Friday, September 3, 2010

கேரக்டர் - சீத்தாபதி.

சென்னை என்றாலே புறாக்கூண்டு வீடுகளும் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும். இந்தப் புறாக்கூண்டுக்கு சொந்தக்காரர்களான வீட்டுக்காரர்களில் பல பேருக்கு வாடகைதான் வருமானம் என்றாலும் குடித்தனக்காரர்களை அடிமையாகவே நடத்துவது இன்று வரை தொடரும் ஒரு கலாச்சாரம். பிடிக்கலைன்னா காலி பண்ணிட்டு போய்ட்டேயிரு என்ற ஒற்றை வார்த்தையில் எந்தக் குறையும் காணாமலே போய்விடும்.

வாசலிலிருந்தே இஞ்ச் கூட விடாமல் தொடங்கும் வரிசை வீடுகளைப் பார்த்து அயனாவரத்துக் குறுக்குச் சந்தொன்றில் கிட்டத்தட்ட மைதானம் போன்ற முன்புறமும் அதையடுத்த இரண்டு மாடி வீடுகளும் சுத்தமான சூழலும் ஏன் நாம இந்த வீட்டில் குடியில்லை என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதையும் விட, இனம் புரியாத ஒரு பிணைப்பாக அந்த வீட்டின் சொந்தக்காரரை பார்க்க நேரும்போது அவரின் ஸ்னேகமான, முகமெங்கும் விகசிக்கும் புன்னகையும், காலை வேளைகளில் அப்பாவின் விரல் பிடித்து பள்ளி செல்கையில் அவர்களுக்கிடையே பரிமாறும் ‘குட் மார்னிங்’குமே இந்த ஏக்கத்தை அப்பாவிடம் விண்ணப்பமாக்கத் துணிவைத் தந்தது.

பதினைந்து குடித்தனத்துக்கு மூன்று ட்ரை லெட்ரினும், மூன்று குளியலறையும் திடீரென ப்ரம்மாண்டமான குறைகளாகத் தெரிந்தன. எல்லாம் கூடி வந்த ஒரு நாளில், குட் மார்னிங் தாண்டி, வீடு காலியானா சொல்றீங்களா என்று அப்பா கேட்டதும், அடுத்த மாதம் ஒரு போர்ஷன் காலியாகுதுங்க. சின்ன இடம்தான். போதுமானால் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னதும், மாதத்துக்கு ஏன் முப்பது நாட்கள் என்று கோவம் வந்தது. 

காலியாகு முன்னரே கால நேரமின்றி வீடு பார்க்க ஆட்களை அழைத்து வருபவர்களிடையே ஒரு ஒழுக்கமாக காலியான பிறகே பார்க்கலாம், பிடித்திருந்தால் அட்வான்ஸ் இவ்வளவு, வாடகை இவ்வளவு, இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தாங்களே பத்து ரூபாய் வாடகை ஏற்றிக் கொடுக்க வேண்டும் போன்ற ஷரத்துகள் குடித்தனக்காரர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.

ஒல்லியான உடல்வாகு, கோதுமை நிறம், சுமாரான உயரம்,  வெள்ளையும் கருப்பும் கலந்த சுருள் சுருளான முடி, மிகச்சிறிய முகம், முகம் கொள்ளாச் சிரிப்பு,  ஒரு பெண்ணின் குரல் போன்ற மென்மையான குரலோடு நட்பாய், கண்டிப்பாய், பெண்களுக்கெல்லாம் கஸ்தூரி அப்பாவாக, ஆண்களுக்கு சாராக, எங்களுக்கெல்லாம் பெத்த நாநாவாக, கட்சித் தோழர்களுக்கு காம்ரேடாக இருந்தார்.  சீதாபதி என்ற அவர் பெயரை போஸ்ட்மேன் மட்டுமே சொல்லுவார்.

கரையற்ற நாலு முழவேட்டியும், வீட்டிலிருக்கையில் கை பனியனும், வெளியில் செல்வதானால் , வெள்ளை அரைக்கை மல் சட்டையும், தோளில் வெள்ளைக் கைத்துண்டும் எளிமையிலும் ஒரு தனி மரியாதை ஏற்படுத்தும். ஏனோ மிக உயரமான சைக்கிளில் சீட்டும் உயரமாகவே வைத்துக் கொண்டு, ஏரோப்ளேன் டயர் செருப்பு சைக்கிள் பெடல் ஆரம்பிக்கும் ஃப்ரேமில் வைத்து உந்தி உந்தி படக்கென ஒரு லாவகமாய் ஏறி அமர்ந்து வெகு நிதானமாக மிதிப்பார். பத்தடிக்கு ஒரு முறை வணக்கம் சொல்பவர்களுக்கு சலிக்காமல் வலது கையால் முழுமையான வணக்கம் சொல்லும் பாங்கே அழகு. 

காலை ஒரு முறை கட்சி ஆஃபீசுக்குப் போய் வந்து, குளித்து முடித்து, மனுக்கள், கட்சி சம்பந்தமான கடிதங்கள் என்று பரபரப்பாய்ப் போகும். அவருக்கேற்ற அமைதியான மனைவி. மதிய உணவு உண்டு, பத்திரிகைகள் படித்து, வெயில் தாழ தன் வாகனத்தில் கிளம்பி கட்சி ஆஃபிஸுக்குப் போனால் வர எட்டு மணியாகிவிடும். கட்சி மீட்டிங்குகளுக்கு கொடி ஒட்டுவது, போஸ்டர் அடித்துக் கொடுப்பது என்று எல்லாமும் செய்வார். 

ஊரில் மனைவியின் நிலத்திலிருந்து அரிசி, பருப்பு போன்றவை வந்துவிடும். அறுவடைக்கோ விதைப்புக்கோ தப்பித் தவறிக் கூட இவரை அனுப்ப மாட்டார்கள். சந்தையில் விற்காமல் அடிமாட்டு விலைக்கு கொடுப்பது, கூலி ஏற்றி விடுவது என்று அதகளம் பண்ணி விடுவார் என்ற பயம். 

தோழர்களின் சைக்கிள் ஊர்வலம் வெகு பிரசித்தி. இரயில்வேத் தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏதோ ஒரு கேட் மீட்டிங் நடந்தபடி இருக்கும். அதற்கான ஊர்வலங்கள் போராட்டங்களில், டக்கென ப்ரேக் பிடித்து கால் ஊன்ற முடியாத பேலன்சில், பெண்குரலில் லீடிங் வாய்சாக ஸ்லோகன் சொல்லிக் கொண்டு போகிறவர் பெத்தநாநா என்று சொல்லிக் கொள்வதில் அலாதி பெருமை எனக்கு. 

என் தந்தை இறந்து போன அதிகாலையில், அருகிலிருக்கும் ஒரே உறவான சித்தப்பாவின் வீட்டுக்கு ரிப்பேருக்கு இருந்த டாக்ஸியில் ஸ்டூல் போட்டு அவர் தம்பி ஓட்ட தரையில் மடியில் என்னைச் சாய்த்துக் கொண்டு கன்று குட்டிப் போல் தடவிக் கொடுத்தபடி கூட்டிச் சென்றது இப்போதும் நினைத்தால் சிலிர்க்கும். போஸ்ட் மாஸ்டர் என்பதால், உடனே வரவியலாது, ஆஃபீஸ் திறந்ததும் சாவி கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன் என்றவரை முறைத்தபடி, சற்றே வருத்தம் கலந்த சிரிப்போடு, வா நாயனா என்று தோள் பிடித்து அழைத்துக் கொண்டு, வருத்தத்தோடு இதர சொந்தங்களுக்கு தந்தி அடிக்க அழைத்துப் போனதும் அப்போது பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை.

வரும் பென்ஷனில் அந்த வாடகை மிக அதிகமென்ற நிலையில், காலி செய்வதாகச் சொன்னபோது, என் வீட்டில் இருந்து இப்படி ஒருத்தர் கஷ்டத்தோட காலி பண்ண மனசு இடம் கொடுக்கலைங்க. பாருங்க ஒரு முப்பது ரூபாய் கம்மி பண்ணி கொடுங்க. கொஞ்ச நாள் தானே. பையன் வேலைக்கு போன பிறகு, சேர்த்து வாங்கிட்டா போச்சு, என்னப்பா என்னும் ஒரு வீட்டுக்காரரை யாரும் கண்டிருக்க முடியாது. 

வேறு வழியின்றி, சின்ன இடமாகப் பார்த்துப் போய், வேலை கிடைத்து, திருமணமானபின், அவருடைய வருத்தம் போக்கவோ என்னவோ, கொஞ்சம் பெரிய வீடாக வேண்டும் என்று அவர் வீட்டிலேயே திரும்பவும் குடியிருக்க வாய்த்தது. பாழாய்ப் போன நாகரீக எழவு ஒட்டிக் கொண்டதோ என்னவோ, வாய் நிறைய பெத்த நாநாவென அழைக்கவிடாமல், சார் என்று அழைக்க நேர்ந்தது. 

அந்த வயதிலும், தொழிற்சங்க வேலைகள், கட்சி மீட்டிங்குகள் என்பதையும் தாண்டி, எந்தக் கட்சியானாலும் ஸ்னேகமாக மாற்றுக் கருத்துக்களைப் பேசுவதும், உட்குழு விவகாரத்தில் காம்ரேட் சொன்னால் கட்சித்தலையை மதிக்காதவர் கூட சுமுகமாகப் போவது கட்சி தாண்டி அவரின் செல்வாக்குக்கு சாட்சி.  நாட்கள் செல்ல, இன்னமும் பெரிய வீடு தேட வேண்டிய நிலையில் வருத்தத்துடனே போனாலும், வழியில் பார்க்கும் நேரமெல்லாம் ஃப்ரேமில் காலூன்றி குதித்து, வணங்கி விசாரிப்பார். 

இன்னமும் கட்சி, வேலைன்னு இருக்கீங்களா என்று ஒரு முறை கேட்டபோது, கண்ணு மூடுற வரைக்கும் அது இல்லாம போகுமாப்பா. போராட்டம் ஊர்வலம்னு போறதில்லை. நிதானமில்லாம போயிடுச்சி. மரியாதை போயிடுச்சி. விரோதிகளா பார்க்கறாங்க. பேசித் தீர்க்கக் கூடியதுக்கு கூட போராட்டம் ஆர்ப்பாட்டம்னு துடிக்கிறாங்க. எப்பவாவது ஒன்னு ரெண்டு மீட்டிங், மற்றபடி தேடி வரவங்களுக்கு உதவுறதுன்னு பொழுது போகுது என்றார். கட்சி ஆஃபீசுக்குப் போய் நண்பர்களைப் பார்த்து பேசிவிட்டு வந்து, சாப்பிட்டு அமர்ந்த கொஞ்ச நேரத்தில் ஹார்ட் அட்டாக்கில் போனவரை தேவதைகள் இருப்பின் ரெட் சல்யூட்டோடு தான் அழைத்துச் சென்றிருப்பார்களோ?
~~~~~~~~~~~~~~~

51 comments:

இராமசாமி கண்ணண் said...

லட்சத்தில் ஒருவர் :)
//
ஒல்லியான உடல்வாகு, கோதுமை நிறம், சுமாரான உயரம், வெள்ளையும் கருப்பும் கலந்த சுருள் சுருளான முடி, மிகச்சிறிய முகம், முகம் கொள்ளாச் சிரிப்பு, ஒரு பெண்ணின் குரல் போன்ற மென்மையான குரலோடு நட்பாய், கண்டிப்பாய், பெண்களுக்கெல்லாம் கஸ்தூரி அப்பாவாக, ஆண்களுக்கு சாராக, எங்களுக்கெல்லாம் பெத்த நாநாவாக, கட்சித் தோழர்களுக்கு காம்ரேடாக இருந்தார். சீதாபதி என்ற அவர் பெயரை போஸ்ட்மேன் மட்டுமே சொல்லுவார்.//
நீங்க விவரிக்கிற விதம் அருமை சார் :)
ரொம்ப நன்றி பகிர்வுக்கு :)

எறும்பு said...

...

வானம்பாடிகள் said...

// எறும்பு said...
...//

?!

எறும்பு said...

//சாப்பிட்டு அமர்ந்த கொஞ்ச நேரத்தில் ஹார்ட் அட்டாக்கில் போனவரை //

தேவதைகள் வந்து சந்தோசமா கூட்டிட்டு போய் இருப்பாங்க.

இப்ப ஒரு ஆள இதே மாதிரி காமிங்க

வானம்பாடிகள் said...

எறும்பு said...
//சாப்பிட்டு அமர்ந்த கொஞ்ச நேரத்தில் ஹார்ட் அட்டாக்கில் போனவரை //

தேவதைகள் வந்து சந்தோசமா கூட்டிட்டு போய் இருப்பாங்க.

இப்ப ஒரு ஆள இதே மாதிரி காமிங்க//

எம்.ஜி.ஆர். தனி கட்சி ஆரம்பிச்ச நேரம். நேத்து வரைக்கும் ஒன்னா இருந்தவங்க எதிர் அணியில. வார்த்தை சூடு பறக்கும், காம்ரேட் வரும் வரை. அப்புறம் எல்லாரும் ஒன்றாய் டீ சாப்பிடுவார்கள்:). அற்புதமான மனிதர்.

எறும்பு said...

//// எறும்பு said...
...//

?!//

அது வேற ஒண்ணும் வடையை கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிஞ்சிடுச்சு...

இந்த ராமசாமி, வடை எங்க இருந்தாலும் மோப்பம் பிடிச்சு வந்துர்ராறு..

எறும்பு said...

இளந்தாரி புள்ளைங்க மாதிரி நேரங்கெட்ட நேரத்துல முழிச்சு கெடக்கிய.. போய் படுங்க பதிவு எங்கயும் போகாது.. காலைல பாத்துக்கலாம்.

:)

இராமசாமி கண்ணண் said...

எறும்பு said...

//// எறும்பு said...
...//

?!//

அது வேற ஒண்ணும் வடையை கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிஞ்சிடுச்சு...

இந்த ராமசாமி, வடை எங்க இருந்தாலும் மோப்பம் பிடிச்சு வந்துர்ராறு..
---
நீங்க எறும்பு.. நான் சித்தெறும்பு.. உங்கள விட பாஸ்ட் அதுனால வடை எப்பவும் எனக்குத்தான் :)

பழமைபேசி said...

அண்ணா.... இதே போல, எங்க ஊர்ல ஒரு மனிதம்... நினைவுட்டினீங்க... நன்றி!

தள்பதி.... ம்ம்ம்.... செல்லாது!!!

Sethu said...

Nice one Sir. Thanks. I can sse the respect you have for him. We do respect him with you.

சே.குமார் said...

வானம்பாடிகள் சார்...

அருமை... மனிதம் உள்ள மனிதர்கள் சிலரை எங்கள் மண்ணிலும் பார்த்ததுண்டு.

பகிர்வுக்கு நன்றி.

முகிலன் said...

உண்மையிலேயே ரொம்ப பொறாமையா இருக்கு சார் உங்கள பாக்க. எவ்வளவு நல்ல மனுஷங்க சூழ இருக்கீங்க 

அஹமது இர்ஷாத் said...

நெகிழ்வு சார்..

Chitra said...

பேசித் தீர்க்கக் கூடியதுக்கு கூட போராட்டம் ஆர்ப்பாட்டம்னு துடிக்கிறாங்க.


.....எத்தனை அருமையாக உண்மையை நச்னு சொல்லிட்டு போய் இருக்கார்.

sriram said...

வார்த்தைகளில் விவரிக்க முடியாத எண்ணங்கள் / உணர்ச்சிகள் ஒவ்வொரு கேரக்டர் இடுகையையும் படிக்கும் போது, ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன், Rather two

1. YOU ARE LUCKY
2. I ENVY YOU பாலாண்ணா

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பா.ராஜாராம் said...

பாலாண்ணா,

ஒரு அபரிதமான சக்தி திரள்கிறது, உங்களிடமிருந்து இந்த கேரக்டர்கென.

நீங்கள் உணர்கிறீர்களோ இல்லையோ, வாசிக்கிற நான் உணர்கிறேன். "பாரு பாரு" என பிரித்து வைக்கும் சக்தி.

மனிதர்களை பார்க்க ஒரு கண் வேணும்ணா. அதை பிரிக்க ஒரு கண் வேணும். ரெண்டும் வாய்ப்பது அபூர்வம்!

லவ் யூ ண்ணா!

வழிப்போக்கன் - யோகேஷ் said...

அருமையான (மனிதரை பற்றிய) நினைவு பகிர்வுகள்...

ஸ்ரீராம். said...

மறுபடி அழகிய கேரக்டர் பதிவு. காம்ரேடுகள் இயல்பிலேயே எளிமையானவர்கள். பார்க்கும் மனிதர்களின் இம்மாதிரி விசேஷ குணங்களை நாம்தான் பார்க்க மிஸ் செய்கிறோமோ என்று எண்ண வைக்கும் எழுத்துக்கள்.
//"தேவதைகள் இருப்பின் ரெட் சல்யூட்டோடு தான் அழைத்துச் சென்றிருப்பார்களோ"//

கட்டாயம்..

சேட்டைக்காரன் said...

இவர் போன்ற கேரக்டர்கள் உங்கள் தலைமுறையில் இருந்திருக்கிறார்கள்; அடுத்த தலைமுறை சீத்தாபதிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. (இடுகையைப் பற்றி புதிதாக என்ன சொல்ல? அருமை..........................)

புதிய மனிதா said...

அருமை பகிர்வுக்கு
நன்றி ....

Mahi_Granny said...

எப்போதும் உங்களைச் சுற்றிலும் உள்ள நல்லவர்களை மட்டுமே அடையாளம் கண்டு எழுதுகிறீர்கள் . அருமை சார்

சைவகொத்துப்பரோட்டா said...

வசீகரமான எழுத்து நடை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பெத்த நானா சீத்தாபதி அவர்கள் கண்களில் நிற்கிறார்.

அவ்வளவு அருமையாக அவரைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.

நன்றி.

இராகவன் நைஜிரியா said...

கோடியில் ஒருவர் ...

இது மாதிரி ஒரு காம்ரேட் இன்னிக்கு இருக்காங்களான்னு சந்தேகம்தாங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி.

பிரபாகர் said...

தாதமாய்ப் படிக்கிறேன். மனிதத்தோடு வாழ்ந்து இறையாகிப்போன ஒரு நல்லவரை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி அய்யா! அசத்துங்கள்.

பிரபாகர்...

மதுரை சரவணன் said...

இது மாதிரி ஒரு காம்ரேட் இன்னிக்கு இருக்காங்களான்னு சந்தேகம்தாங்க.//

thanks for sharing.

காமராஜ் said...

மூன்று பேரைத்தெரியும்.அவர்களைப்பார்க்கமுடியாமல் திணறிப்போக நேரிடும். அன்பு பலாண்ணா மூன்றாவது பார்வையாக இருக்கிறது பெத்தநாநா வின் கேரக்டர்.எந்த விதமான பூச்சும் இல்லாத அச்சு அசலாக வந்திருப்பது ஆனந்தமாக இருக்கிறது.இறுதி வரிகளில் கண்கள் நிழலாடுகிறது. தேவதைகள் அடிக்குதோ இல்லையோ அவருக்கு எனது ரெட் சல்யூட்.

"உழவன்" "Uzhavan" said...

Great!!! இப்பவும் இருக்காங்களே அரசியல்வியாதிகள்..

சத்ரியன் said...

//பாழாய்ப் போன நாகரீக எழவு ஒட்டிக் கொண்டதோ என்னவோ, வாய் நிறைய பெத்த நாநாவென அழைக்கவிடாமல், சார் என்று அழைக்க நேர்ந்தது. //

பழகிப்போயிட்டோம் பாலா சார்.

அற்புதமான கேரக்டர்கள்!

க.பாலாசி said...

நிச்சயம் மதிக்கப்படவேண்டிய நபர்...ரெட் சல்யூட் என்ன? சிலைவைத்து வணங்கலாம்...

விந்தைமனிதன் said...

அழகான விவரிப்பு... அற்புதமான நபர்!

கலகலப்ரியா said...

வழக்கம் போல கேரக்டர் பேசுது சார்... உங்களுக்கேயான எழுத்துநடை ரொம்ப நல்லாருக்கு...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

கேரக்டர் அருமை - பழகிய விதத்திலும் - பார்த்த விதத்திலும் - ஒரு அழகான இடுகையாக - நல்ல மனிதரின் அருமையான அறிமுக இடுகையாக - வெளி இட்டமை நன்று. ஒவ்வொரு சிறு நிகழ்வும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் நன்று. மிக மிக ரசித்தேன்.

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

பின்னோக்கி said...

அவர் வாழ்ந்த வாழ்க்கையை உங்களின் இந்த இடுகை, அவருக்கு நீங்கள் அளித்த அஞ்சலியாக எங்களுக்குத் தந்திருக்கிறது. சில கேரக்டர்களில் உங்களின் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் பங்கெடுத்தவர் என்ற வகையில் இந்த கேரக்டர், சற்றே தர வரிசையில் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடிக்கிறார்.

பத்மநாபன் said...

மனிதர்கள் முக்கியம் என்று வாழ்ந்த இந்த கேரக்டர், உங்கள் வரிகளால் எங்கள் மனங்களுக்குள்ளும் புகுந்துவிட்டார்.

ரிஷபன் said...

கேரக்டர் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று விஞ்சும் அழகு. உங்கள் எழுத்தின் சக்தியின் முழு வெளிப்பாடு.

பத்மா said...

என்னமா எழுதுறீங்க! பாக்குற மனுஷங்க கிட்ட உள்ள நல்லதெல்லாம் எழுத்தில அழகா வருது.. புதிய பார்வையை கத்து தரீங்க சார் ..
hats off

வானம்பாடிகள் said...

@@நன்றி இராமசாமி
@@நன்றி இராஜகோபால்:))
@@நன்றிங்க பழமை
@@நன்றி குமார்
@@நன்றி சேது
@@நன்றி முகிலன்:)
@@நன்றி இர்ஷாத்
@@நன்றிங்க சித்ரா

வானம்பாடிகள் said...

@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி பா.ரா. :)
@@நன்றி யோகேஷ்
@@நன்றிங்க ஸ்ரீராம்
@@நன்றி சேட்டை
@@நன்றி புதிய மனிதா
@@நன்றிங்க மஹி க்ரானி
@@நன்றிங்க சைவகொத்து பரோட்டா
@@நன்றி செந்தில்

வானம்பாடிகள் said...

@@நன்றிங்கண்ணே
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றி பிரபா
@@நன்றிங்க சரவணன்

வானம்பாடிகள் said...

காமராஜ் said...
மூன்று பேரைத்தெரியும்.அவர்களைப்பார்க்கமுடியாமல் திணறிப்போக நேரிடும். அன்பு பலாண்ணா மூன்றாவது பார்வையாக இருக்கிறது பெத்தநாநா வின் கேரக்டர்.எந்த விதமான பூச்சும் இல்லாத அச்சு அசலாக வந்திருப்பது ஆனந்தமாக இருக்கிறது.இறுதி வரிகளில் கண்கள் நிழலாடுகிறது. தேவதைகள் அடிக்குதோ இல்லையோ அவருக்கு எனது ரெட் சல்யூட்.//

நன்றி காமராஜ்.

வானம்பாடிகள் said...

@@நன்றி உழவன்
@@நன்றி சத்திரியன்
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க விந்தைமனிதன்
@@நன்றி சீனா
@@நன்றிங்க பின்னோக்கி. :)
@@நன்றி பத்மநாபன்
@@நன்றி ரிஷபன்
@@நன்றிங்க பத்மா

வானம்பாடிகள் said...

cheena (சீனா) said...
அன்பின் பாலா

கேரக்டர் அருமை - பழகிய விதத்திலும் - பார்த்த விதத்திலும் - ஒரு அழகான இடுகையாக - நல்ல மனிதரின் அருமையான அறிமுக இடுகையாக - வெளி இட்டமை நன்று. ஒவ்வொரு சிறு நிகழ்வும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் நன்று. மிக மிக ரசித்தேன்.

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா//

நன்றி சார்:)

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

//வழக்கம் போல கேரக்டர் பேசுது சார்... உங்களுக்கேயான எழுத்துநடை ரொம்ப நல்லாருக்கு...//

ரொம்ப நன்றிம்மா. உளிக்குதான் நன்றி சொல்லணும்:)

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

சிந்தையில் சீதாபதியை நேர்நிறுத்தி,
செவ்வணக்கமொன்றைப் போட்டு, அவ்
விந்தை மனிதனின் விதி முடித்திட்ட,
எந்தை சிவனை நிந்தை செய்தேன்!!!

வானம்பாடிகள் said...

வெண்பா
நன்பா
நண்பா:))

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

கொஞ்சம் அவசரப் பட்டு விட்டேன்.
இப்படி எழுதி இருக்கலாம்.

சிந்தனைச் செல்வன் சீத்தாபதியை,
விந்தையாய் விதி முடித்ததால் - அந்த
கந்தனைப் பெற்ற கால மூர்த்தியை,
நிந்தனை செய் மனமே, தினமே !!


வெண்பாவில்,
அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமையான கேரக்டர் சார்..... என்னுடைய கல்லூரிக் காலங்களில்,சென்னை மைலாப்பூரில் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவலைகள் மனதை வருடிச் சென்ற இனிமையான வாய்ப்பு.......நன்றி சார்......

வானம்பாடிகள் said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

//அருமையான கேரக்டர் சார்..... என்னுடைய கல்லூரிக் காலங்களில்,சென்னை மைலாப்பூரில் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவலைகள் மனதை வருடிச் சென்ற இனிமையான வாய்ப்பு.......நன்றி சார்......//

நன்றிங்க

vasan said...

முன்பு "சாவி" இப்ப‌டி கேர‌ட்ட‌ர்க‌ளை உங்க‌ளைப் போல‌வே அழ‌காய் அனுப‌வித்து தொட‌ராய் எழுதி வ‌ந்தார்."கேர‌க்ட்ட‌ர்" ப‌டிக்கும் போது அவ‌ரின் நின‌வு தானாய்.