Sunday, February 22, 2009

சொல்லமாட்டாங்களா?

தொப்புள் கொடி உறவுகளே! இத்தனை மருத்துவர்கள், மருந்து, இதமான சூழல் எல்லாமிருந்தும் வலி தாங்க முடியவில்லை. அங்கு நீ காட்டில் கூரை இன்றி, விஷ ஜந்துக்களிடையே எதிரியின் குண்டு எப்போ விழுமோ என்று குழிக்குள். நினைக்கவே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருக்கிறது‍‍..:கருணா நிதி (சோனியாட சொல்லிடாதிங்கப்பு)என் உயிருனும் மேலான..ரத்தத்தின்..etc etc..
எனது 61ம் பிறந்த நாளை தவிக்கும் தமிழரின் அவல நிலையை எண்ணி சோவுடன் அங்கு சென்று 61 நாள் அங்கு தங்கி ராஜபக்சவுடன் போராடி வேண்டிய உதவிகளைச் செய்வதன் மூலம் எளிமையாக கொண்டாட இருக்கிறேன். எனவே பிறந்த நாள் விழாவுக்கு காசு புடுங்க ஆபிசுக்கு வர வேண்டாம்...(சோ: இது ரெகார்ட் பர்பஸ்கு சொன்னது..எனக்கு துக்ளக் வேலை இருக்கு):ஜெ..ஒரு அரசியல் கட்சியின் தலைவன் என்ற முறையில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே மருத்துவர் என்ற முறையில் அன்பு மணியோடு ஈழம் செல்லவிருக்கிறேன். இதை எந்த கொம்பனும் தடுக்க முடியாது..:ராம்தாஸ்


நான் கோர்ட்கு க்கீலா போனாலும் முட்ட அடிக்கறா. சாட்சி சொல்ல போனாலும் அடிக்கறா. அதனால கோழி இல்லாத நாட்ல தான் கோர்ட்கு போவேன்...:சுவாமி.


தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்த (ஒண்ணா ரெண்டா) மன்னிப்பு. இவ்வளவு கொடூரமான ராஜபக்சேய புடிச்சி நியாயம் கேக்காம விடமாட்டேன்..(பொதுசனம்:அய்யா பார்த்து..கேப்டனானா என்ன ஏதோ ஒரு பிரபாகரன்னு புடிச்சி இங்கயே அனுப்பிடுவான்‍‍):விஜயகாந்த்


என் உயிரினும் மேலான தமிழ் மக்களே! எங்களை வாழ வைக்கும் புலம் பெயர் வாழ் தமிழர்களே. திரைப்படத் துறை சார்ந்த அனைத்துச் சங்கங்களும் ஒன்றாய் கூடி அங்கு ஈழத்தில் குண்டுக்கு இரையாகி மருந்துக்கு வழி இன்றி தவிக்கும் குழந்தைகள், முதியோர்களை எங்கள் பொருப்பில் இங்கு அழைத்து வந்து சிகிச்சை செய்து அவர்கள் நல் வாழ்வுக்கு எங்களாலான உதவிகளை செய்ய உதவுமாறு கோர இருக்கிறோம்...:பாரதி ராஜாஉங்க எல்லார் பவிசும் தெரிஞ்சது தான். ஆனாலும் ஓட்டு போட்டு நாசமா போனது போதும். இந்த வாட்டி வந்தா நடக்கற கதையே வேற..:பொதுசனம்.


10 comments:

S.R.Rajasekaran said...

\\\பொதுசனம்.\\\


எப்பவுமே நாங்க கேனபயலுவதான் அதனால என்னவேனாலும் பேசுங்க எங்களுக்கு சூடு சொரனையே வராது

S.R.Rajasekaran said...

\\பாரதி ராஜா\\இவரு சீனுக்கு புதுசு .இன்னும் அரசியல் தெரியாது

S.R.Rajasekaran said...

\\விஜயகாந்த்\\


அண்ணே கால சொளட்டி சொளட்டி அடிச்சா நாங்க பல்ல ஈன்னு காமிப்போம்ன்னு நெனச்சி லூசுதனமா பேசக்கூடாது

S.R.Rajasekaran said...

\\சுவாமி.\\\மொதல்ல கேனத்தனமா பேசுறத நிப்பாட்டு ஓய் .நீ பெரிய புடுங்கி தான் .உன்னிய யாருக்காது பிடிக்குதான்னு சொல்லு .உன்னோடது கட்சியே இல்லன்னு சொன்னதுக்கு அப்புறமும் நீ வாய தொரக்குறது .............நல்லா இரு ஓய்

Eezhapriya said...

aiyaa bala.. nalla muyatchi.. antha perugala konjam edit pannunga.. yaar enna solrangane puriyala..! naan je. eppo dr. aanaa? ramdoss eppo lawyer aanaarnu sorinjindirunthen!

Bala said...

அரசியல்னா குழம்பலைன்னாதான் அதிசயம். ஹி ஹி..சரி பண்ணிட்டேங்க. நன்றி ஈழப்பிரியா

Bala said...

கலக்கறீங்க ராஜ சேகரன். நன்றி

S.R.Rajasekaran said...

\\\ராம்தாஸ்\\


அய்யா பாத்து போங்கோ .அப்புறம் சிங்கள ராணுவத்துக்கு மருத்துவ உதவி பண்ணுற வைத்தியர் நீங்கதான் அப்படின்னு கேப்புல கிடாய் வேட்டிருவாங்க

S.R.Rajasekaran said...

\\\ஜெ...\\


என் உயிருனும் மேலான..ரத்தத்தின்..ரத்தமே


எப்படி தாயி உங்களால் மட்டும் இப்படி மக்களுக்கு சேவை செய்ய முடிது.வரும் பொது அந்த ஆளுக்கிட்ட யாழ்ப்பாணத்த ஒரு ரேட் போட்டு வாங்கிருவோம் தாயி அப்பத்தான் நாம மக்களுக்கு தங்கு தடை இன்றி சேவை செய்ய முடியும்

S.R.Rajasekaran said...

\\கருணா நிதி\\


எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்