Monday, February 16, 2009

உங்களால் முடிந்தது.

சூப்பர் கட்சியின் சுரணை மிகு தலைவருக்கு ஒரு வேண்டுகோள்!

தேசிய நீரோட்டம் பற்றி தெரியாத பாமரனின் வேண்டுகோள். வெளி நாடு போக வேண்டாம். வெடிகுண்டு பயம் வேண்டாம். வேற யார் உதவியும் வேணாம். உங்க பாரம்பரியக் கட்சி ஆளுங்க மனசு வெச்சா முடியுங்க. இதான் பண்ணியாகணும்னு கட்டாயமில்லிங்க. எது வசதியோ பண்ணலாங்க. பண்ணுவீங்க தானுங்களே?

இந்த சீமான்ல இருந்து சின்ன பசங்க வரைக்கும் கிழியோ கிழின்னு கிழிக்கிற விடயம் இந்த காவிரி நீர் பிரச்சனை. சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் சரி அதுக்குன்னே இருக்கிற வாரியம் சொன்னாலும் சரி கேக்க மாட்டேன்னு அடம். இவ்வளவு தண்ணீர் கொடுத்தே ஆகணும்னு சொன்னா அதில விழுந்து செத்து இப்போ என்ன பண்ணுவன்னு கொக்கரிக்கிர வக்கிரம். இதெல்லாம் செரியில்ல தானுங்களே. நீங்க மனசு வெச்சா பண்ணக்கூடியது

1. வீரப்ப மொய்லி இன்ன பிற தொண்டர்கள் எல்லாருமா சேர்ந்து, தமிழ் நாடு இந்தியால தான் இருக்கு. தேசியத்துக்கு இழுக்கா தண்ணி எல்லாம் இல்லன்னு சொல்லக்கூடாது. கொஞ்சமிருந்தா கொஞ்சம், நிறைய இருந்தா நிறைய அவங்களுக்கும் கொடுத்தே ஆகணும்னு ஒரு தீர்மானம் போட சொல்ல முடியுமா. அட நடைமுறை படுத்துறது அப்புறமுங்க. எளுத்திலையாவது பார்க்க மாட்டமான்னு ஆசை.

2. சரி சரி நெளிய வேணாமுங்க. உங்க கஷ்டம் புரியாம போய்டுமா. இவங்க கிட்ட நீங்க ஏங்க கெஞ்சணும். அன்னை சோனியாட்ட சொல்லி நிதியமைச்சர்ட ஒரு வார்த்தைங்க. ஒரே ஒரு வார்த்தைங்க. தண்ணி தராம பயிர் வாடி போனாலும் சரி, இன்னும் புடிச்சி வெச்சா ஊர் முழுகிடும்னு மொத்தமா தொறந்து விட்டு பயிரு பச்சையெல்லாம் நாசமா போனாலும் சரி. ஐசா பைசா கணக்கு பார்த்து அவங்க கணக்கில கழிச்சி தமிழ் நாட்டு விவசாயிக்கு நஷ்ட ஈடு தரலாமேங்க.

தமிழ் நாட்டு சனங்க நன்றி மறந்தவங்க இல்லீங்கோ. தண்ணி வந்தா காவேரி என்னாங்க காவேரி.தமிழ் நாட்டுக்குள்ள அந்த ஆத்துக்கு பேரு ராஜிவ் ஆறு இல்லன்னா சோனியா ஆறு, அட என்னங்க இவ்ளோ பண்ணுறப்போ பேரு கூட நீங்க வைக்க விட மாட்டமா என்ன. பண்ணுவீங்களாங்க?

அவன பார்த்து நாயருக்கு அரிக்குது. என்னமோ முல்லைப் பெரியாருக்கு வேட்டு வைக்க போறாங்களாம். இதுக்கும் இதே ஃபார்முலா தாங்க. வயலாரும், அந்தோணியாரும் சரின்னு சொல்ல மாட்டாங்களாங்க.

மக்களுக்குன்னு என்னைக்குடா பண்ணி இருக்கோம். அதெல்லாம் காமராஜர் காலத்தோட செரின்னு முனகறது கேக்குதுங்க. அப்படி ஒரு கெட்ட பேரு உங்களுக்கு வர வேணாமுங்க. தொப்புளாவது கொடியாவது, தமிழ் மட்டும் எனக்கு இனம் இருந்தா என்ன செத்தா என்ன காங்கிரச சொன்னா பிச்சிபோடுவேன் பிச்சின்னு அவ்ளோ முடியாமலும் அறிக்கை விட்டாங்களே. எவ்வளவு பெரிய தியாகம். அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீங்க பேசி முடிச்சி ஏதோ ஒரு வழி காட்டினா நான் பேசினதாலதான் நடந்ததுன்னு சொல்லுவாங்கங்க. என்னாங்க‌ சொல்றீங்க. வெக்கமா? சே போங்க. கோத்தபாயிக்கு கொத்து குண்டுன்னா தெரிஞ்ச அளவுதான் வெக்கம்னா இவங்களுக்கு தெரிஞ்சதும்.

2 comments:

பழமைபேசி said...

எழுத்து நடை கன கச்சிதம்!

vasu balaji said...

நன்றி!:‍‍‍-)