னும் உயர உயரப்போய்க்கொண்டே இருப்பார்கள்.
அதுவும் உங்கள் விரல் பட்டு கூடுதல் ஜொலிப்படைகிறார்கள்.நம்பர் ஒன்.

ப.கந்தசாமி said...

அந்தக்காலத்து ஆனந்தவிகடன் தீபாவளி மலரில்தான் இந்த மாதிரியான கதைகளைப்படித்திருக்கிறேன். பாராட்டுக்கள்.

பழமைபேசி said...

@DrPKandaswamyPhD

எங்கண்ணன் வயசு பதினாறுன்னு நாங்க சொல்லவே இல்லியே?!

பழமைபேசி said...

சிட்நாநா காலமந்த்தா மனலோனே!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பதிவு

பழமைபேசி said...

@Sethu
ஏண்ட்டி சேதுகாரு, சிட்நாநா செப்பினவாள்ளுகோடா சின்னாயன்னா மீகு?!

Unknown said...

"ஏண்ட்டி சேதுகாரு, சிட்நாநா செப்பினவாள்ளுகோடா சின்னாயன்னா மீகு?!"

காது பாபு!
அதி ' சிட்நாநா செப்பின தரவாதி மீக்கு சின்னாயனாவா ? யேமிட்டி இதி?'. தெளியிதா?

To Vanabadi Sir: Sir! Am I correct?

எல் கே said...

தெலுங்கா சாரே

ரிஷபன் said...

ஒரு இடைவெளிக்கு அப்புறம் திருப்தியா மனசு நிறைஞ்சு..

நசரேயன் said...

சால பாகவுந்தி அண்ணையா

a said...

மனம் கனக்க வைத்தார் சிட்நாநா....

ஸ்ரீராம். said...

வழக்கம் போல மனதுக்குள் ஆணியடித்து நின்ற, இல்லை, இல்லை, மென்மையாக மனதுக்குள் இறங்கிய பதிவு.

சங்கரியின் செய்திகள்.. said...

நல்ல கேரக்டர் சிட்நாநா.....

vasu balaji said...

@Sethu
/காது பாபு!
அதி ' சிட்நாநா செப்பின தரவாதி மீக்கு சின்னாயனாவா ? யேமிட்டி இதி?'. தெளியிதா?

To Vanabadi Sir: Sir! Am I correct? /

தப்பண்டி! அலா காது பாபு! அதி, ‘சிட்நாநாவனி செப்பின தரவாத கூட மீகு சின்னாயனானா? ஏமிடிதி?”

settaikkaran said...

உங்களுக்குப் பழக்கப்பட்ட அந்த முகத்தின் ஒரு மாதிரி உருவத்தைப் பார்த்ததுபோலவும், அவருக்கும் எங்களுக்குமே கூட ஏதோ பரிச்சயமிருப்பது போலவும், இதை வாசிக்கிறபோதும், அதன் பின்னும் உணர்கிறேன் ஐயா.

Thenammai Lakshmanan said...

இந்த காரெக்டர் ரொம்பவே அசைத்துவிட்டது பாலா சார்..

கொஞ்சம் வர்தா போலவும் ஒரு பரிமளிப்பு..

Chitra said...

அப்படியே மனதில் பதிந்து விட்ட கேரக்டர், சார்.

சூர்யா ௧ண்ணன் said...

அருமை தலைவா!

vasu balaji said...

@தேனம்மை லெக்ஷ்மணன்

வர்தா பாய்க்கு சற்றெ முன்னே

Rekha raghavan said...

// அதைவிட அழகு, போதுமென வாய் சொல்ல நீண்ட கையுடன் சிட்நானாவின் கண்கள்//

அருமையான விவரிப்பு.என்னமா எழுதறீங்க

Unknown said...

என்ன அருமையான விவரிப்பு ... நானும் ஒரு கேரக்டர் பத்தி எழுதி பாத்தேன் சரிபட்டு வராம, உங்க கேரக்டர் பதிவுகல திரும்ப படிச்சு முயற்சி பண்ணிருக்கேன், இந்த வாரம் அதனை பதிவேற்றுவேன்...

மணிஜி said...

பாலாண்ணாவின் இன்னொரு வார்ப்பு....கிளாஸ்..

பின்னோக்கி said...

கலக்கிட்டீங்க சார்... அருமை

CS. Mohan Kumar said...

Sir you must publish a book compiling all these characters.

ஈரோடு கதிர் said...

அசத்தலான சிட்நாநா!

அப்படியே மனதில் சம்மனமிட்டு உட்காரும் கேரக்டர்

||தப்பண்டி! அலா காது பாபு! ||
ஸ்போக்கன் தெலுங்கண்டி பாபு!

Paleo God said...

மோகன் குமார் said...
Sir you must publish a book compiling all these characters.//

அவுனு சாரே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உஙகளுடைய கேரக்டர் செதுக்கல்..கண் மூடிக் கொள்கிறேன்..

மனத்துள் அந்த ‘சிட்நானா’
கோபுலுவின் தூரிகையில்..

அஸத்தி விட்டீர்கள் சார்..கேரக்டர் செதுக்கலில் உங்களை அசைக்க ஆள் கிடையாது...

க.பாலாசி said...

இது அசத்தல்.. ஒவ்வொருத்தரையும் கண்ணுக்கு காட்சிப்படுத்துறது கலை.. இந்த மனிதனையும் உள்வாங்கிக்கொண்டேன்.

ராஜ நடராஜன் said...

இது எப்ப எனக்கு தெரியாம மகுடத்துல போய் உட்காந்துகிச்சு!

ராஜ நடராஜன் said...

இப்பொழுது நிதானமாக படித்துவிட்டு கண்கலங்களுடன் சிட்நாநாவுக்கு வணக்கம்.

கலகலப்ரியா said...

|| முதன் முறை அவரைச் சந்தித்தபோது 11 வயது.||

அவருக்கா..?!

(ப்ரியா ஷட் அப்... சீரியஸ் போஸ்ட்ல நோ காமெடி..)

vasu balaji said...

@கலகலப்ரியா
அட ஆமாம்ல. தாங்க்ஸ் வாலு.

கலகலப்ரியா said...

ஓ... ரொம்பக் கனம் சார்...

(படிச்சு முடிக்காம முதல் காமெண்ட் போட்டுட்டேன்... ஸாரி..)

vasu balaji said...

@கலகலப்ரியா

ஓ! எதுக்கு சாரி. நீ சொல்லலைன்னா தெரிஞ்சிருக்காது. படிக்கறப்போ அப்படித்தான் தோணும்.

'பரிவை' சே.குமார் said...

கண்கலங்களுடன் சிட்நாநாவுக்கு வணக்கம்.

vasu balaji said...

@சே.குமார்
நன்றிங்க குமார்.