கசந்த மோர் சாதம் மாவடு
விரலில் மாட்ட வாகாய் மூலையில்
உடைத்த கல்லு சிலேட்டு
காலிகாட் பல்பொடி டப்பாவில்
சேர்த்து வைத்த பலப்ப சொத்து
வெட்டும்புலி, குயிலென
விதவிதமாய் மேச்சஸ் லேபில்
ஒருபுறம் தலை சாய்த்து, நாக்கு துருத்தி
ஒரு மூக்கொழுக வீட்டுப்பாடமெழுதியபடி வரும் நண்பன்
இழைப்புளியில் தேய்த்த ஐஸ் தூளில்
கலர் சர்பத் தெளித்த சிறுகிண்ணம்
மரவள்ளி, பனம்பழம், கிழங்கு
சேமியா பாலைஸ், பஞ்சுமிட்டாய்
கமருகட்டு, கல்ல உருண்டைவாச்சு, பிளேனுக்கு வழியின்றி
இரண்டு காசுக்கு மோதிரமேனும் சவ்வு மிட்டாயில்
தள்ளுவண்டிப் பொட்டியில் ரெண்டு வரி
எம்ஜியார் பாட்டு முடிய தேம்பியழும் சிவாஜி படம்
மீதியை வெள்ளித்திரையில் காணச் சொல்லும்
கலர் நோட்டீஸ் வீசும் மாட்டுவண்டியின் பின் ஓட்டம்
ஐஸ்பாய், ஏழாங்கல், முதுகு பஞ்சர்
பச்சக் குதிரை, கில்லி, பாண்டியாட்டம்
பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்
மணியொலிக்க வரும் சோன்பப்டி
மணலும் வயரும் வலை ஏரியலும்
கொண்டு செய்த டெலிஃபோன் இயர்பீஸ் ரேடியோ
முழுப் பௌர்ணமி இரவு மொட்டைமாடியில்
மூணு வீட்டு குழம்பு கலந்த மொத்தைச் சோறு
காவிட்ட நண்பனுடன் பிகு செய்து சாடை பேசி
பழம் விட்டுச் சிரித்த தருணங்கள்
கஞ்சி மொட மொடப்பில் கரிப்பொட்டி வாசனையுடன்
காக்கி வெள்ளை டவுசரும் சட்டையும்
வெள்ளை மணல் பரத்தி வாகாய் மேடு செய்து
பின்னங்கை கோர்த்து படுத்தபடி டூரிங் கொட்டாயில் படம்
ங்கொய்யால ஒரு நாள் முழுசும் இப்புடி அனுபவிச்சி
தரையில படுக்கப்போய் சுவத்தில தொங்கிடணும்!
பலப்பம்=ஸ்லேட்டுக் குச்சி, ஐஸ்பாய்= ஐ ஸ்பை மேச்சஸ் லேபில்=வத்திப் பெட்டி மேல் ஒட்டும் படம்.
~~~~~~~~~~~~
120 comments:
முதல் சீட்டு என்னோடது....
எனக்கும் ஆசையாய் இருக்கு
//ஈயம் போன பித்தளைத் தூக்கில்
கசந்த மோர் சாதம் மாவடு//
அடடா.. ஆரம்பமே எச்சில் ஊறுதே....
//விரலில் மாட்ட வாகாய் மூலையில்
உடைத்த கல்லு சிலேட்டு//
அப்டியே பக்கத்துல ஒரு பிகர் போனுச்சுன்னா...ஸ்டைலா சுத்திகிட்டே போவோம்ல....
//காலிகாட் பல்பொடி டப்பாவில்
சேர்த்து வைத்த பலப்ப சொத்து//
பல்லுவெலக்காமலே காலி பண்ணின டப்பாவையும், பசிக்கு ஒடச்சித்திண்ண சிலேட்டுக்குச்சியையும் மறக்கமுடிமா....!!!
ஒரு கையில் பிடித்த டவுசரை விட மனசில்லாம
ஓடி வந்து ...... இருங்க படிச்சுட்டு வாரேன்.....
//வெட்டும்புலி, குயிலென
விதவிதமாய் மேச்சஸ் லேபில்//
சூட்டுகொட்டைய விட்டுட்டீங்களே...
டூரின் டாக்கீஸ் நான் இது வரை பார்த்ததில்லை. சென்னையில் அப்படி ஏதாவது திரையரங்கல் ஒரு காட்சி ஏற்பாடு செய்தால் போகலாம். டிரைவ் இன்னில் அத்தனை சுகம் இல்லை.
//ஒருபுறம் தலை சாய்த்து, நாக்கு துருத்தி
ஒரு மூக்கொழுக வீட்டுப்பாடமெழுதியபடி வரும் நண்பன்//
ங்ங்ங்ங்கொய்யால...இப்டித்தான் நல்லபுள்ளையாட்டம் வந்து எப்பாருகிட்ட அடிவாங்க வச்சிடுவான்...ம்ம்ம்...அதுவொருகாலம்.....
//ஈயம் போன பித்தளைத் தூக்கில்
கசந்த மோர் சாதம் மாவடு//
டெலிவரி பாயின் டூ வீலரில் சிகப்பு பெயின்ட் அடித்த சதுரப்பெட்டியில் பிஸா என்று அடுத்த தலைமுறை வானம்பாடி கவிதை எழுதலாம்.
அத்தனைக்கும் மனம் விரும்புதே!
நியாபகம் வருதே நியாபகம் வருதே....
சார்...முடில சார்...எப்டி சார் இப்டி...
அப்படியே கண் முன்னால வந்த்ருச்சு சார்...(உடனே கோக்கு மாக்கா என்ன வந்துச்சுன்னு கேட்க படாது...)
//இழைப்புளியில் தேய்த்த ஐஸ் தூளில்
கலர் சர்பத் தெளித்த சிறுகிண்ணம்
கொடுக்காப்புளி, புளியம்பழம்,மரவள்ளி, பனம்பழம், கிழங்கு
சேமியா பாலைஸ், பஞ்சுமிட்டாய்கமருகட்டு, கல்ல உருண்டை//
ஒத்தகாசு முட்டாய், சுத்து முட்டாய், சக்கரவள்ளி கெழக்கு, சண்டைக்கு வந்தவங்கிட்ட புடுங்கித்திண்ண திருட்டு மாங்காய்....அப்பப்பா.. என்னா இனிப்புங்க அது...
@பாலாசி
//.இப்டித்தான் நல்லபுள்ளையாட்டம் வந்து எப்பாருகிட்ட அடிவாங்க வச்சிடுவான்//
உங்களையுமா பாஸு....
இதுக்குத படிக்கற பயபுள்ள கூட சேரகூடாது...
//வாச்சு, பிளேனுக்கு வழியின்றி
இரண்டு காசுக்கு மோதிரமேனும் சவ்வு மிட்டாயில்//
நான் படிக்கரச்சே..அதுக்குள்ளையும் காசவைச்சு ஆசயமூட்டிவிட்டானுவோ....
ஜவ்வு மிட்டாய் விட்டுடீங்களே....
//தள்ளுவண்டிப் பொட்டியில் ரெண்டு வரி
எம்ஜியார் பாட்டு முடிய தேம்பியழும் சிவாஜி படம்//
25 காசுக்கு ஒருரோலு சுத்திக்காட்டுவாங்கே... அதுக்குள்ள பாழாப்போன ஸ்கூல்ல மணியடிச்சிடும்...
அப்பவே அந்த ஆயா கிட்ட கிரெடிட் வேற...
பிலீவ் இட் ஆர் நாட்! வாசிக்கையில் என்னையுமறியாமல்......!
//மீதியை வெள்ளித்திரையில் காணச் சொல்லும்
கலர் நோட்டீஸ் வீசும் மாட்டுவண்டியின் பின் ஓட்டம்//
அண்ட்ராயர் அவுந்துவிழறு தெரியாம ஒரு தலை ராகத்தோட பிட் நோட்டீஸ்க்கு ஓடின காலுங்க இது.....
மொத்ததையும் ரசிச்சி ரசிச்சி சொன்னாலும் தீராது போலருக்கே..... என்னத்த சொல்ல என்னத்த விடுறது...
//பின்னங்கை கோர்த்து படுத்தபடி டூரிங் கொட்டாயில் படம்//
இந்தக்கொடுப்பனதான் இல்ல... பெஞ்சப்பபோட்டுட்டாங்கே....
வட போச்சே!!!
வாத்யாருக்கு கீரைஇ புடுங்கிட்டு வந்த மேட்டர் சொல்லல
//பலப்பம்=ஸ்லேட்டுக் குச்சி, ஐஸ்பாய்= ஐ ஸ்பை மேச்சஸ் லேபில்=வத்திப் பெட்டி மேல் ஒட்டும் படம்.//
இஃகிஃகி...
வெளக்கம் வேறையாக்கும்
//ங்கொய்யால ஒரு நாள் முழுசும் இப்புடி அனுபவிச்சி
தரையில படுக்கப்போய் சுவத்தில தொங்கிடணும்!//
இப்பக்கூடத்தான் ஏங்குது மனசு...என்னப்பண்றது... ஒரு கல்யாணமாவது பண்ணிட்டுதான் சுவத்துக்குப்போவலாம்னு இருக்கேன்....
//ஈரோடு கதிர் said...
வட போச்சே!!!
வாத்யாருக்கு கீரைஇ புடுங்கிட்டு வந்த மேட்டர் சொல்லல//
அய்யோ...மறந்திட்டேன்...வாத்தியாருக்கு சேர்ல நாரத்த முள்ளு வச்ச கதைய....
அடப்போங்க... எல்லாமே ஞாபகத்துல வந்திடுச்சு....
சார்ர்ர்ர்
ம்..ம்..ம்..ம்....Bala.....!!!!!
அண்ணே...
அனுபவம் - சரி, ஏக்கம் - சரி, கவிதை - ?
//
வெள்ளை மணல் பரத்தி வாகாய் மேடு செய்து
பின்னங்கை கோர்த்து படுத்தபடி டூரிங் கொட்டாயில் படம்
//
அது ஒரு கனாக்காலம்ங்க
மறுபடி வருமா?
கவிதை அருமை
கண் முன்னே காட்சிகளை கொண்டு
வந்துட்டீங்க!!!!! அட்டகாசமான ஏக்கம்தான்!!
ச்சூ ச்சூ மாரி ....... பாட்டும் background ல கேக்குது..... அசத்தலான கவிதை. ரொம்ப ரசித்து வாசித்தேன். :-)
ரசனை.
Kalakkal Sir..
//ங்கொய்யால ஒரு நாள் முழுசும் இப்புடி அனுபவிச்சி
தரையில படுக்கப்போய் சுவத்தில தொங்கிடணும்//
athukkuLLa enna avasaram?
Sorry. No tamil font.. :(
நாஸ்டால்ஜிக்...
அத்தனையும்..ஆகா... எப்பூடி... அந்த மனம் எனக்கிருக்காதா????
///முழுப் பௌர்ணமி இரவு மொட்டைமாடியில்
மூணு வீட்டு குழம்பு கலந்த மொத்தைச் சோறு///
இது வ்வ்வ்....
கலக்கறீங்க பாலாண்ணே.
சிறுவயது நினைவுகள்.. தட்டி எழுப்புகிறது இந்தப் பதிவு.
படிச்சிட்டு நிகழ்வுக்கு வர கொஞ்ச நேரமாச்சு! எல்லாம் பழைய நினைவுகளைக் கிளறி....
அருமை அய்யா!
பிரபாகர்...
ஆஹா அருமை....மனக்குளத்தில் கல்லெறிந்த்து நினைவலைகளை மீட்டது.
ur poem pulls me back. s super.
நல்லாருக்கு சார்..
அய்யா கலக்கல்.
அட அட அட .. கலக்கல் போங்க ..
//ஆஹா அருமை....மனக்குளத்தில் கல்லெறிந்த்து நினைவலைகளை மீட்டது.//
சரிதான் அருணா.
எல்லாவற்றையும் சொன்ன மாதிரித் தெரிகிறது. ஆனாலும் பாலாஜி விடுபட்ட ரெண்டு கண்டுபிடிச்சிட்டாப்ல.
கேரக்டர் மணியைமறப்பதற்குள் இப்படியா வந்து தொந்தரவு பண்ணனும் ?.
//ஒரு நாள் முழுசும் இப்புடி அனுபவிச்சி
தரையில படுக்கப்போய் சுவத்தில தொங்கிடணும்!//
புகைப்படமாய்
//ஈயம் போன பித்தளைத் தூக்கில்
கசந்த மோர் சாதம் மாவடு//
கூடவே கொஞ்சம் கள்ளும் இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா ?
கிராமத்தை நினைவை படுத்திட்டீங்க பாலா சார்..
இரண்டு காசுக்கு மோதிரமேனும் சவ்வு மிட்டாயில்
பஞ்சுமிட்டாய்காரரு எங்க வீட்டுக்கிட்ட வரப்ப காசு கேட்டா அந்த கிழவன் என்னை அழ வைத்து வேடிக்கை காமிச்சல்ல காசு கொடுத்தது... அட போங்க அந்த ஐவ்வு மிட்டாய் கைகார ருசி ...நெசமாலுமே இன்னொரு அனுபவிக்க வேணும் போல் இருக்குங்க..சபாஷ் பதிவு..
//வெள்ளை மணல் பரத்தி வாகாய் மேடு செய்து பின்னங்கை கோர்த்து படுத்தபடி டூரிங் கொட்டாயில் படம்//
நான் ஒக்காந்து தான் ....
நல்லாயிருக்குங்க .
//காவிட்ட நண்பனுடன் பிகு செய்து சாடை பேசி
பழம் விட்டுச் சிரித்த தருணங்கள்//
ரசித்ததில் பிடித்தது...எல்லாமே ...நாம் கடந்து வந்த சந்தோசங்கள்.
அப்படியே பின்னாடி போயிட்டேன்சார்...
//கேரக்டர் மணியைமறப்பதற்குள் இப்படியா வந்து தொந்தரவு பண்ணனும் ?.//
அதானே சார், விட்டா ஊருக்குக் கெளப்பீருவீங்க போல இருக்கே. ஆனா ரொம்ப நிறைவா உணர்ந்தேன் பாலா சார்.
க.பாலாசி said...
/அப்டியே பக்கத்துல ஒரு பிகர் போனுச்சுன்னா...ஸ்டைலா சுத்திகிட்டே போவோம்ல..../
ஸ்லேட்டு வயசிலயேவா? நீ பிஞ்சுல இல்ல பூவுலயே பழுத்தவன்.
/பல்லுவெலக்காமலே காலி பண்ணின டப்பாவையும், பசிக்கு ஒடச்சித்திண்ண சிலேட்டுக்குச்சியையும் மறக்கமுடிமா....!!!/
அதுக்குதான் நாக்குபூச்சின்னு விளகெண்ணைய ஊத்தி பழிவாங்கிடுவாங்களே.
/சூட்டுகொட்டைய விட்டுட்டீங்களே.../
ஆமா! கோலி, பம்பரமெல்லாமும்.
/ங்ங்ங்ங்கொய்யால...இப்டித்தான் நல்லபுள்ளையாட்டம் வந்து எப்பாருகிட்ட அடிவாங்க வச்சிடுவான்...ம்ம்ம்...அதுவொருகாலம்...../
போறாத காலம் எப்புடி ரூபத்துலயெலாம் வருது பாரு.
/ஒத்தகாசு முட்டாய், சுத்து முட்டாய், சக்கரவள்ளி கெழக்கு, சண்டைக்கு வந்தவங்கிட்ட புடுங்கித்திண்ண திருட்டு மாங்காய்....அப்பப்பா.. என்னா இனிப்புங்க அது.../
யோவ்! வெறுபேத்தாத.
/நான் படிக்கரச்சே..அதுக்குள்ளையும் காசவைச்சு ஆசயமூட்டிவிட்டானுவோ..../
அதுலயுமா. பாவிங்க.
/அண்ட்ராயர் அவுந்துவிழறு தெரியாம ஒரு தலை ராகத்தோட பிட் நோட்டீஸ்க்கு ஓடின காலுங்க இது...../
அம்புட்டுக்காலம் இருந்துச்சா உங்க ஊர்ல.:)
/இப்பக்கூடத்தான் ஏங்குது மனசு...என்னப்பண்றது... ஒரு கல்யாணமாவது பண்ணிட்டுதான் சுவத்துக்குப்போவலாம்னு இருக்கேன்.../
ஆமாம்டி! சுவத்தோட சேத்து அமுக்கிதான் நொங்கு நொங்குன்னு குத்துவாய்ங்க:))
/அய்யோ...மறந்திட்டேன்...வாத்தியாருக்கு சேர்ல நாரத்த முள்ளு வச்ச கதைய....
அடப்போங்க... எல்லாமே ஞாபகத்துல வந்திடுச்சு..../
அடப்பாவி! இதெல்லாம் வேறயா?:))
Hanif Rifay said...
/நியாபகம் வருதே நியாபகம் வருதே....
சார்...முடில சார்...எப்டி சார் இப்டி...
அப்படியே கண் முன்னால வந்த்ருச்சு சார்...(உடனே கோக்கு மாக்கா என்ன வந்துச்சுன்னு கேட்க படாது...)/
நன்றி ஹனீஃப்
VISA said...
டூரின் டாக்கீஸ் நான் இது வரை பார்த்ததில்லை. சென்னையில் அப்படி ஏதாவது திரையரங்கல் ஒரு காட்சி ஏற்பாடு செய்தால் போகலாம். டிரைவ் இன்னில் அத்தனை சுகம் இல்லை.//
இதுக்கு வெட்ட வெளி போதும்:)
ராஜ நடராஜன் said...
அத்தனைக்கும் மனம் விரும்புதே!//
ம்ம்ம்:)
சேட்டைக்காரன் said...
பிலீவ் இட் ஆர் நாட்! வாசிக்கையில் என்னையுமறியாமல்......!//
நன்றி சேட்டை
padma said...
எனக்கும் ஆசையாய் இருக்கு//
யாருக்குத்தான் இருக்காது
padma said...
எனக்கும் ஆசையாய் இருக்கு//
ஆமாங்க கோவியிலை பறிச்சு கரிபூசினது கூட.
ஈரோடு கதிர் said...
//பலப்பம்=ஸ்லேட்டுக் குச்சி, ஐஸ்பாய்= ஐ ஸ்பை மேச்சஸ் லேபில்=வத்திப் பெட்டி மேல் ஒட்டும் படம்.//
இஃகிஃகி...
வெளக்கம் வேறையாக்கும்//
பாலாசிக்கு பலப்பம்னா தெரியலயாமா:))
மணிஜீ...... said...
சார்ர்ர்ர்//
:))வாங்க சார்ர்ர்
T.V.ராதாகிருஷ்ணன் said...
ம்..ம்..ம்..ம்....Bala.....!!!!!
ம்ம்:)))
Subankan said...
அண்ணே.../
வாங்க சுபாங்கன்:)
D.R.Ashok said...
அனுபவம் - சரி, ஏக்கம் - சரி, கவிதை - ?//
எம்பேரு கூடத்தான் பாலாஜி! நாமம் கூட சொந்தமில்ல:)). கண்டுக்காதிங்க பாஸ்
VELU.G said...
//
வெள்ளை மணல் பரத்தி வாகாய் மேடு செய்து
பின்னங்கை கோர்த்து படுத்தபடி டூரிங் கொட்டாயில் படம்
//
அது ஒரு கனாக்காலம்ங்க
மறுபடி வருமா?
கவிதை அருமை//
நன்றிங்க
சைவகொத்துப்பரோட்டா said...
கண் முன்னே காட்சிகளை கொண்டு
வந்துட்டீங்க!!!!! அட்டகாசமான ஏக்கம்தான்!!//
நன்றிங்க.
Chitra said...
ச்சூ ச்சூ மாரி ....... பாட்டும் background ல கேக்குது..... அசத்தலான கவிதை. ரொம்ப ரசித்து வாசித்தேன். :-)//
நன்றிம்மா
ஆதிமூலகிருஷ்ணன் said...
ரசனை.//
நன்றி ஆதி:)
முகிலன் said...
Kalakkal Sir..
//ங்கொய்யால ஒரு நாள் முழுசும் இப்புடி அனுபவிச்சி
தரையில படுக்கப்போய் சுவத்தில தொங்கிடணும்//
athukkuLLa enna avasaram?
Sorry. No tamil font.. :(//
நன்றி முகிலன்
ஸ்ரீராம். said...
நாஸ்டால்ஜிக்...//
தேங்க்யூ ஸ்ரீராம்
றமேஸ்-Ramesh said...
அத்தனையும்..ஆகா... எப்பூடி... அந்த மனம் எனக்கிருக்காதா????
///முழுப் பௌர்ணமி இரவு மொட்டைமாடியில்
மூணு வீட்டு குழம்பு கலந்த மொத்தைச் சோறு///
இது வ்வ்வ்....//
ஹி ஹி. நன்றி
ச.செந்தில்வேலன் said...
கலக்கறீங்க பாலாண்ணே.
சிறுவயது நினைவுகள்.. தட்டி எழுப்புகிறது இந்தப் பதிவு.//
நன்றிங்க செந்தில்:)
பிரபாகர் said...
படிச்சிட்டு நிகழ்வுக்கு வர கொஞ்ச நேரமாச்சு! எல்லாம் பழைய நினைவுகளைக் கிளறி....
அருமை அய்யா!
பிரபாகர்...//
நன்றி ப்ரபா
அன்புடன் அருணா said...
ஆஹா அருமை....மனக்குளத்தில் கல்லெறிந்த்து நினைவலைகளை மீட்டது.//
நோ பூங்கொத்து? நன்றி மேடம்.
மதுரை சரவணன் said...
ur poem pulls me back. s super.//
நன்றிங்க
கலகலப்ரியா said...
நல்லாருக்கு சார்..//
நன்றிம்மா
இராமசாமி கண்ணண் said...
அய்யா கலக்கல்.//
நன்றிங்க
~~Romeo~~ said...
அட அட அட .. கலக்கல் போங்க//
நன்றி ரோமியோ
காமராஜ் said...
//ஆஹா அருமை....மனக்குளத்தில் கல்லெறிந்த்து நினைவலைகளை மீட்டது.//
சரிதான் அருணா.
எல்லாவற்றையும் சொன்ன மாதிரித் தெரிகிறது. ஆனாலும் பாலாஜி விடுபட்ட ரெண்டு கண்டுபிடிச்சிட்டாப்ல.
கேரக்டர் மணியைமறப்பதற்குள் இப்படியா வந்து தொந்தரவு பண்ணனும் ?.//
நன்றி காமராஜ்:)
ப்ரின்ஸ் said...
//ஒரு நாள் முழுசும் இப்புடி அனுபவிச்சி
தரையில படுக்கப்போய் சுவத்தில தொங்கிடணும்!//
புகைப்படமாய்//
ஆமாம்:)
நசரேயன் said...
//ஈயம் போன பித்தளைத் தூக்கில்
கசந்த மோர் சாதம் மாவடு//
கூடவே கொஞ்சம் கள்ளும் இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா ?//
எலிமெண்டரி ஸ்கூல்லயேவா. வெளங்கிரும்.
நாடோடி said...
கிராமத்தை நினைவை படுத்திட்டீங்க பாலா சார்..//
நன்றிங்க நாடோடி
தாராபுரத்தான் said...
இரண்டு காசுக்கு மோதிரமேனும் சவ்வு மிட்டாயில்
பஞ்சுமிட்டாய்காரரு எங்க வீட்டுக்கிட்ட வரப்ப காசு கேட்டா அந்த கிழவன் என்னை அழ வைத்து வேடிக்கை காமிச்சல்ல காசு கொடுத்தது... அட போங்க அந்த ஐவ்வு மிட்டாய் கைகார ருசி ...நெசமாலுமே இன்னொரு அனுபவிக்க வேணும் போல் இருக்குங்க..சபாஷ் பதிவு..//
நன்றிங்கண்ணா:)
நண்டு@நொரண்டு -ஈரோடு said...
//வெள்ளை மணல் பரத்தி வாகாய் மேடு செய்து பின்னங்கை கோர்த்து படுத்தபடி டூரிங் கொட்டாயில் படம்//
நான் ஒக்காந்து தான் ....
நல்லாயிருக்குங்க .//
நன்றிங்க:))
ஜெரி ஈசானந்தன். said...
//காவிட்ட நண்பனுடன் பிகு செய்து சாடை பேசி
பழம் விட்டுச் சிரித்த தருணங்கள்//
ரசித்ததில் பிடித்தது...எல்லாமே ...நாம் கடந்து வந்த சந்தோசங்கள்.//
நன்றிங்க ஜெரி.:)
ஜாக்கி சேகர் said...
அப்படியே பின்னாடி போயிட்டேன்சார்...//
வாங்க ஜாக்கி. சுகமா இருக்கில்லா:)
செ.சரவணக்குமார் said...
//கேரக்டர் மணியைமறப்பதற்குள் இப்படியா வந்து தொந்தரவு பண்ணனும் ?.//
அதானே சார், விட்டா ஊருக்குக் கெளப்பீருவீங்க போல இருக்கே. ஆனா ரொம்ப நிறைவா உணர்ந்தேன் பாலா சார்.//
நன்றி சரவணக்குமார்.
காட்சிகள் அப்படியே கண்ணுக்குள்ள விரியுதண்ணே..! அருமை ..!
//ஈயம் போன பித்தளைத் தூக்கில்
கசந்த மோர் சாதம் மாவடு//
அய்யோ...! எச்சில் வடிய வெச்சுட்டீயளே!
ஏஞ்சாமி பழசையெல்லாம் கிளறி விடுறீங்க?
//கொடுக்காப்புளி, புளியம்பழம்,
மரவள்ளி, பனம்பழம், கிழங்கு//
1.கோணபுளியங்காய்.
2.புளியம்பழம்
3.குச்சிவள்ளிக் கெழங்கு
4.பனம்பழம்
5.பனங்கெழங்கு
அருமை பாலா சார்! :-)
//காக்கி வெள்ளை டவுசரும் சட்டையும்//
பெரும்பாலும் “போஸ்ட் பாக்ஸ்” ட்ரவுஸர் தான்!
//ங்கொய்யால ஒரு நாள் முழுசும் இப்புடி அனுபவிச்சி
தரையில படுக்கப்போய் சுவத்தில தொங்கிடணும்!//
அய்யா சாமீ,
எனக்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு..! பொறவு பாக்கலாம்.
கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதே ஆனந்தம்தான்.....கொசுவத்தி சுத்தினீங்க, வாழ்த்துகள்!
என்.சி.சி யூனிபார்ம், டிரில், பூரி கிழங்கு டிபன்,
கண் சிவக்க கோடையில கிணத்துக் குளியலென
இன்னும் பல சேர்த்தபின்பு சுவரில் தொங்களாம்.
இப்ப என்ன அவசரம்?? ஆனாலும் அந்த சண்டைக்குப் பின்
//காவிட்ட நண்பனுடன் பிகு செய்து சாடை பேசி
பழம் விட்டுச் சிரித்த தருணங்கள்//
கூட்டுச் சேரும் அனுபவத்தை... அனுபவக்கிறேன்,
அருமை...
அப்பப்பா.......இவ்வளவு ஞாபக சக்தியா???? பழைய நாட்களுக்கே அழைத்துச் சென்றுவிட்டது.......
அருமை பாலாண்ணே......
எங்க சங்கத்தக் கூட்டி முடிவு பண்டி,
"பல்சுவைப் பாவலர் பாலா" ன்னு ஒரு பட்டம் கொடுக்கலாம்னு இருக்கிறோம்....
ப.பா.பா....வாழ்க
பேராசைப்படப்படாது.
எல்லாத்துக்கும்தான் டிவி இருக்கே. :)
நல்லாயிருக்கு சார்.
ஞாபக அலைகள் அடிக்குது..
ஆஹா எல்லாத்தையும் மிஸ் பண்ண வெச்சிட்டீங்களே!! :(
@ விசா அருமையான கோரிக்கை! :)
//பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்
மணியொலிக்க வரும்.. சோன்பப்டி..//
சோன் பப்டி..
அய் எனக்கு ரொம்ப புடிக்கும்..!!!
வெறுமனே.... அருமை....
என்று சொல்ல தோணல.
இந்த தருணத்த சாகடிச்சி... ஒரு கால் நூற்றாண்டு பின்னுக்கு எழுத்துகிட்டு போகுது உங்க கவிதைச் சொற்கள்.
இழந்தத நெனைச்சா,,, நெருடலா இருக்கு....
கவிதை வலிமையான வலி.
கடைசி வரிகளில் வாழ்க்கையின் உண்மை ஏக்கம் தெரிகிறது. நிறைவாய் வாழ்ந்து நிறைவாய் சாதல் எவருக்கும் எளிதாய் கிடைப்பதில்லை.
முதல் முறை உங்கள் தளம் வந்தேன். அனைத்தையும் படிக்க மனம் விரும்புது...
அருமை.. அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.
தமிழ் அமுதன் (ஜீவன்) said...
காட்சிகள் அப்படியே கண்ணுக்குள்ள விரியுதண்ணே..! அருமை ..!//
நன்றிங்க ஜீவன்
’மனவிழி’சத்ரியன் said...
//ஈயம் போன பித்தளைத் தூக்கில்
கசந்த மோர் சாதம் மாவடு//
அய்யோ...! எச்சில் வடிய வெச்சுட்டீயளே!
ஏஞ்சாமி பழசையெல்லாம் கிளறி விடுறீங்க?//
நன்றி கண்ணன்
பா.ராஜாராம் said...
அருமை பாலா சார்! :-)//
நன்றி பா.ரா.
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதே ஆனந்தம்தான்.....கொசுவத்தி சுத்தினீங்க, வாழ்த்துகள்!//
நன்றிங்க.
vasan said...
என்.சி.சி யூனிபார்ம், டிரில், பூரி கிழங்கு டிபன்,
கண் சிவக்க கோடையில கிணத்துக் குளியலென
இன்னும் பல சேர்த்தபின்பு சுவரில் தொங்களாம்.
இப்ப என்ன அவசரம்?? ஆனாலும் அந்த சண்டைக்குப் பின்
//காவிட்ட நண்பனுடன் பிகு செய்து சாடை பேசி
பழம் விட்டுச் சிரித்த தருணங்கள்//
கூட்டுச் சேரும் அனுபவத்தை... அனுபவக்கிறேன்,
அருமை...//
வாங்க வாசன் சார். நன்றி முதல் வரவுக்கும் ஊக்கத்துக்கும்.
ஆரூரன் விசுவநாதன் said...
அப்பப்பா.......இவ்வளவு ஞாபக சக்தியா???? பழைய நாட்களுக்கே அழைத்துச் சென்றுவிட்டது.......
ஆஹா. சிங்கம் களமிறங்கிருச்சேய். நன்றிங்க ஆரூரன்.
ஆரூரன் விசுவநாதன் said...
எங்க சங்கத்தக் கூட்டி முடிவு பண்டி,
"பல்சுவைப் பாவலர் பாலா" ன்னு ஒரு பட்டம் கொடுக்கலாம்னு இருக்கிறோம்....
ப.பா.பா....வாழ்க//
விழா உண்டுங்களா?:))
அக்பர் said...
பேராசைப்படப்படாது.
எல்லாத்துக்கும்தான் டிவி இருக்கே. :)
நல்லாயிருக்கு சார்.//
நன்றிங்க அக்பர்.
ரிஷபன் said...
ஞாபக அலைகள் அடிக்குது..//
வாங்க ரிஷபன். நன்றி
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஆஹா எல்லாத்தையும் மிஸ் பண்ண வெச்சிட்டீங்களே!! :(
@ விசா அருமையான கோரிக்கை! :)//
வாங்க ஜி:). நன்றி
Balavasakan said...
//பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்
மணியொலிக்க வரும்.. சோன்பப்டி..//
சோன் பப்டி..
அய் எனக்கு ரொம்ப புடிக்கும்..!!!//
நன்றி வாசு
சி. கருணாகரசு said...
வெறுமனே.... அருமை....
என்று சொல்ல தோணல.
இந்த தருணத்த சாகடிச்சி... ஒரு கால் நூற்றாண்டு பின்னுக்கு எழுத்துகிட்டு போகுது உங்க கவிதைச் சொற்கள்.
இழந்தத நெனைச்சா,,, நெருடலா இருக்கு....
கவிதை வலிமையான வலி.//
நன்றிங்க கருணாகரசு
V.Radhakrishnan said...
கடைசி வரிகளில் வாழ்க்கையின் உண்மை ஏக்கம் தெரிகிறது. நிறைவாய் வாழ்ந்து நிறைவாய் சாதல் எவருக்கும் எளிதாய் கிடைப்பதில்லை.//
நன்றிங்க வெ.இரா.
சே.குமார் said...
முதல் முறை உங்கள் தளம் வந்தேன். அனைத்தையும் படிக்க மனம் விரும்புது...
அருமை.. அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.//
முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி குமார்.
அன்பின் பாலா
அருமையான கொசுவத்தி - சின்னஞ்சிறு வயதில் - 1 முதல் 5 வரை - தொடக்கப் பள்ளி - அக்கால தொடக்கப் பள்ளி - நினைவுகளை அப்படியே கோண்டு வந்து கொட்டி விட்டீர்கள் பாலா - அருமிஅயான் நினைவாற்றல் ( எளிதில் மறகக் இயலாது ) . சம வயதில் உள்ள தாராபுரத்தார், இளைய பாலாசி, நடுவில் ஜெரி ஈசானந்தா - விழா எடுக்கும் ஏற்பாடுகளில் ஆரூரன் - மறுமொழிகள் அட்டகாசம். திரும்பத் திரும்பப் படித்தேன் - அப்படியே அசை போட்டேன் - ஆனந்தித்தேன் - மகிழ்ந்தேன் - மெது மெதுவாக மனத்தில் ஓடிய நிகழ்வுகளை - ஆகா ஆகா - அற்புத பாலா
நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா
சித்ரா தயவால் மீண்டும் வந்தேன்ங்க.
Post a Comment