பேரன்பு மிக்க பெரியோர்களே தாய்மார்களே! உள்ளூர் தலைவர்களே! உலகத் தலைவர்களே! எங்களைக் காப்பீர்கள் என நாங்கள் நம்பும் கலியுகக் கடவுள்களே! மானுடம் என்றால் என்ன என்ற சந்தேகம் வந்ததால் தெளியத் தேடியதில் கிடைத்தது இது.
A humane society may be a group that aims to stop human or animal suffering due to cruelty or other reasons, although in many countries it is now used mostly for societies for the prevention of cruelty to animals (SPCA's). ...
en.wikipedia.org/wiki/Humane
தமிழினக் காவலர்களுக்காக தமிழில்
மனித நேயம் என்பது மனிதர்களுக்கோ அல்லது மிருகங்களுக்கோ வன்முறையாலோ அல்லது வேறு காரணங்களாலோ உண்டாகும் பாதிப்புக்களை தடுக்கும் நோக்கம் கொண்ட ஒரு குழுவாக இருப்பினும் பல நாடுகளில் இப்போது மிருகங்களுக்கான வதைத் தடுப்புச் சங்கத்தைக் குறிக்கிறது.
இப்படி நம்பித்தானே இவர்களும் இருக்கிறார்கள். எம் சக உயிருக்கு குரல் கூட ஒன்றாகக் கொடுக்க இயலாமல் யார் எதைப் போட வேண்டும் என்ற பட்டிமன்றமும், அப்போதே சொன்னேனே கேட்டிருந்தால் சவடால்களும், குரல் கொடுக்கிறோம் பேர்வழி என்றமைந்த குழுக்களிலும் போட்டிக் குழுவமைத்து போராடும் நல்லோரே. நாளை எங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என நம்புவது? உலகமெல்லாம் ஒடி ஒடி ஒரு மனிதனாவது இருக்க மாட்டானா? எமக்கு குரல் கொடுக்க மாட்டானா எனத் தத்தளிக்கிறதே ஒரு இனம் ? என்ன சொல்லப் போகிறீர்கள். சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம் அய்யா. என் தாத்தன் சொல்லி இருக்கிறான். செய்ய வேண்டாம். சொல்லவாவது செய்யுங்கள் அய்யா. தயவு செய்து சொல்லுங்கள். இங்கே வராதீர்கள். மிருக வதை தடுப்புக் குழுவிடம் சொல்லுங்கள் என்றாவது சொல்லுங்களேன்.
வாழ்ந்ததும் வாழ இருப்பதும் சிந்திய ரத்தத்தில் கதறும் அழுகையில் தெரியும் வலியில் ஆறு வித்தியாசம் கண்டு பிடியுங்கள். அப்போதாவது இதயத்தின் ஓரத்தில் ஒரு சிறு வலி தெரிகிறதா பார்ப்போம்.
மெத்தைப் படுக்கை வேண்டாம் மேலொரு கூரையும் வேண்டாம் கட்டாந்தரையில் கயிறு கட்டி உயிர்த் திரவம் பெறக்கூட உதவ மாட்டீர்களா அய்யா?
கடவுளே என்று கதறி நிற்கிறோம். ஆம். அவர்களாவது காப்பாற்றுவார்களா என்று. நரகம் பூமியி ல் இருக்கிறதாம். கடவுளரும் அங்குதான் இருக்கிறார்கள். சொர்க்கத்தில் இருக்கிறோம் என நீங்கள் இருங்களைய்யா. இதோ ஒரு தேவதை. தாய்மையே உருக்கொண்டு குண்டோ எறிகணையோ எதுவும் நினைவின்றி இதோ ஒரு அன்னை தெரசா. சபிக்கப் பட்டவர்கள் இவர்கள் என்றால் சபித்தவர்கள் நாசமாய்ப் போக. இரண்டே இரண்டு பெண்கள். ஆம். அடிக் கோடிட்டுக் கொள்ளுங்கள் . பெண்கள். தாய்கள் அவர்கள். அன்னை இந்திராவும் தெரசாவும் இருந்திருந்தால் மானுடம் இருந்திருக்கும்.
ஒன்று செய்யுங்கள் சான்றோர்களே. எதற்கெல்லாமோ மெரினாவில் கூட்டம் போடுவீர்களே. அதாவது வேறுபாடில்லாமல் ஒன்றாய் போடுங்கள். ஒரு இரங்கல் கூட்டம். மானுடம் செத்ததற்காக. செயம்மறி ஆட்டுக் கூட்டமாய் பொடா தடா பயமின்றி எல்லாரும் திரள்வோம். சுனாமி விட்டு வைத்தால் அவரவர் வேலை பார்ப்போம். சீ.
போடோ: நன்றி தமிழ் வின்
10 comments:
\\தமிழினக் காவலர்களுக்காக\\
நீங்கள் வந்திருக்கும் முகவரி தவறானது .இங்கே அப்படி யாரும் இல்லை
\\எம் சக உயிருக்கு குரல் கூட ஒன்றாகக் கொடுக்க இயலாமல் யார் எதைப் போட வேண்டும் என்ற பட்டிமன்றமும்\\
காப்பி அடிப்பதே எண்கள் குல தொழில் அப்பதானே நாங்களும் இருக்கிறோம் அப்படின்னு மக்கள் நம்புவார்கள் .கடைசில எதுக்காக இதெல்லாம் செய்யுரோம்ன்னு கூட தெரியாது
இங்கே வேடிக்கை என்னன்னா குரல் கொடுப்பவர்கள் கோமாளிகள் ஆக்கபடுகிறார்கள் .அவர்கள் நோக்கத்தை திரித்து மக்களுக்கு வேறுமாதிரியான தகவல்கள் கொடுக்கப்படுகிறது .இதனால் அவர்களின் உணர்ச்சி கேளிகூதாக்கபடுகிறது .இது அரசியல் தந்திரம்
\\நாளை எங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என நம்புவது?\\
நீ தமிழனா ,மாதாஜி ஊர் மேய போயிருக்கு பிதாஜி அத வேடிக்கை பாக்க போயிருக்கு எத்தினி பேர் செத்தாங்கோ ,அப்படின்னு சொல்லுவான் நாம விட்டத்தை வெறிச்சி பாத்துக்கிட்டு உக்காந்து இருக்கவேண்டியதுதான்
\\வாழ்ந்ததும் வாழ இருப்பதும் சிந்திய ரத்தத்தில் கதறும் அழுகையில் தெரியும் வலியில் ஆறு வித்தியாசம் கண்டு பிடியுங்கள்\\\
ஒரு வித்தியாசம் ரத்தம் .இத சொன்ன தெரியாது இத அவன் உடம்புல இருந்து எடுத்து அவனுக்கே காட்டினாதான் அவனுக்கு ஆறு வித்தியாசம் தெரியும்
\\நரகம் பூமியி ல் இருக்கிறதாம். \\
ஏலை இந்த குழந்தைய பாருடே உன் மக மாதிரி தெரியலியாடே அந்த பொம்புளைய பாரு உன் அக்கா மாதிரி தெரியலியாடே .இத பாத்தும் உனக்கு மனசு இறங்கலியா.அது சரி ரூம்புக்குல இருக்க உனக்கு இந்த வலி உனக்கு எப்படி தெரியும் .பதவி வெறில இருக்க உனக்கு இந்த வலி எப்படி தெரியும்
\\ஒன்று செய்யுங்கள் சான்றோர்களே.\\
அய்ய திரும்பவும் அட்ரஸ் மாரி வந்துட்டிங்க .அவங்கல்லாம் செத்து பல வருஷம் ஆய்ருச்சு
\\அதாவது வேறுபாடில்லாமல் ஒன்றாய் போடுங்கள். ஒரு இரங்கல் கூட்டம். \\\
போடலாம் ஆனா ஒரு கண்டிசன் முதல் சீட்டு எங்க தலைவருக்குத்தான் .அப்பத்தான் எங்க மொகரை பளிச்சின்னு வரும்
"நெஞ்சில் உரமுமின்றி...." இதில யார் பாடி இருக்காங்களோ தெரியல.. ஆனா.. பாரதி இப்படி அழுது பாடி இருப்பான் என்று நான் நினைக்கவில்லை! கோபமாகத் திட்டி இருப்பான்.. ஆனா.. கோபம் கெட்ட சமாசாரம் ஆச்சே.. நாம எல்லாம் நல்ல பிள்ளைங்க ஆச்சே.. அநியாயம் பண்றவன் என்ன பண்ணாலும்.. நம்மளுக்கு உணர்ச்சியே வர கூடாது..! இவங்க எல்லாம் வேண்டிக்கற அந்தக் கடவுள் ஏன் இந்த கோபத்தை படைச்சான்னு புரியல..!
தாய்மார்களே, பெரியோர்களே.. << அரசியல்வாதிங்க பிச்சை எடுக்க உபயோகிக்கும் சொற்கள்..
இத பாருங்கையா.. அத பாருங்கையா.. உதவுங்கையா.. என்று கேட்டு.. அது உயிர்ப் பிச்சை என்றாலும் கூட கெஞ்ச வேண்டியதில்லை! உண்மையை எடுத்துச் சொல்ல, அநியாயத்தை தட்டிக்கேக்க.. ஐயா.. அம்மா.. தர்மம் பண்ணுங்க.. போன்ற இன்ன பிற வார்த்தைகள்.. அங்கே களத்தில் உயிரை .......ராய் மதித்து நின்று போராடும் நம்மவர்க்கு இழுக்கு!
ராஜேந்திரன், முற்றிலும் சரி! இது போகாத ஊருக்கு வழி!
பின்னூட்டத்திற்கு நன்றி. இது இயலாமையின் வெளிப்பாடு. நக்குற நாய்க்கு செக்கும் தெரியாது சிவலிங்கமும் தெரியாதென்று சொலவடை. இவர்களுக்கு எப்படி சொன்னாலும் உறைக்கப் போவதுமில்லை. அவன் மொழியில் பெரியோர்களே தாய்மார்களே என்றாலாவது காதில் விழுமோ? கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரும் அந்த பாடல் பாரதி நம்மைப்போலவே மனம் வெதும்பிப் பாடியதாகத்தான் காட்சி அமைப்பு. பார்க்கலாம். உயிரிருந்தும் பிணமாகவே இருப்பார்களா. உலுக்கி எழுந்து ஏதாவது செய்கிறார்களா என்று.
Post a Comment