Tuesday, September 21, 2010

ரயில் பயணங்களில்..

1986. என்னால் மறக்க முடியாத வருடம். ஒரு கைப்புள்ளையை எதிரியின் கூடாரத்துக்குள் அனுப்பி வைத்து விதி வேடிக்கை பார்த்த வருடம். செந்தமிழோடு, கன்னடமும், கவின் மலையாளமும், சுந்தரத்தெலுங்குமே போதும். பன்னிக்குட்டி பால் குடிப்பது போல் எழுதப்படும் இந்திக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்ற இறுமாப்பில் இருந்த எனக்கு விழுந்தது அடி. இல்லையில்லை இடி.


அதுவும் அம்ரித்ஸர் எல்லாம் ரணபூமியாகி, எங்கு பார்த்தாலும் ஏகே 47ம் ஸ்னைபருமாய் ராணுவத்தினரின் ஃபோட்டோக்கள் பத்திரிகையில் கலங்கடித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு புறம், அப்பா அப்பா என்று எங்கு போனாலும் ஒட்டிக்கொளும் மகன். மறுபுறம், ஆண்டு நிறைவுக்கு மாமன் மடியில் காது குத்திக் கொள்ளக் காத்திருக்கும் மருமகன். பதான்கோட்டிற்குப் போயாக வேண்டும். பறந்து வரும் குண்டு பஞ்சாபி குண்டா, காஷ்மீரி குண்டா என்று பட்டிமன்றம் நடத்தவா முடியும்?


அவ்வளவு தூரம் வரமுடியாது. ஏதோ ஒரு நகை செய்பவரிடம் காது குத்திவிட்டு, கோவிலில் அர்ச்சனை செய்துவிடு. மொட்டையடிக்கும்போது ஆயுஷ் ஹோமமெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று, காதுக்கு மாட்டல் வாங்கி, தபாலில் அனுப்பிவிட்டு கடமை முடிந்தது என்று இருந்த நேரத்தில் வந்து சேர்ந்தது கடிதம். பதான் கோட்டில் காது குத்தக் கூட்டிப் போனால், ஆம்பிளைப் பிள்ளைக்கு காது குத்தச் சொல்லி ஒரு பஞ்சாபியிடம் கேட்கிற அளவுக்கு ஆகிவிட்டதா என்று கொலை வெறியோடு விரட்டி விட்டார்களாம். ஆம்பிளைப் பிள்ளைக்கு ஆண்டு நிறைவன்னிக்கு ஆயுஷ் ஹோமம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. காதுகுத்தாமல் இருப்பதா? பொறுத்தது போதும் மகனே. புறப்படு. மாற்றான் பூமியில், மருமகனுக்கு வெற்றிகரமாகக் காதுகுத்தி, மதராசி என்ற பெயரை நிலைநாட்டு என்று மங்கம்மா மாதிரி பொங்கிவிட்டாள் எங்கம்மா!


முதன் முதலாக ஆல் இந்தியா ரயில்வே டைம் டேபிளைப் பிரித்து, கை ரேகை பார்ப்பவன் போல் பூதக் கண்ணாடி பிடித்து, பதான்கோட் எங்கிருக்கிறது என்று தேடிப் பிடித்து, ஆஹா இங்கிருக்கிறது என்று மதராசைப் பார்த்தால் அது எங்கேயோ இருந்தது. பத்தே அடியில் பாகிஸ்தான் பார்டர் தெரிந்தது. ஏற்கனவே காஷ்மீரா, பஞ்சாபா என்றிருந்த புதிரோடு, இப்போது பாகிஸ்தானியுமா என்ற பயம் வேறு. குழந்தை என்னை விட்டு இருக்க மாட்டானேம்மா, உடம்புக்கு படுத்தும் என்று எஸ்ஸாகப் பார்த்தால், இவனுக்கு நாங்கள்ளாம் இருக்கோம். அந்தக் குழந்தை எங்கயோ பாஷை தெரியாத ஊரில் ... என்று கண்ணாம்பா மாதிரி ஆரம்பிக்கவும், இதுக்கு மூணு குண்டும் ஒரே நேரத்தில் தாங்குவேன் என்று புறப்பட முடிவு செய்தாகிவிட்டது.


சென்னையிலிருந்த்து புது தில்லிக்கு வீட்டிலிருந்தே மூன்று நாளைக்கு வேண்டிய சாப்பாடு கட்டிக் கொள்ளலாம். ஏசி கோச்சில் கெட்டுப் போகாது. ஆக மூன்று நாளைக்கு ஒரு பயலிடமும் ஒன்னும் பேசத் தேவையிருக்காது. தில்லி சேர்ந்ததும் ரிடையரிங் ரூமில் குளித்துவிட்டு, வி.ஆர்.ஆரில் தோசை, இட்லி இருக்குமாம். நமக்கோ பாஞ்ச் வரைக்கும் தெரியும். நல்லகாலம் இட்லிக்கும் தோசைக்கும் இந்தியிலும் அதே பேர்தான். 

அப்புறம் சாயந்திரம், அதே வி.ஆர்.ஆரில் சாப்பாடோ, இட்லியோ வாங்கிக் கொண்டு ஷாலிமார் எக்ஸ்பிரசில் செகண்ட்க்ளாஸில் (ஸ்டேஷன் வந்துட்டுதான்னு பார்க்கணுமே) ஏறிப் படுத்தால் ஸ்டேஷனில் அக்கா வந்து அழைத்துப் போவாள். போய் காது குத்திவிட்டு, 2 நாள் இருந்து திரும்ப கிளம்பி வரலாம். அங்கிருந்து கட்டி வந்த சாப்பாடு தீருவதற்குள், களிதெலுங்கு ஆந்திரா வந்துவிடும். அப்புறம் கவலையில்லை என்று ஒரு பக்கா ப்ளான் ரெடி செய்து கொண்டாகிவிட்டது.


அந்த நாளும் வந்தேவிட்டது. ஆழாக்கு சைசும் அழுக்கு சூட்கேசுமாய் ஒரு ரணபூமிக்கு பிள்ளை போகிறானே என்ற கவலை சற்றேனுமின்றி, எல்லாப் பேரனுக்கும் மாமன் மடியில் அமர்ந்து காது குத்திக் கொள்ள வாய்ப்பென்றால் என் பேரனுக்கு மாமனே மடியில் வைத்து காது குத்தும் பாக்கியமே பாக்கியம் என்று புத்தகக் கார்ட்டூன் படத்தில் கண்ணுக்கு அருகில் வட்ட வட்டமாகப் போட்டு அதற்குள் கனவுக்காட்சிப் படம் போடுவார்களே அப்படி இருந்தாள் அம்மா.


தில்லி வரைக்கும் ட்ரெயினில் வெறும் சாய், காஃபி மட்டுமே பேசி ஒரு சாதனையே நிகழ்த்திவிட்டேன். ஸ்டேஷனில் ஒரு புளித்த தோசையை பாதிக்கு மேல் தின்னமுடியாமல் ஒரு சாயுடன் முடித்துக் கொண்டு மணிபார்த்தால் ஒன்பது ஆகியிருந்தது. மாலை ஐந்து வரை என்ன செய்வது? ரிஸர்வேஷன் கவுண்டரில் போய் செகண்ட் க்ளாசை ஃபர்ஸ்ட் க்ளாசாக மாத்த முடியுமா என்று பார்க்கலாம் என்ற வேண்டாத எண்ணம் தலைதூக்கியது. பிடிவாதமாக, ஆங்கிலத்தில் கேட்டு எங்கேயோ இருந்த ரிசர்வேஷன் ஆஃபீசுக்குப் போய், இருந்ததிலேயே நல்லவனாய்த் தெரிந்த ஒரு சர்தார்ஜி கவுண்டரில் போய், ஆங்கிலத்தில் கேட்டேன்.


அண்ணாச்சி. செகண்ட் க்ளாஸில் கன்ஃபர்ம்ட் பெர்த் இருக்கிறது. தயவு செய்து முதல் வகுப்பில் இடமிருக்கிறதே மாற்றி கொடுப்பீர்களா என்று கேட்டேவிட்டேன். நான் பேச ஆரம்பிக்கும் போதே பென்ஸிலை தாடிக்குள் விட்டு அரைத்தூக்கத்தில் சிடுக்கெடுத்துக் கொண்டிருந்தவன், ப்ளீஸ் என்று நான் முடித்ததும், அர்ரே! ஹிந்தி மே போல் என்றான்! எனக்கு ஹிந்தி தெரியாதென்பதை ஆங்கிலத்தில் சொன்னால் இவனுக்கு புரியுமா என்ற குழப்பம் இருந்தாலும், வேறே வழியில்லை என்று, சார்! ஐ டோண்ட் நோ ஹிந்தி என்றேன்.

என் ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாசை கவுண்டருக்கு வெளியே நீட்டி முகத்தில் வீசினான். அதோடு விட்டானா, தங்கப்பதக்கம் சிவாஜி ஸ்டைலில் கன்னம் துடிக்க, ஹிந்தி தெரியாத உன் முகரைக்கு ரயில்வேயில் ஒரு வேலை. அதுக்கு வெட்டியா ஒரு ஃபர்ஸ்ட்க்ளாஸ் பாஸ். ஓடு என்று விரட்டி விட்டான். அதெப்படி ஹிந்தி தெரியாதவனுக்கு இவ்வளவு விவரணை என்று கேட்பவர்களுக்கு, ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தில் ரத்தத்தால் எழுதி, மாலை ரயிலில் ஏறி அமரும் வரை மனதுக்குள் பல்லாயிரம் தடவை சொல்லிப் பார்த்து குத்து மதிப்பாகப் புரிந்துகொண்டது இது.


ஷாலிமார் எக்ஸ்ப்ரஸில் சன்னலோர சீட். அப்பாடா, தூங்கலாம். சாய் சாய் சத்தம் வந்தால், மணி பார்த்து நம்ம ஊர் இல்லை என்று நிச்சயித்துக் கொள்ளலாம் என்ற நிம்மதியுடன், நன்றாக அரக்கிக் கொண்டு அமர்ந்தேன். வண்டி கிளம்ப பத்து நிமிடம் இருக்கையில், மலை மலையாய் பத்து பதினைந்து சர்தார்ஜிக்கள் ஏறினர். எழுவத்தி இரண்டு சீட்டில் நாந்தானா அகப்பட்டேன். நேராக என்னிடம் வந்து, ஊப்பர் சலோ என்றான். ‘அய்யாங்! இட்ஸ் மை சீட்’ என்றேன். ஒன்றும் பேசாமால் ஆறு பேர் சீட்டில் பத்து யானைகள் அமரவும், ஜன்னலோரம் பல்லி போல் ஒட்டிக் கொண்டேன்.


டிக்கட் பரிசோதகர் வரட்டும்டி. நான் யாருன்னு காட்டுறேன், என்று மனதுக்குள் தமிழில் சபதம் செய்து, ஒண்டிக் கொண்டிருக்க, ஆளாளுக்கு துழாவி அப்பளக் கட்டு போல் சப்பாத்தி எடுத்து உள்ளங்கையில் தட்டி, ஒரு சட்டியில் சப்ஜியில் முக்கி வாய்க்கு ஒரு சப்பாத்தியாக உள்ளே தள்ளினர். நாசமாப் போறவனுவளா. அஞ்சு மணிக்கெல்லாம் இருவது சப்பாத்தி தின்னுட்டு ராத்திரிக்கு என்னாடா பண்ணுவீங்க என்று சாபமிட்டது பஞ்சாபியில் எப்படி புரிந்ததோ தெரியவில்லை.


‘உட்டோ’ என்றான் ஒருத்தன். ‘வாட்’ என்றேன் நான். அடுத்த நொடி எப்படி என்ன நடந்தது என்று தெரியாமல் நான் சீட்டிலிருந்து வெளியேறி, சிங்கிள் சீட் அருகே நின்றுக் கொண்டிருந்தேன். சிங்கிள் சீட்டில் இருந்த ஒரு யானை பெரிசு, இதர் பைட்டோ பேட்டே என்று ஒன்னரை இஞ்சில் இடம் கொடுத்தது. வீம்புக்கு நின்றால் வெளியே கடாசி விடுவார்களோ என்ற பயத்தில், வாய்ப்பாடு எழுதாத பையனுக்கு வாத்தி, நாற்காலி பனிஷ்மெண்ட் கொடுத்தாற்போல் பிடிமானமில்லாமல் உட்கார்ந்தேன். கொண்டு வந்த பார்சலை இடையில் அடுக்கி, மேலே ஒரு ஷாலைப் போட்டு பக்காவாக ஒரு டேபிள் மாதிரி தயார் செய்தான் ஒரு சர்தார்.


ஒரு சர்தாரின் முறம் சைஸ் கைக்குள்ளிருந்து மூன்று சீட்டு கட்டுகள் தோன்றின. பிரித்துப் போட்டு ஆடத் துவங்கினார்கள். என் பக்கத்து யானை சீட்டு எடுக்க எம்பும் போதெல்லாம், எனக்கேயான இஞ்ச் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள நான் போராடிய போராட்டத்தை பகத்சிங் பார்த்திருந்தால் பங்க்ரா ஆடியிருப்பான். வாதம் வந்த மாட்டுக்கு ஒரு பின்னங்கால் விரைத்துக் கொள்ளுமே, அப்படி வலக்காலை நீட்டி எதிர் சீட்டில் ஊன்றி, உடும்பு மாதிரித்தான் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.


‘மில்கய்’ என்று ஒரு அலறலோடு பக்கத்து யானை பாய, அந்தக் குரலில் அலண்டு போய் அசந்த சந்தர்ப்பத்தில் கீழே விழுந்த சீட்டை எடுத்து அந்த ஆள் ரம்மி காட்ட, சரியாக அந்த நேரம் ரயில் ட்ராக் மாற, யானை போட்ட லத்திபோல் சொத்தென்று விழுந்தேன் நான். ஒரு மனிதப் பதர் விழுந்து கிடக்கும் பிரக்ஞை கூட இல்லாமல், நிதானமாக காசு வாங்கி ஜிப்பாவில் சொருகிக் கொண்டு, அடுத்த சீட் பஞ்சாபியிடம், தட்டுத் தடுமாறி எழுந்த என்னைப் பார்த்தபடி ஏதோ சொன்னான். எனக்கு கிலி பிடித்துக் கொண்டது. இருவரும் ஒரு சேர எழுந்திருக்கவும், இந்தியில் உயிர்ப்பிச்சை கொடு என்று எப்படிக்  கேட்பது என்று மண்டை குடைந்தது.


அடுத்த நொடியில், ஒரு 29 வயது வாலிபனுக்கு, ஒரு பிள்ளையின் தகப்பனுக்கு நடக்கக்கூடாத அவமானம் நடந்தேவிட்டது. ஆம். பக்கத்து சீட்டில் இருந்த ஆள், மேல் பர்த்தில் அடுக்கியிருந்த சாமான்களை ஒதுக்கி இடம் செய்ய, என்னோடு இருந்த யானை, என்னை ஒரு குழந்தையைப் போல் அக்குளில் கை கொடுத்து தூக்கி, ஒரு சூட்கேஸ் போல் அந்த இடுக்குக்குள் சொருகிவிட்டு, ‘ஆராம் சே பைட்டோ’ என்றுச் சொன்னான். அதிக நேரம் என்னைச் சோதிக்காமல், மதுரா வந்தவுடன் எல்லா யானையும் இறங்க, ஒரு யானை மேலிருந்த லக்கேஜோடு லக்கேஜாக என்னையும் இழுத்துக் கீழே விட்டது.


சனியன் ஒழிந்தது என்று மீண்டும் என் சீட்டில் அரக்கிக் கொண்டு அமர்ந்தேன். இரண்டு மிலிட்டரிகாரர்கள் வந்து எதிர் சீட்டில் அமரவும் வண்டி புறப்பட்டது. ஒரு மணி நேரம் சென்றிருக்கும், எதிர் சீட்டில் இருந்த ஒருத்தன் எழுந்து ‘ஊப்பர் சலோ’ என்றான். எழவெடுத்தவனே, திரும்பவுமாடா என்று தமிழில் நினைத்து, ஆங்கிலத்தில் ‘ஒய்? இட்ஸ் மை பெர்த் என்றேன்’. நடிகை சதா மாதிரி ஒரு கையை நீட்டி ‘ஊப்பர் சலோ ஜி, என்று சொல்லியதோடு, என் சூட்கேசையும் மேலே சொருகிவிட்டான். ஹே! இதுக்கு மேலையும் போகலைன்னா திரும்ப ஒருக்கா ஏத்திவுடுவ. மானஸ்தண்டா! நானே போய்க்குவேன் என்று ஏறிவிட்டேன்.


அவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு ஃபுல் பாட்டில் எடுத்து வைத்துக் கொண்டு அடிக்க ஆரம்பிக்கவும், கதிகலங்கிப் போயிற்று. இந்தியில் ஏதோ பேசுவதும், சிரிப்பதுமாய் அவர்களுக்கு சுதி ஏற ஏற, எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிக் கொண்டிருந்தது. ஏற்கனவே, தில்லியிலிருந்து பதான்கோட் வரை எந்தெந்த ஸ்டேஷன்கள் என்று மனப்பாடம் செய்திருந்தேன். வண்டி ஸ்டேஷனில் நிற்கும் போது மட்டுமின்றி, சிக்னலில் நிற்பதும் குழப்ப, இறங்கி இறங்கி எட்டிப் பார்க்க ஆரம்பித்தேன். என் சீட்டில் படுத்திருந்த ஆள் கடுப்பாகி, ‘க்யா ஓனாச் சாயியே (என்ன வேணும்?)’ என்றான்.


‘நோ சாய். ஐம் செக்கிங்க் விச் ஸ்டேஷன் இடீஸ்’ என்றேன். வீணாப் போனவன் அடுத்து கேட்டானே ஒரு கேள்வி! ‘நீ தமிழா? எந்த ஊருக்கு போற? என்றான். ஆஹா! மூன்று நாளைக்கப்புறம் தமிழ் மனசுக்கு வெளியேவும் கேட்கிறது என்ற சந்தோஷம் ஒரு புறம். இந்திக்காரன் அடிச்சான் பரவால்ல, நம்மாளே உப்பர் சலோ சொல்லிட்டியே என்ற துக்கம் ஒருபுறம். தொண்டைக்குள் ‘பதான்கோட்’ என்றேன். ஏறிப் படு. மணி 12தான் ஆவுது. ஆறு மணிக்குதான் போகும். ஒரு மணி நேரம் நிக்கும். நான் எழுப்பி விடுகிறேன் என்று கண்டிசனாய்ச் சொன்னான்.


தண்ணியில் சொல்கிறானா, மிரட்டுகிறானா என்றே தெரியாமல் மேலேறிப் படுத்து, எப்போது தூங்கினேனோ தெரியாது. தம்பி, எழுந்திரு! பதான் கோட்டு வந்திருச்சி என்று எழுப்பிவிட்டவனுக்கு நன்றி கூடச் சொல்லத் தோன்றாமல் சூட்கேசுடன் குதித்து வெளியே பாய்ந்தேன். காத்திருந்த அக்காவும் அத்திம்பேரும் வந்து அழைத்துக் கொண்டு போக, ‘ஜர்னி கம்ஃபர்டபிளா இருந்ததா’ என்ற அத்திம்பேர், அத்திம்பேராக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அந்தாளுக்கு சங்குதான் ஊதியிருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~

51 comments:

Chitra said...

அடுத்த நொடியில், ஒரு 29 வயது வாலிபனுக்கு, ஒரு பிள்ளையின் தகப்பனுக்கு நடக்கக்கூடாத அவமானம் நடந்தேவிட்டது. ஆம். பக்கத்து சீட்டில் இருந்த ஆள், மேல் பர்த்தில் அடுக்கியிருந்த சாமான்களை ஒதுக்கி இடம் செய்ய, என்னோடு இருந்த யானை, என்னை ஒரு குழந்தையைப் போல் அக்குளில் கை கொடுத்து தூக்கி, ஒரு சூட்கேஸ் போல் அந்த இடுக்குக்குள் சொருகிவிட்டு, ‘ஆராம் சே பைட்டோ’ என்றுச் சொன்னான். அதிக நேரம் என்னைச் சோதிக்காமல், மதுரா வந்தவுடன் எல்லா யானையும் இறங்க, ஒரு யானை மேலிருந்த லக்கேஜோடு லக்கேஜாக என்னையும் இழுத்துக் கீழே விட்டது.

......சீரியஸ் ஆக வாசித்து கொண்டு வரும் போது, இந்த இடத்தில் என்னையும் அறியாமல் சத்தம் போட்டு சிரித்து விட்டேன்.... சாரி சார்..... உங்கள் கஷ்டம் புரிஞ்சுருக்கணும்..... ஆனால், சிரிக்காம இருக்க முடியல....

நசரேயன் said...

//இந்திக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்ற இறுமாப்பில் இருந்த எனக்கு விழுந்தது அடி.//

அடி பலமோ

பழமைபேசி said...

இதா, இங்க ஒருத்தரு படிக்காமலே பின்னூட்டம்...

அதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்.

நசரேயன் said...

//நல்லகாலம் இட்லிக்கும் தோசைக்கும் இந்தியிலும் அதே பேர்தான். //

இட்லிஜி .. தோசைஜி

க ரா said...

சார் சிரிச்சு முடியல எனக்கு..

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

I know that it was your life experience/story.

But, i couldn't stop laughing. I am making a point not to open your blog at work anymore.

Thanks

கலகலப்ரியா said...

:o))... செம..

நசரேயன் said...

//அண்ணாச்சி. செகண்ட் க்ளாஸில் கன்ஃபர்ம்ட் பெர்த் இருக்கிறது. தயவு செய்து முதல் வகுப்பில் இடமிருக்கிறதே மாற்றி கொடுப்பீர்களா என்று கேட்டேவிட்டேன்/

அவரு என்ன மளிகை கடை அண்ணாச்சியா ?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

நகையிடுகை!!!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Nice One Sir.

மணிநரேன் said...

சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.
அதுவும் முடித்த விதம்.....:)

ஸ்ரீராம். said...

நேத்து கண் கலங்க வச்சிட்டு இன்னிக்கி சிரிக்க வச்சிட்டீங்க... செம அனுபவங்கள். மிக ரசித்தேன்.

settaikkaran said...

இந்தி தெரியாம, வட இந்தியாவுலே ரயில் பயணத்துலே படுற அவஸ்தை எல்லாருக்கும் இருக்கும் (எனக்கும் சேர்த்து!). ஆனா, இவ்ளோ சுவாரசியமா சொல்லணுமுன்னா..சான்ஸே இல்லை- ஐயா மட்டும் தான்! அதுலேயும் ஃபைனல் பஞ்ச் இருக்கே! :-))

Anisha Yunus said...

//‘ஜர்னி கம்ஃபர்டபிளா இருந்ததா’ என்ற அத்திம்பேர், அத்திம்பேராக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அந்தாளுக்கு சங்குதான் ஊதியிருக்கும். ~~~~~~~~~~~~~~~~~~//

சும்மா சொல்லக்கூடாது, நச்சுன்னு ஒரு முடிவு சார். ஆமா அத்திம்பேரை எல்லாம் வலைப்பூ பக்கம் வர சொல்றதில்லையா?

அப்ப ரிடர்ன் ஜார்னி தனி பதிவா? கலக்குங்க!

பழமைபேசி said...

சிரிச்சி மாளலைண்ணே!!!

அன்பரசன் said...

அருமையான பயணம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஒரொரு பத்திக்கும் ரெண்டு வாட்டி சிரிக்க வச்சுட்டீங்க.. ஹாஹ்ஹா..

சைவகொத்துப்பரோட்டா said...

திகில் பயணம் ஆகி விட்டது போல :))

Unknown said...

மதுரா , தில்லிக்கு எந்தப் பக்கம் அண்ணாச்சி?

பவள சங்கரி said...

அவ்வளவு தூரம் வரமுடியாது. ஏதோ ஒரு நகை செய்பவரிடம் காது குத்திவிட்டு, கோவிலில் அர்ச்சனை செய்துவிடு. மொட்டையடிக்கும்போது ஆயுஷ் ஹோமமெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று, காதுக்கு மாட்டல் வாங்கி, தபாலில் அனுப்பிவிட்டு கடமை முடிந்தது என்று இருந்த நேரத்தில் வந்து சேர்ந்தது கடிதம்..................இந்த சம்பிரதாயமெல்லாம் கேட்க ரொம்ப ந்ல்லாயிருக்கு சார்.

சிவராம்குமார் said...

//ஜர்னி கம்ஃபர்டபிளா இருந்ததா’ என்ற அத்திம்பேர், அத்திம்பேராக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அந்தாளுக்கு சங்குதான் ஊதியிருக்கும்//

உங்க பீலிங்க்ஸ் புரியுது!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

மாதேவி said...

உங்கள் கஷ்டப் பயணம் எங்களுக்கெல்லாம் சிரிப்புப் பயணம் ஆகிவிட்டது.:)

நிஜாம் கான் said...

//பன்னிக்குட்டி பால் குடிப்பது போல் எழுதப்படும் இந்திக்கும்//

என்னத்த சொல்றது???

நிஜாம் கான் said...

//வி.ஆர்.ஆரில் தோசை, இட்லி இருக்குமாம்.//

நம்மாளுங்க முக்கியமா இதத்தான் மொதல்ல தெரிஞ்சிக்குவாங்களாக்கும்..

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹாஹா. இப்படியெல்லாம் ஒரு மனுஷன் கஷ்டப் பட முடியுமா. :)) சாமி, அதை இத்தனை நினைவு வைத்துக் கொண்டு வரிக்கு வரி சிரிக்க வைத்துவிட்டீர்கள். அந்த சர்தார்ஜி உங்களைத் தூக்கிய காட்சியை நினைத்து நினைத்துச் சிரிக்கிறேன்.:))))))))))))00)

எல் கே said...

nan sameebathila delhi ponapa enaku ver mathiri anubavm athai elutharen seekiram

நிஜாம் கான் said...

//அண்ணாச்சி. செகண்ட் க்ளாஸில் கன்ஃபர்ம்ட் பெர்த் இருக்கிறது. தயவு செய்து முதல் வகுப்பில் இடமிருக்கிறதே மாற்றி கொடுப்பீர்களா//

அண்ணாச்சிக்கு ஆங்கில வார்த்தை என்னண்ணே! நீங்க சொன்னதையும் சர்தார்ஜி ஜோக்கில் இணைத்துக்கொள்ளலாம்..

நிஜாம் கான் said...

சர்தார்ஜியிடம் சிக்கி சட்னியான கதைன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.. உங்களுக்கு சோகம் .. எங்களுக்கு தாங்க முடியாத காமெடியா இருக்கு,..

Unknown said...

அடக்கமாட்டாம சிரிச்சிக்கிட்டு இருக்கேன். கடைசி வரி செம...

vasan said...

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி" மாதிரி சென்னை டூ ப‌தான்கோட் க‌தை ரெடி. நாகேஷ் உங்க‌ ரோல். நினைச்சாலே ஒரே சிரிப்பு..சிரிப்பாய்.. ஆனாலும் பால‌ன், பாவ‌ம்..

ரிஷபன் said...

ராய்கரிலிருந்து ராய்பூர் போக இதே ரயில் பயண அவஸ்தை.. இடம் தராத மாமிச மலைகளைப் பார்த்து நற நற வென பல்லைக் கடித்ததுதான் மிச்சம். டிடிஆர் நான் தமிழில் திட்டியதைக் கடைசி வரை எந்த முக மாற்றமும் இல்லாமல் கேட்டு விட்டு பிறகு தம் இருக்கையைக் கொடுத்தார்.. தமிழில் பேசி. கும்பகோணத்துக்காரராம். நாக்பூரில் குடியேறி பலகாலம் ஆகிவிட்டதாம். அவராலும் அவர்களை எழுப்ப முடியவில்லை. அருமையான நகைச் சுவை.

Thenammai Lakshmanan said...

பொறுத்தது போதும் மகனே. புறப்படு. மாற்றான் பூமியில், மருமகனுக்கு வெற்றிகரமாகக் காதுகுத்தி, மதராசி என்ற பெயரை நிலைநாட்டு என்று மங்கம்மா மாதிரி பொங்கிவிட்டாள் எங்கம்மா!// ஹிஹிஹி எல்லா அம்மாவும் இப்படித்தான்..

Thenammai Lakshmanan said...

ஹிந்தி தெரியாத உன் முகரைக்கு ரயில்வேயில் ஒரு வேலை. அதுக்கு வெட்டியா ஒரு ஃபர்ஸ்ட்க்ளாஸ் பாஸ். ஓடு என்று விரட்டி விட்டான். அதெப்படி ஹிந்தி தெரியாதவனுக்கு இவ்வளவு விவரணை என்று கேட்பவர்களுக்கு, ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தில் ரத்தத்தால் எழுதி, மாலை ரயிலில் ஏறி அமரும் வரை மனதுக்குள் பல்லாயிரம் தடவை சொல்லிப் பார்த்து குத்து மதிப்பாகப் புரிந்துகொண்டது இது.//


அட ஆமாம் நானும்தான் கேக்குறேன் எப்படி சார் ஹிந்தி தெரியாம இத்தினி வருஷம் குப்பை கொட்டுனீங்க..:))

பிரபாகர் said...

குருவே, நீங்களாவது பரவாயில்லை... இந்தி தெரியாம முழிச்சிருக்கீங்க... நாமெல்லாம் இங்லீஷு தெரியாமயே முழிச்சோமில்ல....

அருமை அய்யா. ரொம்பவும் ரசித்து சிரித்தேன். உங்க கஷ்டம் எங்களுக்கெல்லாம் குஷி...

கலக்குங்கள்...

பிரபாகர்...

Unknown said...

//.. ந்தாளுக்கு சங்குதான் ஊதியிருக்கும். ..//

:-))))))

Mahi_Granny said...

ஹே! இதுக்கு மேலையும் போகலைன்னா திரும்ப ஒருக்கா ஏத்திவுடுவ. மானஸ்தண்டா! நானே போய்க்குவேன் என்று ஏறிவிட்டேன்.

சிரிப்பை அடக்க முடியவில்லை. 25 வருஷம் கழித்தும் இத்தனை விவரமாக நகைச்சுவையுடன் எழுத முடிகிறேதே.

ஈரோடு கதிர் said...

நல்ல வேளை அந்த யானைங்க உங்களுக்கு மீசை தாடி வரையாம வுட்டாங்களே!!!

ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு சிரிப்பு சிரிச்சு!

எனக்கென்னமோ என்னை நேத்து ட்ரெய்ன் ஏத்திவிட்டப்போ, இந்த அப்பாவிய நெனைச்சு... பழைய ஞாபகம் வந்துடுச்சோ!!!

ஈரோடு கதிர் said...

||Blogger பிரபாகர் said...
உங்க கஷ்டம் எங்களுக்கெல்லாம் குஷி...||

அதானே..

பயபுள்ளை உண்மைய இப்பத்தான் சொல்லுது

Unknown said...

"பன்னிக்குட்டி பால் குடிப்பது போல் எழுதப்படும் இந்திக்கும்"
ரொம்ப நாள் முன்பு ஒரு நார்த் இந்தியன் நண்பன் கேட்டான், 'ஏன் நீங்கல்லாம் எழுத்தை தலகீழா எழுதறீங்கனு'. ஒரே குழப்பமா போச்சு. எதை சொல்லறேன்னு கேட்டப்போ திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் போர்டு காமிச்சான். மலையாளத்த இப்பிடி யோசிகிராங்கலேன்னு நினச்சேன்.

பக்கத்திலிருந்த இன்னொரு ஆளு வந்து இவங்க ஏன் குச்சியில இவங்க எழுத்த தொங்கவுடரானுங்கனு கேளுன்னு நான். அடபாவிங்களா. இவங்க நம்மள ஒரு வழி பார்த்துருவாங்கனு நான் எஸ்கேப்.

சார். ஆபீஸ்ல உங்க பதிவைப் பார்த்து சிரிகிறதப் பார்த்து வேலைக்கே குந்தகமாபோயடும் சார். எப்பிடி சார் இப்பிடி.

தாராபுரத்தான் said...

படிக்க படிக்க சிரிப்பு வருது..

vasu balaji said...

@@நன்றிங்க சித்ரா
@@நன்றி தளபதி. ஆமாம்ல:))
@@நன்றி இராமசாமி கண்ணன்
@@:))Thanks arul
@@நன்றி டிவிஆர் சார்
@@நன்றிங்க பழமை

vasu balaji said...

கலகலப்ரியா said...

//:o))... செம..//

:>. நன்னி நன்னி மோளே

vasu balaji said...

@@நன்றி அன்பரசன்
@@நன்றிங்க எல்.போர்ட்
@@நன்றி சை.கொ.ப
@@நன்றி சேது
@@நன்றி மணி நரேன்
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி சேட்டை
@@நன்றி அன்னு

vasu balaji said...

ரம்மி said...

//மதுரா , தில்லிக்கு எந்தப் பக்கம் அண்ணாச்சி?//

தில்லிக்கு முன்னாடிதானுங்க. ஆனா பாருங்க இந்திரா கொலை, பொற்கோவில்ல ஆர்மி போனதுன்னு கலவரமா இருந்ததால, ஆர்மி கட் செர்வீஸ்னு அங்க போய் போனதுங்க கொஞ்ச நாள்.

vasu balaji said...

@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி சிவராம்குமார்
@@நன்றி மாதேவி
@@நன்றி நிஜாம்
@@நன்றி வல்லி சிம்ஹன்
@@நன்றி எல்.கே.
@@நன்றி முகிலன்
@@நன்றி வாசன்
@@நன்றி ரிஷபன்

vasu balaji said...

@@நன்றிங்க தேனம்மை. அதுக்கு அவசியம் நேரலை.
@@நன்றி பிரபா
@@நன்றி சம்பத்
@@நன்றி கதிர்
@@நன்றி மீண்டும் சேது
@@நன்றிங்க அண்ணே.

காமராஜ் said...

ஆஹா எழுத்து எப்படியெல்லாம் வர்ணமடிக்கிறது.வண்டி சக்கரத்தின் நடுவில் இருந்த எழுத்து சுழன்று சுழன்று உருவமாகிற கை வித்தை.இன்னுமொருதரம் கூட சாவகாசமாகப்படிக்கலாம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பாஸ்..இன்னொரு தரம் பதான்கோட் போணுமாம். போயிட்டு வாரீயளா?