Sunday, March 13, 2011

ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி...

என்னமோ போங்க. லோகத்துல மத்தவங்களுக்கெல்லாம் நார்மலா நடக்கற விஷயம் எனக்கெதிரா மட்டும் ரொம்பவே சதி பண்ணுது. ஏன்யா! தெரியாமத்தான் கேக்குறேன், ஒரு ஜீவனை படைக்கிறதுன்னு முடிவு பண்ணப்புறம் கொஞ்சம் நிதானமாதான் ஸ்கெட்ச் போட்டு ப்ளூப்ரிண்ட் போட்டு படைச்சாத்தான் என்ன? நான் கடவுள். எனக்கே க்வாலிடி கண்ட்ரோலான்னு அப்படி ஒரு திண்ணக்கம்.

இல்லாட்டி அதுக்கு சரி இல்லை, இதுக்கு சரியில்லைன்னு தானே புடுங்கி போட்ட ஸ்பேர்பார்ட்ஸை வச்சி என்னைப் படைச்சிட்டான் போல. அட! இம்புட்டுதாண்டா உசரம் உனக்குன்னு டிசைட் பண்ணதாவே இருக்கட்டுமே. மேல கொஞ்சம் குறைச்சு காலை கொஞ்சம் நீட்டி அதே ஒசரம் மேண்டேன் பண்ணா என்ன குறைஞ்சு போகும். அதென்ன செருப்புக்கு போனா ஏழும் இல்லாம ஆறும் இல்லாம ஒரு சைசு, சட்டைக்கு போனா 39, பேண்டுன்னு போனா 27 இப்புடி இல்லாத சைசாவே ஒரு பொறப்பு?

படைச்சப்புறமும் எல்லாருக்கும் வளர்றதுன்னு முடியும் நகமும் இருக்கில்ல. அதக்கூடவாய்யா சோதிக்கணும். எல்லாருக்கு முடி வளரும் வயசுல எனக்கு தேஞ்சிகிட்டே போச்சே. கோவிலுக்கு போய் எனக்கு மசுறகுடு. உனக்கு மொட்டையடிக்கிறேன்னு யாராச்சும் வேண்டியிருக்காங்களா? அந்தக் கொடுமையையும் மவுனமா தாங்கிக்கிட்டு எம்பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கனா இல்லையா?

வகுத்துல என்ன வெளையாட்டு சின்னப் புள்ளத்தனமா? எல்லாருக்கும் தின்னப்புறம் ஊதிக்கும் வகுறுன்னா எனக்கு பசில ஊதிக்கிற வரம் நான் கேட்டனா? இல்ல நான் கேட்டனாய்யா? ஏதோ நம்ம உருவத்துக்கு டெய்லர்தான் சரிப்படும்னு ரெடிமேட் ஆசையெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு துணி எடுத்துதான் தைக்கிறது 45 வயசு வரைக்கும். அது என்னமோ கலியாணம் காதுகுத்துன்னு ஓசில தர இத்துப் போன துணியைக் குடுத்து டெஸ்டு பண்ணா அம்புட்டு அளவாத் தைப்பான். இனி சாவுற வரைக்கும் நீதாண்டா டைலருன்னு அலசி ஆராய்ஞ்சி மேட்சிங்லாம் பார்த்து நல்ல துணியா பேண்ட் சர்ட்டுக்கு வாங்கிட்டு போய் குடுப்பேன்.

அந்தக் கடவுளே கத்திரியப் புடுங்கி கட்டிங் பண்ணுவானோ, இல்லை தைக்கிறப்ப வந்து குந்திக்குவானோ. ஆசை ஆசையாத் தேடி வாங்கின பேண்டோ சட்டையோ, கவட்டிலையும் கக்கத்துலையும் புடிப்பான் பாருங்க ஒரு பிடி.

வாதம் வந்த மாடு மாதிரி பத்தடிக்கு ஒரு வாட்டி ஒத்தக்காலை ஒரு வாகா வெச்சி இழுத்து இழுத்து விட்டுகிட்டு ஒரு மனுசன் நடக்க ஏலுமா? அந்தச் சட்டை! அஞ்சு நிமிசத்துக்கு ஒரு வாட்டி கோழி றெக்கைய அடிச்சிட்டு அங்கயே நிக்கிறாமாதிரி ரெண்டு கையும் படக் படக்னு அடிச்சாத்தான் ஒரு வேல வெட்டி பார்க்க முடியும்.

இப்புடியே போனா அவனவனும் கையில சாவியைத் திணிச்சுறுவாங்கன்னு மொதல்ல ரெடிமேட் ஷர்ட்க்கு தாவுனேன். ஒரு ப்ராண்ட்ல முப்பத்தெட்டுன்னா ஒன்னுல நாப்பது. சரி ட்ரையல்னு முப்பத்தாறு வாங்கினா திரும்ப கோழி. முப்பத்தெட்டு வாங்கினா தோள்பட்டை இறங்குது. ஏன்யா இப்புடின்னா நீ ஏன்யா 39ஆ வளர்ந்தங்குறான். இதுல வேற இந்த தோராயமான தையலுக்கு லூஸ்ஃபிட்டுன்னு பேரையும் வச்சி, இதான் ஃபேஷனுங்குறான்.

சரின்னு பேண்டுக்கு போனா, பாலிஸ்டரா காட்டானான்னு ஒரு கேள்வி. சரி காட்டனே காட்டுன்னேன். என்னா ரேஞ்சுன்னான். காட்டன்ல என்னடா ரேஞ்சு கம்னாட்டின்னு, நீ எடுத்து போடு ராசான்னேன். ரூ 650ன்னு கொஞ்சம் எடுத்து போட்டான். பார்வை ஒரு மாதிரியா இருந்ததால வேறன்னேன். ஒரு மார்க்கமா பார்த்தபடியே ரூ 900 -1200னு கைக்கு ஒன்னா புடுங்கி போட்டான். காட்டன்ல கூட ஏழை காட்டன் பணகார காட்டன்னு கண்டு புடிச்சிட்டாய்ங்க போலயேன்னு என்ன ராசா வித்தியாசம்னேன். இது ரிங்கிள் ஃப்ரீன்னான். அட அப்ப இஸ்திரி செலவுல விட்டத புடிக்கலாமேன்னு மைய்யமா ஒரு ரூ1000 பேண்டை எடுத்து வச்சிட்டு ஷோகேஸைப் பார்த்தேன்.

சாமி வந்தவன் மாதிரி ரூ 1500-2000னு எடுத்து கடாசினான். இதுக்கு என்னாப்பா வித்தியாசம்னா இதும் ரிங்கிள் ஃப்ரீதான். நனைச்சி உலர்த்தி அப்புடியே போட்டுகிட்டு போயிறலாம்னான். அப்ப அது என்னன்னு கேக்க வந்தாலும் ரொம்பவும் கேனையா நெனச்சிரப்படாதேன்னு அந்த 1000மே எடுத்தேன்.

இடுப்பு அளவ மட்டும் எடுத்துட்டு இதான்னு ஒன்ன நீட்டுனான். இடுப்பு அளவு வச்சி பார்த்தா சரியாத்தான் இருக்கு. ஆனா பாதி பேண்ட் தரையில கிடக்கு. தூக்கி பிடிச்சிதான் பார்ப்பமேன்னு தூக்குனா தலைக்கு மேல தூக்கியும் தரையில மடியுது. அடப்பாவி, இதுல முட்டிக்கு கொஞ்சம் கீழ வெட்டினாலே எனக்கு சரியா இருக்குமேய்யா. மிச்ச துணி இன்னோரு பேண்ட் ஆகுமேன்னு தோணுது. ஆல்ட்ரேஷன் ஃப்ரீன்னான்.

நாமதான் ஃப்ரீன்னா ஃபினாயில் கூட குடிப்பமே. எட்றா அளவன்னேன். நின்ன வாக்குலயே குனிஞ்சி ஒரு அளவச் சொன்னான். நாம அம்புட்டு ஒசரம். தச்சி வந்துச்சு. ஆவலா பிரிச்சா, மாவு மில்லுல மாவு பறக்காம கட்டி விட்ட துணி மாதிரி ஒரு ஷேப்பு. கலவரமானத பார்த்து ஃப்ரீயா இருக்கும்னு ஒரு கமெண்ட் வேற.

எதோ ஒரு காம்ப்ரமைஸ்ல ஓட்டிட்டிருந்திச்சி கதை. சேல்ஸ் எழவுதான் இப்படின்னு இருந்தா ஆஃப்டர் ஸேல் சர்வீஸ் அதாங்க இஸ்திரிக்காரம்மா. அது ரெண்டு வாரமா வராம ஸ்ட்ரைக்கு. அட போம்மா, நாமதான் ரிங்கிள் ஃப்ரீ வாங்கியிருக்கமேன்னு எடுத்து பார்த்தப்பதான் தெரிஞ்சுது. பய புள்ளைக ரிங்கிள் ஃப்ரீன்னா, சுருக்கம் ஃப்ரீயா சகட்டு மேனிக்கு இருக்கும்னு சொல்லி வித்திருக்கான் போல. நல்லகாலம் இன்னும் காஸ்ட்லியா வாங்கியிருந்தா நிறைய சுருக்கம் இருந்திருக்கும்.

தன் வசதிக்கு அந்தம்மா வந்து நின்னப்போ வூட்டுல இருக்கிற ஸ்டீம் அயர்ன் கவனம் வர, அதெல்லாம் தரமுடியாது. போய்ட்டே இரு. நானே பண்ணிக்குவேன்னு சொல்லிடுவேன். அது ஒரு மார்க்கமா, இந்த இடுப்பா வளையும்னு போயிரும். இது அப்பப்ப நடக்கறதுதான். கொஞ்சம் வருமானம் கொறைஞ்சா தேடிட்டு வரும். துணி தராட்டி போய்க்கோ. பசிக்குது சாப்பாடு குடுன்னு கேட்டு சாப்புடும். அதுக்கப்புறமும் எப்புடி குடுக்காம இருக்கிறதுன்னு சாப்புட்டப்புறம் இனி ஒழுங்கா வந்து துணி எடுத்துட்டு போணும்னு கண்டிசனா பேசி துணியக் குடுக்கறதுதான்.

அப்புடி வரலைன்னா, ரொம்ப கெத்தா நாமளே கொண்டு போய் நீ பெரிய டாட்டாவா? என்னமோ குடுக்காட்டி போன்னு போய்டுவியா? தொலைன்னு மருவாதியா கொண்டு போய் குடுத்துர்றது. இப்பிடியே போய்க்கிருந்துச்சு பொழப்பு. அட இத ஏன்யா இடுகையா போட்டு எங்க உசுர வாங்குறன்னு கேக்குறீயளோ. நேத்து கொஞ்சம் வீம்பு அதிகமா போயி நானே இஸ்திரி போட உக்காந்தேன்.

அஞ்சு கிலோ பொட்டிக்கே அங்க இங்க சுருக்கம் தெரியும். அரை கிலோ கூட இல்லாம ஸ்டீம் இருந்தாமட்டும்? என்னன்னாலும் நம்ம உழைப்புன்னு ஒரு மதர்ப்புல வலப்பக்கத்துல இருந்து இஸ்திரி பெட்டிய தூக்குனேன். ஓஓஓஓஓஓஓஓஒரம்தான், ஒரு சில செகண்ட்தான், ஒரு 4 இஞ்சுக்கு கோடு போட்ருச்சி தொடைல. அந்த எரிச்சல்தான். சரியா பர்னால் போடும்போது வந்து நிக்குது அந்தம்மா. ஒரு கேவலமான குறுஞ்சிரிப்போட துணி தராட்டி போற, சோறுன்னா போடுன்னு.  இந்த வங்கொடுமைய உங்க கிட்ட சொல்லாம எங்க போய் சொல்றது.
---:{}:---

36 comments:

Kathir said...

||மிச்ச துணி இன்னோரு பேண்ட் ஆகுமேன்னு||

பேண்ட் ஆகாது டவுசர் தான்!

Kathir said...

||4 இஞ்சுக்கு கோடு போட்ருச்சி தொடைல||

ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதே!!! :)))

வானம்பாடிகள் said...

/Kathir said...

||மிச்ச துணி இன்னோரு பேண்ட் ஆகுமேன்னு||

பேண்ட் ஆகாது டவுசர் தான்!/

எனக்கு ஆவும் எனக்கு ஆவும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாவு மில்லுல மாவு பறக்காம கட்டி விட்ட துணி மாதிரி ஒரு ஷேப்பு. //

ha..ha..ha,,,

ரிஷபன் said...

வாதம் வந்த மாடு மாதிரி பத்தடிக்கு ஒரு வாட்டி ஒத்தக்காலை ஒரு வாகா வெச்சி இழுத்து இழுத்து விட்டுகிட்டு ஒரு மனுசன் நடக்க ஏலுமா? அந்தச் சட்டை! அஞ்சு நிமிசத்துக்கு ஒரு வாட்டி கோழி றெக்கைய அடிச்சிட்டு அங்கயே நிக்கிறாமாதிரி ரெண்டு கையும் படக் படக்னு அடிச்சாத்தான் ஒரு வேல வெட்டி பார்க்க முடியும்.//
அப்படியே அந்த அவஸ்தை உணர்ந்து பகபகவென சிரிப்பு..

கக்கு - மாணிக்கம் said...

கோவிலுக்கு போய் எனக்கு மசுறகுடு. உனக்கு மொட்டையடிக்கிறேன்னு யாராச்சும் வேண்டியிருக்காங்களா?
:))))))))

பா.ராஜாராம் said...

:-))

வரிக்கு வரி கலக்கல் பாலாண்ணா! :-))

சே.குமார் said...

//மாவு மில்லுல மாவு பறக்காம கட்டி விட்ட துணி மாதிரி ஒரு ஷேப்பு. //


//கோவிலுக்கு போய் எனக்கு மசுறகுடு. உனக்கு மொட்டையடிக்கிறேன்னு யாராச்சும் வேண்டியிருக்காங்களா?
//

Ha.... Ha... Haaa... haa...

Mudiyalai...

மாதேவி said...

:))))

rajatheking said...

ஒரே காமெடி தான் போங்க

rajatheking said...

ஒரே காமெடி தான் போங்க
ஒரே காமெடி தான் போங்க
ஒரே காமெடி தான் போங்க

யூர்கன் க்ருகியர் said...

தலைவரே ..

ஜீன்ஸ் ட்ரை பண்ணுங்க.
எங்கெல்லாம் இறுக்கி பிடிக்கிறதோ அங்கெல்லாம் கட் பண்ணி விட்டுடுங்க ...கேட்டா பேஷன்-ன்னு சொல்லி சமாளிச்சிடலாம் ...

அப்புறம் ..துவைக்க தேவை இல்லை...அயன் பண்ணவும் தேவை இல்லை

முக்கியமா பதிவர் சந்திப்புக்கு போதும் போது யூத்-ன்னு ப்ரூப் பண்ணலாம்

ஓகே ??

சேட்டைக்காரன் said...

//கோவிலுக்கு போய் எனக்கு மசுறகுடு. உனக்கு மொட்டையடிக்கிறேன்னு யாராச்சும் வேண்டியிருக்காங்களா?//

நீங்க வேண்டுனது சரிதான் ஐயா. ஆனா, கொடுக்கிறா மாதிரி கொடுத்து எதுக்குத் திருப்பி வாங்கோணுமுன்னு சாமி நினைச்சிருக்கலாமில்லியா? :-))

சேட்டைக்காரன் said...

//தூக்கி பிடிச்சிதான் பார்ப்பமேன்னு தூக்குனா தலைக்கு மேல தூக்கியும் தரையில மடியுது. //

கற்பனை பண்ணிப்பார்த்தேன். சிரிச்சு மாளலே...! :-))

சேட்டைக்காரன் said...

//ஆவலா பிரிச்சா, மாவு மில்லுல மாவு பறக்காம கட்டி விட்ட துணி மாதிரி ஒரு ஷேப்பு//

திருப்பதி உண்டியல் மாதிரி இருக்குமா அந்த ஷேப்பு? :-)

சேட்டைக்காரன் said...

//பய புள்ளைக ரிங்கிள் ஃப்ரீன்னா, சுருக்கம் ஃப்ரீயா சகட்டு மேனிக்கு இருக்கும்னு சொல்லி வித்திருக்கான் போல//

என்னாது? உங்ககிட்டேயே வார்த்தையிலே வெள்ளாண்டுறானுகளா? :-))

படிச்சேன்; சிரிச்சேன்; சிரிச்சுக்கிட்டே இருக்கேன் ஐயா!

இராமசாமி said...

:)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சாரே அந்த அதுவுமில்லாத இதுவுமில்லாத ரெடிமேட் ஹிப் சைஸ் எனக்கும் ப்ரச்சனைதான்! :))

கே. ஆர்.விஜயன் said...

உங்க கற்பனை வளமும் அதை விளக்க நீங்கள் தேர்வு செய்யும் உவமைகளும் அபாரம்.

ஓலை said...

அட்டகாசம் சார். சிரிச்சு மாளல. பின்னாடி கேட்காதிங்க 'நான் பட்ட பாடு உனக்கு சிரிப்பா இருக்கான்னு'. வேறு வழியில்ல சிரிப்பை அடக்க முடியல.

ஓலை said...

""ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி..."
--
உங்களுக்கு மட்டுமில்ல சார். எனக்கும் இதே பிரச்சனை. ரொம்ப வருஷமா என் சைஸ்க்கு ஜீன்ஸ் கிடைக்கல. இப்ப தான் ஐந்து வருஷம்மா கிடைக்குது. ஏன்னா உயர முடியல வயித்தப் பெருத்திட்டேன்.

sriram said...

வேஷ்டி ஜிப்பா ட்ரை பண்ணுங்க பாலாண்ணா, லூஸ் & டைட் பிராப்ளம் இருக்காது, பாக்கவும் கெத்தா இருக்கும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வானம்பாடிகள் said...

ம்கும். அதையும்தான் போட்டேன். சேட்டு கட திண்டு மாதிரி ஒரு ஷேப்பு அவ்வ்வ்வ். நமக்கு நாலு முழ வேட்டியும் டப்பாகட்டும்தான் சரி:)))

ராஜ நடராஜன் said...

பார்த்தா இவ்வளவு குறும்பு மாதிரி தெரியலையே:)

sriram said...

//பார்த்தா இவ்வளவு குறும்பு மாதிரி தெரியலையே/

இந்த பீஸு பாத்தா அப்படி தெரியாது, பழகப் பழகத்தான் புரியும் :) :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தாராபுரத்தான் said...

கலக்கலுங்கோ..

மணிநரேன் said...

:)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சிலருடைய கஷ்டம், பலருக்கு சந்தோஷம்.
உங்கள் பதிவும் அப்படியே!


@ யூர்கன் க்ருகியர்

//ஜீன்ஸ் ட்ரை பண்ணுங்க.
முக்கியமா பதிவர் சந்திப்புக்கு போதும் போது யூத்-ன்னு ப்ரூப் பண்ணலாம் //


top!!!!!

VELU.G said...

Super

பா.ரா சொன்ன மாதிரி வரிக்கு வரி கலக்கல்

க.பாலாசி said...

அய்யோ.. கடவுளே... அந்தம்மா கடைசியா என்ன நினைச்சி சிரிச்சிருக்கும்.. அதேதான் எனக்கும்.. ஹி..ஹி.. தேவையா..தேவையா..

அகல்விளக்கு said...

ஹிஹி...

சரியாப் போச்சு போங்க...

//வாதம் வந்த மாடு மாதிரி பத்தடிக்கு ஒரு வாட்டி ஒத்தக்காலை ஒரு வாகா வெச்சி இழுத்து இழுத்து விட்டுகிட்டு ஒரு மனுசன் நடக்க ஏலுமா? அந்தச் சட்டை! அஞ்சு நிமிசத்துக்கு ஒரு வாட்டி கோழி றெக்கைய அடிச்சிட்டு அங்கயே நிக்கிறாமாதிரி ரெண்டு கையும் படக் படக்னு அடிச்சாத்தான் ஒரு வேல வெட்டி பார்க்க முடியும்.ஃஃ

இது டாப்பு...

வானம்பாடிகள் said...

@@நன்றி டி.வி.ஆர். சார்
@@நன்றி ரிஷபன்
@@நன்றி கக்கு-மாணிக்கம்
@@நன்றி பா.ரா.
@@நன்றி சே.குமார்
@@நன்றிங்க மாதேவி
@@நன்றி ராஜாதிகிங்
@@நன்றி யூர்கன். ஹி ஹி ஜீன்ஸா. போர்ட் ட்ரஸ்ட்ல காத்து போற பக்கம் காட்ர கேன்வாஸ்மாதிரி இருக்கும்
@@நன்றி சேட்டை
@@நன்றிங்க இராமசாமி
@@நன்றி ஷங்கர். உங்களுக்குமா?
@@நன்றி கே. ஆர். விஜயன்
@@நன்றி சேது
@@நன்றி ராஜாண்ணா
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிண்ணே
@@நன்றி மணிநரேன்
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றி வேலு
@@நன்றி பாலாசி
@@நன்றி ராஜா

ஸ்ரீராம். said...

அவஸ்தைகளும் நகைச்சுவையாய்...

வானம்பாடிகள் said...

நன்றி ஸ்ரீராம்

drbalas said...

ஒருத்தர் தன்னோட கஷ்டத்தை சொல்லிக்கொண்டிருக்கும் போது சிரிக்க கூடாது. ஆனால் முடியல......
என்னா ஒரு வார்த்தை ஜாலம்...உவமைகள்......சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வானம்பாடிகள் said...

வாங்க பாலாஸ். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.