Tuesday, March 8, 2011

கூட்டணி பேட்டி

நிருபர்: என்னங்க நடந்துச்சு?

கலீஞ்சர்: ஹெ ஹெ. யார்ட்ட. அறுவத்தி மூணாம்ல அறுவத்தி மூணு. இருந்த எடத்துல இருந்து பில்லக்கா பசங்கள விட்டு கேட்டா பொத்தினாப்புல கொடுத்துறவமோ. கெளப்பிட்டம்ல பீதிய. மூணு நாளு தூக்கமில்லாம ஃபோன்மேல ஃபோன் போட்டு கெஞ்ச விட்டம்ல. இத மொதல்லியே பண்ணியிருந்தா அறுவத்தி மூணு என்ன நீயாப்பாத்து எதுனாலும் தந்தாச் சரின்னு சொல்லியிருப்பம்ல. நல்லாச் சொல்றேன் கேட்டுக்க. என்னைய யாரும் கிள்ளுக்கீரையா நெனச்சிரப்படாது. நானாத்தான் சரண்டராவேன்.
(ரை ரை..இப்புடியே மேண்டேன் பண்ணி போய்க்கேயிர்ரா சூனாபானா..உன்ன அடிச்சிக்கிறமுடியாது)

நிருபர்:
என்ன சொன்னீங்க?

கலீஞ்சர்: நான் என்னையச் சொன்னேன் என்னயச் சொன்னேன். மனசுக்குள்ள கூட பொலம்ப விடமாட்டேங்குறாங்களே...நான் என்ன செய்வேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: மருத்துவர் ஐய்யா. உங்க கிட்ட இருந்து ஒரு சீட்ட புடுங்கிட்டாரே கலைஞர்.

மருத்துவர்: கலைஞர் ஒன்னொன்னா எத்தனை சீட்டை வேணுமானாலும் புடுங்கட்டும் எம்மவனுக்கு அந்த ஒத்த சீட்டு கிடைச்சா சரி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: காங்கிரசை சுமந்தது போதும்னு எல்லாம் சொன்னீர்களே. இப்போது...

வீரமணி: தவறாகப் புரிந்து கொண்டீர்கள். தோளில் சுமப்பது என்பது பார்ப்பனக் கொள்கை. திருவிழாக்களில் சாமியைத் தூக்கி வருவது போல் என்ற அர்த்தத்தில் சொன்னேன். திராவிட பாரம்பரியம் புரிந்த கலைஞர் சரியான முடிவெடுத்து 3 நாட்கள் இறக்கிவிட்டு இப்போது கை கோர்த்து நடந்து செல்ல முடிவெடுத்திருக்கிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: உங்களை தன்மானம் மிக்கவர்னு அழகிரி சொன்னாரே.

விஜயகாந்த்: அடுத்த படத்துல தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை தன்மானம்னு ஒரு பஞ்ச் டைலாக் வச்சிடுவேன்ல!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: காங்கிரஸ் திமுக கூட்டணி மீண்டும் உறுதியாகிவிட்டதே.

ஜெ: நிம்மதி. ஒரு வேளை எங்கள் கூட்டணியில் நின்று ஜெயித்தால் அந்த மனுசன் தனி ஈழம் ஏன் கேட்கவில்லைன்னே கொடச்சல் குடுப்பாரு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: சிபிஐ..சிபிஎம்..என்ன முடிவெடுத்திருக்கிறது.

கூட்டாக: ம்கும். தொகுதி கொடுத்தா தோள்ள, தோத்துப் போனா தலையிலன்னு வசதியா துண்டு வச்சிருக்கோம்ல. இதுல முடிவு என்னாத்த எடுக்கறது போங்க தோழரே அங்குட்டு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமா: ஏங்க ஏங்க நிருபரே! என்ன மட்டும் ஒன்னும் கேக்காம போறீங்க?

நிருபர்: கேக்கலைன்னாலும் சொல்லாமலா இருக்கப் போறீங்க. பழசுல இருந்தே தேத்திக்குவோம். பஸ்ஸ புடிக்கணும். வர்ட்டா.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: அல்லோ அல்லோ நக்கீரன் நிருபர் சார்! நில்லுங்க.

நக்கீரன் நிருபர்:
அட போய்யா நான் மாட்டேன். எவனப் பார்த்தாலும் இன்னைக்கு இஷ்யூல திமுக கூட்டணி முறிவு..வெளிவராத மர்மங்கள்னு போட்டாங்களே..என்னா மர்மம் சொல்லுன்னு உசிரெடுக்கறாய்ங்க. இப்ப பீலாவும் விட முடியாம போட்டதையும் மறுக்க முடியாம பல்பு குடுத்துட்டாரு கலைஞரு.
----------------------------------------------------------------------------------------------------------------
பொதுஜனம்: யோவ் நிருபரே! என்னமோ வெரட்டி வெரட்டி அவங்கள எல்லாம் கேக்குற. நான் ஓட்டு போட்டாதான்யா கேள்வி கேக்க அவங்க ஆளு. என்ன கேக்க மாட்டியா?

நிருபர்: ஙே!....
__________________________________________________________________________________

17 comments:

ஓலை said...

Jolly thaan.

ராஜ நடராஜன் said...

அரேபிய மொழியில் j என்ற எழுத்து இல்லாததால் எகிப்தியர்கள் ஜெ வை ங என்றுதான் உச்சரிப்பார்கள்.உதாரணத்திற்கு ராஜான்னு ராகா:) அதே மாதிரி வட இந்திய ஊடகக்காரர்களுக்கு ஞ வருவதில்லை.உதாரணம் கலீங்கர்:)

ராஜ நடராஜன் said...

//நிருபர்: மருத்துவர் ஐய்யா. உங்க கிட்ட இருந்து ஒரு சீட்ட புடுங்கிட்டாரே கலைஞர்.

மருத்துவர்: கலைஞர் ஒன்னொன்னா எத்தனை சீட்டை வேணுமானாலும் புடுங்கட்டும் எம்மவனுக்கு அந்த ஒத்த சீட்டு கிடைச்சா சரி.//

முடியலீங்ண்ணா:)

ராஜ நடராஜன் said...

நச் விட களை கட்டுது பேட்டி:)

பழமைபேசி said...

நாடகப் பொழப்பு சந்தி சிரிக்கிது... அண்ணனோட நகை அதை நல்லாவே பதம் பார்க்குதுங்கோ!!

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நகைச்சுவை.

ரோஸ்விக் said...

சூப்பரப்பு.... :-)))

'பரிவை' சே.குமார் said...

ஐயா...
கலக்கிட்டிங்க...

Unknown said...

எனக்கென்னமோ நாமலும் உப்பு போட்டு சாப்பிடுறத நிறுத்திட்டா நல்லதுன்னு தோனுது...

ttpian said...

முனியாண்டி கோவிலில் ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை பலியிடுவதை பார்த்திரிக்கிறேன்:
இப்போது அறுபத்து முன்று ஆடுகளை பலி aakappOvathai
பார்க்கபோகிறோம்

க.பாலாசி said...

ஹா..ஹா.. என்னா லொள்ளு உங்களுக்கு... எங்க கலீஞ்ஞர என்னா ஓட்டு ஓட்டுறீங்க.. ஆனா இந்த நிருபருங்க படுற பாட்ட பாத்தீங்களா...

ஆனா சி.பி.எம் மேட்டரு செம கலக்கல்...

settaikkaran said...

எல்லா தலைவரும் முன்னே சொல்லிட்டிருந்தாய்ங்க: நாட்டுலே இந்த நிருபருங்க தொல்லை தாங்க முடியலேப்பா....!

இப்போ நிருபருங்க சொல்றாங்களாம்: இந்த தலீவருங்க பண்ணுற பேஜாரு தாங்க முடியலேப்பா...

Thangarajan said...

//நிருபர்: மருத்துவர் ஐய்யா. உங்க கிட்ட இருந்து ஒரு சீட்ட புடுங்கிட்டாரே கலைஞர்.

மருத்துவர்: கலைஞர் ஒன்னொன்னா எத்தனை சீட்டை வேணுமானாலும் புடுங்கட்டும் எம்மவனுக்கு அந்த ஒத்த சீட்டு கிடைச்சா சரி.//

அருமை.

நல்ல பதிவு.

ஜோதிஜி said...

நச் விட களை கட்டுது பேட்டி:)

உண்மைதான்.

1 2 3 ன்னு போட்டு கிளப்ப வேண்டியது தானே?

செந்தில் சொன்னதும் உண்மைதானே?

ரிஷபன் said...

ம். கிளப்புங்க..

Paleo God said...

சார் அந்த பிரியாணிக்கும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டிபன் ரேட் போட்டிருக்காங்களே அதையும் எழுதுங்க
:))