Friday, November 5, 2010

தேவன் கோவில் மணியோசை..

இன்று தீபாவளி! நரகாசுரனை அழித்து மக்கள் வாழ்வில் நல்லொளி பரப்பிய நாள். அசுரன் அழிந்தானோ இல்லையோ நரகம் மட்டும் சிலருக்கு வாழ்க்கையாய் அமைந்துவிடுகிறது. எத்தனை விதமான நரகங்கள்? வேண்டாச் சிசுவாய், உழைக்க வழியின்றி ஊனமாய்,சுமையாய் முதியோர் இல்லத்திலென்று எத்தனை எத்தனை. இவர்களையெல்லாம் எதோ ஒரு விதத்தில் காப்பாற்றி வாழவைக்க மனிதர்களும் அமைப்புக்களும் இருக்கின்றன. வாழ்க்கைப் புயலில் எதிர்நீச்சலிட்டுக் களைத்து கை சோர்ந்து நினைவு தொலைத்த ஜீவன்கள் தெருவோரம் மயங்கியிருக்கிறார்களா, மரித்திருக்கிறார்களா என்றே தெரியாமல் ஈமூடி, நாய் குதறி, மேலாடையின்றி கிடக்க மூக்கைப் பொத்தியபடி நாம் கடந்து போன ஜீவன்கள் ஒன்றாவது இருக்கும் நம் வாழ்வில்.

நம்மில் அந்த நரகாசுரன் இல்லாமலா போய்விட்டான்? குப்பை அள்ள வரும் மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் கூட இது குறித்து ஏதேனும் செய்ய வழியிருக்கிறதா? அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சைப் பிரிவிருக்கிறதே. இத்தகையோரைப் பற்றி தகவல் பெறவோ மீட்கவோ வழியிருக்கிறதா? இவர்களுக்குச் செய்யக்கூடியது பெரியதாக ஒன்றுமில்லை. அதிகபட்சம் போராடி ஒரு வாரமோ இருவாரமோ மனிதனாய் வாழ்ந்து, மனிதனாய் மரித்து, மனிதனாய் அடக்கம் பெற ஒரு வாய்ப்பு.

அழுக்கும் கழிவும் பூசி, அருகில் செல்லவே முடியாத நிலையில் இருக்கும் இவர்களை மருத்துவமனையில் அல்ல எந்த இல்லத்தில் சேர்த்துக் கொள்வார்கள். இத்தகையோரைத் தேடித் தேடி அலைந்து, தெருவோரம் சுத்தம் செய்து, ஆடையுடுத்தி, ஆதரவான இல்லங்களில் சேர்த்தோ, மருத்துவ உதவியோ செய்ய எத்தனை தெரசாக்கள் வேண்டும்.? ஒரு அமைப்பால் கூட இதைச் செய்வது எத்தனை பெரிய காரியம்.

தீபாவளிதான். கொண்டாட்டம்தான். இனிப்பும், பட்டாசும், ஒளியும், சத்தமும் என்று மகிழ்ச்சிதான். ஆனாலும் தீபாவளியின் முக்கியமான அம்சம் இதெல்லாம் செரிக்க காரமாய், கசப்பாய் சற்றே இனிக்கவும் செய்யும் தீபாவளி மருந்து. இந்த இடுகையும் அத்தகையதே.

இதோ முதல் படத்தில் இருக்கிறாரே சுப்பிரமணி. ஒரு குப்பைத்தொட்டியோரம் கண்டுபிடிக்கப்பட்டவர். டிமெண்ஷியாவில் துன்புற்றவர். இடுப்பில் துணியில்லை என்ற நினைப்புக் கூட இல்லை. எந்த உணர்வு மறந்தாலும் அன்னை இட்ட தீ பசி இருக்கிறதே. அது மட்டுமே அறிந்தவர். அந்தக் குப்பை தொட்டி அருகே மரித்துப் போயிருக்கக் கூடும். குப்பையையாவது அள்ளி அதற்குரிய இடத்தில் சேர்க்க இருக்கும் அமைப்பு கூட இவரைத் தொடுமா?


வாழ்நாள் முழுதும் நோயுற்றவருக்கு தாதியாய் நோய் குறைக்கும் பணி நர்ஸ் அல்லவா. நம் உலகின் தேவதைகள் அல்லவா? அவர்களுக்குமா சாபம் இருக்கும். உழைக்கும் காலம் முழுதும் தாதியாய் பணிசெய்த ஒருத்தி, பணி மூப்பு பெற்று பென்ஷன் கூட பெறும் நிலையில் உள்ள ஒருத்தி, கருப்பை சரிந்து காளான் பூத்து தன் நினைவின்றிக் கிடக்கும் சாபம் கொடுத்த தெய்வமோ இயற்கையோ நிந்திக்கத் தோன்றுகிறதா? இருங்கள் இருங்கள். இந்த லீலாவதியை மாதந்தோறும் ஆட்டோவில் ஏற்றி பென்ஷன் வாங்க வைத்து பிடுங்கிக் கொண்டு திரும்ப சைதாப்பேட்டை சுரங்கப் பாதையருகே போட்டுப் போகும் ஐந்து நல்லாத்மாக்களும் நம்மிடையே இருக்கிறார்கள். 

இதோ முனியம்மா. அந்தக் கண்ணை ஒரு நிமிடம் பார்க்க முடியுமா நம்மால். எத்தனை அவலம். எத்தனை வலி. பிரிந்த கைகளில் எத்தனை இயலாமை. வயது எழுபது. ஆனாலும் பெண். இந்த வயதிலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் நரகம் தருகிறது நாம் தொண்டை கிழியப் பேசும் சமூகமும் கலாச்சாரமும்.


கடைசியாக தனம். எறியும் உணவில் எங்களுடன் உனக்கென்ன போட்டியென நாய்கள் போட்ட சண்டையில் தோற்று தன் சதையை உணவாக்கியவள். உடலில் மட்டுமே ஆடையில்லை. உடலில் மட்டுமே அழுக்கு. மனம் பளிங்கு போன்றது. இல்லையேல் தன்னையும் கரைசேர்க்க வந்த ஜீவனிடம் நான் பிழைக்கமாட்டேன் தம்பி. நீ வாழ வேண்டியவன். என்னைத் தொடாதே என்று சொல்லும் மனம் எப்படி வாய்க்கும்?

படிக்கவே அயற்சி தருகிறதே. ஒரு குற்ற உணர்ச்சிகூட வரலாம். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம். நம்மிலும் ஒரு தேவன் மனிதனாகப் பிறந்திருக்கிறான். தனி மனிதனாக இத்தகையோரை மனிதராய்ப் பார்த்து, மனிதனாய் உதவி, மனிதம் காக்கும் இல்லங்களில் சேர்த்து, மனிதனாய் மரித்தோருக்குக்கான மரியாதை செய்யும் இவரை அடையாளம் காட்ட எனக்கு வாய்த்ததே என் வரம். ஓரிருவரை இப்படிக் கரை சேர்த்தாலே பெரிய விஷயம். ஒற்றை மனிதனாய் ஒன்றிரண்டல்ல ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களை தேடித் தேடி காப்பாற்றிய இவர் பெயர் வெங்கடேஷ்.

ஏழ்மையான குடும்பம் எத்தனை எதிர்ப்பார்ப்பு வைத்திருக்கும் மகன்மேல்? சிறுவயது முதலே சேவை செய்யவே நான் பிறந்தேன் என அலையும் மகனை ஊக்குவிக்கும் நிலையிலா இருக்கும்? படித்தது பத்தாவது. அந்த வயது இளைஞனுக்கு சமுதாயத்தில் பிழைக்கவோ பொறுக்கவோ எத்தனை வழிகள்? தன் பாதை இதுவென்று தீர்மானிக்கும் வயதா அது? கட்டிட வேலை, கம்பவுண்டர் வேலை, கூரியர் டெலிவரி, சமூகச் சேவை அமைப்புகளிலே கூட சம்பளத்துக்காக வேலை என்று அத்தனையும் பார்த்து பின்பு உதறி உதவ மட்டுமே பிறந்தவன் நான் என்ற நோக்கோடு வாழும் இவர் இருப்பது திருவான்மியூர்.

தப்பித் தவறி நம்மில் இருக்கும் மனிதம் விழித்து இத்தகையோரைக் காக்க இருக்கும் அவசர உதவிக்கு அழைத்தாலுமே கூட வெங்கடேஷின் கைபேசி எண் கொடுத்து தொடர்பு கொள்ளச் சொல்லும் அளவு திறமையாகச் செயல்படுபவர். ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், நினைவிழந்தவர்களை அங்கேயே சுத்தம் செய்து அவரவர்களுக்கான இடம் தேடிச் சேர்ப்பதே வாழ்க்கை எனச் சலிப்பில்லாமல் வாழ்வதே பெரிய விஷயம்.  ‘அதை அனுபவம் என்று கூட சொல்லமாட்டேன், அந்த ‘ருசி’ எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்’  என வெள்ளந்தியாய்ச் சிரிக்கிறார்.

‘அநாதைன்னு யாருமே இல்லைங்க! ஆதரவில்லாதவங்கன்னு சொல்லுங்க’ என்று சிரித்தபடி கடிந்து கொள்ளும் இவர் செய்யாத சமூக சேவையென்று ஒன்று இருக்கிறதா தெரியவில்லை. பாலியல் தொழிலாளரிடையே விழிப்புணர்வு, தற்காப்பு முறை விளக்கம், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு, ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவ விரும்புபவர்களுக்கு வழிகாட்டி என சதாவதாரம் எடுக்கிறார்.

காவல்துறை, சமூக ஆர்வலர்களிடையே இவருக்கான பெருமதிப்பும் அங்கீகாரமும் போதுமா? ‘அகல்’ என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி தானே இவர்களுக்கான இல்லத்தை நடத்தவேண்டும் என்ற கனவு சுமந்த தேவன் இவன்.  ‘அது தானே நடக்கும் சார்’ என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ‘செத்தப்புறமும் கூட நம்மால மனுசனுக்கு எதுனாச்சும் உபயோகம் இருக்கணும் சார். எங்கயாவது ஒரு ஆஸ்பத்திரியில் மனித எலும்புக்கூடாகவாவது மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உதவுவேன்’ என்று சிரிக்கும் இவர் தன் கண்ணையும் உடலையும் தானம் கொடுத்திருக்கிறார். முடிந்த போதெல்லாம் ரத்ததானமும். 

தன் பையில் சட்டநிமித்தம் சுமக்கும் ஆவணங்களின் சோகம் தாங்கவொண்ணாதது. சமீபத்தில் மன நிலை குன்றியவர் போல் காணப்பட்ட ஒரு இளைஞன் என்னுடன் பணிபுரியும் நண்பர் தினமும் அளிக்கும் உணவை மட்டும் உண்டு வந்த ஒருவன், ஒரு நாள் அழுக்கடைந்த கையுடன் சாப்பிடுவதைப் பொறுக்காமல் கையாவது கழுவி விடுவோம் என்று இவருடன் முயன்றபோது வாய் திறந்து பேசினான். ரயில்வேயில் வேலைக்குப் பரிட்சை எழுத வந்த கல்கத்தா வாலிபன். நண்பர்கள் எல்லாம் விட்டுச் சென்றுவிட கலங்கிப் போய் இருந்திருக்கிறான் பிரமை பிடித்தாற்போல். ‘குளிக்கவேண்டும்’ என்ற அவன் பேச்சு அவனுக்கு வாழ்க்கை தந்தது.

வால்டாக்ஸ் ரோடிலிருக்கும் மாநகராட்சி குளியலறையில் குளிக்க வைத்து, அலுவலகத்தில் இதற்காகவே சேகரித்து வைத்திருக்கும் பழைய பேண்ட் சட்டைகளை அணியச் செய்து, உணவளித்து, வீட்டிலிருந்து சப்பாத்தியும், ட்ரெயின் டிக்கட்டும், வழிச் செலவுக்குக் காசும் கொடுத்து அவன் குடும்பத்தோடு சேர வழி செய்ய முடிந்தது நண்பர் சுரேந்திரனால். அதற்குப் பெரிதும் உதவியவர் வெங்கடேஷ். இல்லையெனில் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு குப்பைத் தொட்டி அருகில் ஆதரவின்றி காப்பாற்றப் பட்டிருக்கக் கூடுமோ?

நண்பர் வெங்கடேஷ் குறித்த மேலதிக தகவலுக்கு அவரின் முகவரியும் தொடர்பு எண்ணும் கீழே:

S.M.Venkatesh
No 74/55 South Mada Street, 
Thiruvanmiyur, Chennai 600 041.
email: agalvenkat@yahoo.co.in
Mobile 93801 85561
__/\__

56 comments:

பிரபாகர் said...

மொதல்ல துண்டப் போட்டுட்டு படிக்கிறேன்....

பிரபாகர்...

cheena (சீனா) said...

நல்லதொரு இடுகை நண்பரே ! வெங்கடேஷ் போன்ற மனிதர்கள் - மகாத்மாக்கள் இருக்கிறார்கள் - எங்கும் நிறைந்திருக்கிறார்கள் - வெளியில் தெரியாமல் ...... ம்ம்ம்ம்ம்ம்

பெசொவி said...

நல்ல நாளும் அதுவுமா எங்க கண்ணைக் கசக்க வைக்கிறதே உங்களுக்கு வேலையா போச்சு!

பெசொவி said...

கண்ணைக் கசக்க வச்சு, திறக்கவும் வச்சிருக்கீங்க, அதுவும் உண்மைதான்.

Rekha raghavan said...

வெங்கடேஷின் பணி மகத்தானது.

ரேகா ராகவன்.

பிரபாகர் said...

சீனா அய்யா சொன்னது போல் இவரைப் போன்றவர்கள் தான் மகாத்மாக்கள்... வரும்போது இவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் அய்யா... இந்த தீபாவளியில் ஒரு உன்னத மனிதரைப் படித்த சந்தோஷம்... என் அன்பான ஆசானால்...

பிரபாகர்...

அன்பரசன் said...

பிரமாதமான ஒரு பதிவுங்க.
படிக்கும்போதே நெகிழ்கிறது.

இராகவன் நைஜிரியா said...

மனித நேயம் இன்னும் உயிரோடுதான் இருந்து கொண்டு இருக்கின்றது..

யூர்கன் க்ருகியர் said...

மிக அரிதான மனிதர் ஒருவரை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

Unknown said...

இத்தகையோருக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கம்.

Unknown said...

ஐயா! போன் நம்பர் சரி பார்க்கவும். 1 digit அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது.

vasu balaji said...

@Sethu
/ஐயா! போன் நம்பர் சரி பார்க்கவும். 1 digit அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது./

ஆமாம் சேது. மிக்க நன்றி. சரி செய்து விட்டேன்.

பழமைபேசி said...

இடுகை இன்னும் வாசிக்கலை... www.vanambaadikal.com????

Unknown said...

பழமை!
லிங்க் வொர்க் பண்ணலை.

vasu balaji said...

@பழமைபேசி
/இடுகை இன்னும் வாசிக்கலை... www.vanambaadikal.com????/

hihi www.vaanampadigal.com. :))

நீச்சல்காரன் said...

சிறப்பான அறிமுகம்.

Unknown said...

சூப்பர். கதிர் வெப்சைட் கூட நல்லா இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லதொரு இடுகை

பழமைபேசி said...

தீவாளிக் கழிவுல அல்லாரும் ஒட்டுக்கா வாங்குனீங்களா பாலாண்ணே?? எங்க மொதலாளிக்கு??

vasu balaji said...

mkum. யாஹூ டொமெய்ன் எங்க தீவாளி கழிவு. இது ஒரு புத்திகெட்ட வேலை. டொமெய்ன்ல இருந்து மாஸ்க் பண்ணியிருக்கு அம்புட்டுதேன். ப்ளாக்ல இருந்து டொமெய்னுக்கு விட்டா ஃபீட்ஜிட், கவுண்டர்லாம் திரும்ப ஒருக்கா மாத்தணும். வெட்டி வேலை. அதான் மொதலாளிக்கு வேணாம்னுட்டேன்

க ரா said...

கண்கள் குளமாகி விட்டது சார் படித்து முடிக்கும் போது.. வெங்கடேஷ் உண்மையிலேயே ஒரு மாகாத்மா சார்.. நன்றி பகிர்வுக்கு

பிரபாகர் said...

//

பழமைபேசி said...
தீவாளிக் கழிவுல அல்லாரும் ஒட்டுக்கா வாங்குனீங்களா பாலாண்ணே?? எங்க மொதலாளிக்கு??
//
அண்ணே சரிதான், நாமளும் வாங்கியாச்சி...

http://www.prabhagar.com

பிரபாகர்...

குடுகுடுப்பை said...

வெங்கடேஷ் போன்ற மனிதர்கள் - மகாத்மாக்கள் இருக்கிறார்கள் - எங்கும் நிறைந்திருக்கிறார்கள் - வெளியில் தெரியாமல் ...... ம்ம்ம்ம்ம்ம்
//
வழிமொழிகிறேன்

மதுரை சரவணன் said...

வெங்கடேஷ் போன்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்... இம்மாதிரியான ஆட்களை அடையாளம் காட்டுவதுடன் ஆங்கிகாரம் தரவேண்டும். ஆதரவு தரவேண்டும் .. பகிர்வுக்கு நன்றி.

பழமைபேசி said...

மாகாத்மா இவர்!

ராஜ நடராஜன் said...

என்னை மவுனப்படுத்தீட்டீங்ண்ணா.

Menaga Sathia said...

நல்லதொரு பதிவு சார்....

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்ம்.. வார்த்தைகள் வரவில்லை.. குற்றஉணர்வு பெருகுகிறது..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மனது வலிக்கிறது. இலவச டிவி கொடுக்கும் அரசாங்கம் இந்த மாதிரி விஷயங்களில் சௌகரியமாக கண்ணை மூடிக் கொள்கிறது. தனி மனிதன் செய்யும் உதவி சிறந்தது தான். ஆனால் அணில் சேர்த்த மணல் போன்றது. இந்த மாதிரி கருத்துக்களை எப் எம் இல் தயவு செய்து பதிவு செய்யுங்கள். அதுபல அதிகாரிகளின் கவனத்துக்கு போகும்

Unknown said...

அடுத்த முறை இந்தியா வரும்போது இவரைச் சந்திக்க வேண்டும் பாலா சார்.

Jerry Eshananda said...

Great....great.

ரிஷபன் said...

எங்கள் ஊரிலும் ‘வெங்கடேஷ்’கள்.. மனிதம் இன்னும் உயிர்த்துக் கொண்டுதானிருக்கிறது..

CS. Mohan Kumar said...

அற்புதம் சார். பிரபல பத்திரிக்கைகள் செய்ய வேண்டிய பணியை ஒரு ப்ளாகர் செய்வது பெருமையாய் மகிழ்ச்சியாய் இருக்கிறது. (இது பத்திரிக்கையில் வந்தால் இன்னும் நிறைய பேரை அடையும் என்ற ஏக்கமும் உள்ளது). இவரின் எண்ணை குறித்து கொண்டேன். எங்காவது இத்தகைய நபரை பார்த்தல் தகவல் சொல்லலாமே!!

சூர்யா ௧ண்ணன் said...

தீபாவளியன்று நல்லதொரு செயல் தலைவா!

ஈ ரா said...

//மயங்கியிருக்கிறார்களா, மரித்திருக்கிறார்களா என்றே தெரியாமல் ஈமூடி, நாய் குதறி, மேலாடையின்றி கிடக்க மூக்கைப் பொத்தியபடி நாம் கடந்து போன ஜீவன்கள் ஒன்றாவது இருக்கும் நம் வாழ்வில்//

பின்னூட்டம் போடக் கூட கை வராமல் கூசி மனம் கனக்கிறது. பாலா சார், இது போன்ற பதிவுகளைப் படிக்கும்போது செவிட்டில் அறைவது போல் இருக்கிறது.

மங்குனி அமைச்சர் said...

GOOD ONE SIR

தாராபுரத்தான் said...

தீபா...வலி

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு இடுகை.
வெங்கடேஷின் பணி மகத்தானது.

ஈரோடு கதிர் said...

மகத்தான பணிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...


நல்லதொரு இடுகையால் அடையாளம் காட்டவைத்த உங்களுக்கும் நன்றி

வல்லிசிம்ஹன் said...

இறைவனைப் பார்க்க முடியவில்லை என்று கவலைப் படவேண்டாம். இந்தத் தொண்டுள்ளம் கொண்டவரை நினைத்தாலே போதும். இவரை இப்படிப் படத்தவனுக்கும், அறிமுகம் செய்த உங்களுக்கும் வெறும் நன்றி மட்டும் சொல்கிறேன்.

ஸ்ரீராம். said...

மழை பெய்ய வைக்கும் மனிதர்கள்...பகிர்ந்து தெரிய வைத்தமைக்கு நன்றி.

க.பாலாசி said...

உண்மையில் தேவன் தான்... மதிக்கப்படவேண்டிய நபர்.. என்னாலையும் உங்களாலையும் சாதாரணமாக முடியக்கூடிய பணியாயிது.. உயர்ந்த மனிதன்.

பழமைபேசி said...

@தாராபுரத்தான்

அண்ணா, அந்த தீபா யாருங்? முந்தானை முடிச்சு தீபாங்ளா??

Thenammai Lakshmanan said...

ரொம்ப அருமையான.., தேவையான பகிர்வு பாலா சார்.. நெகிழ்ந்துவிட்டேன் படித்து..மனிதம் இன்னும் மரித்து விடவில்லை..

vasu balaji said...

@@நன்றி பிரபா
@@நன்றி சீனா சார்
@@நன்றி பெ.சொ.வி.
@@நன்றி கல்யாணராமன் ராகவன்
@@நன்றின்க அன்பரசன்
@@நன்றிங்கண்ணே.
@@நன்றி யூர்கன்
@@நன்றி சேது
@@நன்றிங்க நீச்சல்காரன்

vasu balaji said...

@@நன்றி டி.வி.ஆர். சார்
@@நன்றிங்க இராமசாமி
@@நன்றிங்க குடுகுடுப்பை
@@நன்றிங்க சரவணன்
@@நன்றிங்க பழ்மை
@@நன்றிண்ணா:)
@@நன்றிங்க மேனகா
@@நன்றிங்க எல்போர்ட்
@@நன்றிங்க நாய்குட்டி மனசு
@@கண்டிப்பா முகிலன். நன்றி
@@நன்றி ஜெரி
@@நன்றி ரிஷபன்
@@நன்றி மோகன் குமார்
@@நன்றி சூர்யா
@@நன்றி ஈரா

vasu balaji said...

@@நன்றி அமைச்சரே:)
@@அண்ணே மாப்பு என்னமோ கேக்கறாரு பாருங்:))
@@நன்றி கதிர்
@@நன்றிங்க வல்லிசிம்ஹன்
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி பாலாசி

காமராஜ் said...

மிக மிக முக்கியமானவர் வெங்கடேஷ்.அவர் இமயம்.அதைத் தொடக் கிடைத்த படிக்கட்டு இந்த பதிவு. அண்ணா வணக்கம்.ரொம்ப நாளாச்சு இந்தப்பக்கம் வந்து.சென்னை வந்திருந்தேன் பார்க்க ஆவலாக இருந்தது.வேலை வழிமறித்தது திரும்பிவிட்டேன்.பார்க்காமலா போய்விடுவோம்.

ஆர்வா said...

கண்ணில் நீர் வரவழைத்து விட்டீர் நண்பரே

மாதேவி said...

மனிதம் வாழ்கிறது.

வாழ்த்துவோம்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Thanks for invaluable post...

vasu balaji said...

@காமராஜ்

நன்றி காமராஜ். அடுத்த முறை பார்ப்போம்:)

vasu balaji said...

@கவிதை காதலன்
நன்றிங்க

vasu balaji said...

@மாதேவி
நன்றிங்க

vasu balaji said...

@எஸ்.ஏ.சரவணக்குமார்
நன்றி சரவணக்குமார்.

கே. பி. ஜனா... said...

மகத்தான சேவை! சரியான அறிமுகம்! இருவருக்கும் வணக்கங்கள்!