Monday, November 29, 2010

விடியா மூஞ்சி வேலைக்குப் போனா...

இன்று ஒரு பழைய சக ஊழியர், சீனியர் வந்திருந்தார். வழக்கமான விசாரிப்புகளின் பின் அவரவர் குடும்பம் பற்றிய விசாரிப்பு தொடர்ந்தது. மிக நல்ல மனிதர். கடும் உழைப்பாளி. மகனுக்கு சரியான வேலையில்லை. பிஸினஸ் செய்கிறேன் என்று செட்டில்மெண்ட் பணத்தையும் சேர்த்துக் கரைத்ததுதான் மிச்சம்.

நேர்மையான நடுத்தரக் குடும்பக்காரன், அதுவும் ஒரு பெண்ணைப் பெற்றவன் அது பிறந்த நாளிலிருந்தே நகை, நட்டு, பாத்திரம் பண்டம் என்று எல்லாம் சேர்த்து வைத்து, கலியாணத்துக்கும் கொஞ்சம் காசு சேர்த்தாலும் கடன் இல்லாமல் முடியாது என்பது விதி அல்லவா. மகளுக்கு ஏதோ கம்பெனியில் நல்ல உத்தியோகம் என்று முடிவு செய்து நிச்சயதார்த்தமும் முடிந்த மாப்பிள்ளை, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், போனால் திரும்புகையில் சூட்கேஸில்தான் பணம் கொண்டு வரமுடியும் எனவும் போட்ட போட்டில் மனிதர் என்ன செய்வார்.

ரொக்கம் கொஞ்சம் குறைவதாக மறைமுக பேரத்தில் பட்ஜெட் எங்கேயோ பிய்த்துக் கொண்டு போனதாம். 2 வருடத்தில் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்காமல் இனி வெளிநாடு சரிப்படாது என்று வேலையை விட்டுவிட்டு, இங்கே இருந்த வேலையும் போய், இவரும் பிஸினஸ் என்று மாமனாரைச் சார்ந்தால் என்ன செய்வார்? இனி பிஸினஸுக்கு இருக்கும் வீட்டை விற்க முடியாது என்ற விழிப்பில் கை விரிக்க, எதோ வேலை என்று தாவித் தாவி போவதும் வருவதுமாக இரண்டு குடும்பங்களும் அவரைச் சார்ந்தேயிருப்பதாக வருத்தப்பட்டார்.

கஷ்டப்படுபவருக்கு இப்படி மேல்மேலும் கஷ்டம்தான் என்றாலும், அதெப்படியோ ஒரு சிலருக்கு மட்டும் இப்படி சேர்த்து வைத்ததெல்லாம் செல்லாத காசு என்பது போல அமைந்துவிடுகிறது. அப்படி அமைந்த இரண்டு கேஸ்களை நினைவு கூர்ந்தேன். கொஞ்சமும் அசூயையின்றி ரசித்துச் சிரித்தவரைப் பார்க்க பாவமாய் இருந்தது.

முதலாமவருக்கு மைலாப்பூரில் சொந்தவீடு. அஃபீசில்  பேண்ட் ஷர்ட் பிட் தவணை வியாபாரமும் செய்துவந்தார். மூக்கு அபாரம். மதியம் லஞ்ச் நேரத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்தே ‘என்னம்மா லக்ஷ்மி! எலுமிச்சம் சாதமா? உருளைக்கிழங்கும் சேர்த்து வாசனை தூக்குதே’ என்பார். ஆமாம் என்று சொல்லிவிட்டு சாப்பிடவா முடியும்? டிஃபன் பாக்ஸ் மூடியில் கொஞ்சம் ஷேர் வரும். கூட சாப்பிடுபவர்களும் தங்கள் பங்குக்கு படையல் வைப்பார்கள். இப்படியே பெரும்பாலான நாட்கள் ஓடிவிடும்.

மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததும் புலம்பலும் ஆரம்பித்தது. வசதிக்குத்தக்க மாப்பிள்ளையும் வேணும், காசும் கரிசனமாயிருக்கணுமென்றால் முடியுமா? வரதட்சிணை, வைரத்தோடு கேட்ட சம்பந்தியம்மா இவர் திட்டியது கேட்டிருந்தால் தற்கொலை பண்ணிக் கொண்டிருப்பார். மாப்பிள்ளை எனக்கு கலியாணமே வேண்டாம் என்று சன்னியாசியாய் போயிருப்பான்?

வந்தார் ஒரு அமெரிக்க மாப்பிள்ளை. முன்னதாக ஃபோன் செய்து தான், தன் பெற்றோர், தன் தமக்கை மற்றும் அவள் கணவர் ஐந்து பேர்தான். இன்ஃபார்மல் மீட் என்று சொன்னதும், மனுசனுக்கு சினிமா கவனம் வந்துவிட்டது போல. மாப்பிள்ளை வந்தார். பெண்ணைப் பார்த்தார். பிடித்திருக்கிறது என்று பட்டென்று சொல்லிவிட்டு தான் 3 மாத விடுமுறையில் வந்திருப்பதாகவும், திருமணம் விரைவில் முடிய வேண்டும் வசதிப்படுமா என்றதும், மனதில் உட்கார்ந்திருந்த வண்டு குடைய ஆரம்பித்தது.

அம்மா, அப்பா, அக்கா என்று இழுத்ததும் என் விருப்பம் அவர்களுக்கு சம்மதம் என்று கத்தரி நறுக்கிற்று. வாய்தா வாங்க முடியாமல், சரி ஒரு நல்ல நாள் பார்த்து லௌகீகம் பேச வருகிறோம் என்றதும், மாப்பிள்ளை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சீர் மண்ணாங்கட்டி எதுவும் தேவையில்லை. உங்கள் மகளுக்கு என்ன நகை போடுவீர்களோ உங்கள் இஷ்டம். பாத்திரம் பண்டம் வாங்கி வைத்திருந்தால் யாராவது ஏழைப் பெண்ணுக்கு திருமணத்துக்கு கொடுத்துவிடுங்கள். எங்கள் உறவினர்கள் என்று ஐம்பது பேர் வரக்கூடும். நல்ல சத்திரமாக இருக்க வேண்டும் என்றதும், இது ஃப்ராடு கேசு என்ற பயமே வந்துவிட்டது.

மனதைப் படித்தவன் போல் மாப்பிள்ளை, என்ன சந்தேகமா இருக்கா? எனக்கு முதல் கலியாணம்தான். ப்ரைவேட் இன்வெஸ்டிகேஷன் பண்ணனும்னா பண்ணிக்கலாம். ஐ வில் பே ஃபார் இட். மெடிக்கல் செக்கப்புக்கும் ரெடி என்று ஆப்பு வைத்தான். ஒரு பக்கம் பயமிருந்தாலும் விடவா முடியும்? துணிந்து ஒப்புக் கொண்டு கலியாணமும் முடித்து அனுப்பி ஆறு மாதத்தில் பாஸ்போர்ட் வாங்கணும்யா! மாப்பிள்ளை வந்தே ஆகணுமுன்னு ஒத்தக்கால்ல நிக்கிறான் என்று வாயெல்லாம் பல்லாக நின்றார்.

அடுத்த பார்ட்டி ரெம்ம்ம்ம்ம்ம்ப நல்ல மனுஷன். நல்லவர்தான். ஆனால் நல்லது என்பதை வாயால் சொன்னாலும் சந்தோஷப்பட்டு விடுவார்களே என்பதால் சொல்லமாட்டார். ப்ரொமோஷன் வந்தால் ஒரு ஐம்பது ரூபாய் கூட சம்பளம் வருமென்று காத்திருப்பவர் போய் கேட்பார். ‘அதெல்லாம் இப்ப வராதுய்யா! இன்னும் டைம் ஆகும்!’ என்று சொல்லுவார். கேட்டவர் நொந்து போய் சீட்டுக்குத் திரும்பினால் ப்ரோமோஷன் ஆர்டர் காத்திருக்கும்.

கேட்டபோதே இப்போதான் போட்டு அனுப்பியிருக்கிறேன் என்று சொல்லிச் சந்தோஷப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அவ்வளவு நல்ல மனிதர். இவருக்கும் ஒரு மகள். ச்ச்சும்மா வாக் இன் இண்டர்வ்யூவில் சிடி பேங்கில் உடனடியாக வேலை கிடைத்தது. அப்பாடா, இன்னும் வசதியாகப் பார்க்கலாம் என்று இருந்தபோது மேனேஜராக ப்ரொமோஷனும் கிடைத்தது. ஏதோ மீட்டிங்கில் பார்த்த இன்னோரு மேனேஜருக்குப் பிடித்துவிட பெண் கேட்டு வந்தார்கள். ஜாதகம் இத்தியாதி பொருந்திப் போக, ஆசைப் பட்ட பெண்ணாயிற்றே! அது இது என்று கேட்காமல் போட்டது போதும் என்று அதிக செலவில்லாமல் திருமணமாகிவிட்டது.

இருங்க இருங்க! இனிமேல்தான் க்ளைமாக்ஸே. ரிட்டையர் ஆகி 15 வருடம் கழித்து, தி. நகரில் ரெண்டரை க்ரவுண்டு நிலத்தில் பெரிய வீட்டை  மண்டையைப் போடுமுன் மகளுக்கு எழுதி வைக்கும் மாமியார் வாய்க்கும் அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு  இருக்கும்? நம்மவருக்கு அதுவும் வாய்த்தது.

இதைச் சொன்னவர், அதே தி. நகரில் தன் சொந்த வீட்டை ஃப்ளாட் ப்ரமோட்டருக்கு விற்று, தனக்கும் தன் ஒரே மகனுக்கும் ஆளுக்கு ஒரு ஃப்ளாட்டும் கணிசமான தொகையும் பெற்றவர். சர்வீஸ்ல ஒருத்தனுக்கு நல்லது பண்ணவனில்லை அவன். அவனுக்கு அடிச்ச அதிர்ஷடத்தப் பார்த்தியா? ரிட்டையராகி 15 வருஷம் கழிச்சு  அடிச்சான் பாரு ப்ரைஸ். கிட்டத்தட்ட 2 கோடி பெறும் அந்த வீடு! ஹூம்! நாமளும்தான் பொறந்திருக்கோம் என்று அவர் என்னிடம் சலித்துக் கொண்டபோது நான் 900ரூ வாடகையில் வாயைத் திறந்து படுத்தால் காரை விழுந்து நிரப்பும் ஒரு வீட்டில் குடியிருந்தேன்.
~~~~~~~~

69 comments:

பழமைபேசி said...

சேதுகாரு... நேனே..

பழமைபேசி said...

ஆகா... எல்லாம் கொடுப்பினை வேணுமுங்க...சுவாரசியம்!

ஆமாங்ணே, விடிஞ்ச மூஞ்சி, விடியா மூஞ்சி... இதுக்கு என்ன பொருள்?

தளபதி, படிச்சுட்டு பதில் சொல்றாரா பார்ப்போம்!

பிரபாகர் said...

அண்ணன் முந்திகிட்டாரு. படிச்சிட்டு வர்றேன்...

பிரபாகர்...

பனித்துளி சங்கர் said...

உண்மைதான் அய்யா எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை . அருமையானப் பதிவு . நேர்த்தியான நடையில் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

பவள சங்கரி said...

சார்......எங்கதான் புடிக்கிறீங்களோ இப்படி சம்பவமெல்லாம்.....நல்ல பகிர்வு சார். பாவம்...விடியாமூஞ்சி.....

பிரபாகர் said...

என் கூட டிகிரி படிச்சவங்கள்ல ஒருத்தன் இன்னும் டிகிரியே முடிக்கல...! லண்டன்ல செட்டில் ஆகி பெரிய ஆளாயிருக்கான்!... எல்லாம் நேரம், சூழல்தான்... கிரகம் இன்னும் படாத பாரு படுறேன்... இந்த மாதிரியும் சில பேர் சொல்லலாம்!... எல்லாம் நேரம். ஆனாலும் நாம் சந்திக்கின்ற மனிதர்களில்தான் நிறையபேர் சுவராஸ்யமானவர்களாய்த்தான் இருக்கிறார்கள்...

பிரபாகர்...


பிரபாகர்...

சூர்யா ௧ண்ணன் said...

அருமையானப் பதிவு தலைவா!

ராஜ நடராஜன் said...

சீரியசான பதிவுக்கு சிரிப்பான தலைப்பா?

இடுகையை ரொம்ப தீவிரமா படிச்சிட்டு மறுபடியும் ஒரு தடவை விடியா மூஞ்சி தலைப்பை உற்றுப்பார்க்கும் போது சிரிப்பு கணினி தடுப்பையும் தாண்டிட்டு ஓடுது:)

Chitra said...

பல உணர்வுகளை கொட்டிய நல்ல பகிர்வு. உங்கள் எழுத்து நடையில், அப்படியே கட்டி போட்டு விட்டீர்கள்!

Kumky said...

ஹூம்.,

மாதச்சம்பளக்காரர்கள் பாவம் செய்தவர்கள் போல..

வாழ்வின் எல்லையில் ஒன்றோ இரண்டோ கல்யாணமுடித்தலும் ஒரு வீடும் விதிக்கப்பட்டதாகிவிடுகிறது.

கடைசியில் அசந்தால் வீடுமில்லையென ஆகியும்விடுகிறது.

எனக்கு நன்கு பரிட்சையமுள்ள வட்டார அளவிலான அதிகாரி ஒருவர் இரண்டு முறை தனது சம்பாத்தியம் அனைத்தையும் கரைத்து ஹஜ் போய் வந்ததுடன் சரி.

தனது அதிகார பொழுதுகளில் கை நீட்டியிருந்தால் லட்சங்களில் திளைத்திருக்க வேண்டியவர்.

வாய்க்கப்பட்ட பென்சனுடன், பழைய மூக்கு கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்தவரை பல ஆண்டுகள் கழித்து 300கிலோமீட்டர் பயணம் செய்து பார்க்கப்போயிருந்தோம், அவரின் நேர்மையான உள்ளம் நினைவில் இருந்ததனால்..

கடைசியா என்ன சார் உங்க சொத்து” என அடக்கமாட்டாமல் கேட்ட நண்பரை புன்னகையுடன் பார்த்தவர் வீட்டினுள்ளிருந்து காபி எடுத்துவந்த மனைவியை கை காட்டினார்...

கண்ணீருடன் திரும்பிவிட்டோம்.

Unknown said...

"சேதுகாரு... நேனே.."

தெலுசண்டி. பாக சந்தோசம்.

செ.சரவணக்குமார் said...

எத்தனை மனிதர்கள்.. எத்தனை விதமான அனுபவங்கள். எல்லாவற்றையும் அழகாகப் பதிவு செய்கிறீர்களே.. க்ரேட் சார்.

Unknown said...

சார்! பண புலம் வைத்து ஒருவர் ரொம்ப முன்னேரிட்டார்னு எடை போடக் கூடாது. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. உயரிய சிந்தனையே முக்கியம்.

பணம் வர வர சொந்த பந்தங்கள் தூர விலகிகிட்டே போயிட்டுருக்கும். அது என்ன பெரிய வாழ்க்கை.

உங்கள் விவரிப்பிளிருந்து சராசரி மனிதர்களின் எண்ணங்கள் நன்கு வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு வித்யாசம்.

a said...

rompa suvarasyam...

சிவராம்குமார் said...

எல்லாருக்கும் எல்லாம் கிடைச்ச நாங்க எப்படி இப்படி ஒரு பதிவை படிக்கிறது!!!

நிகழ்காலத்தில்... said...

விதிகளுக்குள் அடங்காத நிகழ்வுகள்..

உங்கள் கைவண்ணத்தில் கண்முன்னே விரிகிறது..

பழமைபேசி said...

@Sethu

ச்சால -- நிறைய
பாக -- நல்ல

யார்கிட்ட?

Kumky said...

சிவா என்கிற சிவராம்குமார்


எல்லாருக்கும் எல்லாம் கிடைச்ச நாங்க எப்படி இப்படி ஒரு பதிவை படிக்கிறது!!!

ஹூம்...அவங்கவங்களுக்கு அவங்கவிங்க கஷ்டம்...இவருக்கு இவரோட துக்கம்..
:))))))))

Unknown said...

எப்பிடி சார் தெலுகுல (தெலுங்கு) சரியா பேசி, பழமையார ஒத்துக்க வைக்கிறது. கஷ்டம் சார்.

தமிழ்ல தான் பிழை கண்டுபிடிக்கிறார்ணா, தெலுங்கிலும் இடும்புப் புடி பிடிக்கிறார்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல பகிர்வு. நன்றி !

கலகலப்ரியா said...

அப்பால படிச்சுக்கறேன் சார்..

vasu balaji said...

@Sethu
/தெலுங்கிலும் இடும்புப் புடி பிடிக்கிறார். /

இடும்பு காதண்டி சேதுகாரு. அதி உடும்பு:))

vasu balaji said...

@கலகலப்ரியா
/அப்பால படிச்சுக்கறேன் சார்.. /
ம்ம்ம். சரி. விடமாட்டேன்ல:))

Unknown said...

@Sethu
/தெலுங்கிலும் இடும்புப் புடி பிடிக்கிறார். /

இடும்பு காதண்டி சேதுகாரு. அதி உடும்பு:))

---------

ஐய்யோஓஓ ! கொல்லுறாங்களே அப்பூஊஊஊ !

Unknown said...

கலகலப்ரியா said...
அப்பால படிச்சுக்கறேன் சார்..

அப்ப பின்னூட்டம் not allowed.

தளபதிக்கு மட்டும் தான் அனுமதி.

vasu balaji said...

தளபதி எங்க ஆளையேக் காணோம். துண்டத் தூக்கிட்டு அலையுறாரோ? கடையும் காத்தாடுது.

இராகவன் நைஜிரியா said...

பூர்வ ஜன்ம புண்ணியம்... கர்மா என்று சொல்லுவெதல்லாம் உண்மையா இருக்குமோ? # டவுட்டு

Paleo God said...

ஹும்ம் ( பெருமூச்சு! ) :))

// இராகவன் நைஜிரியா said...
பூர்வ ஜன்ம புண்ணியம்... கர்மா என்று சொல்லுவெதல்லாம் உண்மையா இருக்குமோ? # டவுட்டு//

இப்படியெல்லாம் சமாதானப் பட்டுக்கவேண்டியதுதாண்ணே ! :))

vinthaimanithan said...

வெரி இண்ட்ரஸ்டிங்! அப்புறம் இடுகையில வயசு தெரியுது சாமீய்! கொஞ்சம் உசாரு!

பழமைபேசி said...

//அப்புறம் இடுகையில வயசு தெரியுது சாமீய்! கொஞ்சம் உசாரு!!//

அண்ணே, கொஞ்சம் இளம் இடுகையாப் போடுங்க...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள்; மனிதர்கள்; அவர்களின் அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் பற்றி அருமையாகவும் நகைச்சுவையாகவும் பதிவு செய்திருக்கிறீர்கள்.

கலகலப்ரியா said...

ம்ம்... ரொம்பப் பேரு சொன்ன மாதிரி சுவாரஸ்யம் சாரே...

கலகலப்ரியா said...

@பழமைபேசி

||விடிஞ்ச மூஞ்சி, விடியா மூஞ்சி... இதுக்கு என்ன பொருள்?||

இதுக்கு நான் பதில் சொன்னா நீங்க அழுவீங்க...

கலகலப்ரியா said...

@சிவா என்கிற சிவராம்குமார்

அது செரி..

vasu balaji said...

@பழமைபேசி

ரண்டி ரண்டி பாபு.:))

vasu balaji said...

@பழமைபேசி

தளபதி மூஞ்சக் காணோமே.:))

vasu balaji said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

நன்றி சங்கர்.

vasu balaji said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றிங்க நித்திலம்.

vasu balaji said...

@பிரபாகர்

நன்றி பிரவு

vasu balaji said...

@சூர்யா ௧ண்ணன்

நன்றி சூர்யா:)

vasu balaji said...

@ராஜ நடராஜன்

ஹி ஹி. நம்ம வள்ளுவர் சொன்னதுதான். இடுக்கண் வருங்கால்..

vasu balaji said...

@Chitra

நன்றிங்க சித்ரா.

vasu balaji said...

@கும்க்கி

மாதச் சம்பளக்காரன் விதி அவ்வளவுதான் பாஸ்.:(

vasu balaji said...

@செ.சரவணக்குமார்

நன்றி சரவணா.

vasu balaji said...

@Sethu

இது தீம் அதில்லை சேது. ஓரளவு வசதி இருக்கிற இருவருக்கு விதித்த அதிர்ஷ்டமும், அதே அலுவலகத்தில் நேர்மையான ஒரு உழைப்பாளிக்கு நேர்ந்த துன்பமும்.

vasu balaji said...

@வழிப்போக்கன் - யோகேஷ்

நன்றி யோகேஷ்

vasu balaji said...

@சிவா என்கிற சிவராம்குமார்

நன்றிங்க சிவா

vasu balaji said...

@நிகழ்காலத்தில்...

நன்றி நிகழ்காலத்தில்.

vasu balaji said...

@கனாக்காதலன்
நன்றிங்க கனாக் காதலன்

vasu balaji said...

@இராகவன் நைஜிரியா

இருக்கும்போலத்தான் தெரியுது #பதில் டவுட்டு

vasu balaji said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

இல்லையா பின்ன ஹூம்ம்:))

vasu balaji said...

@விந்தைமனிதன்

நன்றிங்க. அந்த களுத வயச எதுக்கு மறைக்கிறது:))

vasu balaji said...

@பழமைபேசி

அய்யாங். நான் ஆலமரத்தடிக்கு வரமாட்டேன்.

vasu balaji said...

@VAI. GOPALAKRISHNAN

வாங்க சார். நன்றி

vasu balaji said...

@கலகலப்ரியா

நன்றிம்மா.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நான் தெனமும் விடியா மூஞ்சியோட தான் வேலைக்குப் போறேன் :) :(

CS. Mohan Kumar said...

நல்லவங்களுக்கு நல்ல மாப்பிள்ளை அமைவதில்லை; பிறருக்கு தான் அமைகிறது என்கிற தோணி இருக்கே தலைவா.. ஒரு வேளை என் புரிதல் தவறோ?

vasu balaji said...

@மோகன் குமார்
இதில் யாருமே கெட்டவர்கள் இல்லை. எல்லாரும் நல்லவர்கள்தாம்.மற்ற இருவருக்கு தாராளமாக செலவு செய்ய வசதி இருந்தும் அதற்குத் தேவையின்றி திருமணமும் அதன் பின்னரான வாழ்க்கையும் அமைவதும், நல்ல இடமென்று சக்திக்குட்பட்டுக் கடன்பட்டு செய்ய நினைத்த திருமணம் எதிர்பாராத வீண்செலவாய்ப் போவதும் எப்படி? என்கிற ஆதங்கம்தான்.

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான் அய்யா எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை . அருமையானப் பதிவு .

Thangarajan said...

நல்ல பகிர்வு.

Ahamed irshad said...

பாலா சார்..




பாலா சார்.....







பாலா சார்......
















ரொம்ப‌ தூர‌த்துக்குக் போய்ட்டீங்க‌ எழுத்து'ல‌... க்ரேட்..

க.பாலாசி said...

தலைப்பு உங்களுக்கும் பொருத்தமாத்தான் இருந்திருக்கு. சரி என்ன பண்றது குடுக்கிற தெய்வம் கூறைய பிச்சிகிட்டு கொடுக்குமாமே...

“விடியா மூஞ்சி வேலைக்குப்போனா வேலைகெடச்சாலும் கூலி கிடைக்காதாம் அந்தக் கதையா” ன்னு எங்கப்பாவ அம்மா திட்டுவாங்க..

இத்தன விசயங்களையும் ஞாபகம் வச்சி இரண்டு கேரக்கட்டரை ஒரே இடுகையில இழுத்துவிட்டுட்டீங்க.

Thenammai Lakshmanan said...

சொந்த வீடு என்பது வாடகை கொடுக்காமல் 60 அல்லது 70 வருடம் வரை தாக்குப் பிடிக்கும் ..

இதற்கு ரிப்பேர் செலவும் மெயிண்டன்ஸ் செலவுமே அதிகம் ஆகிறதே பாலா சார்..:((

ஸ்ரீராம். said...

மச்சம் என்பார்களே அதுவோ என்னவோ...!

Unknown said...

அடுத்த பதிவு என்னனு கண்டுபிடிச்சிட்டோம்ல!. 'அன்பான அப்பாவை' ஆவலுடன் எதிர்பார்க்கும் ....!

தாராபுரத்தான் said...

ஆத்து நிறைய தண்ணி போனாலும் நமக்கு ..ம்..வாய்க்கிரதுதான் வாய்க்கும்.

கே. பி. ஜனா... said...

அப்படியே அந்த நிலைமையை உணரவைக்கிற நடை!

பழமைபேசி said...

சேதுகாரு,

காலங்கடந்த ஞானோதயம்! சொந்தக் கடை வெச்சி யாவாரம் பாக்குறதைவிட, மத்தவங்க கடையில போயி நின்னுட்டு வர்றவங்க போறவங்ககிட்டக் கதை அடிக்கிறது நெம்ப நல்லா இருக்கு... இஃகிஃகி!!

Unknown said...

@பழமைபேசி

தப்பு தான். நண்பர்கள் கடையிலே கையேந்துவது இல்லையா?

சார் சொன்ன மாதிரி, கொஞ்சம் முன்னாடி கல் வெச்சுட்டேன், ஒரு துருதுருப்புல.

...ம்ம்ம்ம்