1. நானும் பதிவு எழுதறேன், வலைப்பூவில எழுதறேன்னு சம்பளப் பணத்துல நெட் கனெக்சனும், லோன் போட்டு புதுசா லேப்டாப்பும் வாங்கினையே, முதல்ல அது பிடிக்கலை.
ங்கொய்யால. மத்தபேரெல்லாம் கொள்ளையடிச்சி நெட் கனெக்சன் வாங்கினாமாதிரி என்னா அலம்பலு? இந்த அல்டாப் பிடிக்கலை
2. வலைப்பூ முகப்புல போடறதுக்கு கோயமுத்தூர் போயி 3500 ரூபா செலவு பண்ணி 18 விதமான கெட்டப்ல போட்டோ எடுத்துட்டு வந்தியே அது பிடிக்கலை.
கவுத்து வெச்ச சட்டிய சுத்தி சுத்தி வந்து எடுத்தாலும் ஒரே மாதிரித்தானே இருக்கும். இதுக்கு க்க்க்க்கோஓஓஓஓஓஓஓஓயம்பத்தூர் வேற. இந்த ஓவர் சீனு பிடிக்கலை.
3. நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.
அடங்கொன்னியா! ராத்திரி 11 மணிக்கு மேல ஓசில பேசற பூஸ்டர் பேக்குக்கு கஞ்சத்தனம் பண்ணிக்கிட்டு இப்புடி காசக்கரியாக்கினது சுத்தமா புடிக்கலை.
4. நீயே ஒரு ஹிட் கவுண்டர் செட் பண்ணிட்டு தினமும் குறைஞ்சது 200லிருந்து 300 வாட்டி பிரவுசரை Refresh பண்ணிறியே அது பிடிக்கலை.
அல்பம் அல்பம். விடியக்காத்தால ஒரு 2 மணிக்கு அலாரம் வெச்சிக்கிட்டு ஃபீட்ஜிட்ல பார்த்து யாரும் இல்லைன்னா நேரா கவுண்டர்ல போய் ஸ்டார்ட்டிங் நம்பர் மாத்திக்குடுத்தா எவ்ளோ பேண்ட்வித் மிச்சம். இது கூட தெரியாம..இந்த மடத்தனம் சுத்தமா பிடிக்கலை.
5. யாருமே பின்னூட்டம் போடறதில்லைனு கொஞ்சம் கூட வருத்தப்படாம, நியூமராலஜி புஸ்தகம் வாங்கி, உன்னோட ராசிக்கு பொருந்தற மாதிரி வித்தியாசமா 20 ஆண்கள், 25 பெண்கள் பெயர்களை செலக்ட் பண்ணி அப்பப்ப நீயே பின்னூட்டம் போட்டுக்கிறியே அது பிடிக்கலை.
அடக் கருமமே! அத்தன பின்னூட்டத்துக்கும் பதில் பின்னூட்டமும் இல்லீன்னா நன்றின்னு வேற போட்டுக்கணுமே. அந்தக் கொடுமையும் பிடிக்கலை.
6. போன வாரம் நடந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில “வலைப்பூ புகழ்”னு லேப்டாப் முன்னாலே நீ உட்காந்திருக்கிற மாதிரி போட்டோ போட்டு பிளக்ஸ் பேனர் வைச்சிருந்தியே அது பிடிக்கலை.
இப்போ நடந்த குடுமுழுக்குல “வலைப்புகழ்” பக்கத்துல பக்கித்தனமா “பி.ப”னு வேற போட்டு அதே ப்ளக்ஸ் பேனர சர்ஃப் போட்டு கழுவி கட்டியிருந்தது கேவலமா பிடிக்கலை.
7. “சிறந்த வலைப்பதிவு சிங்கம்”னு எம்ராய்டரிங் பண்ணின பிட்டுத் துணிய தினமும் சட்டைப்பையில் குண்டூசி வைச்சு குத்திட்டு, நெஞ்ச நிமிர்த்திட்டு போயி ரோட்ல கிடந்த கல்லுல கால் நகத்தை பேத்துக்கிட்டியே அது பிடிக்கலை.
அது நடந்து ஆறுமாசமாகியும் புதுசா யாராவது பார்க்கறப்ப வேணும்னே நொண்டிகிட்டு இத சரியாக் குத்தப்போய் கல்லுல அடி பட்றுச்சின்னு அனுதாப ஃபாலோயர் புடிச்சது சுத்தமா பிடிக்கல.
8. வேலை செய்ற கம்பெனியில உன் பேரு போட்டு கொடுத்த விசிட்டிங் கார்டுல வலைப்பூ முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குத்திட்டு, மார்கெட்டிங் போற இடத்திலெல்லாம் வலைப்பூ பத்தியே பேசுறியே அது பிடிக்கலை.
ம்கும். அதுல மாறுதல்.ப்ளாக்ஸ்பாட்.காம்னு இருந்தத படிச்சிட்டு அட ஆமாம்லனு அத்தன வாடிக்கையாளரும் மாறிபோய் ஆப்பு வெச்சத இப்பவும் சொல்லாம விட்டது பிடிக்கவேயில்லை.
9. பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.
பதிலுக்கு வந்த ஜாதகத்துல “வலைப்பூ சிங்கி”ன்னு போட்டு டமுக்கடிப்பான் டியாலோன்னு கையெழுத்து போட்டு வந்தத சொல்லாம விட்டதும் கூட பிடிக்கலை.
10. சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.
படிக்க நெம்ப ஓக்கியமா தெரிஞ்சாலும் அந்த முட்டாள் தனம்னு சொன்னது வருத்தப்பட்டத இல்ல இப்புடி வெட்டி சபதம் போட்டதத்தான் உள்குத்தா சொன்னேன்னு இப்பக்கூட ஒத்துக்காத கிருத்துருமம் புடிக்கவேயில்ல
11.பத்து பாயிண்டுனு சொல்லிட்டு, யார் என்ன கேட்டுடப்போறாங்கனு, 13 பாயிண்ட் எழுதிறியே, இந்த கட்டுப்பாடில்லாத புத்தி பிடிக்கலை.
அப்பவே எவனும் கண்டுக்கல. இப்பமட்டும் திருந்திருவாய்ங்களான்னு 12-13 ஆக்கிட்டு சில மாற்றங்களுடன்னு போடாம மீள்பதிவுன்னே போடுற திமிரு பிடிக்கல.
12. கடைசியா, இத்தனை நாளா கஷ்டப்பட்டு, ஒரு மொக்கை கூட எழுதத் கையலாகாம, இந்தப் பதிவுக்குப்போய் லேபிள்ல “மொக்கை”னு போடப்போறியே அது சுத்தமா பிடிக்கலை.
அட்றா சக்க அட்றா சக்க. என்ன குப்ப எழுதினாலும் அதுல மொக்கன்னு ஒரு வார்த்த வராமாதிரி போட்டு லேபிளும் போடுறத இப்புடிக் குத்திக்காட்டுரது புடிக்கவேயில்லையே ராசா
13. கடை ஆரம்பிச்ச புதுசுல, விலை போகாத சரக்க மீள் இடுகைன்னு போட்டு யாவாரம் பண்றியே அது இன்னும் பிடிக்கல
கருவாடு வித்த காசு நாறுமா! மீள் இடுகைக்கு வந்த பின்னூட்டம் கசக்குமா! இஃகி இஃகின்னு சிரிக்கிறது பிடிக்கல
14. அப்போ வந்த புதுசு சரி. இப்போ பி.ப. ஆனபிறகும், ரொம்ப ஓக்கியம் மாதிரி 12 இருந்தத 13னு ஆக்கிட்டு தலைப்புல அதே பத்த அப்புடியே காபி பேஸ்ட் போட்டு கண்டு பிடிங்கடாபாப்பம்னு அந்த தெனாவட்டு சுத்தமா பிடிக்கல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூலவர் இங்கே
(டிஸ்கி: இப்பவே சொல்லிடுறேன். சூதானமா பாருங்க. அப்புறம் வருத்தப்படக் கூடாது. சாரி நாட் அக்ஸப்டட்)