Sunday, March 6, 2011

நறுக்னு நாலு வார்த்த V 5.9 (வடிவேலு பெசல்)

கம்யூனிஸ்டுகள் வரவேண்டும்: கூடுதல் இடங்கள் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. திருமா..

அய்யா! சரியாத்தான் பேசுறனா?
--------------------------------------------------------------------------------------------------------------
கலைஞரின் முடிவை உள்ளூர் முதல் உலகத் தமிழர் வரை பாராட்டுகின்றனர்: கி.வீரமணி.

என்னையச் சொன்னேன். என்னயச் சொன்னேன். அவ்வ்வ்.
--------------------------------------------------------------------------------------------------------------
தி.மு.க.உரிய மரியாதை அளித்தது:கொ.மு.க.

தட்சிணையக் கூட மருவாதின்னுதான் சொல்லுவாய்ங்க. எம்புட்டுக்கு முடிச்சீங்ணா. திருமாட்ட சொல்லிறாதிய. கெஞ்சி கேப்பாக. அப்பவும் சொல்லிறாதிய.
--------------------------------------------------------------------------------------------------------------
கலைஞரின் சாதனை மக்களின் மனதில் நிற்கிறது: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி

கலைஞர வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.
--------------------------------------------------------------------------------------------------------------
பீகார் தேர்தலைப் போல கலைஞருக்கு மக்கள் வெற்றியை தேடி தருவார்கள்: சுப.வீரபாண்டியன்

டேய்! யார்ரா எங்க தலைவன்கிட்ட சீட்டுக்கு தகராரு பண்ணது. தைரியமா இருந்தா சி.பி.ஐ.ய அனுப்பி பாருடா. நீங்க என்னண்ணே. யார்கிட்ட?
---------------------------------------------------------------------------------------------------------------
திமுக அறிவிப்பு எதிரொலி: பிரணாப், குலாம் நபி ஆசாத் சென்னை வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு?

வந்து ‘வட போச்சே’ சொல்லுவாய்ங்களோ?
---------------------------------------------------------------------------------------------------------------
கூட்டணி பற்றி கருத்துகூற வேண்டாம்: காங்.

எத்தையும் ப்ளான் பண்ணி பண்ணனும். ப்ளான் பண்ணாம பண்ணப்படாது.
----------------------------------------------------------------------------------------------------------------
எந்தவொரு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை திமுக சந்தித்ததில்லை: கலைஞர்

சொந்த வீட்டுக்கே வாச்மேனா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
-------------------------------------------------------------------------------------------------------------
பிரச்சனைகள் உருவாக காங்கிரஸ் காரணமாகியது ஆச்சிரியத்தை அளித்தது: கலைஞர் அறிக்கை

ஆஹா! எப்புடி போனாலும் கேட் போடுறாய்ங்களே..
----------------------------------------------------------------------------------------------------------
கலைஞர் இமயமாய் உயர்ந்து நிற்கிறார்: திருமா

தில்லிருந்தா எங்கண்ணன ஒரசிப்பாருங்கடா.
-------------------------------------------------------------------------------------------------------------
அமைச்சரவையில் இருந்து விலகினாலும் காங்கிரசுடன் நட்பு தொடரும்: டி.ஆர்.பாலு

அய்யா..கலைஞர்..அய்யா...காமெடி பீசுய்யா நானு..நீங்கபாட்டுக்கு அறிக்கை விட்டுற்றீங்க..ராசா ஃபோன் பண்ணி அடியே திஹார்ல பக்கத்து ரூம் ரெடின்னு ஃபோன் பண்றான்யா..நா என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
திமுக வின் முடிவு குறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி அவசர ஆலோசனை

என்னது? மீன் பாடி வண்டில போட்டு அனுப்பிவிடவா..சரிங்கம்மா..
---------------------------------------------------------------------------------------------------------------
தெளிவான மாற்றத்தை மக்கள் கொடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரதராஜன்

நீ வா சுருதி...(யோவ்! யாராச்சும் கைய நீட்டுங்கப்பா புடிச்சிக்கணும்ல)
---------------------------------------------------------------------------------------------------------------
ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவது நிரூபிக்கப் பட்டால் ஜெயில் தண்டனை: பிரவீண்குமார்

அடப் பாவி பாவி! இன்னும் திருடவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள ஊரு ஃபுல்லா போஸ்டர் ஒட்றீங்களேடா.
----------------------------------------------------------------------------------------------------------------

21 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவது நிரூபிக்கப் பட்டால் ஜெயில் தண்டனை: பிரவீண்குமார்
//

இன்னுமா இவிங்கள உலகம் நம்புதுன்னு நினெக்கறாங்க?!

(வடிவேலு பெசல்)

பேச்சு பேச்சா இருக்கணும்! :))

தமிழ்வாசி - Prakash said...

இப்பவே கண்ணை கட்டுதே...

எனது வலைபூவில் இன்று:
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

MANO நாஞ்சில் மனோ said...

நாசமா போச்சி போங்க....
ஹா ஹா ஹா ஹா....

ஸ்ரீராம். said...

இன்னும்தான் உலகம் இவங்களை நம்புது...! காமெடியாய் சொல்லப் படும் நிஜங்கள்.

ரிஷபன் said...

ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவது நிரூபிக்கப் பட்டால் ஜெயில் தண்டனை: பிரவீண்குமார்
நம்மூரு பேச்சா.. இது.. யாருக்கோ சொன்னாப்ல இருக்கே.. நல்லாத்தானே போயிகிட்டு இருந்திச்சு..

ராஜ நடராஜன் said...

என்னது?கொடுக்கவே ஆரம்பிக்கலியா!

100 ஆளுக்கு 3 பேர்ன்னு Micro திட்டம் ஆரம்பிச்சு பொறுப்பே ஒப்படைச்சாச்சுன்னு கேள்வி.

ராஜ நடராஜன் said...

நேற்றுத்தான் ’அனுபவசாலி’ ஒருத்தர்கிட்ட பேசிகிட்டிருந்தேன்.திருமங்கலம் தில்லாலங்கடிக்கு பெருசா ஒண்ணும் செய்ய வேண்டாமாம்.கரை வேட்டிய மாத்தி கட்டிகிட்டு களப்பணி செய்தாலும் சரிதானாம்.இல்ல வாய பொத்திகிட்டு வீட்டுக்குள்ள கமுக்கமா உட்கார்ந்துகிட்டாலும் சரிதானாம்.தேர்தல் முடிவு வந்த அடுத்த் நாளே,ஜல்லி,மணல்,கம்பியெல்லாம் வீட்டு முன்னால வந்து இறங்கிடுச்சாம்.

ராஜ நடராஜன் said...

பாலாண்ணா!சுருதி கொஞ்சம் ஏத்துங்க:)

சேட்டைக்காரன் said...

இதை அவிய்ங்க கேட்டா என்னா சொல்லுவாய்ங்க?

"என்னிய மட்டும் கரெக்டா அடிச்சிடறீங்கப்பு...!:

ஜோதிஜி said...

திருப்பூர்லேயிருந்து சிரித்த சத்தம் சென்னைக்கு கேட்டதா?

எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது ஈழம் புகழ் டி ஆர் பாலூலூ

நீ வட்டச் செயலாளராக இருக்கும் நான் ஏன் சதுரச் செயலாளராக இருக்கக்கூடாது. ஈழம் ரிட்டன் புகழ் திருமா

பளான் பண்ணி

சிரிப்பை அடக்கமுடியவில்லை சாமியோவ்.........

ரஹீம் கஸாலி said...

ஒவ்வொரு கமெண்டும் சும்மா நச்ச்....

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு

காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார்-ஜெயலலிதா அதிரடி அறிக்கை.

அஹோரி said...
This comment has been removed by the author.
அஹோரி said...

அருமை. காலம் போன கடைசியில காமடி பீசாயிட்டார் கருணாநிதி .

நட்புடன் ஜமால் said...

gate யார்ட்டையும் கேட்டா போடுதாய்ங்க

Anonymous said...

காமெடி அரசியலின் காமெடி ! சரவெடி!!

somanathan said...

why blood? same blood

கே. ஆர்.விஜயன் said...

கலைஞர் நம்ம பதிவர்களுக்கு என்னமா மேட்டர் தந்து உதவுராரு.

வானம்பாடிகள் said...

அனைவருக்கும் நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

தாராபுரத்தான் said...

ஆஐர்.

சே.குமார் said...

ஹா ஹா ஹா ஹா....