Friday, February 27, 2009

நம்ம பயம் நமக்கு!

இந்த டாக்டர்ங்களுக்கு நம்ம அவஸ்தை புரியுதா? மன்மோகனுக்கென்ன? ஒண்ணும் பேசாம அறுவை சிகிச்சைனு இருந்துட்டாரு. வேலைக்கு போலாம்னா போவாரு. நாம அப்பிடியா? ஆளாளுக்கு கேப்பானுங்களே? அய்யகோன்னா விட மாட்டானுங்களே?‍‍ -‍ கலைஞர்.

கலைஞரே உண்ணாவிரதம்னா மந்திரிங்களை தவிர ஒரு தொண்டனும் கண்டுக்கலையே? நாம நாக்கு தவரிட்டா நம்மாளுங்க கண்டுக்கவா போறானுங்க? டயட்னு டயலாக் விட்டாலும் விடலாம். ‍-‍ ஜெ

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு கேஸ் கிடைச்சதே அதும் சிதம்பரம் கேஸா கிடைக்கணும். கட்சிக்காரா கொண்டைய பார்த்தா பயமா இருக்கே! வேஷம் போட்டுண்டு வக்கீல் யாரும் முட்ட கொண்டுவந்து அடிப்பாளோ? ஃபீஸ் கேட்டா ஆகாசத்த காமிப்பாளோ ‍‍-- சு.சுவாமி

நாம பாட்டுக்கு பா ஜ க கு ஜால்ரா போடுரோம். நாளைக்கு ஈழத்துக்கு அம்பாசடரா போட்டா என்ன பண்ண? -- சோ

மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்னு ஒவராதான் சீன் போட்டமோ? மக்கள் மறக்காம மன்னிக்காம மண்ண கவ்வ விட்டா காங்கிரஸ் காரனும் அடிப்பான். கழக காரனும் அடிப்பாங்களே! -‍ தங்கபாலு

வக்கீலும் போலீசுமே அடிச்சுகிட்டா நாம யார் கிட்ட கேஸ் குடுக்கறது? யாரு கேஸ் நடத்தறது? -‍ பொதுசனம்.

6 comments:

பழமைபேசி said...

நல்லா அலசி ஆராயுறீங்க போங்க.... நல்லா இருக்கு!

vasu balaji said...

நன்றி

S.R.Rajasekaran said...

\\மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்னு ஒவராதான் சீன் போட்டமோ? மக்கள் மறக்காம மன்னிக்காம மண்ண கவ்வ விட்டா காங்கிரஸ் காரனும் அடிப்பான். கழக காரனும் அடிப்பாங்களே! -‍ தங்கபாலு\\


அட என்னங்க நம்ம மக்களை பத்தி எனக்கு தெரியாதா .ரெண்டு நாளக்கிதான் எதுவுமே அவங்களுக்கு நாபகம் இருக்கும் .இத வச்சுதானே நாங்க காலத்த ஓட்டுறோம்

S.R.Rajasekaran said...

\\நாம பாட்டுக்கு பா ஜ க கு ஜால்ரா போடுரோம். நாளைக்கு ஈழத்துக்கு அம்பாசடரா போட்டா என்ன பண்ண? -- சோ\\


எல்லாம் நம்ம கைலயாங்க இருக்கு .அப்ப யாருக்கு ஜால்ரா போடணுமோ அவங்களுக்கு போட்டு போறேன்

S.R.Rajasekaran said...

\\ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு கேஸ் கிடைச்சதே அதும் சிதம்பரம் கேஸா கிடைக்கணும். கட்சிக்காரா கொண்டைய பார்த்தா பயமா இருக்கே! வேஷம் போட்டுண்டு வக்கீல் யாரும் முட்ட கொண்டுவந்து அடிப்பாளோ? ஃபீஸ் கேட்டா ஆகாசத்த காமிப்பாளோ ‍‍-- சு.சுவாமி\\\


ஐயோ என்ன பாலா சர் நீங்களும் பீதிய கிளப்புறீங்க .ஏற்கனவே நடந்த கூத்துல பின்னாடி புடுங்க ஆரம்பிச்சது இன்னும் நின்னபாடு இல்ல .இனிமேல் உங்கபக்கம் தலைய என்ன சுண்டு விரல கூட வச்சி படுக்குறது இல்ல . நெறையா முட்ட சேந்துட்ட தினால புதுசா புரோட்டா கடை தொடக்கி இருக்கேன் எல்லாரும் கடைக்கு வந்து எப்படியாவது என்னை வாழ வையுங்கோ

vasu balaji said...

அழுகின முட்டைலயே பரோட்டாவா? பண்ணுவான் அந்தாளு.