Saturday, November 27, 2010

நறுக்னு நாலு வார்த்த V5.4

தமிழர்கள் பயன் பெறும் வகையில் அதிகாரப் பகிர்வு:ராஜபக்சே உறுதி
யாரு எச்ச? கருணாவும் பிள்ளையானும் டகுள்ஸுமா?
~~~~~~~~~~~~~~~~~~
அதிகார பகிர்வு திட்டம் பரிசீலனையில் உள்ளது: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்
அண்ணன், தம்பி, பிள்ளைங்களுக்குள்ளயா?
~~~~~~~~~~~~~~~~~~
ராஜபட்சேவிடம் உதவி கேட்கவில்லை: நேபாளம்
அதுவே பிச்சை எடுத்த பெருமாளு. இதுல இவரு ஒதவி வேற..
~~~~~~~~~~~~~~~~~~
மறுகுடியமர்த்த வேண்டிய தமிழர்கள் 20 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா
மிச்சமெல்லாம் தோட்டம் தொறவுன்னு மாளிகை கட்டி போய்ட்டாங்களா கிச்சு?
~~~~~~~~~~~~~~~~~~
யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்: எஸ்.எம்.கிருஷ்ணா அடிக்கல் நாட்டுகிறார்
அடுத்த வருசம் போய் திரும்ப அங்கனயே இன்னோரு கல்லும் நடுவீரு. போங்கடாங்.
~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா ரூ.1880 கோடி கடன்
குடிக்கறது கஞ்சி தண்ணி..கொப்புளிக்கறது பன்னீராம்..இங்க ரயில் உடுங்கடான்னா துட்டுல்லன்றான். எவனுக்கோ தானம்.
~~~~~~~~~~~~~~~~~~
தமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் ஏன் குடியேறக்கூடாது? கேள்வி எழுப்புகிறார் ராஜபக்சே!
சிங்களவன் என்ன? சைனாக்காரன், பிலிப்பைன்ஸ், ரஷ்யா யார் வேணுமானாலும் குடியேறலாமே. உனக்கு துட்டு வந்தா சரி.
~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை தமிழர் புனரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு திருப்தி அளிக்கிறதா? கனிமொழி
யக்கா! யக்கோஓஓவ். பதினஞ்சு நாள்ள திரும்பி வருவேன். கம்பிக்குள்ள இருக்குறவங்கல்லாம் கட்டடத்துக்குள்ள இருக்கணும்னு சவுண்ட் உட்டியேக்கா? கேக்குது பாரு கேள்வி. இந்தியாக்கு திருப்தியாவாம். சொக்கு சோக்கா ஆமாம்னா நைனாவின் சாதனைன்னு பீத்திக்கலாம். த்த்த்த்த்தூஊஊஉ
~~~~~~~~~~~~~~~~~~
பாராளுமன்றம் முடக்கம்:79 கோடி இழப்பு
ஆயிரம் கோடில ஊழல் பண்றவனுங்களுக்கு இது சரக்குக்கு ஊறுகா மாதிரி.
~~~~~~~~~~~~~~~~~~
நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக எம்பிக்கள் தினப்படியை பெற்றுக்கொள்வது ஏன்? காங். கேள்வி
தினம் வந்து முடக்கறாங்கள்ள. கூலி வாங்காம போக கேனையா?
~~~~~~~~~~~~~~~~~~
பிரதமர் பதவியில் விருப்பம் இல்லை: ராகுல்
மம்மி கிட்ட சொன்னா இலங்கை மாதிரி இனிமே ஜனாதிபதிதான் பிரதமரு. பிரதமர்தான் ஜனாதிபதின்னு சொல்லிட்டு போறாய்ங்க..மம்மீஈஈஈஈ
~~~~~~~~~~~~~~~~~~
தேவேகவுடா குடும்பத்தின் ஊழல்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்வேன்: எடியூரப்பா
அவரு பதிலுக்கு உங்க கதைய எடுத்து உடுவாரு. இதெல்லாம் பார்த்தா ஓட்டு போடுறோம்.
~~~~~~~~~~~~~~~~~~
அரசியல் கணக்கினை முடிப்பதற்கான நேரம் நெருங்கி விட்டது:ஜெ.
கூட்டி கழிச்சி பார்த்ததில ஓட்டுக்கு எவ்ளோங்க?
~~~~~~~~~~~~~~~~~~
ஒற்றுமை இருந்தால் வீழ்த்த முடியாது: கலைஞர்
கொள்ளையடிக்கப் போனா கூட்டு ஆவாதுன்னு சொல்லுவாங்களே தல.
~~~~~~~~~~~~~~~~~~
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழி திமுக ஆட்சியில் பொருத்தமாக இருக்கிறது: ஜெ.
யம்மோவ். பையனூரும் உங்க பையன் கலியாணமும் கூடத்தான் பொருத்தமா இருந்திச்சின்னு நாளைக்கு அந்த மனுசன் சொல்லுவாரு.
~~~~~~~~~~~~~~~~~~
ஏழைகளுக்கு கல்வி செல்வம் அளிக்கும் கனவு நிறைவேறியுள்ளது: கலைஞர் பெருமிதம்
ஏழைகளுக்கு செல்வம் கனவுதாம்யா. 
~~~~~~~~~~~~~~~~~~
ஆண்கள், பெண்கள் கபடியில் இந்தியாவுக்கு தங்கம் ..
ஒருத்தர் கால ஒருத்தர் வார்ற விளையாட்டுல இது கூட வாங்கலைன்னா நாம ஆணியே புடுங்க வேணாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

35 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல குட்டு...
கனிமொழி, ரயில்வே, நேபாளம்... ஹைலைட்...
முதக் கொடி வாங்கிட்டேன் போல...

ஈரோடு கதிர் said...

ரொம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு ’நறுக்’

’பக்சே’ பகிர்வுத் திட்டம் ஒன்லி நாமல்க்குதான். தம்பி ரெண்டும் டம்மியாகப்போகுது.

||மறுகுடியமர்த்த வேண்டிய தமிழர்கள் 20 ஆயிரம் பேர்:||

ங்கொய்யாலே, கொழும்புல இருந்து யாழுக்கு ஃபிளைட்ல போகும் போது முகால் இருக்கிறத எண்ணிப் பார்த்திருப்பாரோ!

||தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்||
இடிச்சத கட்டுறாங்களோ!?

பிரபாகர் said...

தாமதமா நறுக்கினாலும் நச்-னு இருக்குங்க ஆசான்...

பிரபாகர்...

Thekkikattan|தெகா said...

பிரதமர் பதவியில் விருப்பம் இல்லை: ராகுல்
மம்மி கிட்ட சொன்னா இலங்கை மாதிரி இனிமே ஜனாதிபதிதான் பிரதமரு. பிரதமர்தான் ஜனாதிபதின்னு சொல்லிட்டு போறாய்ங்க..மம்மீஈஈஈஈ//

ஒரு பாட்டில் நாட்டுச் சாராயம், ஆட்டுக்கால் சூப்பு, ஆட்டுத் தலை, மீன் வறுவல் எல்லாம் வைச்சு படையல் போட்டு நாட்டு மக்கள் எல்லாம் சாஸ்டாங்கமா விழுந்து வணங்கி கூப்பிட்டா ஒரு வேள மனமிரங்குமோ என்னவோ சாமீஈஈ... நாட்ட அழகாக்கி காமிக்க (ஏன்னா, செவப்பா அழகா இருக்காரில்ல).

a said...

//
நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக எம்பிக்கள் தினப்படியை பெற்றுக்கொள்வது ஏன்? காங். கேள்வி
தினம் வந்து முடக்கறாங்கள்ள. கூலி வாங்காம போக கேனையா?
//
ha ha ha.......

Unknown said...

நறுக் நறுக்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நச்

பழமைபேசி said...

@Sethu

Thanksgiving feast மிச்சம் மீதியா இப்படிக் கடிபடுது??

துமிழ் said...

real நறுக்

காமராஜ் said...

//மறுகுடியமர்த்த வேண்டிய தமிழர்கள் 20 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா
மிச்சமெல்லாம் தோட்டம் தொறவுன்னு மாளிகை கட்டி போய்ட்டாங்களா கிச்சு?

யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்: எஸ்.எம்.கிருஷ்ணா அடிக்கல் நாட்டுகிறார்
அடுத்த வருசம் போய் திரும்ப அங்கனயே இன்னோரு கல்லும் நடுவீரு. போங்கடாங்.
~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா ரூ.1880 கோடி கடன்
குடிக்கறது கஞ்சி தண்ணி..கொப்புளிக்கறது பன்னீராம்..இங்க ரயில் உடுங்கடான்னா துட்டுல்லன்றான். எவனுக்கோ தானம்.

நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக எம்பிக்கள் தினப்படியை பெற்றுக்கொள்வது ஏன்? காங். கேள்வி
தினம் வந்து முடக்கறாங்கள்ள. கூலி வாங்காம போக கேனையா?

ஆண்கள், பெண்கள் கபடியில் இந்தியாவுக்கு தங்கம் ..
ஒருத்தர் கால ஒருத்தர் வார்ற விளையாட்டுல இது கூட வாங்கலைன்னா நாம ஆணியே புடுங்க வேணாம்.//

இவையெல்லாமே டாப் மற்றவையெல்லாம் மோசமில்லை.அதுகளுக்கு நமுட்டுச்சிரிப்பும் இதுகளுக்கு வெடிச்சிரிப்பும்
வந்துடுது. வீட்லதான் ஒரு மாதிரியாப்பாக்றாங்க.

அண்ணா அரசியலும் அரசியல் சார்ந்தவை மட்டும்தான் இந்த நறுக் பட்டியலுக்குள்ளாற வருமா ?

Unknown said...

சூப்பரோ சூப்பர்

சங்கரியின் செய்திகள்.. said...

இதிலேயும் வழக்கமான முத்திரை !!

ஜோதிஜி said...

நறுக்கென்று என்று போடுவதை விட நாண்டுக்கிட்டு என்று மாற்றலாம் போலிருக்கு.........

போர் முடிந்த பிறகு அதிகாரபூர்வமாக 500 அதிகாரபூர்வமற்ற முறையில் 1000 கோடி கொடுத்தார்கள்.

அதற்குப் பிறகு எத்தனை கோடிகளை இந்த கேடிகள் கொடுத்தார்களோ?

வாங்கிய பணத்தை வீடு கட்ட உதவியிருந்தாலும் இந்நேரம் அடுக்கு மாடி குடியிருப்பே கட்டி கொடுத்து இருக்கலாம்?

ஹம்பன்தோட்டா ரீலிஃப் பண்ட் என்று ராஜபக்ஷே ஆழிப்பேரலை வந்த போது ஒரு நலத்திட்டம் தனியாக தொடங்கி 50 கோடியை தன் பைக்குள் போட்டுக் கொண்டவருக்கு இந்த கோடிகளை என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?

கிச்சு என்ற கிருஷ்ணா பேரே நல்லாயிருக்கு. கன்னட பிரசாத்திடம் இவரைப் பற்றி கேட்டால் லீலைகள் நிறைய உள் வாங்க முடியும்.

ம்ம்ம்........

காலங்கள் போய்க்கொண்டேதான் இருக்கிறது.

நாமும் இவர்களை தலை என்று தறுதலையாய் வாழ்ந்து கொண்டுருக்கிறோம்.

உமர் | Umar said...

//தேவேகவுடா குடும்பத்தின் ஊழல்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்வேன்: எடியூரப்பா//

விந்தை மனிதன் எழுதிய 'நான் மட்டுமா தின்னேன். உங்கண்ணனுந்தான்' கதைதான் நினைவுக்கு வருகின்றது.

--
கருணாநிதி எழுதின கடிதத்தை விட்டுட்டீங்களே. கிச்சு பயணத்தோட ஹைலைட்டே அதானே. ஒருவேளை, கிச்சு பயணத்தால தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடந்திருந்தா, நான் கடிதம் எழுதிதான் அது நடந்துச்சின்னு கதை விட்டுருப்பாரே. அடுத்தது, யாரு போறாங்கன்னு பாத்திக்கிட்டு இருக்காரு, மீண்டும் கடிதம் எழுதத் தயாராவதற்கு.

ராஜ நடராஜன் said...

//அதுவே பிச்சை எடுத்த பெருமாளு. இதுல இவரு ஒதவி வேற..//

ஆஹா!வந்துடுச்சா நச்!

ராஜ நடராஜன் said...

//தமிழர்கள் பகுதியில் சிங்களவர்கள் ஏன் குடியேறக்கூடாது? கேள்வி எழுப்புகிறார் ராஜபக்சே!
சிங்களவன் என்ன? சைனாக்காரன், பிலிப்பைன்ஸ், ரஷ்யா யார் வேணுமானாலும் குடியேறலாமே. உனக்கு துட்டு வந்தா சரி.//

எதுக்குதான் நான் பின்னூட்டம் போடுவேனோ?

ராஜபக்சேவுக்கு ஆப்பு வைக்க ஒருத்தனும் வரமாட்டேங்கிறானே:(

suneel krishnan said...

//யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்: எஸ்.எம்.கிருஷ்ணா அடிக்கல் நாட்டுகிறார்
அடுத்த வருசம் போய் திரும்ப அங்கனயே இன்னோரு கல்லும் நடுவீரு. போங்கடாங்//

super:)

ராஜ நடராஜன் said...

//பிரதமர் பதவியில் விருப்பம் இல்லை: ராகுல்//

பார்க்கத்தானே போகிறோம்.

Ahamed irshad said...

எல்லாமே பிர‌மாத‌ம்'ன்னு பார்த்தா அந்த‌க் க‌டைசி க‌ப‌டி ந‌றுக்கோ ந‌றுக்கு..டாப் கிய‌ர‌ போட்டு தூக்குங்க‌ண்ணா.......

ராஜ நடராஜன் said...

தமிழர்களின் உண்மையான் உணர்வுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன.

Unknown said...

சொரணை கெட்டுப் போச்சு ...

Prabu M said...

நறுக்கென்ற கேள்விகளுக்குப் பதில்சொல்வார் யாருமில்லையே... :‍(

சிநேகிதன் அக்பர் said...

அடிச்சி துவச்சி காயப்போட்டுட்டிங்க :)

ரிஷபன் said...

கேள்வியும் பதிலும் சரவெடி..

vasu balaji said...

@சே.குமார்
நன்றி குமார்

vasu balaji said...

நன்றி கதிர்:)
நன்றி பிரபா
தெ.கா.:)))).
நன்றி யோகேஷ்
நன்றி சேது
நன்றி டி.வி.ஆர். சார்.
நன்றி துமிழ்

vasu balaji said...

@@நன்றிங்க காமராஜ். பட்டியல்ல பலதும் வரும். அதுக்கு தனியா ஒரு பதிவில்ல போடணும்:))
நன்றிங்க கலாநேசன்
நன்றிங்க சங்கரி
நன்றி ஜோதிஜி. ஆமாங்க
நன்றிங்க கும்மி. ஆமாம். நல்ல கதை அது.

vasu balaji said...

@dr suneel krishnan

நன்றிங்க டாக்டர்.

vasu balaji said...

@ராஜ நடராஜன்
/தமிழர்களின் உண்மையான் உணர்வுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. /

நன்றிண்ணோவ்:)

vasu balaji said...

@கே.ஆர்.பி.செந்தில்

அது மொத்தமாப் போச்சு செந்தில்.

vasu balaji said...

@பிரபு . எம்

அதான் தேர்தலப்ப காசு குடுத்து வாயடைச்சிடறாங்களே:(

vasu balaji said...

@@நன்றி விசா
@@நன்றி அக்பர்
@@நன்றி ரிஷபன்.

Paleo God said...

சுறுக்..

ஹும்ம்..

இன்னும் எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவாரிந்த நாட்டிலே...!

தாராபுரத்தான் said...

சுருக்குன்னு இருக்குதுங்கோ.

க.பாலாசி said...

//ஒற்றுமை இருந்தால் வீழ்த்த முடியாது: கலைஞர்
கொள்ளையடிக்கப் போனா கூட்டு ஆவாதுன்னு சொல்லுவாங்களே தல.//

எது? அது அந்தக்காலம்.. இப்பல்லாம் கூட்டமாச் சேர்ந்தாத்தான் கொள்ளையடிக்கமுடியும்.

அட போங்க...ரொம்ப லேட்டா பாத்திட்டேனே.. ரைட்டு..