Monday, February 16, 2009

மீண்டும் கம்சன்

வலைமனைகளில் கண்ட ஒரு கலக்கம் தரும் செய்தி. அரசாங்கம் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் என்ற அரச அதிபரின் வார்த்தைகளை நம்பியோ அல்லது ஒரு மறைவிடம் கூட இன்றி பிறக்கப்போகும் உயிர்க்காய் தாய்மை உந்த வெளிக்கிட்ட தாய் மார்களின் கருக்கலைக்க ஆணையாம். மசாகர் மகிந்தருக்கும் கொத்து குண்டு கோத்தபாயக்கும் கம்சன் அவதாரம் கனவுக்கு வந்துட்டது போல. போகிற போக்கில இவர்கள் ஹிட்லர் கோயபெல்செல்லாம் தேவதைகள் என நினைக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஈழ தீபாவளி எப்போது என்று தெரியவில்லை. அன்று வெடி மட்டும் வேண்டாம். வேண்டிய அளவு வெடித்தாகி விட்டது.

பாரம்பரியம் மிக்க கட்சிக்கு இதெல்லாம் கண்ணில் படுவதில்லை. அப்பட்டமாக நாங்கள் சொன்னால் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய வைக்க முடியும் என்று சொல்கிறார்கள் என்றால் இந்த நேரம் போதும் என நிர்ணயித்தது யார். அப்போது மட்டும் அந்த நாட்டின் இறையாண்மையில் தலையிட்டதாகாதா. கொன்று கொண்டே இருக்கிறான். சாவதெல்லாம் எல்லாம் இழந்து நம்பி வந்த சனங்கள். தம்பட்டம் அடிக்கவா நேரம். வெக்கமில்லாமல் ஆயுதம் காகிதம் என்றெல்லாம் அடுக்கு மொழி பேசவா நேரம். திலீபன் துப்பாக்கி வைத்துக்கொண்டா உருகிப் போனான். அப்போது என்ன செய்தார்கள் இவர்கள். என்றோ போட்ட ஒரு ஒப்பந்தம். அதை தூக்கிப் பிடித்துக்கொண்டு இதை விட்டால் வேறு கதி இல்லை என்று இதிலும் தலைவர் விசுவாசம் காட்டும் கேவலம். மானுடம் என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத பெரிய மனிதர்கள் இறையாண்மை, தேசியம் என்றெல்லாம் எப்படி பேச முடிகிறது அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கிற ஒரு விடயம் அப்பாவி மக்கள் சாகிறார்கள். சாகடிப்பது சிங்கள ராணுவம். இதற்கு ஏதாவது செய்ய முடியுமா முடியாதா?
இதற்கு புதிதாக சொல்ல வேண்டியது ஒன்றுமேயில்லை. நாம் சொன்னால் கேட்கும் நாய்குட்டி பக்சேக்கு ஆயுதத்தை கீழே போடு. மக்களை அடிக்காதே என்று தானே. அப்படி ராணுவம் அடிப்பதை நிறுத்தினால் ஒரே ஒரு சனம் குண்டுக்கு சாகுமா? அடிப்பது யாரெனெத் தெரிந்து விடுமே.

அரச கணக்குப்படியே 250 சதுர கிலோ மீற்றர் பரப்பில் ஒரே ஒரு லட்சம் மக்கள் புலிகளோ ஆயிரம் மட்டுமே. இங்க இருந்தால் அவன் அடிப்பான். இங்க விட்டுப் போனா இவன் அடிப்பான். எப்படி போனாலும் சாவு என்கிற நிலை இருக்குமேயானால் ஒரு லட்சம் பேரை 1000 பேர் பிடித்து வைப்பது சாத்தியமா? புழுகினதும் தம்பட்டமடிப்பதும் போதும். உருப்படியாக ஏதாவது செய்ய முடியுமானால் செய்யுங்கள். அல்லது சும்மா இருந்தாலே போதும்.








No comments: