வலைமனைகளில் கண்ட செய்தி கலக்கமளிக்கிறது. கொந்தளிக்கச் செய்கிறது. என்ன நடக்கிறது. எத்தனை அமைப்புக்கள். எத்தனை போராட்டங்கள். எத்தனை உயிரிழப்புக்கள். எதுவும் எனக்கு கவலையில்லை. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்போடு மனித உயிர்களை வகை வகையாய் கொண்று குவிக்கும் இறுமாப்பு. ஊடகங்களுக்குத் தடை. தொண்டு நிறுவனங்கள் விரட்டல். தடை செய்யப்பட்ட தளபாடங்கள். பிஞ்சோ முதிர்ந்ததோ எல்லாம் எனக்கு புலி தான் என்ற கொக்கரிப்போடு கொலை. நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் அவலம். வலயமமைத்து வளைத்துக்கட்டி குவியலாய் பிணங்கள். இந்த நூற்றாண்டிலா இப்படி. சரித்திரம் படித்துக் கற்றுக் கொண்டதென்ன. எவ்வளவு நாள் வேடிக்கை பார்க்கப் போகிறோம். மொத்த மனித இனத்துக்கும் சவாலாய் ஒன்றிரண்டு மிருகங்கள் கொலை வெறியை கட்டவிழ்த்து விடுவதை வேடிக்கை பார்க்கவா ஏதேதோ நிறுவனங்கள்.
பாருங்கள் மக்களே! வன்னியிலிருந்து வவுனியா வந்த தாய்மார்கள். ஒன்றல்ல இரண்டல்ல 500 பேருக்கு கருக் கலைப்பாம். பள்ளிகளை ஒழித்துக் கட்டி தங்க வைக்க ஏற்பாடாம். அதுவும் முட்கம்பி வேலிக்குள் வெளிச்சிறை. இவர்கள் மிருகங்களா? மனிதர்கள் தாமே? ஏன் யாருக்கும் எதுவும் செய்ய முடியாமல் போகும். நீ செய்கிறாயா? நான் செய்வதா என்று கூட பேச்சில்லையே? பயணத்தில் தூங்கி வழிந்து நெற்றி இடித்ததும் திடுக்கிட்டாற்போல் ஒரு கண்டனம். திரும்பத் தூக்கம். பேச வேண்டியவர்கள் பேசுவதில்லை. ஓர் இரவில் மூன்று வல்லரசுகள் சதாம் உசேனை துவம்சம் செய்ததே? அப்படிக்கூட வேண்டாம். என்னதான் நடக்கிறது. நேரில் பார்க்க வருகிறோம் என்று சொன்னால் எத்தனை உயிர் பிழைக்கும்.
இருக்கிற தலை குனிவு போதாதென்று செத்த கணக்கெடுக்கவோ, சிறைக் கணக்கெடுக்கவோ இந்தியாவின் இன்ஃபொசிஸ் நிறுவனத்திற்கு அழைப்பாம். இப்படியுமா வியாபாரம் செய்ய வேண்டும்.
சிறுபான்மையினர் என்றால் மனிதர்கள் இல்லையா? சிங்களவன் சிங்காரத்திலிருக்க உழைத்த தமிழன் உறங்கியதால் வந்த வினையா? கல்வி கல்வி என்று தமிழன் அலைய கலவி கலவி என்று சிங்களன் இருந்ததற்கு வரமா? காலம் பதில் சொல்லுமோ? காலன் பதில் சொல்லுவானோ?

4 comments:
கூடப் படித்தாலோ அல்லது, கூட உழைத்தாலோ சில மனிதர்கள் மனிதத்தை இழந்து விடுகின்றார்கள். வேதனை அழிக்கின்றது. இந்தியா தன் நாட்டுக்குள் பிரிவினையை வளர்க்க ஆரம்பித்து விட்டது என்று எண்ணத் தோன்றுகின்றது. அடக்குமுறைகள், மக்களின் எண்ணங்களுக்கு மதிக்களிக்காமல் விடுதல் போன்றவையே விடுதலை எண்ணங்களை தூண்டுகின்றன. நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
மனசுக்கு வேதனையா இருக்கு!
நன்றி!:-)
அப்பு ராசா! கையைக் குடும்.. நல்ல பரந்துபட்ட சிந்தனையிலை தான் எழுதியிருக்கிறீர்... மனிசர் மட்டுமில்லை வன்னியிக்கை உள்ள ஆடு மாடும் புலியாமெல்லோ??? ஏன் நீர் உந்தத் தமிழ் மணத்திலை இணைக்கக் கூடாதோ?? அப்பிடி இணைச்ச்சால் நிறையப் பேர் வருவீனம் தானே?? உப்பிடிச் சனம் சாகேக்க்கை தான் அம்மா மாதிரி ஆட்கள் சாகிறது புலியெண்டெல்லோ அறிக்கை விடீனம்??? வாழ்த்துக்கள் மோனை...தொடர்ந்தும் எழுதும்.
Post a Comment