Wednesday, November 24, 2010

பாரம்பரியக் கோவணம்...

இழுத்துக் கட்டிய கம்பியில்
வந்து விழுந்தது துவைத்த அரையாடை
சற்றே முகம் சுளித்து யார் நீ என்றது
பக்கத்திலிருந்த பழந்துணி..

நீரில் நனையேன்
நின் போல் சிறு நெருப்பில் கருகேன்
நிர்வாணம் தவிர்க்க நினைப்போர்க்குக்
காவலன் நான்..நீச்சலுடை நானென்றது..

‘கட்டவே’ முடியாத நீயெல்லாம்  காவலனா சீச்சீ

பாட்டனின் பட்டாயிருந்து
பாதி பாதியாய்க் கிழிபட்டுப்பட்டு
இற்றுப் போயிடினும் இனி தைக்க
இடமின்றிப் போயிடினும்

ஒட்டுப் போட்டாலும்
ஓட்டையே விழுந்தாலும்
‘கறை’யே இருந்தாலும்
‘கரை’ உண்டென்ற

கோபுரம் உண்டெனக்கு
கோவணம் எனது பெயர்.
பகட்டுக்கு என்னருகில் இடமில்லை
பறந்துவிடு என்றது..

சுழன்றடித்த காற்றில்
நழுவியது அரையாடை
படபடத்த பட்டுக் கோவணம்
பாதி பிரிந்த கம்பியில் சிக்கிக் கிழிந்தது..

சேதாரமில்லையெனக்கென  சிரித்தது அரையாடை

பாதியாய்க் கிழிந்தாலும் வரும்
பரம்பரைக்கும் காவலன் நான்
படபடத்துச் சிரித்தது
பாரம்பரியக் கோவணம்..

~~~~~~~~~~~~~~~

67 comments:

Unknown said...

கோவணக் கவிதை....?

நசரேயன் said...

இழுத்துக் கட்டிய லுங்கியில்
வந்து விழுந்தது புல்
சற்றே முகம் சுளித்து யார் நீ என்றது
பக்கத்திலிருந்த க்வாட்டர்

பொன் மாலை பொழுது said...

Some thing Contemporary.

// பாதியாய்க் கிழிந்தாலும் வரும்
பரம்பரைக்கும் நானே காவலன்
படபடத்துச் சிரித்தது
பாரம்பரியக் கோவணம்.. //

அகில பாரத காங்கிரஸ் கமிட்டி?!
:))))))

நசரேயன் said...

நீரில் நனையேன்
நின் போல் சிறு நெருப்பில் கருகேன்
நிறைபோதை தவிர்க்க நினைப்போர்க்குக்
காவலன் நான்..நீச்சலுடை நானென்றது..

நசரேயன் said...

அடிக்கவே முடியாத நீயெல்லாம் சரக்கா சீச்சீ

நர்சிம் said...

//நீரில் நனையேன்
நின் போல் சிறு நெருப்பில் கருகேன்
நிர்வாணம் தவிர்க்க நினைப்போர்க்குக்
காவலன் நான்..நீச்சலுடை நானென்றது//

ரசித்.தேன் ஸார்

நசரேயன் said...

பாட்டனின் பட்டை சரக்கிலே இருந்து
பாதி பாதியாய்க் குடிக்கப்பட்டு
சரக்கு காலியாகி இனி குடிக்க
இடமின்றிப் போயிடினும்

நசரேயன் said...

சரக்கு போட்டு
கீழே விழுந்தாலும்
வேட்டியிலே ‘கறை’யே இருந்தாலும்
‘கரை’ உண்டென்ற

நசரேயன் said...

கோபுரம் படம் உண்டெனக்கு
டாஸ்மாக் எனது பெயர்.
பகட்டுக்கு என்னருகில் இடமில்லை
பறந்துவிடு என்றது..

நசரேயன் said...

சுழன்றடித்த சரக்கிலே
நழுவியது மெதுவடை
படபடத்த கை பட்டுக்
பாதி இருந்த சரக்கும் கவிழ்ந்தது

நசரேயன் said...

சேதாரமில்லையெனக்கென சிரித்தது தரை

பாதியாய்க் உடைந்தாலும் வரும்
குடிமக்களுக்கு நானே காவலன்
படபடத்துச் சிரித்தது
பாரம்பரியக் சரக்கு

பிரபாகர் said...

வட போச்சே!... கொஞ்ச கண் அசந்துட்டேன், முந்திக்கிட்டாங்க!

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Unknown said...

"இழுத்துக் கட்டிய லுங்கியில்
வந்து விழுந்தது புல்
சற்றே முகம் சுளித்து யார் நீ என்றது
பக்கத்திலிருந்த க்வாட்டர்'

பரவாயில்லையே! புல் கூட தெரியற அளவுக்கு தான் சரக்கு உள்ள போயிருக்கு போல!

Unknown said...

"நீரில் நனையேன்
நின் போல் சிறு நெருப்பில் கருகேன்
நிறைபோதை தவிர்க்க நினைப்போர்க்குக்
காவலன் நான்..நீச்சலுடை நானென்றது.."

தண்ணிக்குல்லையே இறங்காம நீச்சல் சொல்லி தர ஆளுங்க!

Unknown said...

"சரக்கு போட்டு
கீழே விழுந்தாலும்
வேட்டியிலே ‘கறை’யே இருந்தாலும்
‘கரை’ உண்டென்ற"

- அது கலங்கரை விளக்கம்.

Unknown said...

சுழன்றடித்த சரக்கிலே
நழுவியது மெதுவடை
படபடத்த கை பட்டுக்
பாதி இருந்த சரக்கும் கவிழ்ந்தது

- வளவளத்தா நினைப்புல டாஸ்மார்க் கடைன்னு நினைச்சு கடற்கரைக்குப் போய் நின்னா, என்னத்த சொல்லறது!

நசரேயன் said...

சேது சீக்கிரமே கடை ஆரம்பிக்க வேண்டுமென மணி அண்ணன் சார்பா கேட்டுகிறேன்

Chitra said...

ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

Unknown said...

"சேது சீக்கிரமே கடை ஆரம்பிக்க வேண்டுமென மணி அண்ணன் சார்பா கேட்டுகிறேன்."

- அதுக்கெல்லாம் தகுதி வேணும் தளபதி. சரக்கில்லாத ஆளு நான்.

அது சரி(18185106603874041862) said...

ஒரு மாதிரி ஜாலியா நல்லாருக்கு :))

பாட்டுடை பொருளா எதெல்லாம் வருது. :))

கலகலப்ரியா said...

என்ன சார்.. கோவணம்னு எல்லாம் பேசிக்கிட்டு... பண்படவில்லை நீங்க.. =))

ம்ம்...

Unknown said...

என்ன சார், கோழி கூவுரத்துக்கு முன்னே 3 மணிக்கு முன்னே எழுந்திருச்சு இப்பிடி கம்ப்யூட்டர் தட்டினா வீட்டில எப்பிடி சார் உங்கள சும்மா வுட்டாங்க.

முதல்ல நிம்மதியா தூங்குங்க சார். கலையில கலாசாரத்தோட மல்லு கட்டுங்க.

vasu balaji said...

@Sethu
நோ! நான் பின் தூங்கி முன் எழுவான் பத்தினன்னு பேரு எடுக்கக் கூடாதுன்னு சதி பண்றீங்க:)))

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

இப்ப இந்த 'கலாசாரம்' என்கிற வார்த்தை ரொம்ப யோசிக்கும். நாம என்னையா பண்ணின்னோம். மனுஷங்க இப்பிடி தூங்காம என்ன வாட்டி எடுப்பதற்க்குனு. என் பேரை சொல்லி அவங்க அவங்க ஆளுக்கு ஒன்னு சொல்லிக்கிட்டு திரியறாங்க. நம்மள கேட்க மாட்டேங்குதேன்னு.

Unknown said...

செம நக்கல்தான் ....

பழமைபேசி said...

தளபதி... கவிதையில பின்றாரு... பாலாண்ணனுக்கே எதிரா??

காமராஜ் said...

ரெட்டுற மொழிதல் என்று நினைத்துப் படித்தால் நசரேயன் தொடங்கி ஆளளுக்கு எட்டுற மொழிதல் ஆக்கிட்டாங்களே.இதுவும் பாலாண்ணா ஸ்டைல் தான்.சேது சார் ஒரு பக்கமா செஞ்சுரி அடிக்கிறார். எதிர் கவுஜ.நல்லா இருக்குங்கண்ணா இந்த விளையாட்டு.

Unknown said...

"தளபதி... கவிதையில பின்றாரு... பாலாண்ணனுக்கே எதிரா??"

பழமை,
தளபதியோட போன எதிர் கவிதைப் பார்த்தீங்களா? அதுலயும் தூள் கிளப்பியிருப்பார். வானம்பாடி அய்யாவே அது சூப்பர் நு certificate கொடுத்துட்டாரு. தளபதி rocks.

சங்கரியின் செய்திகள்.. said...

ஹ..ஹா....கவிதையும் கலக்கல்ஸ்.... அதுக்குச் சரியா நசரேயன், சேதுவோட செம கலக்கல்ஸ்......தூள் சார்.

நோ! நான் பின் தூங்கி முன் எழுவான் பத்தினன்னு பேரு எடுக்கக் கூடாதுன்னு சதி பண்றீங்க:))- அப்படியா சார்...?அடடா........

சூர்யா ௧ண்ணன் said...

கலக்கல் தலைவா!

a said...

நந்தவனதிலோர் ஆண்டி...

VELU.G said...

படித்து ரசித்ததில் எங் கோமனம் சாரி எங்கோ மனம் பறக்கிறது

ஹ ஹ ஹ ஹ ஹா

மங்குனி அமைச்சர் said...

உண்மைதான் சார்

கே. பி. ஜனா... said...

//நீரில் நனையேன்
நின் போல் சிறு நெருப்பில் கருகேன்
நிர்வாணம் தவிர்க்க நினைப்போர்க்குக்
காவலன் நான்..நீச்சலுடை நானென்றது//
வரிகள் அபாரம்!

"உழவன்" "Uzhavan" said...

ஆஹா.. நல்ல வித்தியாசமான கற்பனை

ஈரோடு கதிர் said...

எதிர் கவுஜை கோவணத்தைக் கிழித்தவர்களுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கனுமே!

ஸ்ரீராம். said...

மனம் பறக்கும் கவிதை...

Paleo God said...

"பாரம்பரியக் கோவணம்..

//

தூறல் நின்னுப்போச்சு குஸ்திவாத்தியார் எழுதின மாதிரி கீது சார்! :))

ரிஷபன் said...

//பாதியாய்க் கிழிந்தாலும் வரும்
பரம்பரைக்கும் காவலன் நான்//
கவிதையின் மையக் கருத்தா?!

vasu balaji said...

@கலாநேசன்

ம்ம்

vasu balaji said...

@நசரேயன்

இப்படி கும்மியடிச்சா எவ்ளோ அழகாயிருக்கு. அத விட்டுட்டு ம்ம்ம் எதுக்கு. அசத்தும் தளபதி.

vasu balaji said...

@கக்கு - மாணிக்கம்

:)).இல்லைங்க. நன்றி:)))

vasu balaji said...

@நர்சிம்

ஆஹா. நன்றி நர்சிம்.

vasu balaji said...

@பிரபாகர்

யாரு கொஞ்சினா பிரவு:))

vasu balaji said...

@T.V.ராதாகிருஷ்ணன்

சார்:)))

vasu balaji said...

@Sethu

கவிதையைப் பத்தி கண்ண்டுக்காத சேதுவைக் கண்டித்து டீக்குடிக்கப்படும்.:))))))))))))

vasu balaji said...

@அது சரி(18185106603874041862)

ஹெ ஹெ:))நன்றி அது சரி.

vasu balaji said...

@Chitra

நன்றிங்க சித்ரா

vasu balaji said...

@கலகலப்ரியா

:)). ம்கும். பண்பட்டுட்டாலும்..நன்றிம்மா.

vasu balaji said...

@கே.ஆர்.பி.செந்தில்

ஹிஹி. நன்றி செந்தில்

vasu balaji said...

@பழமைபேசி

எதிரெல்லாம் இல்ல. கட்சிக் கட்டுப்பாடு முக்கியம்:))

vasu balaji said...

@காமராஜ்

நன்றி காமராஜ். சில நேரம் அப்படி வாய்ச்சிடுது:))

vasu balaji said...

@சங்கரியின் செய்திகள்..

அடுத்த பதிவா:)) நன்றிங்கம்மா.

vasu balaji said...

@சூர்யா ௧ண்ணன்

நன்றி தலைவா.

vasu balaji said...

@வழிப்போக்கன் - யோகேஷ்

யாருங்க அவரு:))

vasu balaji said...

@VELU.G

வேலு:)))))

vasu balaji said...

@மங்குனி அமைச்சர்

நன்றி அமைச்சரே.

vasu balaji said...

@கே. பி. ஜனா...

நன்றி ஜனா சார்.

vasu balaji said...

@"உழவன்" "Uzhavan"

நன்றி உழவன்

vasu balaji said...

@ஈரோடு கதிர்

அது எடுக்கலாம். கோவணத்த ஒன்னும் சொல்லலையே.

vasu balaji said...

நன்றி ஸ்ரீராம்

vasu balaji said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

அய்யாங். இது நான் எழுதினது:)))

vasu balaji said...

@ரிஷபன்

ஹி ஹி. கரையோரக் கருத்து:))

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமையான கவிதை ! குறியீடாகப் பார்த்தால் மிகவும் அருமை !

vasu balaji said...

@கனாக்காதலன்
நன்றிங்க.