Friday, February 27, 2009

நம்ம பயம் நமக்கு!

இந்த டாக்டர்ங்களுக்கு நம்ம அவஸ்தை புரியுதா? மன்மோகனுக்கென்ன? ஒண்ணும் பேசாம அறுவை சிகிச்சைனு இருந்துட்டாரு. வேலைக்கு போலாம்னா போவாரு. நாம அப்பிடியா? ஆளாளுக்கு கேப்பானுங்களே? அய்யகோன்னா விட மாட்டானுங்களே?‍‍ -‍ கலைஞர்.

கலைஞரே உண்ணாவிரதம்னா மந்திரிங்களை தவிர ஒரு தொண்டனும் கண்டுக்கலையே? நாம நாக்கு தவரிட்டா நம்மாளுங்க கண்டுக்கவா போறானுங்க? டயட்னு டயலாக் விட்டாலும் விடலாம். ‍-‍ ஜெ

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு கேஸ் கிடைச்சதே அதும் சிதம்பரம் கேஸா கிடைக்கணும். கட்சிக்காரா கொண்டைய பார்த்தா பயமா இருக்கே! வேஷம் போட்டுண்டு வக்கீல் யாரும் முட்ட கொண்டுவந்து அடிப்பாளோ? ஃபீஸ் கேட்டா ஆகாசத்த காமிப்பாளோ ‍‍-- சு.சுவாமி

நாம பாட்டுக்கு பா ஜ க கு ஜால்ரா போடுரோம். நாளைக்கு ஈழத்துக்கு அம்பாசடரா போட்டா என்ன பண்ண? -- சோ

மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்னு ஒவராதான் சீன் போட்டமோ? மக்கள் மறக்காம மன்னிக்காம மண்ண கவ்வ விட்டா காங்கிரஸ் காரனும் அடிப்பான். கழக காரனும் அடிப்பாங்களே! -‍ தங்கபாலு

வக்கீலும் போலீசுமே அடிச்சுகிட்டா நாம யார் கிட்ட கேஸ் குடுக்கறது? யாரு கேஸ் நடத்தறது? -‍ பொதுசனம்.

Thursday, February 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 5

காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாத கையாலாகாத முதல்வர் ‍ ஜெ

அட இழவே! சுயமாக இயங்கவேண்டிய ஒரு அமைப்பை கட்டுபடுத்தி வெச்சிருந்த அசிங்கத்த இப்படியா போட்டு உடைக்கிறது?


முதல்வர் உண்ணாவிரதத்தைக் கைவிடும்வரை சாகும் வரை உண்ணாவிரதம் ‍- அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

இவரு கை விடும் வரை யாரு எது வரை உண்ணாவிரதம் இருக்கப் போறா!

முதல்வர் உடல் நலம் பெற்று திரும்பும் வரை சால்வை, மாலைகள் வேண்டாம் ‍- அமைச்சர் வீராசாமி

அது போடைலைன்னா பேச வருங்களா? என்னா தியாகமப்பா.

உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அரவது சகாக்களும் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டுமெனஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்!

சை! குடிச்சா கூட இப்படி உளறுவானா? எல்லாம் இந்த கருணாவால வந்த வினை. எல்லாரையும் அப்படி நினைக்க சொல்லுது. தாடி மிஞ்சாதடியோ! பார்த்து.

மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலுள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது கூட படையினர் விமானத் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் போன்றவற்றை நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்‍‍‍‍ -‍ கோத்தபாய

அதானடா சொல்றது வெண்ண! வலயத்துக்குள்ள நம்பி வந்தவங்கள அடிச்சே மாளலை. இதில மத்த இடத்துல அடிக்கறதெங்க? வந்தூட்டான். கோணவாயி..தூ..

இந்து மஹா சமுத்திரத்தை நோக்கிதான் ராடார் வைக்கப் பட்டிருக்கிறது‍‍‍‍-‍ பீட்டர் அல்போன்ஸ்

அதை இங்க வெச்சா வெக்கப்பட்டு திரும்பிக்குமாங்கண்ணா?

ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார்

தலைவர் ஆசுபத்திரில..இல்லன்னா அவருக்கு குடுத்தே மாளாது

Monday, February 23, 2009

மறக்க முடியுமா?

மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய கலைஞர் அவர்களுக்கு,

தமிழினக் காவலர் என்று உங்களைக் கொண்டாடும் தமிழ்க்குடியில் ஒரு குடி. என்னைப் போல் பலரின் மனதிலும் இந்த வருத்தம் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. சாதனையாளர் பட்டம் ஏற்க மறுத்துப் பின்பு வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக் கொண்ட போதும் இலங்கை குறித்த உங்கள் ஆதங்கம், அந்த இயலாமை, ஏதாவது செய்ய வேண்டுமே என்ற வெளிப்பாடு, அதன் பிறகு சட்ட சபையில் தீர்மானம் என்ற நிகழ்சிகள் பிரமிக்க வைத்ததும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்ததும் உங்களைக் குறித்த பெருமிதம் நிஜம். அதன் பிறகு எங்கே காணாமல் போனீர்கள். எங்கு தொலைத்தீர்கள் கொள்கைக்காக வளைந்து கொடுக்கா உங்கள் தனித் தன்மையை.

நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் தலைமையில் வலுவான ஒரு அழுத்தமான வேண்டுகோள் ஆம் வேண்டுகோள் மட்டுமே போதும் இன்று எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்கக் கூடும். கூட்டணித்தலைவர்களின் போக்கு குறித்து வருந்திய நீங்கள் அது சொன்ன செய்தியை ஏன் உணரவில்லை. உங்களோடு இணைந்து உங்கள் வழி காட்டுதலில் செயல் பட ஒப்புக்கொண்ட பிறகு தனியாக ஏதோ செய்கிறார்கள் என்றால் அது உங்கள் செயல்பாட்டில் அவர்களுக்கிருக்கும் நம்பகமற்ற தன்மையின் வெளிப்பாடு என்பது உங்களுக்கு புரியாமலா இருக்கும். அப்போதாவது நீங்கள் ஏன் ஒரு தீர்மானமான முடிவெடுக்க வில்லை. காங்கிரசின் குரலாக ஏன் மாறிப் போனீர்கள். மூலத்தை விட்டு வெளிப்பாட்டைக் கண்டிப்பதால் என்ன பயன்.

அங்கு நடக்கும் போராட்டம் நியாயமானதென்பது உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் கேட்பதெல்லாம் என்ன. எங்களையும் சமமாக நடத்து. எங்களை இரண்டாம் தரக்குடிமகனாக நடத்த வேண்டாம் என்பது தானே? இதில் யாருக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும். ஆயுதம் காகிதம் என்றெல்லாம் பேசாமல், நாம் சொன்னால் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யத் தயாராய் இருக்கும் ஒரு அதிபரிடம், அவர்கள் கேட்பது இது, இதில் உங்களுக்கென்ன பிரச்சினை, இல்லை என்றால் என்ன தர முடியும் (இதில் குறைத்து கொடுப்பது என்றாலே தமிழர்கள் அங்கு மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை என்று தானே அர்த்தம்) என்று கேட்டிருக்க முடியாதா? அடிப்படை உரிமைகள் வழங்கப்படும் என்ற உறுதி மொழி எத்தனை தடவை கிழித்தெறியப்பட்டது. இருந்தாலும் அப்படி ஒரு உறுதியை பெற நாம் என்ன செய்தோம். அது கிடைத்திருந்தால் போர் ஏன் தொடரப்போகிறது. அது கிடைக்கும் பட்சத்தில் ஆயுதத்திற்கு அவசியமென்ன. மக்களே எதிர்ப்பார்களே? என்னைப்போல் பாமரர்கள் பத்திரிகைகளைத் தானே பார்க்கிறோம். ஒரு நாள் ராடார் கொடுக்கிறோம் என்கிறார்கள். மற்றொரு நாள் டாங்கிகள் அனுப்புகிறோம் என்று புகைப்படம் வருகிறது. நீங்கள் ஏன் இது குறித்து எதுவும் சொல்வதில்லை. இவை உண்மை யிலை என்ற ஒரு உறுதியாவது ஏன் பெற‌ப்படவிலை. வங்காள தேசம் குறித்த ஒரு நேர்காணலில் இந்திரா அம்மையாரின் முகபாவம் பாருங்கள். வலை மனையில் இருக்கிறது. அந்த மனித நேயம் எங்கே? கலியாணம் விசாரிக்கிறார் போல் பூரிப்போடு அந்தக் கொலைகாரனின் கைகோர்த்த படி வந்த புகைப்படம் ஏன் உங்கள் கண்ணில் படவில்லை?

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திட வில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே

இந்த வரிகள் கவனமிருக்கிறதா ? ஆம்! மறக்க முடியுமா? உங்கள் கைவண்ணத்தில் உருவாகிய மறக்க முடியுமா படத்தின் பாடல். உலகத்தின் சோகமெல்லாம் ஒன்று திரட்டி எழுதிய பாடல். இப்படித்தானே எம்மினம் அங்கு தவிக்கிறது. இந்த நிலையிலும் மத்திய அரசை வாழ விடுங்கள் என்று எப்படி பேசுகிறீர்கள். நீங்கள் முன்னெடுத்தால் மொத்த தமிழினமும் உங்கள் பின் நிற்காதா? நீங்களுமா தமிழரை நம்பவில்லை. எங்களை விடுங்கள். நாளை உங்கள் கொளுப் பேரனோ பெயர்த்தியோ உங்கள் முன் நின்று பக்கத்துக் குழந்தை சொன்னது. உன் தாத்தா ஏதாவது செய்திருந்தால் ஈழத்தில் இன்று நம் போல் எத்தனையோ பேர் படித்துக் கொண்டிருப்பார்கள். செய்யவில்லை. அதனால் மடிந்து போனார்கள் என்று. நிஜமா என்று கேட்டால் கண் பார்த்து என்ன சொல்லுவீர்கள்.

இன்னும் உங்களில் எங்கள் நம்பிக்கை இருக்கிறது. செய்வீர்களா? இல்லை எனில்

கோலம் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் பூட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் தீர்த்து வதைக்கவும் செய்தான்.

ஆம் இதுவும் அதே பாடல்தான். தமிழரென்று யாராவது மீதமிருந்தால் இப்படித்தான் நின்று போவீர்கள்

இப்படிக்கு
பாமரன்


நறுக்குன்னு நாலு வார்த்த - 4

கருணாநிதி

தமிழகத்தில் வன்முறை தடுக்கப்பட வேண்டும்‍‍‍ சோனியா ஆவேசம்

ஆட்சியைக் கவிழ்க்க சதி. அய்யோ அம்மா நீங்களா. அம்மா சொன்னாங்கன்னா ஜெயாம்மான்னு நினைச்சிட்டேன்.


போராட்டம் தொடர்ந்தால் மருத்துவமனையில் உண்ணாவிரதம்.

செம ஸீனு! இவ்ளோ சொல்லிட்டு கைவிட வேண்டும் கு என்ன கோஷம்னு சொல்லலைங்களே!


மருத்துவ மனையில் இருந்தாலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியினை......பி எஸ் என் எல் துவக்க விழாவில்

எப்பவாவது எந்த பரதேசியாவது சொன்னீங்களே? ஏன் பண்ணலைன்னு கேட்டிருக்கோம்?


இலங்கையில் மக்களுக்கு உதவ மருத்துவர்களை அனுப்ப வேண்டி பிரதமருக்கு கடிதம்!

மருத்துவர் அய்யாக்கு ஆப்பாங்க?


இந்த அரசை நீடிக்க விடுங்கள்! மத்திய அரசை வாழ விடுங்கள்!

யாரு செத்தா என்னா? வாழ்ந்தா என்னா? நீங்க யாரையும் வாழ விடாதீர்கள்


பொன்முடி:

கலைஞரின் உடல் நிலை குறித்து விசாரிக்காத வை கோவை...

என்னாத்த சொல்லுறது. கொத்து கொத்தா செத்த சீவனுங்களை பத்தி தலைவர் ஒண்ணுமே சொல்லலையே.


ஜெ:
"......................................................................................................."

எலக்சனுக்கு எனர்ஜி கலக்சனாங்க. ஆளாளுக்கு பேசறப்போ நீங்க பேசலைன்னா சனங்க மறந்துடுவாங்கம்மா.


பிரதமர் தன் அலுவல்களைக் கவனிக்கலாம்‍ - மருத்துவக் குழு

கிரகம் மாறி நல்லதா ஏதாவது நடக்குமாங்க? இல்ல ஆப்பு போய் கத்தி வந்தது கதையா?

Sunday, February 22, 2009

சொல்லமாட்டாங்களா?

தொப்புள் கொடி உறவுகளே! இத்தனை மருத்துவர்கள், மருந்து, இதமான சூழல் எல்லாமிருந்தும் வலி தாங்க முடியவில்லை. அங்கு நீ காட்டில் கூரை இன்றி, விஷ ஜந்துக்களிடையே எதிரியின் குண்டு எப்போ விழுமோ என்று குழிக்குள். நினைக்கவே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருக்கிறது‍‍..:கருணா நிதி (சோனியாட சொல்லிடாதிங்கப்பு)



என் உயிருனும் மேலான..ரத்தத்தின்..etc etc..
எனது 61ம் பிறந்த நாளை தவிக்கும் தமிழரின் அவல நிலையை எண்ணி சோவுடன் அங்கு சென்று 61 நாள் அங்கு தங்கி ராஜபக்சவுடன் போராடி வேண்டிய உதவிகளைச் செய்வதன் மூலம் எளிமையாக கொண்டாட இருக்கிறேன். எனவே பிறந்த நாள் விழாவுக்கு காசு புடுங்க ஆபிசுக்கு வர வேண்டாம்...(சோ: இது ரெகார்ட் பர்பஸ்கு சொன்னது..எனக்கு துக்ளக் வேலை இருக்கு):ஜெ..



ஒரு அரசியல் கட்சியின் தலைவன் என்ற முறையில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே மருத்துவர் என்ற முறையில் அன்பு மணியோடு ஈழம் செல்லவிருக்கிறேன். இதை எந்த கொம்பனும் தடுக்க முடியாது..:ராம்தாஸ்


நான் கோர்ட்கு க்கீலா போனாலும் முட்ட அடிக்கறா. சாட்சி சொல்ல போனாலும் அடிக்கறா. அதனால கோழி இல்லாத நாட்ல தான் கோர்ட்கு போவேன்...:சுவாமி.


தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த (ஒண்ணா ரெண்டா) மன்னிப்பு. இவ்வளவு கொடூரமான ராஜபக்சேய புடிச்சி நியாயம் கேக்காம விடமாட்டேன்..(பொதுசனம்:அய்யா பார்த்து..கேப்டனானா என்ன ஏதோ ஒரு பிரபாகரன்னு புடிச்சி இங்கயே அனுப்பிடுவான்‍‍):விஜயகாந்த்


என் உயிரினும் மேலான தமிழ் மக்களே! எங்களை வாழ வைக்கும் புலம் பெயர் வாழ் தமிழர்களே. திரைப்படத் துறை சார்ந்த அனைத்துச் சங்கங்களும் ஒன்றாய் கூடி அங்கு ஈழத்தில் குண்டுக்கு இரையாகி மருந்துக்கு வழி இன்றி தவிக்கும் குழந்தைகள், முதியோர்களை எங்கள் பொருப்பில் இங்கு அழைத்து வந்து சிகிச்சை செய்து அவர்கள் நல் வாழ்வுக்கு எங்களாலான உதவிகளை செய்ய உதவுமாறு கோர இருக்கிறோம்...:பாரதி ராஜா



உங்க எல்லார் பவிசும் தெரிஞ்சது தான். ஆனாலும் ஓட்டு போட்டு நாசமா போனது போதும். இந்த வாட்டி வந்தா நடக்கற கதையே வேற..:பொதுசனம்.


Saturday, February 21, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 3

வழக்கறிஞர்-போலீஸ் மோதல். ஆட்சியை கவிழ்க்க சதி.

அட சை! இவ்ளோவா அரண்டு போவாங்க?

திருமா, சீமானை ஏன் கைது செய்யவில்லை? காங்கிரஸ் ஆவேசம்.

அதானே. கொஞ்சம் சத்தமா யாரும் கேட்டுடப்படாது.

தி மு தொண்டர் தீக்குளிப்பு.

ஐயோ. ஏன் இப்படி பண்றீங்க. தேர்தல் நேரத்துல போஸ்டர்ல போட்டுக்குவாங்க. அவ்ளோதான்.

நிறுத்துக நிறுத்துக ! இரு தரப்பும் போரை நிறுத்துக- பேரணியில் முழங்கப்பட வேண்டிய கோஷம்.

பின்ன. இத விட சுலபமா தீர்வு இருக்கா? யாராவது கேள்வி கேக்க முடியுமா?


இலங்கை அரசுக்கு இந்தியா நெருக்கடி கொடுக்கத் தவறி விட்டது- பா ஜ க

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தவிர நீங்கள் என்ன கொசுக்கடி கொடுத்தீர்கள்?

வக்கீல்கள் - போலீஸார் இணைந்து செயல் பட வேண்டும்.

தோடா இவரு வீடியோ பார்க்கல போல. ரெண்டு பேருமா தானே தாக்கிக்கிட்டாங்க.

காயமடையும் சிங்கள ராணுவத்திற்கு இந்தியா மருத்துவ உதவி.

தாடிக்கு ஒரு சீக்காய் தலைக்கு ஒரு சீக்காயா போடுவாங்க. அதோடயே மக்களுக்கும் அணுப்பலாம்லங்ணா


பிரபாகரன் புலி அல்ல எலி - சுவாமி (ஜூ வி)

அட ! இஞ்ஞார்ரா வீரத்த. பென்ச் பின்னாடில இருந்து சவுன்ட் வருது

நறுக்குன்னு நாலு வார்த்தை - 2

முதலமைச்சர் கருணாநிதி, சோனியா காந்தியை பதி பக்தி இல்லாதவர் ன்றுகூறிய ஜெயலலிதாவை தமிழ் நாட்டு காங்கிரசார் எண்ணிப் பார்க்க வேண்டியதுஉங்கள் பொறுப்பு ன்று கூறியுள்ளார்.

‌ ‌‌‌‌‌‌ ‌‌‌‌
அட என்னங்க! அம்மா ஒரு பிட்ட போட்டதுக்கே இப்படி பதர்றதா. சும்மா சொல்ல கூடாது. உங்க விசுவாசத்த காட்ட எப்படி எல்லாம் சந்தர்ப்பம் தராங்க. அய்யகோ மிஸ் ஆயிடுத்துங்க. கோத்தபாய சொன்னதெல்லாம் ஒரு மேட்டறாங்க.


பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும், ஆண்களின்இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பகட்டும்: கோத்தபாய

இப்படி ஆளாளுக்கு படுத்தினா மனுஷன் என்னதான் பண்றது. சும்மா சொல்லக் கூடாது. மனுஷன் உஷார் பார்ட்டி தான்


காசாவில் அமெரிக்க செனட்டர் கேரி!

அது. இலங்கைல்லாம் மேப்லேயே இருக்காது இவங்களுக்கு. ராசா. நீ இங்க வர வேணாம்டி. அப்டியே ஒருக்கா இஸ்ரேல் போய் ஒன்னும் குடுக்க வேணாம்னு சொல்ல முடியுமா?

புலிகளின் தாக்குதல் : இலங்கை விமானப்படை வீரர்கள் பலர் காயம்?

அப்போ இந்த ஓடுதளம் எல்லாம் புடிச்சாங்களே? அப்புறம் எப்டிங்க?

வக்கீல்கள் போலீஸ் மோதல்!

இந்த மேட்டர்ல ஈழ மேட்டர் அமுங்கிடும்னு பார்த்தா மருத்துவர் அய்யா இதுலயும் அத இழுத்து விடுறாரே.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலுமிருந்து ஈழ மக்கள் நா சபை முன்பு கூடினர்?

இந்த லொள்ளெல்லாம் வேணாம். அங்க என்ன தலைவர்கள் இருக்காங்களா? அதான் தானே கூடிட்டாங்க.

Friday, February 20, 2009

நறுக்குனு நாலு வார்த்தை

ஈழத்தமிழருக்காக உயிரையும் கொடுக்கத் தயார்:காங்கிரஸ்

தோடா. ஒரு ஆள சொல்லியே இவ்ளோ உயிர் போறதும் சரின்னு சொல்லிண்டிருக்கீங்க. இதுல இது வேற. ஏண்டா. உசிர குடுத்தவன கட்சிக்காரனே இல்லன்னு சொன்னீங்க. இப்போ எப்படி.

ஈழப்பிரச்சனை: திமுகவும், அதிமுகவும் சேர்ந்து போராடினால், அவர்களுடன் சேர்ந்து தேமுதிகவும் போராடும்: விஜயகாந்த்

நல்ல நேரம் பார்த்தானுங்க பாரு ஜோக் அடிக்க. தூ. வடிவேலுக்கு போட்டியா காமெடியனா முயற்சி பண்ற வேலையா?

சேலம் மத்திய சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் உள்ளனர்.20.02.09 ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் போரை நிறுத்த வலியுறுத்தியும், ஆயுத உதவி செய்யும் மத்திய அரசை கண்டித்தும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உள்ள இருந்ததால மனுசங்களா இருக்காங்கப்பா.

காந்தியின் பெயரையும் வைத்துக் கொண்டு என்னுடைய அருமை நண் பன் கண்ணதாசன் பெயரை யும் வைத்துக் கொண்டு ஏடுகளில் இப்படியொரு அறிக்கை விடுவாய் என்று நான் கருதவில்லை:கருணாநிதி


ஏங்க! இது ரொம்ப ஓவரா தெரியல. கருணையே இல்லாம அறிக்கையும் விடாம இவ்ளோ பேரு சாவரப்போ காங்கிரஸ சொல்லவேணாம்னு சொன்னிங்களேங்க. அத விடவாங்க?

சுப்பிரமணியம் சுவாமி மீது முட்டை வீச்சு. கருணா நிதி வேதனை.

பின்ன? அதென்னா தமிழர் ரத்தமா? கழுவினா போறதுக்கு. இல்லாட்டி சிதம்பரம் கோவில்ல உண்டி வெக்க சொல்லிட்டா. திமுக. அதனாலதான் நான் கோர்ட்கு வந்தேன். என் மேல முட்ட அடிச்சிட்டா. அதனால ஆட்சிய கலைக்கணும். சி கூபட்ணும்னு குடைச்சல் குடுப்பாங்கன்னா?

ஈழப்பிரச்சனை: விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் அமெரிக்க தூதரகத்தில் மனு

இதுக்கு திமுக அதிமுக எல்லாம் வேணாமா கேப்டன்.

விடுதலைப்புலிகளுடன் படையினர் 18 மாதங்கள் சண்டையில் ஈடுபட நேரும்: கருணா தெரிவிப்பு


வெறும் 700 பேருக்கா. பக்சேயும் மதிக்க மாட்றான். பிள்ளையானும் மதிக்க மாட்றான். கோட்டும் சூட்டும் போட்டாலும் கோத்தவாயும் மதிக்க மாட்றான். நன்றி கெட்ட நாய்ங்க. தூன்னு துப்பிடாதீங்ணா. உங்க மூஞ்சில விழும்.

காங்கிரசுக்கு எதிர்காலம் வேண்டுமென்றால் திமுக கூட்டணியை விட்டுவெளியே வாருங்கள். திருமண விழாவில் ஜெ. பேச்சு!

61 ஜோடிய சேர்த்து வெச்சி ஒரு ஜோடிய பிரிக்க பார்கறீங்களே. யாரும்வாழ்ந்துடப்படாது.

தமிழக பட்ஜெட்: தொலை நோக்குப் பார்வை இல்லை. ஜெ கண்டனம்.

பின்ன. தொலைக்காட்சி பெட்டி குடுத்தா. பைனாகுலர் தரணும் போல.

புலிகள் வைத்திருப்பது கேடயம்- ராணுவம் வைத்திருப்பது கத்தி : விஜயகாந்த் பேச்சு

நீ போய்யா தத்தி

Wednesday, February 18, 2009

மானுடம் பிழைக்குமா




பேரன்பு மிக்க பெரியோர்களே தாய்மார்களே! உள்ளூர் தலைவர்களே! உலகத் தலைவர்களே! எங்களைக் காப்பீர்கள் என நாங்கள் நம்பும் கலியுகக் கடவுள்களே! மானுடம் என்றால் என்ன என்ற சந்தேகம் வந்ததால் தெளியத் தேடியதில் கிடைத்தது இது.

A humane society may be a group that aims to stop human or animal suffering due to cruelty or other reasons, although in many countries it is now used mostly for societies for the prevention of cruelty to animals (SPCA's). ...
en.wikipedia.org/wiki/Humane

தமிழினக் காவலர்களுக்காக தமிழில்
மனித நேயம் என்பது மனிதர்களுக்கோ அல்லது மிருகங்களுக்கோ வன்முறையாலோ அல்லது வேறு காரணங்களாலோ உண்டாகும் பாதிப்புக்களை தடுக்கும் நோக்கம் கொண்ட ஒரு குழுவாக இருப்பினும் பல நாடுகளில் இப்போது மிருகங்களுக்கான வதைத் தடுப்புச் சங்கத்தைக் குறிக்கிறது.

இப்படி நம்பித்தானே இவர்களும் இருக்கிறார்கள். எம் சக உயிருக்கு குரல் கூட ஒன்றாகக் கொடுக்க இயலாமல் யார் எதைப் போட வேண்டும் என்ற பட்டிமன்றமும், அப்போதே சொன்னேனே கேட்டிருந்தால் சவடால்களும், குரல் கொடுக்கிறோம் பேர்வழி என்றமைந்த குழுக்களிலும் போட்டிக் குழுவமைத்து போராடும் நல்லோரே. நாளை எங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என நம்புவது? உலகமெல்லாம் ஒடி ஒடி ஒரு மனிதனாவது இருக்க மாட்டானா? எமக்கு குரல் கொடுக்க மாட்டானா எனத் தத்தளிக்கிறதே ஒரு இனம் ? என்ன சொல்லப் போகிறீர்கள். சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம் அய்யா. என் தாத்தன் சொல்லி இருக்கிறான். செய்ய வேண்டாம். சொல்லவாவது செய்யுங்கள் அய்யா. தயவு செய்து சொல்லுங்கள். இங்கே வராதீர்கள். மிருக வதை தடுப்புக் குழுவிடம் சொல்லுங்கள் என்றாவது சொல்லுங்களேன்.

வாழ்ந்ததும் வாழ இருப்பதும் சிந்திய ரத்தத்தில் கதறும் அழுகையில் தெரியும் வலியில் ஆறு வித்தியாசம் கண்டு பிடியுங்கள். அப்போதாவது இதயத்தின் ஓரத்தில் ஒரு சிறு வலி தெரிகிறதா பார்ப்போம்.


மெத்தைப் படுக்கை வேண்டாம் மேலொரு கூரையும் வேண்டாம் கட்டாந்தரையில் கயிறு கட்டி உயிர்த் திரவம் பெறக்கூட உதவ மாட்டீர்களா அய்யா?


கடவுளே என்று கதறி நிற்கிறோம். ஆம். அவர்களாவது காப்பாற்றுவார்களா என்று. நரகம் பூமியி ல் இருக்கிறதாம். கடவுளரும் அங்குதான் இருக்கிறார்கள். சொர்க்கத்தில் இருக்கிறோம் என நீங்கள் இருங்களைய்யா. இதோ ஒரு தேவதை. தாய்மையே உருக்கொண்டு குண்டோ எறிகணையோ எதுவும் நினைவின்றி இதோ ஒரு அன்னை தெரசா. சபிக்கப் பட்டவர்கள் இவர்கள் என்றால் சபித்தவர்கள் நாசமாய்ப் போக. இரண்டே இரண்டு பெண்கள். ஆம். அடிக் கோடிட்டுக் கொள்ளுங்கள் . பெண்கள். தாய்கள் அவர்கள். அன்னை இந்திராவும் தெரசாவும் இருந்திருந்தால் மானுடம் இருந்திருக்கும்.

ஒன்று செய்யுங்கள் சான்றோர்களே. எதற்கெல்லாமோ மெரினாவில் கூட்டம் போடுவீர்களே. அதாவது வேறுபாடில்லாமல் ஒன்றாய் போடுங்கள். ஒரு இரங்கல் கூட்டம். மானுடம் செத்ததற்காக. செயம்மறி ஆட்டுக் கூட்டமாய் பொடா தடா பயமின்றி ல்லாரும் திரள்வோம். சுனாமி விட்டு வைத்தால் அவரவர் வேலை பார்ப்போம். சீ.

போடோ: நன்றி தமிழ் வின்

Tuesday, February 17, 2009

சிரிச்சி வைங்கோ

  • என்னா மச்சான்? நேத்து சுரேஷ் வீட்ட பெருங்கூச்சல்? என்னாச்சு?
தல எழுத்துடா. அவன் பொண்டாட்டி விரதமாம். இவரு போய் வழிய அந்தம்மா இறையாண்மைக்கு இழுக்குன்னு கிழிச்சி ஒட்டிச்சாம். ஓன்னு அழுறான்.

  • தீவிர வாதத்தை அடக்க ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். சோ பேச்சு.
இலங்கை விலைக்கு வருதா? இல்ல கன்சல்டன்சி ஆரம்பிச்சிட்டங்களா. பாகிஸ்தான் போறாங்களா கேட்டு சொல்லுங்க சாமிகளா. ஒபாமாவ கேட்டு பார்க்கலாம்.

  • ஏண்டா. இந்த விடுதைலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும்னு எல்லாரும் சொல்றாங்க. ராணுவத்த ஏன் சொல்லுறதில்ல?
அட வெண்ண. அவன் யாரும் கேக்க இடம் வைக்காம போட்டுண்டு தானே இருக்கான். அப்புறம் என்னடா அவன சொல்றது.

  • காங்கிரசை சீண்டி பார்த்தால் நடப்பது வேறு! தங்க பாலு எச்சரிக்கை.
அப்பிடி போடு. சத்திய மூர்த்தி பவன்ல போடாத சண்டையா. எத்தன வேட்டி. எத்தன அண்டர்வேர். ஈழ பிரச்சினை வந்தாலும் வந்திச்சி. இப்போ போய் போஸ்டுக்கு சண்ட எதுக்குன்னு விட்டு வெச்சா சண்டை மறந்து போய் இருக்கும்னு நினைச்சிட்டாங்க போல. சின்னப்புள்ள தனமால்ல இருக்கு?

பத்திரிகை (அ) தர்மம்

இந்த பத்திரிகை தர்மம்னு ஒரு வார்த்த இருந்திச்சிங்க தமிழ்ல. அத ரொம்ப நாளா காணல்லை. யாராவது கண்டா சொல்லுங்கோ.
இந்த வாத்திமார்கள சொல்லணும். பாடம் படிக்கிறதே பெரும்போக்கா இருக்கைல, பத்திரிகை படிடா. அறிவு வளரும்னு பிராணன எடுத்தாங்க. அப்போவே கேக்கணும்னு வந்திச்சி. அப்போ பாடம் படிக்கிறது எதுக்குன்னு. இப்போ மாதிரி சட்டமெல்லாம் வராத காலமாச்சா. வயசு பாராம டவுசர களத்தி வெயில்ல நிக்க வெச்சிடுவாங்க. கொசுறா பிரம்பு முறிய அடி விழும். (பிரம்பு வேற அடுத்த நாள் வாங்கி கொண்டு வரணும். அதுக்கு தனியா அடி பின்னூட்டம்). இந்த எளவெல்லாம் எதுக்குன்னு பத்திரிகை படிக்கிற கெட்ட பழக்கத்துக்கு ஆளாயிட்டோம். காலைல வந்த பேப்பரை படிக்க நேரமில்லாம ஆபீசுல படிக்கலாம்னு கொண்டு போய் அங்க நைஞ்சு நூலாகி ராத்திரி தூங்க போகைல புரட்டலைன்னா தூக்கம் வராது சில பேருக்கு. சிலருக்கு காஃபி சாப்டு கக்கத்துல இடுக்கிண்டு கக்கூசில போய் படிச்சாதான். அதென்னாங்கடா கனெக்ஷன்னு புடி படவே இல்ல. அப்புறம் ஒரு ஊகமா செரி. இவங்க பூஞ்சை மனசு போல. பத்திரிகைல வர வெட்டு குத்து அடி தடி இதெல்லாம் பார்த்தா இந்த வரூஊஊஊஊஉம் ஆனாஆஆஆஆஆஅ வராஆஆஆஆஆஆஆது கேஸ்ங்களுக்கு பெரீய ரிலிஃப்னு முடிவு. இப்போல்லாம் ராத்திரி விடிய விடிய நெட்ல நியூஸ் பார்க்குறமா. காலைல பேப்பர் பார்த்தா ஏதே பழைய பேப்பர் பார்த்த ஃபீலிங். வேற என்னங்க. திரும்ப திரும்ப ஒரே நியூஸ். சாம்பிளுக்கு கொஞ்சம்

  • மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம். நேத்து தானடா படிச்சோம். இன்னைக்கு என்னான்னு பார்த்தா அது சீமானுக்கு. இன்னைக்கு திருமாவுக்காம்.
  • ஆட்சியைக் கவிழ்க்க சதி. ஐயோ இதுவும் நேத்து வந்திச்சேன்னு பார்த்தா அதுகருணாநிதி அய்யா. இது ஸ்டாலின்
இதென்னாங்கடா. வலைமனை பத்திரிகைள்ள படம் போட்டு கொத்து கொத்தா இத்தனை பேரு சாவுன்னு வந்திச்சே. இதைக் காணோமேனு யார போய் கேக்க. ப்ரிட்டானியா ஆள அனுப்பறாங்களாம். ஒபாமா யோசிக்கறாங்களாம். பிரான்சில ஊர்வலமாம். சுவிஸ்ஸில உண்ணாவிரதமாம். இதெல்லாமும் காணோமேன்னு திகைப்பா இருக்கு. அப்புறம் அட விதேசி மோகம் நல்லதில்லை. நம்ம ஊர்லயே எவ்ளோ விஷயமிருக்க இதுக்கெல்லாம் ஆளம்புன்னு செலவு மிச்சம்னு விடுறாங்க போலன்னு ஒரு சமாதானம். சில பத்திரிகை இருக்கே சிலுமிஷம் தாளலை. அதிலையும் காலை மாலைன்னு ஒரே பத்திரிகைல மாலை பத்திரிகை எதிர் கட்சின்னா காலை பத்திரிகை ஆளும் கட்சி. இதில்லாம கட்சி சார்பு பத்திரிகை. இது கொஞ்சம் தேவலாம் ரகம். ஏன்னா இதில க‌ட்சி கூட்டம். தலைவர் பேச்சுன்னு ஒரு மாதிரியா போயிடும்.

சில பத்திரிகை இருக்கு. ஆளும் கட்சி கடும் கண்டனம்னு நியூஸ் இருந்தா ஒரு ஓரமா சிங்கள ராணுவம் வெறியாட்டம். ஒன்னுக்கிருந்த ஒரு ஆள் உட்பட ஒரு ஓணான், ஒரு நாய், ஒரு பசு படுகொலைன்னு வரும். அடுத்த நாளே பேச்சு வார்த்தைக்கு உடன் பட வேண்டுமென அறிகைன்னு வர ராமேஸ்வரத்தில் ஒரு கட்டை கரை சேர்ந்தது. கரும்புலிகள் ஊடுருவலான்னு ஒரு கேள்வி. இல்லாட்டி இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சி. புலியா? இவரை சோதனையிட்டதில் காது இடுக்கில பாதி எரிஞ்ச பீடி துண்டொன்னு, கோவணத்துக்குள்ள செல் போனு, பிசிலெரி பாட்டில்ல மண்ணெண்ணை போன்ற பயங்கர ஆயுதங்கள் கை பற்றி இருப்பாங்க.

செத்துட்டாங்கன்னு ஃபோடோ போட கொண்டு போனா எரிச்ச அல்லது புதைச்ச அத்தாட்சி கேக்குற பத்திரிகை கூட தேவைன்னா ஊகமா செய்தி போடும். உருப்படியா என்ன நடக்குது. ஏன் நடக்குது. சொல்லவே மாட்டாங்க. மவனே. ரென்டு பத்திரிகை வாங்கி என்னதான் சொன்னாங்கன்னு பார்க்கலாம்னா இவன் போட்டதுக்கு நேர்மாறா இருக்கும். இந்தக் கருத்துக்கணிப்புன்னு ஒரு கூத்து. இதோட அர்த்தமே மக்களோட மன நிலை என்னன்னு ஆட்சியாளர்களுக்கோ பொறுப்பானவங்களுக்கோ உதவியா இருக்குமேன்னு தான். இப்போ இது பெட்டிங்கு உதவும். இல்லன்னா நமீதாவா நயன்தாராவா...இதுக்கு ஒரு கணிப்பு. இது போக அடிச்சிகிட்டு சாவ வழி தேடுற செய்திகள். எங்கெங்க என்னென்ன வில்லங்கமா நடக்குது..விலாவரியா போடோ அட்ரஸ் எல்லாம் போடுவாங்க.

கொடுமை தெரியுமாங்க. ஒரு நாள் வாத்திய கடைவீதில பார்த்தன். எல்லா எரிச்சலும் சேர்த்து வெச்சி போய் கேட்டன். அய்யா பத்திரிகை படி அறிவு வளரும்னு அப்பிடி ஒரு அடி அடிச்சி இந்த கெட்ட பழக்கத்த விடவும் மாட்டாம இந்த எழவெல்லாம் சகிக்கவும் மாட்டாம என்ன ஒரு பிழைப்பு இதுன்னு. வில்லங்கம் புடிச்ச பெருசு சொல்லிச்சி. இப்பல்லாடா தெரியுது. படிச்சிருந்தா அறிவு வளர்ந்திருக்கும். அறிவு வளர்ந்திருந்தா பேப்பர் படிப்பியாடா? இவ்வளவு வயாசாச்சி ச எதுக்குடா பூமிக்கு பாரமாவாம்.



Monday, February 16, 2009

வக்கிரங்களுக்கு வடிகாலா வவுனியா?

வலைமனைகளில் கண்ட செய்தி கலக்கமளிக்கிறது. கொந்தளிக்கச் செய்கிறது. என்ன நடக்கிறது. எத்தனை அமைப்புக்கள். எத்தனை போராட்டங்கள். எத்தனை உயிரிழப்புக்கள். எதுவும் எனக்கு கவலையில்லை. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்போடு மனித உயிர்களை வகை வகையாய் கொண்று குவிக்கும் இறுமாப்பு. ஊடகங்களுக்குத் தடை. தொண்டு நிறுவனங்கள் விரட்டல். தடை செய்யப்பட்ட தளபாடங்கள். பிஞ்சோ முதிர்ந்ததோ எல்லாம் எனக்கு புலி தான் என்ற கொக்கரிப்போடு கொலை. நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் அவலம். வலயம‌மைத்து வளைத்துக்கட்டி குவியலாய் பிணங்கள். இந்த நூற்றாண்டிலா இப்படி. சரித்திரம் படித்துக் கற்றுக் கொண்டதென்ன. எவ்வளவு நாள் வேடிக்கை பார்க்கப் போகிறோம். மொத்த மனித இனத்துக்கும் சவாலாய் ஒன்றிரண்டு மிருகங்கள் கொலை வெறியை கட்டவிழ்த்து விடுவதை வேடிக்கை பார்க்கவா ஏதேதோ நிறுவனங்கள்.

பாருங்க‌ள் ம‌க்க‌ளே! வ‌ன்னியிலிருந்து வ‌வுனியா வந்த‌ தாய்மார்க‌ள். ஒன்றல்ல‌ இர‌ண்ட‌ல்ல‌ 500 பேருக்கு க‌ருக் க‌லைப்பாம். ப‌ள்ளிக‌ளை ஒழித்துக் க‌ட்டி த‌ங்க‌ வைக்க‌ ஏற்பாடாம். அதுவும் முட்க‌ம்பி வேலிக்குள் வெளிச்சிறை. இவ‌ர்க‌ள் மிருக‌ங்க‌ளா? ம‌னித‌ர்க‌ள் தாமே? ஏன் யாருக்கும் எதுவும் செய்ய‌ முடியாம‌ல் போகும். நீ செய்கிறாயா? நான் செய்வ‌தா என்று கூட‌ பேச்சில்லையே? ப‌ய‌ண‌த்தில் தூங்கி வ‌ழிந்து நெற்றி இடித்த‌தும் திடுக்கிட்டாற்போல் ஒரு க‌ண்ட‌ன‌ம். திரும்ப‌த் தூக்க‌ம். பேச‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் பேசுவ‌தில்லை. ஓர் இர‌வில் மூன்று வ‌ல்ல‌ர‌சுக‌ள் ச‌தாம் உசேனை துவ‌ம்ச‌ம் செய்த‌தே? அப்ப‌டிக்கூட‌ வேண்டாம். என்ன‌தான் ந‌ட‌க்கிற‌து. நேரில் பார்க்க‌ வ‌ருகிறோம் என்று சொன்னால் எத்த‌னை உயிர் பிழைக்கும்.

இருக்கிற‌ த‌லை குனிவு போதாதென்று செத்த‌ க‌ண‌க்கெடுக்க‌வோ, சிறைக் க‌ண‌க்கெடுக்க‌வோ இந்தியாவின் இன்ஃபொசிஸ் நிறுவ‌ன‌த்திற்கு அழைப்பாம். இப்ப‌டியுமா வியாபார‌ம் செய்ய‌ வேண்டும்.

சிறுபான்மையின‌ர் என்றால் ம‌னித‌ர்க‌ள் இல்லையா? சிங்க‌ள‌வ‌ன் சிங்கார‌த்திலிருக்க‌ உழைத்த‌ த‌மிழ‌ன் உற‌ங்கிய‌தால் வ‌ந்த‌ வினையா? க‌ல்வி க‌ல்வி என்று த‌மிழ‌ன் அலைய‌ க‌ல‌வி க‌ல‌வி என்று சிங்க‌ள‌ன் இருந்த‌த‌ற்கு வ‌ர‌மா? கால‌ம் ப‌தில் சொல்லுமோ? கால‌ன் ப‌தில் சொல்லுவானோ?




உங்களால் முடிந்தது.

சூப்பர் கட்சியின் சுரணை மிகு தலைவருக்கு ஒரு வேண்டுகோள்!

தேசிய நீரோட்டம் பற்றி தெரியாத பாமரனின் வேண்டுகோள். வெளி நாடு போக வேண்டாம். வெடிகுண்டு பயம் வேண்டாம். வேற யார் உதவியும் வேணாம். உங்க பாரம்பரியக் கட்சி ஆளுங்க மனசு வெச்சா முடியுங்க. இதான் பண்ணியாகணும்னு கட்டாயமில்லிங்க. எது வசதியோ பண்ணலாங்க. பண்ணுவீங்க தானுங்களே?

இந்த சீமான்ல இருந்து சின்ன பசங்க வரைக்கும் கிழியோ கிழின்னு கிழிக்கிற விடயம் இந்த காவிரி நீர் பிரச்சனை. சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் சரி அதுக்குன்னே இருக்கிற வாரியம் சொன்னாலும் சரி கேக்க மாட்டேன்னு அடம். இவ்வளவு தண்ணீர் கொடுத்தே ஆகணும்னு சொன்னா அதில விழுந்து செத்து இப்போ என்ன பண்ணுவன்னு கொக்கரிக்கிர வக்கிரம். இதெல்லாம் செரியில்ல தானுங்களே. நீங்க மனசு வெச்சா பண்ணக்கூடியது

1. வீரப்ப மொய்லி இன்ன பிற தொண்டர்கள் எல்லாருமா சேர்ந்து, தமிழ் நாடு இந்தியால தான் இருக்கு. தேசியத்துக்கு இழுக்கா தண்ணி எல்லாம் இல்லன்னு சொல்லக்கூடாது. கொஞ்சமிருந்தா கொஞ்சம், நிறைய இருந்தா நிறைய அவங்களுக்கும் கொடுத்தே ஆகணும்னு ஒரு தீர்மானம் போட சொல்ல முடியுமா. அட நடைமுறை படுத்துறது அப்புறமுங்க. எளுத்திலையாவது பார்க்க மாட்டமான்னு ஆசை.

2. சரி சரி நெளிய வேணாமுங்க. உங்க கஷ்டம் புரியாம போய்டுமா. இவங்க கிட்ட நீங்க ஏங்க கெஞ்சணும். அன்னை சோனியாட்ட சொல்லி நிதியமைச்சர்ட ஒரு வார்த்தைங்க. ஒரே ஒரு வார்த்தைங்க. தண்ணி தராம பயிர் வாடி போனாலும் சரி, இன்னும் புடிச்சி வெச்சா ஊர் முழுகிடும்னு மொத்தமா தொறந்து விட்டு பயிரு பச்சையெல்லாம் நாசமா போனாலும் சரி. ஐசா பைசா கணக்கு பார்த்து அவங்க கணக்கில கழிச்சி தமிழ் நாட்டு விவசாயிக்கு நஷ்ட ஈடு தரலாமேங்க.

தமிழ் நாட்டு சனங்க நன்றி மறந்தவங்க இல்லீங்கோ. தண்ணி வந்தா காவேரி என்னாங்க காவேரி.தமிழ் நாட்டுக்குள்ள அந்த ஆத்துக்கு பேரு ராஜிவ் ஆறு இல்லன்னா சோனியா ஆறு, அட என்னங்க இவ்ளோ பண்ணுறப்போ பேரு கூட நீங்க வைக்க விட மாட்டமா என்ன. பண்ணுவீங்களாங்க?

அவன பார்த்து நாயருக்கு அரிக்குது. என்னமோ முல்லைப் பெரியாருக்கு வேட்டு வைக்க போறாங்களாம். இதுக்கும் இதே ஃபார்முலா தாங்க. வயலாரும், அந்தோணியாரும் சரின்னு சொல்ல மாட்டாங்களாங்க.

மக்களுக்குன்னு என்னைக்குடா பண்ணி இருக்கோம். அதெல்லாம் காமராஜர் காலத்தோட செரின்னு முனகறது கேக்குதுங்க. அப்படி ஒரு கெட்ட பேரு உங்களுக்கு வர வேணாமுங்க. தொப்புளாவது கொடியாவது, தமிழ் மட்டும் எனக்கு இனம் இருந்தா என்ன செத்தா என்ன காங்கிரச சொன்னா பிச்சிபோடுவேன் பிச்சின்னு அவ்ளோ முடியாமலும் அறிக்கை விட்டாங்களே. எவ்வளவு பெரிய தியாகம். அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீங்க பேசி முடிச்சி ஏதோ ஒரு வழி காட்டினா நான் பேசினதாலதான் நடந்ததுன்னு சொல்லுவாங்கங்க. என்னாங்க‌ சொல்றீங்க. வெக்கமா? சே போங்க. கோத்தபாயிக்கு கொத்து குண்டுன்னா தெரிஞ்ச அளவுதான் வெக்கம்னா இவங்களுக்கு தெரிஞ்சதும்.

மீண்டும் கம்சன்

வலைமனைகளில் கண்ட ஒரு கலக்கம் தரும் செய்தி. அரசாங்கம் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் என்ற அரச அதிபரின் வார்த்தைகளை நம்பியோ அல்லது ஒரு மறைவிடம் கூட இன்றி பிறக்கப்போகும் உயிர்க்காய் தாய்மை உந்த வெளிக்கிட்ட தாய் மார்களின் கருக்கலைக்க ஆணையாம். மசாகர் மகிந்தருக்கும் கொத்து குண்டு கோத்தபாயக்கும் கம்சன் அவதாரம் கனவுக்கு வந்துட்டது போல. போகிற போக்கில இவர்கள் ஹிட்லர் கோயபெல்செல்லாம் தேவதைகள் என நினைக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஈழ தீபாவளி எப்போது என்று தெரியவில்லை. அன்று வெடி மட்டும் வேண்டாம். வேண்டிய அளவு வெடித்தாகி விட்டது.

பாரம்பரியம் மிக்க கட்சிக்கு இதெல்லாம் கண்ணில் படுவதில்லை. அப்பட்டமாக நாங்கள் சொன்னால் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய வைக்க முடியும் என்று சொல்கிறார்கள் என்றால் இந்த நேரம் போதும் என நிர்ணயித்தது யார். அப்போது மட்டும் அந்த நாட்டின் இறையாண்மையில் தலையிட்டதாகாதா. கொன்று கொண்டே இருக்கிறான். சாவதெல்லாம் எல்லாம் இழந்து நம்பி வந்த சனங்கள். தம்பட்டம் அடிக்கவா நேரம். வெக்கமில்லாமல் ஆயுதம் காகிதம் என்றெல்லாம் அடுக்கு மொழி பேசவா நேரம். திலீபன் துப்பாக்கி வைத்துக்கொண்டா உருகிப் போனான். அப்போது என்ன செய்தார்கள் இவர்கள். என்றோ போட்ட ஒரு ஒப்பந்தம். அதை தூக்கிப் பிடித்துக்கொண்டு இதை விட்டால் வேறு கதி இல்லை என்று இதிலும் தலைவர் விசுவாசம் காட்டும் கேவலம். மானுடம் என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத பெரிய மனிதர்கள் இறையாண்மை, தேசியம் என்றெல்லாம் எப்படி பேச முடிகிறது அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கிற ஒரு விடயம் அப்பாவி மக்கள் சாகிறார்கள். சாகடிப்பது சிங்கள ராணுவம். இதற்கு ஏதாவது செய்ய முடியுமா முடியாதா?
இதற்கு புதிதாக சொல்ல வேண்டியது ஒன்றுமேயில்லை. நாம் சொன்னால் கேட்கும் நாய்குட்டி பக்சேக்கு ஆயுதத்தை கீழே போடு. மக்களை அடிக்காதே என்று தானே. அப்படி ராணுவம் அடிப்பதை நிறுத்தினால் ஒரே ஒரு சனம் குண்டுக்கு சாகுமா? அடிப்பது யாரெனெத் தெரிந்து விடுமே.

அரச கணக்குப்படியே 250 சதுர கிலோ மீற்றர் பரப்பில் ஒரே ஒரு லட்சம் மக்கள் புலிகளோ ஆயிரம் மட்டுமே. இங்க இருந்தால் அவன் அடிப்பான். இங்க விட்டுப் போனா இவன் அடிப்பான். எப்படி போனாலும் சாவு என்கிற நிலை இருக்குமேயானால் ஒரு லட்சம் பேரை 1000 பேர் பிடித்து வைப்பது சாத்தியமா? புழுகினதும் தம்பட்டமடிப்பதும் போதும். உருப்படியாக ஏதாவது செய்ய முடியுமானால் செய்யுங்கள். அல்லது சும்மா இருந்தாலே போதும்.